என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் இந்திய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
லெனோவோ லீஜியன் போன் டுயெல் அந்நிறுவனத்தின் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
முன்னதாக இந்த கேமிங் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வலைதளத்தில் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ள போதும் இதன் விலை மற்றும் விற்பனை பற்றி எந்த விவரமும் இதுவரை அறியப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை லீஜியன் போன் டுயெல் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் AMOLED 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் டூயல் லிக்விட் கூலிங் சொல்யூஷன் வழங்கப்பட்டு உள்ளது. லீஜியன் போன் டூயெல் மாடலில் ஜிஏஇ கேம் அக்செலரேஷன் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 20 எம்பி பாப் அப் கேமரா பக்கவாட்டில் பொருத்தப்பட்டு உள்ளது.
சீன சந்தையில் லெனோவோ லீஜியன் போன் டூயெல் மாடல் துவக்க விலை 3499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 37320 என்றும், டாப் எண்ட் மாடல் விலை 5999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 63975 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
லெனோவோ லீஜியன் போன் டுயெல் இந்திய அறிமுக தேதி, விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இவற்றில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் விஷன் ஸ்கிரீன், 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

எல்ஜி டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்களில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி டபிள்யூ11 மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று டபிள்யூ சீரிஸ் மாடல்களிலும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்கள் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், ஆர்க்டிக் வைட் மற்றும் பெபிள் கிரே என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் அமேசான் பிரைம் டே விற்பனைக்கு முந்தைய தினத்தில் ஸ்கார்லெட் ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் ரெட்மி நோட் 9 ஐந்தாவதாக புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் ஷேடோ பிளாக் வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இது ரூ. 10,999 விலையில் எம்ஐ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உற்சாகம் அளிப்பதாக0 மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதியை வழங்க தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையிலேயே பயனர்கள் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் இரண்டு கோடி பேருக்கு முதற்கட்டமாக வாட்ஸ்அப் பேமெண்ட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேமெண்ட் வசதிக்கு தற்சமயம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய பேமெண்ட் வசதியை பயனர்கள் சாட் பாக்சில் இருந்தபடி பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பது பற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் வசதிக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பது உற்சாக உணர்வை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
குறுந்தகவல் அனுப்புவதை போன்றே வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்ப முடியும். இந்த சேவையில் 140-க்கும் அதிகமான வங்கிகள் இணைக்கப்படுகின்றன. வாட்ஸ்அப் என்பதால் பண பரிமாற்றங்கள் பாதுகாப்பாகவும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எல்ஜி நிறுவனத்தின் ரோலபில் ஸ்மார்ட்போன் மாடல் இந்த பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
எல்ஜி நிறுவனம் தனது ரோலபில் ஸ்மார்ட்போனிற்கான பெயரை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்து இறுக்கிறது. அந்த வகையில் ரோலபில் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ஸ்லைடு எனும் பெயரை பயன்படுத்த விண்ணப்பித்து இருக்கிறது.
முன்னதாக எல்ஜி நிறுவனம் எல்ஜி ரோலபில் எனும் ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பதிவு செய்து இருந்தது. எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி எக்ஸ்புளோரர் பிராஜக்ட் திட்டத்தின் கீழ் உருவான இரண்டுவாது மாடல் என கூறப்படுகிறது. எல்ஜி ஸ்லைடு மற்றும் எல்ஜி ரோலபில் இரு வெவ்வேறு மாடல்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
முந்தைய தகவல்களின் படி எல்ஜி ரோலபில் ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி திட்டத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டு இருந்தது. பிராஜக்ட் பி திட்டத்தின் கழ் உருவாகும் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், பை ரோல் மற்றும் ரோல் கேன்வாஸ் போன்ற பெயர்களை பயன்படுத்தவும் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
எல்ஜி எக்ஸ்புளோரர் திட்டத்தின் கீழ் உருவான முதல் ஸ்மார்ட்போனாக எல்ஜி விங் மாடல் ஸ்வைவெல் ரக ஸ்கிரீன அமைப்புடன் வெளியானது. சமீபத்தில் இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனம் சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை இந்த காரணத்திற்காக அதிரடியாக நீக்கி இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுக்க 1196 அக்கவுண்ட்கள், 994 தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்ளை இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதுதவிர 7947 பக்கங்கள், 110 குரூப்கள் ஒருங்கிணைந்து விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட காரணத்துக்காக நீக்கி இருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் பேஸ்புக் 14 நெட்வொர்க்குகளை சேர்ந்த அக்கவுண்ட்கள், பக்கங்கள் மற்றும் குரூப்களை அதிரடியாக நீக்கியது. இதில் எட்டு நெட்வொர்க்குகள் ஜார்ஜியா, மியான்மர், உக்ரைன் மற்றும் அசர்பைஜான் நாடுகளை சேர்ந்தவை ஆகும்.

