இந்தியா
null

ஆட்சியில் அமர்வது யார்? பரபரப்பில் டெல்லி.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-06-05 10:43 IST   |   Update On 2024-06-05 13:23:00 IST
  • காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல்தான் உருவாகி இருக்கிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் தனித்தனியே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்த நடவடிக்கைகள் காரணமாக டெல்லியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

2024-06-05 07:46 GMT

டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

2024-06-05 07:24 GMT

நிதிஷ் உடன் ஒரே விமானத்தில் பயணித்த தேஜஸ்வி யாதவ், "நாங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கிட்டோம். வேறென்ன.. பொறுமையாக காத்திருங்கள்," என்று தெரிவித்தார்.


2024-06-05 06:57 GMT

மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவ சேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார். 

2024-06-05 06:37 GMT

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டார் சந்திரபாபு நாயுடு

2024-06-05 06:19 GMT

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நித்ஷ் குமார் அந்தந்த கூட்டணி சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரே விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.

2024-06-05 05:45 GMT

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் - சந்திரபாபு நாயுடு

2024-06-05 05:25 GMT

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார். 

2024-06-05 05:21 GMT

ராகுல்காந்தி பிரதமராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News