என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    வி நிறுவனம் ரூ. 449 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வழக்கமான பலன்களுடன் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 4 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகிறது.  

     கோப்புப்படம்

    புதிய வி ரூ. 449 சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் வாராந்திர டேட்டா ரோல் ஓவர் வசதி, வி மூவிஸ் மற்றும் டி.வி. செயலிக்கான சந்தா, இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா (நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை) உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. வி ரூ. 449 சலுகை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் வி வலைதளத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அன்டர் ஸ்கிரீன் கேமரா கொண்டிருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது எம்.ஐ. சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்துள்ளது. புதிய எம்.ஐ. மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் AMOLED 3D வளைந்த டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 20 எம்.பி. அன்டர் ஸ்கிரீன் கேமரா கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸருடன் அறிமுகமான முதல் ல்மார்ட்போனாக எம்.ஐ. மிக்ஸ் 4 இருக்கிறது. இதன் பிரத்யேக வடிவமைப்பு காரணமாக ஸ்மார்ட்போனின் வெப்பம் அதிகளவு கட்டுப்படுத்தப்படும்.

     சியோமி எம்.ஐ. மிக்ஸ் 4

    சியோமி எம்.ஐ. மிக்ஸ் 4 அம்சங்கள்

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 10-பிட் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 3.1 மெமரி
    - 12 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி
    - டூயல் சிம்
    - MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm,  LED பிளாஷ், f/1.95, OIS
    - 13 எம்பி 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா
    - 20 எம்பி அன்டர் ஸ்கிரீன் செல்பி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 120W வயர், 50W வயர்லெஸ் சார்ஜிங்

    சியோமி எம்.ஐ. மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் செராமிக் கிரே, செராமிக் வைட் மற்றும் செராமிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8ஜிபி + 128 ஜிபி விலை 4999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 57,410 என துவங்கி டாப் எண்ட் 12ஜிபி + 512 ஜிபி மாடல் விலை 6299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 72,330 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்றொரு நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றம்சாட்டி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இதே போன்று மற்றொரு பயனரும் தனது நார்டு 2 வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    தனது தந்தைக்கு வாங்கிய நார்டு 2 கட்டிலில் இருக்கும் போது வெடித்து சிதறியதாக அவர் தெரிவித்தார். வெடித்ததால் தீப்பற்றி எரிந்த நார்டு 2 ஸ்மார்ட்போனினை தனது தந்தை சிறு கம்பு கொண்டு கட்டிலில் இருந்து தள்ளிவிட்டதாக பயனர் தெரிவித்தார்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயனர் வெடித்து சிதறிய நார்டு 2 புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. மேலும் அவர் குற்றச்சாட்டு அடங்கிய ட்விட்டர் பதிவும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. எனினும், ஒன்பிளஸ் சார்பில் பயனருக்கு ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

    அதில், "எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம். இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதற்கான காரணத்தை கண்டறிய தயவு செய்து குறுந்தகவல் அனுப்புங்கள்," என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் புதிய எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகமாகின்றன. பல்வேறு டீசர்களை தொடர்ந்து இரு மாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மாடலில் 6.67 இன்ச் OLED பேனல், HDR10+, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் இதே டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மோட்டோரோலா எட்ஜ் 20 சீரிஸ் டீசர்

    எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும்.

    ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் லேப்டாப் சந்தையில் களமிறங்க இருக்கிறது. கடந்த சில நாட்களாக புது லேப்டாப் விவரங்களை ரியல்மி டீசர்களாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ரியல்மி லேப்டாப் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மியின் முதல் லேப்டாப் சீரிஸ் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. முதற்கட்டமாக ரியல்மி லேப்டாப் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி புக் என அழைக்கப்படும் புதிய லேப்டாப் சீனாவில் நடைபெறும் ரியல்மி 828 நிகழ்வில் அறிமுகமாகிறது. 

     ரியல்மி டீசர்

    லேப்டாப் மட்டுமின்றி ரியல்மி பேட் பெயரில் டேப்லெட் ஒன்றையும் ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஆகஸ்ட் 18 ஆம் தேதியே ரியல்மி பேட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    ரியல்மி புக் லேப்டாப் மாடல் மெட்டாலிக் சேசிஸ், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இதில் பேக்லிட் கீபோர்டு, பெரிய அளவில் டச்பேட் உள்ளது. இத்துடன் பிரத்யேக கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் மற்ற அம்சங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா சி சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் SC9863A பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் கொண்டுள்ளது. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா சி20 பிளஸ் 4950 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     நோக்கியா சி20 பிளஸ்

    நோக்கியா சி20 பிளஸ் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - 1.6GHz ஆக்டா-கோர் யுனிசாக் SC9863A பிராசஸர்
    - IMG8322 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
    - டூயல் சிம்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 5 எம்பி செல்பி கேமரா
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 4950 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் செயலியில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk chatbot மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk chatbot அம்சத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் போலி செய்தி பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு இதனை அறிமுகம் செய்தது. 

