என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.43 இன்ச் கலர் டிஎப்டி டச் டிஸ்ப்ளே, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட், 9 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் ப்ளூடூத் மியூசிக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட், ஹை-பிரெசிஷன் தொடர்ச்சியான இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் உடல்நலம் கண்டறியும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

     அமேஸ்பிட் பிப் யு

    அமேஸ்பிட் பிப் யு சிறப்பம்சங்கள்

    - 1.43 இன்ச் 320x302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே
    - நோட்டிபிகேஷன் வசதி
    - 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - இதய துடிப்பு சென்சார்
    - மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி
    - மூச்சு பயிற்சி அம்சம்
    - ப்ளூடூத் 5 எல்இ
    - மியூசிக் கண்ட்ரோல் வசதி
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 225 எம்ஏஹெச் பேட்டரி

    அமேஸ்பிட் பிப் யு விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையின் போது ரூ. 3499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    கூல்பேட் நிறுவனத்தின் புதிய 21 எம்பி பாப் அப் கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் கூல் 6 புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கூல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 21 எம்பி ஏஐ செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     கூல்பேட் கூல் 6

    கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர்
    - 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 21 எம்பி பாப்-அப் செல்பி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10டி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக்ஷிப் சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ 10டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறமுகம் செய்துள்ளது. எம்ஐ 10டி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம், கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

     சியோமி எம்ஐ 10டி ப்ரோ

    சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம் 
    - 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - எம்ஐ 10டி ப்ரோ - 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - டூயல் சிம்
    - எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
    - 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
    - எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்தியாவில் எம்ஐ 10டி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 37,999 என்றும் எம்ஐ 10டி ப்ரோ மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் மொபைல்போன்களுக்கான சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை நாளை (அக்டோபர் 16) துவங்கி அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

    சிறப்பு விற்பனையின் போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2020 பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மொபைல் போன்களுக்கான சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

     போக்கோ எம்2

    அந்த வகையில் போக்கோ எம்2 மாடலின் விலை ரூ. 500 குறைக்கப்படுகிறது. இதேபோன்று போக்கோ எம்2 ப்ரோ மாடலின் விலை ரூ. 1000 குறைக்கப்படுகிறது. விலை குறைப்பின்படி இரு மாடல்களும் முறையே ரூ. 10,499 மற்றும் ரூ. 12,999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இதேபோன்று ரியல்மி சி11 ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000, மோட்டோ இ7 பிளஸ் ரூ. 500 மற்றும் மோட்டோ ஜி9 மாடலுக்கு ரூ. 1500 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை சிறப்பு விற்பனையின் போது முறையே ரூ. 6,499, ரூ. 8,499, ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு வருகின்றன.

    மோட்டோ எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 10 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ. 64,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதேபோன்று ஐகூ 3 மாடல் ரூ. 29,990 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல் ரூ. 49,999 துவக்க விலையில் விற்பனைக்கு வருகிறது. 

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

     ஒன்பிளஸ் 8டி

    ஒன்பிளஸ் 8டி சிறப்பம்சங்கள்

    - 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.7, OIS
    - 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 5 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45, EIS
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி, டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

    ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அக்வாமரைன் கிரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 42,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    100 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் தொழிலநுட்பத்தின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஒன்பிளஸ், ஒப்போ, விவோ, சியோமி, சாம்சங் மற்றும் ஹூவாய் சமீப காலமாக பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. பாஸ்ட் சார்ஜிங் மட்டுமின்றி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 100 வாட் மின்திறனை வழங்கும் தொழில்நுட்பம் விரைவில் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை தங்களின் ஸ்மார்ட்போன்களில் வழங்க 2021 ஆண்டை இலக்காக நிர்ணயித்து இருப்பதாக தெரிகிறது.

     சியோமி டீசர்

    இதுவரை எந்த ஸ்மார்ட்போனிலும் 100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படவில்லை. சியோமி நிறுவனம் தற்சமயம் 55 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம் விரைவில் 100 வாட் திறனை வழங்க முடியும் என கூறப்படுகிறது. 

    சியோமி வரிசையில் ஒப்போ நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது. இந்நிறுவனம் 65 வாட் ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை வயர்லெஸ் முறையில் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும். எனினும், இதுவரை இந்த அம்சம் சந்தையில் வழங்கப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ததுள்ளது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 என மூன்று மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வரி உயர்வு காரணமாக ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களின் விலை ஏப்ரல் மாத வாக்கில் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், இவற்றின் விலை தற்சமயம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் எஸ்இ 2020 மாடல் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு உள்ளது.

     ஐபோன் 11

    ஆப்பிள் நஇறுவனம் தனது ஐபோன் எஸ்இ மாடலின் விலையில் ரூ. 3400 வரை குறைத்து இருக்கிறது. இதே போன்று ஐபோன் XR மாடலுக்கு ரூ. 4900 மற்றும் ஐபோன் 11 மாடலுக்கு ரூ. 14,200 வரை குறைக்கப்பட்டு உள்ளது.

