என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனத்தின் புதிய லேப்டாப் சீரிஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை ரியல்மி ஜிடி மற்றும் ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மியின் புதிய சாதனங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாக இருக்கின்றன.
இந்த நிலையில் புதிய ரியல்மி புக் ஸ்லிம் 2K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலை விட எடை குறைவாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது. புதிய லேப்டாப் விவரங்களை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

2K புல் விஷன் டிஸ்ப்ளே மட்டுமின்றி ரியல்மி புக் ஸ்லிம் 1.38 கிலோ எடை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். இது 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விட குறைவு ஆகும். இதுதவிர புதிய லேப்டாப் தண்டர்போல்ட் 4 யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஒரு யு.எஸ்.பி. டைப் சி 3.2 போர்ட், ஒரு யு.எஸ்.பி. டைப் ஏ 3.1, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி புக் ஸ்லிம் மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி., மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்கள் 5ஜி கனெக்டிவிட்டி உள்பட பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கின்றன. மோட்டோ எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.
அந்த வகையில் இதன் அம்சங்கள் பெரும்பாலும் அம்பலமாகிவிட்டன. தற்போது இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம். எட்ஜ் 20 ஸ்மா்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,999 வரை நிர்ணயிக்கப்படலாம்.
இந்த விலை பிரிவில் மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் சியோமியின் எம்.ஐ. 11 லைட் மாடலுக்கும் மோட்டோ எட்ஜ் 20 மாடல் ஒன்பிளஸ் நார்டு 2 மாடலுக்கும் போட்டியாக அமைகின்றன. இரு மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனத்தின் சைபர்டாக் ரோபோட் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது முதல் குவாட்ராபெட் ரோபோட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது சியோமி ரோபோட் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த ரோபோட் போஸ்டன் டைனமிக் நிறுவனத்தின் ஸ்பாட் ரோபோட் டாக் போன்றே காட்சியளிக்கிறது.
சியோமியின் புதிய சைபர்டாக் (CyberDog) என்விடியா நிறுவனத்தின் ஜெட்சன் சேவியர் என்.எக்ஸ். ஏ.ஐ. சூப்பர்கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எம்பெட் மற்றும் எட்ஜ் சிஸ்டம்கள் கிட்டத்தட்ட 128 ஜிபி தொழில்துறை தரத்தாலான எஸ்.எஸ்.டி. மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் தலையில் பல்வேறு கேமரா, மைக்ரோபோன் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைய வீடியோவின் படி புதிய குவாட்ராபெட் சைபர்டாக் மழையிலும் சீராக இயங்கும் என தெரியவந்துள்ளது.
சீன சந்தையில் சைபர்டாக் விலை 9,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 1,14,567 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு டி.வி., வாக்யூம் கிளீனர், ஏர் பியூரிபையர் போன்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் இயக்க முடியும். இதில் சியோ-ஏ.ஐ. சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் அறிவித்தது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. எனினும், ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்களை அந்நிறுவனம் அப்போது வெளியிடவில்லை.
தற்போது ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் மென்பொருள் மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LS-5701-J எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் டுயோ-கோ செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் கேமரா கோ புது வேரியண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கேமராவுடன் ஸ்னாப்சாட் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதை கொண்டு இந்தியாவுக்கான ஸ்னாப்சாட் லென்ஸ்களை பயன்படுத்த முடியும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை HD+ 1440x720 பிக்சல் ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர், டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி ஆம்னிவிஷன், 8 எம்பி செல்பி கேமரா, கேலக்ஸிகோர் GC34W சென்சார் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கும் என ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன.
சியோமி நிறுவனம் விரைவில் எம்.ஐ. நோட்புக் லேப்டாப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு எம்.ஐ. நோட்புக் 14 மற்றும் எம்.ஐ. நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் மூலம் கணினி சந்தையில் சியோமி களமிறங்கியது.
சமீபத்தில் எம்.ஐ. நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மற்றும் எம்.ஐ. நோட்புக் 14 மாடலை சியோமி அறிமுகம் செய்தது. எனினும், பேக்லிட் கீபோர்டு கொண்ட லேப்டாப்களை இதுவரை சியோமி, இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை.