    பின் இந்த அம்சம் கொண்டு அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களை அறிந்து கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

     வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் செயலியில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?

    கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற முதலில் ஒருவர் குறைந்தபட்சம் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தியிருக்க வேண்டும்.

    1 - முதலில் மொபைல் போனில் +91 9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk என தேட வேண்டும். 

    2 - அடுத்து வாட்ஸ்அப் செயலியின் MyGov Corona Helpdesk-இல் ‘COVID Certificate' அல்லது ‘Download Certificate' என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

    3- உங்களின் மொபைல் எண்ணிற்கு 6 இலக்க ஒ.டி.பி. வரும். இதனை 30 நொடிகளுக்குள் பதிவிட வேண்டும்.

    4 - இனி கோவின் (CoWIN) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் எண்களும் காணப்படும். இதில் உங்களுக்கு யாருடைய சான்றிதழை பெற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.

    5 - சான்றிதழ் வாட்ஸ்அப் மூலமாகவே பி.டி.எப். (PDF) ஆக அனுப்பப்பட்டு விடும். இதனை மிக எளிமையாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    விவோ நிறுவனம் Y53s ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஓஎஸ் 11.1, மல்டி டர்போ 5.0, அல்ட்ரா கேம் மோட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     விவோ Y53s

    விவோ Y53s அம்சங்கள்

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12nm பிராசஸர் 
    - 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 8 ஜிபி LPDDR4x  ரேம், 128 ஜிபி மெமரி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1
    - 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ், f/1.79
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விவோ Y53s ஸ்மார்ட்போன் டீப் சீ புளூ மற்றும் பென்டாஸ்டிக் ரெயின்போ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

     சாம்சங் இயர்பட்ஸ்

    இதே நிகழ்வில் சாம்சங் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி பட்ஸ் மாடல் விலை முந்தைய இயர்பட்ஸ்-ஐ விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    "அதன்படி புதிய இயர்பட்ஸ் விலை 10 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம். புதிய இயர்பட்ஸ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் பட்சத்தில் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் சாம்சங் 18 சதவீதம் அல்லது அதற்கும் அதிக பங்குகளை பெற முடியும்," என தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் லிஸ் லீ தெரிவித்தார்.

    மோட்டோரோலா நிறுவனம் விரைவில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட் மற்றும் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த மாத இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது எட்ஜ் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டை மோட்டோரோலா உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது.

     மோட்டோ எட்ஜ் 20 பியூஷன்

    தற்போதைய டீசர்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கின்றன. எட்ஜ் 20 பியூஷன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் 20 லைட் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். மற்றபடி எட்ஜ் 20 ஸ்மார்ட்போன், சர்வதேச சந்தையில் அறிமுகமான வேரியண்டே இங்கும் அறிமுகமாகும் என தெரிகிறது.



    அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்களில் 6.7 இன்ச் OLED பேனல், FHD+ 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்., எட்ஜ் 20 மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை பார்ப்போம்.
    அமேசான் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கும் பல்வேறு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சாம்சங், ரியல்மி, ரெட்மி என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது கூடுதல் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள அசத்தல் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்


    அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 19,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும்போது ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் மற்றும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐகூ Z3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 16,740 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ரெட்மி நோட் 10எஸ்

    ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 18,990 விலையில் அறிமுகமாகி தற்போது ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம் பூமி பந்தை சுற்றி நிகழும் அற்புதங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என ரம்மியமான புகைப்படங்களால் அதன் சமூக வலைதள பக்கங்களை நாசா அலங்கரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டு உள்ளது.

     நாசா வெளியிட்ட படம்

    53 புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் நிலவின் புகைப்படத்திற்கு "false-colour mosaic" என நாசா பெயரிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் டிசம்பர் 7, 1992 ஆம் ஆண்டு நிலவின் வடக்கு பகுதிகளில் எடுக்கப்பட்டவை ஆகும். இவற்றை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது. 

    வியாழன் கிரகத்தை நோக்கிய பயணத்தின் போது இந்த புகைப்படங்களை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது. நிலவின் வண்ணமயமான புகைப்படங்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது. 

    ×