என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கிளப்ஹவுல் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களை லின்க் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.


    சமூக வலைதள நிறுவனங்களில் புதுவரவு சேவையாக கிளப்ஹவுஸ் இருக்கிறது. மற்ற வலைதளங்கள் போன்று இல்லாமல் கிளப்ஹவுஸ் தளத்தில் பயனர்கள் தங்களின் குரலையே பதிவுகளாக மேற்கொள்ள வேண்டும். முற்றிலும் புது முயற்சியாக இருந்த போதும், துவங்கி ஒரே ஆண்டிற்குள் இந்த செயலி உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறது.

     கிளப்ஹவுஸ்

    இதுவரை கிளப்ஹவுஸ் தளத்தினை இன்வைட் மூலம் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்த வந்தது. ஆனால் கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு தளத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களை லின்க் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் பயனர்கள் இந்த தளத்தில் இலவசமாகவே இணைந்து கொள்ளலாம் என இதன் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதல்முறை கிளப்ஹவுஸ் பயன்படுத்துவோர் தங்களின் ப்ரோபைல் பக்கத்தில் இருக்கும் Add Twitter அல்லது Add Instagram ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி கிளப்ஹவுஸ் பயனர்கள் மற்றவர்களின் அக்கவுண்ட் மற்றும் கிளப்களில் நேரடியாக பாளோ செய்ய முடியும். 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவது  அனைவரும் அறிந்ததே. புதிய 5ஜி மாடல் விவரங்கள் ஜூன் 24 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜியோ 5ஜி மாடல் 2021 தீபாவளி வாக்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.  

    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். எனினும், இதன் வெளியீடு குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. 

     ஜியோ 5ஜி

    தற்போதைய தகவல்களின் படி ஜியோ 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அதாவது அக்டோபர் - நவம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. புது மாடல் வெளியீடு பற்றி இரு நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    புது 5ஜி மாடல் விலை 50 டாலர்களுக்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 3500 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் கடந்த மாத நிலவரப்படி 1.7 கோடி பேர் டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக, அரசியல் கருத்துக்களை, நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள்.
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர்கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற ‘டிக்’ நீக்கப்பட்டது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து மீண்டும் அந்த நீல நிற ‘டிக்’ சேர்க்கப்பட்டது.

    சமூக வலைத்தளங்களில் டுவிட்டருக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. அரசியல்தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை பிரபலங்கள் என பலரும் டுவிட்டர்கணக்கு வைத்திருக்கிறார்கள்.

    இந்தியாவில் கடந்த மாத நிலவரப்படி 1.7 கோடி பேர் டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக, அரசியல் கருத்துக்களை, நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள்.

    இந்த தளத்திில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை அடையாளப்படுத்துவதற்கு நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் பயன்படுத்தி வருகிறது.

    வெங்கையா நாயுடு டுவிட்டர்




    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனிப்பட்ட முறையில் ஒரு டுவிட்டர் கணக்கு வைத்துள்ளார். இந்த கணக்கை அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதிக்கு பிறகு பயன்படுத்தாமல் இருந்து வந்தார். அதற்குப் பதிலாக துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் அமைந்த டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று திடீரென வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களைஅடையாளப்படுத்த பயன்படுத்தி வந்த நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் நீக்கி விட்டது.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் டுவிட்டர் நடவடிக்கைகளுக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டனர்.

    வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்து நீல நிற ‘டிக்’ குறியீட்டை நீக்கியதாக தகவல் அறிந்ததும் அதிகாரிகள், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்துடன் தொடர்பு கொண்டனர்.

    இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு டுவிட்டர் பணிந்து உடனடியாக அந்த நீல நிற ‘டிக்’ குறியீட்டை வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் சேர்த்தது. இதனால் ஒரே நாளில் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

    இதுகுறித்து டுவிட்டர் கூறுகையில், “இந்த டுவிட்டர் கணக்கு கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது சரிபார்க்கப்பட்ட பேட்ஜ் (நீல நிற ‘டிக்’ குறியீடு) மீட்டமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தது. வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
     

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     ஐபேட் ப்ரோ

    ஐபேட் மினி சீரிசை மேம்படுத்தி, புதிதாக என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களில் வெளியாகும் ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய ஐபேட் மாடல்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஐபேட் ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் கோவின் தளத்தை பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்தியாவில் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுவரை கோவின் தளம் ஆங்கில மொழியில் மட்டுமே இயக்க முடியும். தற்போது பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் கோவின் தளம் இந்தி, அசாமீஸ், கன்னடா, பெங்காலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் இயக்க முடியும். கோவின் தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பதை மத்திய சுகாதார துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கோவின் தளம் மட்டுமின்றி உமாங் அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகளிலும் முன்பதிவு செய்ய முடியும். 
    சாம்சங் நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை பெற சாம்சங் நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் நவம்பர் 2020 வாக்கில் சமர்பிக்கப்பட்டது. இது ஜூன் 3, 2021 அன்று அச்சிடப்பட்டது. காப்புரிமையில் இடம்பெற்று இருக்கும் படங்கள், ஸ்மார்ட்போனின் மடிக்கும் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஹின்ஜ் டிசைன் கேலக்ஸி இசட் போல்டு 2 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் பன்ச் ஹோல் கட்-அவுட், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. 

