என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியின் ரீல்ஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க துவங்கி இருக்கிறது.

    இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனை தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியில் உங்களை பாளோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும்.

     இன்ஸ்டா ரீல்ஸ்

    இதனால் அதிக பாளோவர்கள் இல்லாத சிறு வியாபாரங்கள், பிராண்டுகள் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும். பிராண்டுகள் மற்றும் க்ரியேட்டர்கள் முன்பை விட அதிக பிரபலமாக ரீல்ஸ் விளம்பரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

    விளம்பரங்கள் வழக்கமான ரீலஸ் போஸ்ட்களை போன்றே புல் ஸ்கிரீன் மற்றும் செங்குத்தாக தோன்றும். ஏற்கனவே ஸ்டோரிக்களில் வரும் விளம்பரங்களை போன்று இவை ரீல்ஸ்களின் இடையே வரும். அதிகபட்சமாக 30 நொடிகள் வரை ரீல்ஸ் விளம்பரங்களை பதிவிட முடியும். ரீல்ஸ் பகுதியில் வரும் விளம்பரங்களுக்கு மற்ற பயனர்கள் லைக், கமென்ட், சேவ் மற்றும் ஷேர் செய்யலாம்.
    சோனி நிறுவனத்தின் புதிய பிரேவியா XR A80J OLED 4K டிவி காக்னிடிவ் பிராசஸர் XR கொண்டிருக்கிறது.


    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரேவியா XR A80J OLED 4K டிவியை அறிமுகம் செய்தது. 65-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய சோனி ஸ்மார்ட் டிவி காக்னிடிவ் பிராசஸர் XR கொண்டிருக்கிறது. இது sound-from-picture ரியாலிட்டி வசதி கொண்டுள்ளது. இது சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     சோனி பிரேவியா XR A80J டிவி

    இத்துடன் பிரத்யேக கேம் மோட் உள்ளது. இது HDMI 2.0, 4K 120fps வீடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் XR OLED contrast, XR டிரைலுமினஸ் ப்ரோ மற்றும் XR மோஷன் கிளாரிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய பிரேவியா டிவி டால்பி விஷன், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி பிரேவியா XR A80J OLED டிவி XR-65A80J எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதன் 65-இன்ச் மாடல் விலை ரூ. 2,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இதே சீரிசில் 77-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி டேப் A7 லைட் மாடலில் 8.7 இன்ச் WXGA+TFT LCD ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22t பிராசஸர், 3 ஜிபி ரேம், 8 எம்பி ஆட்டோபோகஸ் பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட்

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் A7 லைட் 5100 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    கேலக்ஸி டேப் S7 FE மாடலில் 12.4 இன்ச் WQXGA டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4ஜி எல்டிஇ வசதி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எஸ் பென் வசதி, அல்ட்ரா லோ-லேடன்சி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ, சாம்சங் டெக்ஸ் ஆப் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த டேப்லெட் 10,090 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனினும், டேப்லெட் உடன் 15 வாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான கீபோர்டு கவர் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட் மாடல் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் எல்டிஇ வெர்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி S7 FE மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

    இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 46,999 என்றும் எல்டிஇ வசதி கொண்ட 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 50,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ட்ரிம்மர் மற்றும் லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

     ரியல்மி ஜிடி 5ஜி

    ட்விட்டரில் நடைபெற்ற சமீபத்திய #AskMadhav பேட்டியில் ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி ஜிடி 5ஜி தீபாவளிக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். இத்துடன் ரியல்மி ட்ரிம்மர் மற்றும் லேப்டாப்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    முதற்கட்டமாக ரியல்மி லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மாதவ் சேத் தெரிவித்தார். எனினும், சரியான வெளியீட்டு தேதியை அவர் தெரிவிக்கவில்லை. இத்துடன் நார்சோ தனி பிராண்டாக மாறாது என்றும் அவர் தெரிவித்தார். ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மில்கி வே வெர்ஷன் ஜூன் 24 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    தற்போது கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் சில வாரங்களில் புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 2

    கடந்த ஆண்டும் கேலக்ஸி போல்டு 2 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கேலக்ஸி இசட் போல்டு விற்பனை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் கேலக்ஸி இசட் போல்டு 2 பல்வேறு நெட்வொர்க் வேரியண்ட்களும் விற்று தீர்ந்ததாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    சில வலைதளங்களில் மட்டும் கேலக்ஸி இசட் போல்டு 2 கிடைக்கிறது. இந்த தளங்களிலும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்று முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம். முந்தைய தகவல்களில் சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது.


    பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 456 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகை 50 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதுதவிர அன்லிமிடெட்ட வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    புதிய ஏர்டெல் ரூ. 456 பிரீபெயிட் சலுகை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த ரூ. 447 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. ஜியோ ரூ. 447 சலுகையிலும் ஏர்டெல் தற்போது வழங்கும் பலன்களே வழங்கப்படுகிறது.  ஏர்டெல் ரூ. 456 சலுகையுடன் முதல்முறை பாஸ்டேக் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் புது சலுகையில் கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் விண்க் மியூசிக் போன்ற சேவைகளுக்கான சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புது ஏர்டெல் சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளிலும் கிடைக்கிறது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புது நோக்கியா ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி30 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. பின் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளத்தில் இடம்பெற்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

     நோக்கியா சி20

    நோக்கியா சி30 ஸ்மார்ட்போனிற்கு FCC சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் TA-1357 எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5850 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் அல்லது அதற்கு இணையான திறன் கொண்ட மீடியாடெக் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ/டெப்த்/மோனோகுரோம் சென்சார் வழங்ககப்படலாம்.
    மொப்வோய் நிறுவனத்தின் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்னாப்டிராகன் வியர் 4100 சிப்செட், 1 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.


    மொப்வோய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் ஸ்னாப்டிராகன் வியர் 4100 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. 

    புதிய டிக்வாட்ச் இ3 கூகுள் நிறுவனத்தின் வியர் ஒஎஸ் சார்ந்து இயங்குகிறது. இதில் 1.3 இன்ச் ஹை-டென்சிட்டி எல்சிடி டிஸ்ப்ளே, SpO2 மாணிட்டரிங் மற்றும் பல்வேறு இதர பிட்னஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

     டிக்வாட்ச் இ3

    டிக்வாட்ச் இ3 அம்சங்கள்

    - 1.3 இன்ச் 360x360 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 4100 பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - கூகுளின் வியர் ஒஎஸ்
    - அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
    - பல்வேறு பிட்னஸ் அம்சங்கள்
    - உடல்நலன் அறிந்து கொள்ளும் சென்சார்கள்
    - ப்ளூடூத் 5 
    - 380 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் பேந்தர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பிளாக், புளூ மற்றும் எல்லோ போன்ற சிலிகான் ஸ்டிராப்களுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,999 ஆகும்.  
    விவோ நிறுவனத்தின் புதிய V21e 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனத்தின் புதிய V21e 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. முன்னதாக இதன் 4ஜி வேரியண்ட் ஏப்ரல் மாத வாக்கில் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வேரியண்ட் பின்புறம் கிரேடியன்ட் டிசைன், டூயல் பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

     விவோ V21e 5ஜி

    முன்னதாக இதன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அம்சங்களை பொருத்தவரை விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11.1, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 
    ஜூன் 24-இல் அறிமுகமாகும் ரியல்மி சாதனங்கள் பற்றிய புது டீசர்கள் வெளியாகி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் புது ஸ்மார்ட் டிவி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார்.



    புது சாதனங்கள் அறிமுக நிகழ்வை ரியல்மி ஜூன் 24 ஆம்தேதி நடத்துகிறது. புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. அதன்படி ரியல்மி பட்ஸ் கியூ2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் ரியல்மி புதிதாக ரியல்மி புக் லேப்டாப் மற்றும் ரியல்மி பேட் டேப்லெட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு சாதனங்களுக்கான டீசர் மட்டும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 399 ஆகும். ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் எந்தவிதமான முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

     ஜியோபைபர்

    எனினும், 4கே செட் டாப் பாக்ஸ் பெற வாடிக்கையாளர்கள் ரூ. 1000 திரும்ப பெறக்கூடிய கட்டனத்தை செலுத்த வேண்டும். மாதாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஆறு மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கும் பெற முடியும். ரூ. 999 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுடன் 15 ஒடிடி செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் ஒரே மாதிரியான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை வழங்குகின்றன. இத்துடன் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து மாத கட்டணத்தை நேரடியாக ஜியோவுக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ22 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ22

    இதுதவிர புதிய கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது ஸ்மார்ட்போன் SM-E225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த தளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் S AMOLED +90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி, 2 எம்பி மற்றும் 2 எம்பி என குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
    ×