இவை அந்தந்த நாடுகளில் உள்ள பயனர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்புவது, விதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. மற்ற ஆறு நெட்வொர்க்குகள் ஈரான், எகிப்து, அமெரிக்கா, மெக்சிகோ சார்ந்து செயல்பட்டு வந்தன.
இந்தியாவில் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் முன்பதிவு சலுகைகளுடன் துவங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
இரு ஐபோன்களுக்கான முன்பதிவு ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை இந்தியா முழுக்க 3500 சில்லறை விற்பனை மையங்களில் நவம்பர் 13 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. ஆப்லைன் விற்பனையின் போது சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு விற்பனை மையங்களில் புதிய ஐபோனை வாங்க நேரம் ஒதுக்கப்படுகிறது. விற்பனை மையம் செல்ல விரும்பாதவர்கள் ஹோம் டெலிவரி முறையிலும் புதிய ஐபோனை பெற்றுக் கொள்ளலாம்.
ஐபோன் 12 மினி மாடலை வாங்குவோர் ஹெச்டிஎப்சி கார்டு பயன்படுத்தினால் ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் பெற முடியும். ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 மினி மற்றும் 12 ப்ரோ விலை விவரங்கள்
- ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் ரூ. 69,900
- ஐபோன் 12 மினி 128 ஜிபி மாடல் ரூ. 74,900
- ஐபோன் 12 மினி 256 ஜிபி மாடல் ரூ. 84,900
- ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் ரூ. 1,29,900
- ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடல் ரூ. 1,39,900
- ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி மாடல் ரூ. 1,59,900
ஒப்போ மற்றும் சியோமி நிறுவனங்கள் சாம்சங் சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
சியோமி மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்பட இருக்கின்றன.
அதன்படி 2021 வாக்கில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ மற்றும் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் விவோ நிறுவனம் மட்டும் எக்சைனோஸ் சிப்செட்களை பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் எக்சைனோஸ் சிப்செட் கொண்ட மாடல்களை விரைவில் வெளியிட இருக்கின்றன. குவால்காம் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களை தவிர்த்து எக்சைனோஸ் சிப்செட்டை தேர்வு செய்ய அதன் விலை தான் முக்கிய காரணியாக இருக்கலாம் என தெரிகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1 ஆம் தேதி புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 798 மற்றும் ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இரண்டு புதிய சலுகைகளிலும் டேட்டா மற்றும் டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய சலுகைகள் தவிர ரூ. 199 போஸ்ட்பெயிட் சலுகை மாற்றம் செய்யப்பட்டு டேட்டா ரோல்ஓவர் பலன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிமுகமானதும் ரூ. 99, ரூ. 225, ரூ. 325, ரூ. 799 மற்றும் ரூ. 1125 விலை சலுகைகள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 798 போஸ்ட்பெயிட் சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த சலுகையில் மாதம் 50 ஜிபி டேட்டா, 150 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ், இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட் ஆன் இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 999 சலுகையில் மாதம் 75 ஜிபி டேட்டா, 225ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட் ஆன் இணைப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் 4ஜி வசதியுடன் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 பீச்சர் போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 மாடல்களை 4ஜி வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு பழைய மாடல்களும் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி இரண்டு நோக்கியா மாடல்களிலும் 4ஜி எல்டிஇ வசதி வழங்கப்படுகிறது. 2000 ஆண்டுகளில் மிகவும் பிரபலமான மாடல்களாக நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 இருந்தன. தற்சமயம் இவை புதுப்பிக்கப்பட்டு 4ஜி வசதியுடன் மீண்டும் அறிமுகமாக இருக்கின்றன.

