என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 630 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    2023 புத்தாண்டை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2023 விலையில் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. புத்தாண்டை குறிக்கும் ரூ. 2023 விலையில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரூ. 2023 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.

    பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 2023 விலை சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா (மொத்தத்தில் 630 ஜிபி), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு சலுகையாக ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை 23 நாட்கள் நீட்டித்து இருக்கிறது. அதன்படி ரூ. 2999 விலையில் கிடைக்கும் ஜியோ சலுகையில் தற்போது 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 912.5 ஜிபி டேட்டா (தினமும் 2.5 ஜிபி), 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதற்கு பயனர்கள் குறைந்த பட்சம் ரூ. 239 விலை சலுகை அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் ஸ்பெஷல் OLED பேனல்களை உருவாக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இவற்றில் சில பேனல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மாடல்களில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் ஸ்பெஷல் OLED பேனல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த OLED பேனல்கள் 2024 வாக்கில் அறிமுகமாகும் ஐபேட் மாடல்களில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறஉவனம் ஃபுல் கட் OLED பேனல்களை பயன்படுத்த திட்டமிட்டது. எனினும், ஐபேட்களுக்கு ஆப்பிள் எதிர்நோக்க இருக்கும் தட்டுப்பாடு காரணமாக சாம்சங் நிறுவனம் டு-ஸ்டாக் டேண்டம் OLED பேனல்களை உற்பத்தி செய்ய துவங்கி இருக்கிறது.

    இதே பேனல்கள் ஆப்பிள் மேக் மாடல்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. டு-ஸ்டாக் டேண்டம் OLED பேனல்களில் இரண்டு அடுக்கு பிக்சல்கள் இடம்பெற்று இருக்கும். இதில் உள்ள ஹைப்ரிட் தொழில்நுட்பம் அதிக பிரைட்னஸ் வழங்குவதோடு தற்போது ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், டிவி மற்றும் லேப்டாப் மாடல்களில் உள்ள OLED பேனல்களை விட அதிக காலம் உழைக்கும்.

    பொதுவாகவே OLED பேனல்களின் வாழ்நாள் குறைவு தான். இவைகளில் பர்ன்-இன் பிரச்சினை ஏற்படுவது வாடிக்கையான ஒன்று ஆகும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவே ஆப்பிள் நிறுவனம் புதிய பேனல்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. ஆப்பிள் தற்போது பயன்படுத்த இருக்கும் டு-ஸ்டாக் OLED பேனல்கள் ஃபுல்-கட் OLED பேனல்களை விட மேம்பட்டவை இல்லை. வியாபார அடிப்படையில், அதிக தட்டுப்பாடு கொண்ட பேனல்களை உருவாக்கவே ஒவ்வொரு நிறுவனமும் முடிவு செய்யும். அந்த வகையில் சாம்சங் நிறுவனம் ஃபுல்-கட் OLED ஸ்கிரீன்களின் உற்பத்தியை நிறுத்து விட்டது.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை ஆப்பிள் வாட்ச் வெளியானதில் இருந்தே சாம்சங் நிறுவனம், ஆப்பிளுக்கு OLED பேனல்களை வழங்கி வருகிறது. ஆப்பிள் வாட்ச் மாடல்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் சாம்சங் OLED பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்திருப்பதால், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட்களின் உற்பத்தியை இந்தியாவில் துவங்க திட்டமிட்டுள்ளது.

    • நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஒடிடி தளமாக விளங்குகிறது.
    • கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. பாஸ்வேர்டு ஷேரிங் வியாபாரத்தை நிறுத்தும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதற்கு முடிவுகட்டும் இலக்கை நெட்ஃப்ளிக்ஸ் அடைய இருக்கிறது.

