search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோபோன் நெக்ஸ்ட்
    X
    ஜியோபோன் நெக்ஸ்ட்

    இணையத்தில் லீக் ஆன ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் அறிவித்தது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. எனினும், ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்களை அந்நிறுவனம் அப்போது வெளியிடவில்லை. 

    தற்போது ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் மென்பொருள் மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LS-5701-J எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் டுயோ-கோ செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் கேமரா கோ புது வேரியண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கேமராவுடன் ஸ்னாப்சாட் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதை கொண்டு இந்தியாவுக்கான ஸ்னாப்சாட் லென்ஸ்களை பயன்படுத்த முடியும். 

    மற்ற அம்சங்களை பொருத்தவரை HD+ 1440x720 பிக்சல் ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர், டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி ஆம்னிவிஷன், 8 எம்பி செல்பி கேமரா, கேலக்ஸிகோர் GC34W சென்சார் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கும் என ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    Next Story
    ×