என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    அந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் டியர்டவுன் வீடியோவை பிரபல யூடியூபர் வெளியிட்டிருந்தர். வீடியோவில் ஒன்பிளஸ் 8டி மாடலில் வழங்கப்பட்டுள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக கழற்றப்படுகிறது. 

    அந்த வகையில், டியர்டவுன் செய்த போது ஒன்பிளஸ் 8டி மாடலில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு பேட்டரிகள் தனித்தனியே இருந்த போதும், ஒன்றாக சேர்த்து ஒட்டப்பட்டு உள்ளது. 

     ஒன்பிளஸ் 8டி

    இரண்டு பேட்டரிகளும் முறையே 2250 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டுள்ளன. இத்துடன் டூயல் பேட்டரியுடன் 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    ஒன்பிளஸ் 8 மாடலில் 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வார்ப் சார்ஜ் 30டி சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் 8டி மாடலின் ஸ்பீக்கரில் வாட்டர் ப்ரூபிங் செய்யப்படவில்லை.
    சோனி நிறுவனம் பிஎஸ்5 சீரிஸ் கன்சோல்களின் இந்திய விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.


    சோனி நிறுவனத்தின் புதுவரவு கேமிங் கன்சோல் பிஎஸ்5 சீரிஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இரு மாடல்களின் விலை எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மற்றும் சீரிஸ் எக்ஸ் மாடல்களை விட குறைவு. தற்சமயம் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், விற்பனை விவரம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

    விலையை பொருத்தவரை பிஎஸ்5 ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 49,990 என்றும் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் புளூ-ரே டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் எடிஷனில் இந்த டிரைவ் வழங்கப்படவில்லை.

     சோனி பிஎஸ்5

    எக்ஸ்பாக்ஸ் போன்று இல்லாமல், பிஎஸ்5 இரண்டு வேரியண்ட்களின் ஹார்டுவேர் அம்சங்களும் சமமாகவே வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் கேம்களை சிடிக்களில் இருந்து லோட் செய்ய முடியும். இரு கன்சோல்களுடன் பல்வேறு கேமிங் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    பிளே ஸ்டேஷன் ஹெச்டி கேமரா ரூ. 5,190 விலையிலும், பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட் ரூ. 8,590 விலையில் கிடைக்கிறது. இதேபோன்று பிளே ஸ்டேஷன் மீடியா ரிமோட் ரூ. 2,590 என்றும் டூயல் சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் கன்ட்ரோலர்கள் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சாம்சங் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்வதை அந்நிறுவனம் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வகையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தனது பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய எஸ்21 சீரிஸ் உற்பத்தி பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கலாம் என தெரிகிறது. 

     கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளதால், சாம்சங் தனது ஸ்மார்ட்போன் வெளியீடு திட்டத்தை மாற்றியமைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜனவரியில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட போதுமான நேரத்தை பெறலாம்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் ஒ1, பி3 மற்றும் டி2 எனும் குறியீட்டு பெயர்களில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இவை முறையே கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா எனும் பெயர்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. இவற்றில் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலுடன் எஸ் பென் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி எஸ்21 சீரிஸ் - கிரே, பின்க், சில்வர், வயலெட் மற்றும் வைட் என ஐந்து வித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இவற்றுடன் வரும் கேலக்ஸி பட்ஸ் 2 பிளாக், சில்வர் மற்றும் வயலெட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராண்டு இன் (in) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சப் பிராண்டு மூலம் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. 

    புதிய பிராண்டு பற்றிய அறிவிப்பை ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் PLI அனுமதிகளை பெற்ற பின் வெளியிடுவதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராண்டிங் இந்தியர்களின் தற்போதைய டிரெண்டிங் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் துவங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     இன்

    இன் பிராண்டின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய பயனர்கள் முழுமையாக பயன்பெறும் நோக்கில் இந்த பிராண்டின் எதிர்கால திட்டங்கள் இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருக்கிறது. 
     
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க மைக்ரோமேக்ஸ் ரூ. 500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் இன் பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டு உள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் இன் போது பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டது. 

    அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிக்சல் 4ஏ விற்பனை துவங்கியது. எனினும், விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் பிக்சல்4ஏ விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

     பிக்சல் 4ஏ

    மேலும் விரைவில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என்றும் அதுபற்றிய விவரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 4ஏ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு வந்தது.

    பண்டிகை கால விற்பனை நிறைவுற்றதும், பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக குறுகிய கால சலுகை வழங்கப்பட்டது.
    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனை அதிரடி சலுகைகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    பிக் பில்லியன் டேஸ் 2020 சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் 22 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரீமியம், மிட்-பிரீமியம் பிரவுகளை சேர்ந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    நேற்று (அக்டோபர் 16) துவங்கிய சிறப்பு விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் முதல்முறையாக விற்பனைக்கு வருகின்றன. 

     பிக் பில்லியன் டேஸ்

    அனைவரும் வாங்கக் கூடிய விலை மற்றும் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக ப்ளிப்கார்ட் நிறுவன மூத்த இயக்குனர் ஆதித்யா சோனி தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 

    வட்டியில்லா மாத தவணை வசதி, ப்ளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேடு, ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்ட் ப்ரோகிராம், கம்ப்லீட் மொபைல் ப்ரோடெக்ஷன் மற்றும் பை-பேக் ப்ரோகிராம் உள்ளிட்டவை சலுகைகள் சிறப்பு விற்பனையில் வழங்கப்படுகிறது. 