டெலிகாம் வலைதள விவரங்களின் படி நோக்கியா 8, நோக்கியா 9, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 5.3, நோக்கியா 7.2, நோக்கியா 2720 ப்ளிப், நோக்கியா 8.3, நோக்கியா 3.4, நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 225 4ஜி உள்ளிட்டவை வைபை காலிங் வசதி வழங்கப்படுகிறது.
இதுதவிர சமீபத்திய ஆப்பிள், சாம்சங், ஹூவாய், ஒன்பிளஸ், சியோமி மற்றும் இதர நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் வைபை காலிங் சேவை வழங்கப்படுகிறது.
சோனி நிறுவனம் பிரீமியம் பட்ஜெட்டில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய OLED டிவி மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் ஏஹெச்8 என அழைக்கப்படுகிறது. இது 4கே ஹெச்டிர் ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும்.
புதிய சோனி ஸ்மார்ட் டிவி எக்ஸ்1 அல்டிமேட் இமேஜ் பிராசஸர், பிக்சல் காண்டிராஸ்ட் பூஸ்டர் தொழில்நுட்பம், TRILUMINOS பேனல், அகௌஸ்டிக் சர்பேஸ் ஆடியோ, அலெக்சா, ஆப்பிள் ஏர்பிளே மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சோனியின் புதிய எக்ஸ்1 அல்டிமேட் பிராசஸர் முந்தைய எக்ஸ்1 எக்ஸ்டிரீம் பிராசஸரை விட இருமடங்கு வேகமாக செயல்படுகிறது. இது 4கே ரெசல்யூஷன் படங்களை அதன் உண்மை தரத்தில் பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த டிவியில் உள்ள அகௌஸ்டிக் சர்பேஸ் ஆடியோ தொழில்நுட்பம் ஸ்கிரீனையே ஸ்பீக்கராக பயன்படுத்துகிறது. மேலும் இதில் டால்பி அட்மோஸ், எஸ் போர்ஸ் முன்புற சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது டிவி வைக்கப்பட்டு இருக்கும் சூழலை அறிந்து ஆடியோ மற்றும் படங்களை சரியாக ஒளிபரப்புகிறது.
புதிய சோனி டிவி மாடலில் ஆண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2, ஹோம்கிட், கூகுள் அசிஸ்டண்ட், நெட்ப்ளிக்ஸ் கலிபரேட்டெட் மோட், டால்பி விஷன் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சோனி ஏ8ஹெச் மாடல் 65 இன்ச் மாடல் விலை ரூ. 3,39,900 ஆகும். எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சோனி ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 2,79,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 55 இன்ச் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் யுபிஐ சேவையை வழங்கி வரும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் வாட்ஸ்அப் பே சேவைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி பணம் அனுப்ப முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் 2 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் படிப்படியாக பயன்பாட்டிற்கு வருகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருந்தபடி பயனர்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது.
பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பே அம்சத்தை இயக்குவது எப்படி?
- முதலில் காண்டாக்ட்டில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
- அடுத்து வாட்ஸ்அப் செயலியின் சாட் பாக்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஷேர் ஃபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
- இனி டாக்யூமென்ட் மற்றும் கேலரி ஆப்ஷன்களுக்கு இடையில் உள்ள பேமெண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- பின் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட்டு யுபிஐ விவரங்களை உள்ளீடு செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும்