இந்த நிலையில், புதிய எம்.ஐ. நோட்புக் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா மூத்த அதிகாரி ரகு ரெட்டி வெளியிட்டுள்ளார். புதிய எம்.ஐ. நோட்புக் மாடலில் பேக்லிட் கீபோர்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இவைதவிர புது லேப்டாப் விவரங்கள் இடம்பெறவில்லை.
சீன சந்தையில் பேக்லிட் கீபோர்டு மற்றும் பிரீமியம் சேசிஸ் கொண்ட எம்.ஐ. நோட்புக் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் எம்.ஐ. நோட்புக் ப்ரோ எக்ஸ் 15 மாடலை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை CNY 7999 இந்திய மதிப்பில் ரூ. 91,700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் பிராசஸருடன் அறிமுகமாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை எக்சைனோஸ் 850 பிராசஸருடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிராசஸர் தவிர கேலக்ஸி ஏ12 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மற்ற அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ12 மாடலில் 6.5 இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பின்புறம் மேட் பினிஷ், 48 எம்பி குவாட் பிரைமரி கேமரா சென்சார்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 அம்சங்கள்
- 6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
- மாலி-G52
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ கோர் 3.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/2.0
- 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் கேமரா, பிராசஸர் விவரங்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா குறியீடுகளில் தெரியவந்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 பதிப்பை வெளியிட்டுள்ளது. பீட்டா பதிப்பின் இறுதிக்கட்ட கம்பேடபிலிட்டி சோதனையை துவங்கி, இதற்கான அப்டேட்களை உடனடியாக வெளியிட ஆப் மற்றும் கேம் டெவலப்பர்களுக்கு கூகுள் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 பதிப்பு பிக்சல் 3 மற்றும் அதன்பின் வெளியான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பதிப்பு ஆண்ட்ராய்டு டிவி-க்களுக்கு ADT-3 டெவலப்பர் கிட் உடன் வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் மற்றொரு பீட்டா வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய ஆண்ட்ராய்டின் பீட்டா சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் சாம்சங்கின் 50எம்பி GN1 கேமரா சென்சார் வழங்கப்பட இருப்பது புதிய ஆண்ட்ராய்டு 12 பீட்டா மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2100 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆண்ட்ராய்டு 12 பீட்டாவில் புதிய பிக்சல் 6 சீரிஸ் எக்சைனோஸ் 5123 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இது 7 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. இந்த பிராசஸர் 5ஜி-யின் சப்-6GHz மற்றும் எம்.எம்.வேவ் ஸ்பெக்ட்ரம்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.
சோனி நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் இருவித அளவுகளில் அறிமுகமாகி இருக்கின்றன.
சோனி நிறுவனம் பிரேவியா சீரிசில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரேவியா XR 77A80J மற்றும் 85X85J என அழைக்கப்படுகின்றன. இரு மாடல்களிலும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் இவை காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் X1 4K HDR பிக்ச்சர் பிராசஸர், 4K, HDMI 2.1, ALLM மற்றும் VRR வசதி கொண்டுள்ளன. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி விஷன், அகவுஸ்டிக் ஆட்டோ-கேலிப்ரேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சோனியின் புதிய OLED டிவி மாடல்களில் XR TRILUMINOS மற்றும் TRILUMINOS Pro வசதி உள்ளன. ஆடியோவை பொருத்தவரை 77A80J மாடலில் 3டி சரவுண்ட் சவுண்ட், 85X85J மாடலில் X பேலன்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் கூகுள் டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2 மற்றும் ஹோம்கிட் உள்ளிட்டவைகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சோனி பிரேவியா XR77A80J மாடல் விலை ரூ. 5,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 25 ஆம் தேதி துவங்குகிறது. பிரேவியா 85X85J மாடல் விலை ரூ. 4,99,990 ஆகும். இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி பிளெக்ஸ் டைனமிக் AMOLED 2X ஸ்கிரீன், 6.2 இன்ச் HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120HZ ரிபெர்ஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கீழ் 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமராவும், வெளிப்புறம் 10 எம்.பி. கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான எஸ் பென் இருவித ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை எஸ் பென் போல்டு எடிஷன் மற்றும் எஸ் பென் ப்ரோ என அழைக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி அம்சங்கள்
- 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- 6.2 இன்ச் 2268x832 பிக்சல் 24.5:9 HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- 12 ஜிபி LPDDR5 ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
- டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8, PDAF, OIS
- 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்.பி. முன்புற கேமரா, f/2.2
- 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமரா, f/1.8
- ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE
- யு.எஸ்.பி. டைப் சி
- 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் வயர், 10 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மாடல் பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் மற்றும் பேண்டம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,33,660 என துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் வெளிப்புறம் 1.9 இன்ச் அளவில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, முன்புறம் 10 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி அம்சங்கள்
- 6.7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் 22:9 டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ப்ளெக்ஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- 1.9 இன்ச் 260x512 பிக்சல் கவர் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 3.1 மெமரி
- ஒரு இசிம், ஒரு நானோ சிம்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
- 12 எம்பி பிரைமரி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 1.4μm பிக்சல்
- 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 1.22μm பிக்சல், எல்.இ.டி. பிளாஷ், HDR10+, OIS
- 10 எம்பி முன்புற கேமரா, f/2.4
- 5ஜி SA/NSA , 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 LE
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், 10 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங், 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மாடல் கிரீம், கிரீன், லாவென்டர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,253 என துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய ஐபோன் சீரிசை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2021 ஐபோன் மாடல் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய ஐபோனின் கேமரா விவரங்கள் வெளியாகி உள்ளன.
வீடியோக்களுக்கு ப்ரோ-ரெஸ், வீடியோவில் போர்டிரெயிட் மோட் மற்றும் புதிய பில்ட்டர் உள்ளிட்டவை ஐபோன் 13 சீரிஸ் கேமரா அம்சங்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன்களில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஐபோன் 7 பிளஸ் மாடலில் போர்டிரெயிட் மோட் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐ.ஓ.எஸ். 15 தளத்தில் பேஸ்டைம் மற்றும் இதனை இயக்கும் அனைத்து சாதனங்களிலும் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஐபோன்களின் வீடியோவில் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் சினிமேடிக் வீடியோ என அழைக்கப்படலாம். இத்துடன் ப்ரோ-ரெஸ் தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி ஐபோன்களில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மாடல்கள் அடுத்த வாரம் அறிமுகமாகின்றன.
ரியல்மி GT 5ஜி, ரியல்மி GT மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி புக் ஸ்லிம் போன்ற மாடல்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. புது சாதனங்களுடன் அறிமுகமாகும் ரியல்மி புக் ஸ்லிம் இந்தியாவில் வெளியாகும் ரியல்மியின் முதல் லேப்டாப் ஆகும்.

புது ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வெளியீட்டை தொடர்ந்து, ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இந்த சாதனங்களுக்கான பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி GT சீரிஸ் ஆன்லைனில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது.
முன்னதாக மார்ச் மாத வாக்கில் சீனாவிலும், அதன்பின் ஜூன் மாத வாக்கில் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5ஜி தற்போது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. ரியல்மி GT மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.






