என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்களுடன் புதிய லேப்டாப் மாடலையும் ரியல்மி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது. 

    மேலும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், பிரீமியம் தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. 2கே டிஸ்ப்ளே, 11-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

     ரியல்மி புக் ஸ்லிம்

    ரியல்மி புக் ஸ்லிம் விலை விவரம்:

    ரியல்மி புக் ஸ்லிம் ஐ3 (8ஜிபி+256ஜிபி) ரூ. 46,999
    ரியல்மி புக் ஸ்லிம் ஐ5 (8ஜிபி+512ஜிபி) ரூ. 59,999
     
    இந்திய சந்தையில் ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் ரூ. 44,999 மற்றும் ரூ. 56,999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்குகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்60 ஸ்மார்ட்போனினை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது.


    விவோ நிறுவனம் எக்ஸ்60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. விவோ எக்ஸ்60 சீரிஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 37,990 விலையிலும், 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 41,990 விலையிலும் விற்பனைக்கு வந்தது.

     விவோ எக்ஸ்60

    தற்போது விவோ எக்ஸ்60 மாடல்களின் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி எக்ஸ்60 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 34,990 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 39,990 என்றும் மாறி இருக்கிறது. 

    விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் புதிய விலையில் கிடைக்கிறது. விவோ எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 10 என அழைக்கப்படுகிறது.

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    அதன்படி ரெட்மி 10 மாடலுக்கான புது டீசரை சியோமி வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ரெட்மி 10 வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல், இந்த பிராசஸருடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனும் ரெட்மி 10 தான் என சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் அம்சங்களை சார்ந்து உருவாகும் என்றும் சியோமி வெளியிட்டுள்ள டீசர்களில் தெரியவந்துள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


    நத்திங் நிறுவனத்தின் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்தது. ரூ. 5999 விலையில் அறிமுகமான நத்திங் இயர் 1 இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டது.



    இந்திய சந்தையில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது. இன்றைய விற்பனை துவங்கிய 2 நிமிடங்களில் சுமார் 4800-க்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக நத்திங் தெரிவித்துள்ளது. 

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    ப்ளிப்கார்ட் விற்பனையில் நத்திங் இயர் 1 மாடலுக்கு கேஷ்பேக், தள்ளுபடி, வங்கி சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், நத்திங் இயர் 1 மாடலுக்கான அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 108 எம்பி கேமரா கொண்டிருக்கின்றன.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எட்ஜ் 20 மாடலில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸரும், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸரும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மோட்டோரோலா எட்ஜ் 20

    புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், எட்ஜ் 20 மாடலில் 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இரு மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டிக்கு பல்வேறு பேண்ட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ எட்ஜ் 20 மாடல் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன்

    மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் சைபர் டீல் மற்றும் எலெக்ட்ரிக் கிராபைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 22,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் பிராஸ்டெட் எமரால்டு மற்றும் பிராஸ்டெட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,999 ஆகும். இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் துவங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய தலைமுறை ஐபோன்களும் முந்தைய ஐபோன் 12 சீரிஸ் போன்றே நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

     ஐபோன் 12 மினி

    அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா போன்ற அம்சங்களுடன் உருவாகும் பட்சத்திலும் ஐபோன் 13 சீரிஸ் விலை உயர்த்தப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய ஐபோன் 12 சீரிஸ் விலையிலேயே புதிய ஐபோன் 13 மாடல்கள் விலையும் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 13 மினி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,896 என துவங்கும். ஐபோன் 13 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 59,320, ஐபோன் 13 ப்ரோ விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,169, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை 1,099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81,594 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் அந்நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


    சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிசில் - ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 10எஸ் மற்றும் ரெட்மி நோட் 10டி போன்ற மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது.

    ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் 6 ஜிபி + 64 ஜிபி விலை முறையே ரூ. 15,999 மற்றும் ரூ. 18,999 ஆகும். தற்போது சியோமி நிறுவனம் 6 ஜிபி + 64 ஜிபி மாடல்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் பேஸ் வேரியண்ட் சியோமி வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.

     ரெட்மி நோட் 10 ப்ரோ

    தற்போது ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 19,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 21,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய விற்பனை விவரம் வெளியிடப்பட்டன.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையை அறிவித்து உள்ளது. முன்னதாக கேலக்ஸி அன்பேக்டு விழாவில் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக் மற்றும் கிரீம் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 ஆம் தேதியும், விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

    விலை விவரம்

    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி (8 ஜிபி + 128 ஜிபி) ரூ. 84,999
    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி (8 ஜிபி + 256 ஜிபி) ரூ. 88,999
    கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி (12 ஜிபி + 256 ஜிபி) ரூ. 1,49,999
    கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி (12 ஜிபி + 512 ஜிபி) ரூ. 1,57,999

     கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி

    அறிமுக சலுகைகள்

    சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் அப்கிரேடு வவுச்சர் அல்லது ரூ. 7 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இத்துடன் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மாடலை முன்பதிவு செய்யும் போது ரூ. 7999 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான சாம்சங் கேர் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்குரூ. 4,799 மதி்ப்புள்ள சாம்சங் கேர் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் முதல் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் துவக்க விலை ரூ. 55 ஆயிரம் வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

     ரியல்மி புக் ஸ்லிம்

    ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் புதிய விண்டோஸ் ஓ.எஸ்., 3:2 ஸ்கிரீன் ரேஷியோ 2160x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 55Wh பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு யு.எஸ்.பி. டைப் சி போர்ட், யு.எஸ்.பி. 3.2 போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. 

    முந்தைய தகவல்களில் இந்த லேப்டாப் 11-ம் தலைமுறை பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்போதைய டீசர்களின்படி புதிய ரியல்மி லேப்டாப் ஐ5 சி.பி.யு. கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ரியல்மி புக் ஸ்லிம் மாடலில் 14 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. வழங்கப்படுகிறது. 

    சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் வெளியீடு விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 10 விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது இதன் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சியோமியின் சர்வேதச வலைதளத்தில் ரெட்மி 10 அம்சங்கள், புகைப்படங்கள் மற்றும் இதர விவரங்கள் தவறுதாக வெளியாகி பின் நீக்கப்பட்டு விட்டது.

     சியோமி ரெட்மி 10

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 10 மாடலில் 6.5 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டாட் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. வலைதளத்தில் ரெட்மி 10 விலை விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் குறைந்த விலை பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.


    இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்த ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தங்களின் என்ட்ரி-லெவல் சலுகைகளை நீக்கி வருகின்றன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.

    பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகை ரூ. 18 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 19 சலுகையை விட விலை குறைவு ஆகும். பி.எஸ்.என்.எல். ரூ. 18 சலுகையில் அன்லிமிடெட் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 19 பிரீபெயிட் சலுகையில் 200 எம்.பி. டேட்டா, அன்லிமிடெட் காலிங் உள்ளிட்டவை 48 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. புது சலுகை தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 49, ரூ. 75, ரூ. 94, ரூ. 106, ரூ. 197 மற்றும் ரூ. 397 என ஆறு சலுகைகளின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.
    சியோமி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமியின் ரெட்மி 10 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன்பே புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. அந்த வரிசையில் தற்போது ரெட்மி 10 ஸ்மார்ட்போன், சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 21061119AG மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்தியா வரும் முன் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 விவரங்கள் எதையும் சியோமி இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார், 2 எம்பி லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

    ×