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    பின்புறம் இரண்டு வெவ்வேறு ஹின்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. பேக் பேனலில் மூன்று கேமரா சென்சார்கள், செங்குத்தாக பொருத்தப்படுகின்றன. புது ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஹின்ஜ் கேமரா லென்ஸ்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இவை செல்பி கேமராக்களாக பயன்படுத்தக்கூடியாத இருக்கும்.

    வலதுபுற ஸ்கிரீன் நடுப்புறமாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது. இடதுபுற ஸ்கிரீன் நடுப்புற ஸ்கிரீனின் பின்புறம் மடிந்து கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட், இடதுபுறத்தில் ஸ்பீக்கர் கிரில் உள்ளது. கேலக்ஸி இசட் போல்டு 2 போன்று இல்லாமல், இந்த மாடலின் முன்புற ஸ்கிரீன் சற்றே அகலமாக இருக்கிறது.
    ட்விட்டர் தளத்தில் துணை ஜனாதிபதி பயன்படுத்தி வந்த தனிப்பட்ட அக்கவுண்டின் புளூ டிக் நீக்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் இந்திய குடியரசின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டில் இருந்த வெரிபைடு சின்னத்தை நீக்கியுள்ளது. எனினும், இவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெரிபைடு புளூ டிக் காணப்படுகிறது.

     வெங்கையா நாடு ட்விட்டர் அக்கவுண்ட்

    தொடர்ச்சியாக பயன்படுத்தவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்ட் கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ட்விட்டர் வெரிபைடு புளூ டிக் நீக்கப்பட்டதாக துணை ஜனாதிபதியின் அதிகாரி தெரிவித்தார்.

    முன்னதாக நைஜீரியா குடியரசு தலைவர் முகமது புகாரியின் ட்விட்டர் பதிவை நீக்கியதற்காக நைஜீரியாவில் ட்விட்டர் சேவையை இரண்டு நாட்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யும் நார்டு CE 5ஜி மாடல் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு CE 5ஜி (கோர் எடிஷன்) மாடல் இந்தியாவில் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை ஒன்பிளஸ் டீசர்களாக வெளியிட்டு வருகிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் புது நார்டு CE 5ஜி 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும், மற்ற சென்சார்கள் செங்குத்தாக அடுக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எல்இடி பிளாஷ் மாட்யூல் ஒன்றும் காணப்படுகிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி

    பிரைமரி கேமராவுடன் 8 எம்பி இரண்டாவது சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஒற்றை பன்ச் ஹோல் ஸ்கிரீன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் டிவி U1S மாடலை பொருத்தவரை இது வாய்ஸ் கண்ட்ரோல் வசதி, கீழ்புற பெசல் பகுதியில் மின்விளக்குகள் இருக்கும் என தெரிகிறது. இந்த டிவியுடன் இரண்டு போன்களை இணைத்து அவற்றில் இருக்கும் தரவுகளை ஸ்டிரீம் செய்ய முடியும்.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ரெட்மி நோட் 10எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் அறிமுகமான இரண்டு மாதங்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ப்ரோ விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 மாடல் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது.

    அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இதன் புதிய விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், மிட்-ரேன்ஜ், பிரீமியம் பிரிவுகளில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

     5ஜி

    இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் பிரிவில் அரிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத்  தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் 2022 ஆண்டு இறுதியில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ரியல்மி குளோபல் 5ஜி நிகழ்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்வு கவுண்டர்பாயின்ட் ரிசர்ச், குவால்காம் மற்றும் ஜிஎஸ்எம்ஏ உடன் இணைந்து நடத்தப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஏர்டேக் மாடலுக்கு விரைவில் இந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஏர்டேக் சாதனத்தை அறிமுகம் செய்து ப்ளூடூத் டிராக்கர் பிரிவில் களமிறங்கியது. தற்போது இந்த சாதனம் ஒஎஸ் தளத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில், ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஆப்பிள் ஏர்டேக்

    ஏர்டேக் சாதனத்தை பயன்படுத்துவதற்கென ஆப்பிள் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஏர்டேக் சாதனத்திற்கான புது ஆப் கொண்டு ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளூடூத் சாதனத்தை பயன்படுத்தி காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

    ஆண்ட்ராய்டு செயலி பற்றிய விவரங்களை ஆப்பிள் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஏர்டேக் சாதனத்திற்கான புது அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது. இந்த அப்டேட் ஏர்டேக் அலெர்ட்களை வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன. கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ22

    கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இரு மாடல்களும் கிரே, வைட், மின்ட் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 229 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,295 என துவங்குகிறது. கேலக்ஸி ஏ22 விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. 
    ×