    அடுத்த ஆண்டு துவக்கம் முதலே நெட்ஃப்ளிக்ஸ் அதன் பயனர்கள் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க போவதில்லை. இது குறித்த தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்களது குடும்பத்தார் தவிர வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் வேற்று நபர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படாது. பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாக கண்டறிந்து வருகிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் சந்தா முறை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஸ்வேர்டு ஷேரிங் பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும், சந்தாதாரர்கள் குறைய துவங்கும் வரை இந்த பிரச்சினை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த ஆண்டு வருவாய் சரிய துவங்கியதில் இருந்து பாஸ்வேர்டு ஷேரிங்கிற்கு முடிவு கட்ட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரமாக செயல்பட துவங்கி இருக்கிறது.

    சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாஸ்வேர்டு ஷேரிங்கை நிறுத்தவும் நெட்ஃப்ளிக்ஸ் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் பகுதியாகவே நெட்ஃப்ளிக்ஸ்-இல் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மாதம் 6.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் நெட்ஃப்ளிக்ஸ் - மொபைல் ஒன்லி, பேசிக் பிலான், ஸ்டாண்டர்டு பிலான் மற்றும் பிரீமியம் பிலான் என நான்கு சந்தாக்களை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 149, ரூ. 199, ரூ. 499 மற்றும் ரூ. 649 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் அந்நிறுவனத்தின் விற்பனையை 2023 முதல் காலாண்டில் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

    சாம்சங் நிறுவனம் முற்றிலும் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி S23 சீரிசில் - கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இது குறித்து டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வை பிப்ரவரி 1 ஆம் தேதி நடத்தும் என தெரிவித்து இருக்கிறார். எனினும், சாம்சங் நிறுவனம் இது தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. 2023 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பெரும்பாலும் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் என்றே தெரிகிறது.

    புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை முன்கூட்டியே அறிமுகம் செய்வதன் மூலம் சாம்சங் போட்டியை சமாளிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 2023 முதல் காலாண்டு விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்ய சாம்சங் திட்டமிடுகிறது.

    முன்னதாக கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் SM-S911B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 578 புள்ளிகளையும், மல்டி கோரில் 2 ஆயிரத்து 118 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

    • ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்குவது பற்றி அந்நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
    • புதிய அப்டேட் வழங்கும் நடைமுறை 2023 ஆண்டில் ஒப்போ அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களில் அமலுக்கு வரும் என தெரிகிறது.

    சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களின் வரிசையில் ஒப்போ நிறுவனமும் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்க இருக்கிறது. ஒப்போ வெளியிட இருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு மிக முக்கிய கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை ஒப்போ நிறுவனம் தனது கலர்ஒஎஸ் மைக்ரோசைட்-இல் வெளியிட்டு இருக்கிறது.

    ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், இந்த மாடல்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்க ஒப்போ முடிவு செய்து இருக்கிறது. இந்த அப்டேட் வழங்கும் நடைமுறை ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்கு பொருந்தாது. எனினும், எதிர்காலத்தில் வெளியாகும் தேர்வு செய்யப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த அப்டேட் முறை பொருந்தும்.

    அந்த வகையில், ஒப்போ நிறுவனத்தின் தற்போதைய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒப்போ ஃபைண்ட் X5, ஃபைண்ட் X5 ப்ரோ மற்றும் இதர மாடல்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. இந்த ஆகஸ்ட் மாதம் வெளியான கலர்ஒஎஸ் 13 உலகளவில் ஒப்போ விற்பனை செய்த 33 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது வேகமான மற்றும் மிகப்பெரிய கலர்ஒஎஸ் அப்டேட் ஆகும்.