    சிறப்பு விற்பனையில் பிக்சல் 4ஏ, ஐபோன் எஸ்இ, ஐபோன் XR, ஐபோன் 11, அசுஸ் ரோக் 3, கேலக்ஸி எஸ்20 பிளஸ், நோட் 10 பிளஸ், மோட்டோரோலா எட்ஜ் பிளஸ், மோட்டோ ரேசர் மற்றும் எம்ஐ 10டி சீரிஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. 

    மூன்று பிரைமரி கேமரா மற்றும் வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3டி வளைந்த பாடி, பின்புறம் கைரேகை சென்சார், 4230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஒப்போ ஏ15

    ஒப்போ ஏ15 சிறப்பம்சங்கள்

    - 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    - IMG பவர்விஆர் GE8320 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா
    - டூயல் சிம் 
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 4230 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. 
    ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல்கள் நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இது உண்மையாகும் பட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களில் புதிய சாதனங்களை ஆப்பிள் முதல் முறையாக அறிமுகம் செய்ததாக இருக்கும். மேலும் அனைத்து நிகழ்வுகளும் விர்ச்சுவல் முறையில் நடைபெறுகின்றன.

     ஆப்பிள் சிலிகான்

    முன்னதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் ஆப்பிள் அடுத்தடுத்து புதிய சாதனங்களை தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வகையில் புதிய மேக் மாடலுடன் உயர் ரக ஒவர் இயர் ஹெட்போன் மாடலான ஏர்பாட்ஸ் ஸ்டூடியோவும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் ஐபோன் வெளியீட்டு நிகழ்விலேயே புதிய ஏர்டேக்ஸ் மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

    விவோ நிறுவனத்தின் வை30 ஸ்மார்ட்போன் மாடலின் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனம் தனது வை30 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைத்து இருக்கிறது. அதன்படி விவோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. 

    புதிய விலை குறைப்பு அமேசான் மற்றும் விவோ இந்தியா வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. விலை குறைப்பின் படி விவோ வை30 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விவோ வை30 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இது எமரால்டு பிளாக் மற்றும் டேஸில் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

     விவோ வை30

    விவோ வை30 சிறப்பம்சங்கள்:

    6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
    ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    4 ஜிபி ரேம்
    128 ஜிபி மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
    2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    2 எம்பி சென்சார், f/2.4
    8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
    கைரேகை சென்சார்
    4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
    யுஎஸ்பி டைப்-சி
    5000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி நிறுவனம் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.


    சியோமி நிறுவனம் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த எம்ஐ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலின் விலை குறைந்த எடிஷன் ஆகும். 

    புதிய இயர்போனில் ப்ளூடூத் 5, டூயல் மைக்ரோபோன்கள், 14.2 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் ஏஏசி கோடெக், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் கேசை திறந்ததும், எம்ஐயுஐ போனுடன் இணைந்து கொள்கிறது.

     எம்ஐ வயர்லெஸ் இயர்போன் 2சி

    எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி சிறப்பம்ங்கள்

    - ப்ளடூத் 5 
    - 14.2 எம்எம் டிரைவர்கள்
    - தொடிதிரை வசதி
    - டூயல் மைக்ரோபோன்கள்
    - இன்பிராரெட் சென்சார்
    - குறைந்த எடை கொண்ட வடிவமைப்பு
    - 5 மணி நேர பிளேபேக்
    - யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்

    எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2சி மாடல் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஜியோ நிறுவனம் விரைவில் டிஸ்னி பிளஸ் பிரீமியம் சந்தா கொண்ட புதிய சலுகையை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், ஜியோ வலைதள பக்கத்தில் புதிய சலுகை பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஜியோ ரூ. 401, ரூ. 612, ரூ. 1208 மற்றும் ரூ. 2599 சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கியது. பின் ஏர்டெல் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளுடன் டிஸ்னி பளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கியது.

     டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

    இந்நிலையில், ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சலுகை வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    தற்சமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவின் விலை மாதத்திற்கு ரூ 299 என்றும் வருடாந்திர சந்தா ரூ. 1499 விலையிலும் வழங்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் வயர்லெஸ் பட்ஸ் இசட் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் பட்ஸ் இசட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பட்ஸ் இசட் மாடல் 10 எம்எம் டைனமிக் டிரைவர், பாஸ் பூஸ்ட், டைனமிக் 3டி ஸ்டீரியோ கூடிய டால்பி அட்மோஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் அனைவரின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் மூன்றுவித அளவுகளில் சிலிகான் டிப் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பட்ஸ் இசட் சார்ஜிங் கேஸ் வித்தியாச தோற்றம் கொண்டுள்ளது. இது முந்தைய ஒன்பிளஸ் பட்ஸ் கேசை விட அகலமாக காட்சியளிக்கிறது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்

    புதிய பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் வைட் மற்றும் கிரே என இரண்டுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது. 
    ×