    புதிய விலை குறைப்பின் படி ஐபோன் எஸ்இ 2020 64 ஜிபி ரூ. 39,900, ஐபோன் எஸ்இ 2020 128 ஜிபி ரூ. 44,900, ஐபோன் எஸ்இ 2020 256 ஜிபி ரூ. 54,900, ஐபோன் XR 64 ஜிபி ரூ. 47,900, ஐபோன் XR 128 ஜிபி ரூ. 52,900 என்றும் ஐபோன் 11 64 ஜிபி ரூ. 54,900, ஐபோன் 11 128 ஜிபி ரூ. 59,900,  ஐபோன் 11 256 ஜிபி ரூ. 69,900 என மாறி இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போனில் எம்31 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களுடன் 3 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, அமேசான் சேவைக்கான செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.

     கேலக்ஸி எம்31 பிரைம்

    சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் சிறப்பம்சங்கள்

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
    - மாலி-G72MP3 GPU
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
    - 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸமார்ட்போன் ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்குகிறது.
    அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறிய போலி அக்கவுண்ட்களை ட்விட்டர் கண்டறிந்து நீக்கி உள்ளது.


    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறும் கணக்குகள் ட்விட்டர் தளத்தை தவறாக கையாண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    "இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டறிய எங்களது குழுக்கள் பணியாற்றி வருகின்றன. ட்விட்டர் விதிகளை மீறி பதியப்படும் ட்வீட்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். 
      
     கோப்புப்படம்

    இடைநீக்கம் செய்யப்பட்ட அக்கவுண்ட்களில் தவறான புகைப்படங்களை பதிவிட்டு, டிரம்ப்பிற்கு வாக்களிக்க கோரும் வகையில் ட்விட் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றில் பெரும்பாலான அக்கவுண்ட்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது சட்ட துறையை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் இயங்கி வந்தது.
    ஆப்பிள் நிறுவனம் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் பல்வேறு இதர அக்சஸரீக்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் மேக்சேப் டுயோ போல்டபில் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவைகளின் பின்புறம் வயர்லெஸ் சார்ஜர்களை சப்போர்ட் செய்யும் காந்தங்களை கொண்டிருக்கிறது. விரைவில் பெல்கின் போன்ற மூன்றாம் தரப்பு பிராண்டுகளும் தங்களின் மேக்சேப் அக்சஸரீக்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

     ஆப்பிள் மேக்சேப் சார்ஜர்

    மேக்சேப் சார்ஜர்கள் கியூஐ தர வசதி கொண்டு அதிகபட்சம் 15 வாட் திறன் வழங்குகின்றன. இவை மற்ற கியூஐ சாதனங்களுடன் இயங்கும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. புதிய மேக்சேப் சார்ஜர் விலை 39 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் ஆறு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் அளவில் துவங்கி 55 இன்ச் வரை கிடைக்கிறது. 

    இவை இரண்டு ஹெச்டி மற்றும் இரண்டு 4கே மாடல்கள் ஆகும். அழகிய வடிவமைப்பு, மெல்லிய பெசல்கள் மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர்களுடன் புதிய ஐடெல் டிவி மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 

     ஐடெல் ஸ்மார்ட் டிவி

    இவற்றின் விலை ரூ. 8999 முதல் துவங்குகிறது. ஐடெல் ஐ சீரிஸ், ஐடெல் சி சீரிஸ் மற்றும் ஐடெல் ஏ சீரிஸ் என மூன்று பிரிவுகளில் கிடைக்கிறது.

    ஐடெல் ஐ 155141இ 4கே டிவி விலை ரூ. 34,999 என்றும், ஐடெல் 143101இ விலை ரூ. 24,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐ சீரிஸ் ஹெச்டி மாடல்கள் 43 இன்ச் புல் ஹெச்டி டிவி விலை ரூ. 21,999 என்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சி சீரிஸ் மாடல்கள் விலை ரூ. 9,499 என்றும் ஏ சீரிஸ் டிவி விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ஆப்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இன்று (அக்டோபர் 14) புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. இது சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் வெளியிடப்பட உள்ளது.

    இந்நிலையில், ஒன்பிளஸ் 8டி சீரிசை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிடு இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது வரவிருக்கும் ஒன்பிளஸ் நார்டு போன்கள் பற்றி தகவல் ஒன்பிளஸ் தளத்தில் இதுவரை குறிப்பிடப்படவில்லை.

     ஒன்பிளஸ் நார்டு

    ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி வெளியீட்டு விழா இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனில் 6.49 இன்ச் டிஸ்ப்ளே ,90HZ ரிப்ரெஷ் ரேட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதுதவிர 64 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பிளாக்ஷிப் அல்லாத ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும். புதிய‌ ஒன்ப்ளஸ் என்10 5ஜி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×