    கடைசியாக ஒப்போ வெளியிட்ட கலர்ஒஎஸ் அப்டேட் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் எளிமை மற்றும் சவுகரியத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கலர்ஒஎஸ் 13 அப்டேட் மென்மையான, அதிக இயற்கையாக, அழகான அனிமேஷன்கள் நிறைந்து இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய அக்வாமார்ஃபிக் டிசைன், ஸ்மார்ட் AOD, மல்டி-ஸ்கிரீன் கனெக்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    • டெக்னோ நிறுவன ஸ்மார்ட்போனிற்கு அந்நிறுனம் அசத்தலான விலை குறைப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • விலை குறைப்பு ஸ்மார்ட்போனின் ஒரு வேரியண்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் போவா 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ. 11 ஆயிரத்து 499 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலையில் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பை அடுத்து 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ரூ. 9 ஆயிரத்து 999 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், தற்போதைய விலை குறைப்பு ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ போவா 3 அம்சங்கள்:

    6.9 இன்ச் FHD+ ஸ்கிரீன் 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

    3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஹைஒஎஸ் 8.6

    3.5mm ஜாக், ப்ளூடூத், வைபை

    யுஎஸ்பி டைப் சி

    7000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி

    • டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என பயனர்களிடம் எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தினார்.
    • கருத்துக் கணிப்பில் 57.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதில் அளித்தனர்.

    டுவிட்டர் நிறுத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ஏற்க தகுதியான நபரை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். மேலும் இந்த பொறுப்பிற்குரிய நபர் தேர்வானதும், தான் பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்க முட்டாள்தனமான நபரை தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக டுவிட்டர் தலைவர் பொறுப்பில் தான், தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார். சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்தனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்தனர். மீதமுள்ளவர்கள் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பதில் அளித்து இருந்தனர்.

    கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்வது பற்றி எலான் மஸ்க் கருத்து தெரிவித்தார். அதில், "இந்த பணியில் சேர, முட்டாள்தனமான நபரை நான் தேடி முடித்ததும் சிஇஒ பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து விடுகிறேன். அதன் பின் மென்பொருள் மற்றும் சர்வெர் குழுக்களை மட்டும் நிர்வகிக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    "கேள்வி சிஇஒ-வை கண்டுபிடிப்பது இல்லை, மாறாக டுவிட்டர் தளத்தை லைவாக வைத்துக் கொள்ளும் சிஇஒ-வை கண்டுபிடிப்பது தான்," என எலான மஸ்க் மேலும் தெரிவித்தார். முன்னதாக எலான் மஸ்க் வெளியிட்ட மற்றொரு பதிவில், "நீங்கள் விரும்புவதில் மிகவும் கவனமாக இருங்கள், ஏனெனில் உங்களுக்கு அது கிடைக்கவும் செய்யும்," என குறிப்பிட்டு இருந்தார். 

    • டுவிட்டர் பயனர்களிடம், தான் அந்நிறுவன தலைவர் பதவியில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார்.
    • 12 மணி நேரங்கள் நீடித்த கருத்துக் கணிப்பு இந்திய நேரப்படி நேற்று மாலை 4.50 மணிக்கு நிறைவு பெற்றது.

    டுவிட்டர் பயன்படுத்தி வருவோரிடம், தான் டுவிட்டர் தலைவராக பொறுப்பில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார். சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். மீதமுள்ள 42 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என பதில் அளித்துள்ளனர்.

    திங்கள் கிழமை அன்று கருத்துக் கணிப்பை துவங்கிய எலான் மஸ்க், 12 மணி நேரங்கள் லைவில் வைத்திருந்தார். இதில் 57.5 சதவீத டுவிட்டர் பயனர்கள், எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் டுவிட்டர் நிறுவன தலைவராக எலான் மஸ்க் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதில் இருந்து, டுவிட்டர் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

    இதோடு டுவிட்டர் நிறுவன விதிகளில் பெருமளவு மாற்றங்களை செய்தார். டுவிட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் குறித்து பயனர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை தொடர்ந்து இது போன்ற வழிமுறையை இதுவரை அமலுக்கு கொண்டு வராதததற்கு மன்னிப்பு கோரி இருந்தார். டுவிட்டர் தலைவர் பதவியில் நீடிப்பது குறித்த கருத்துக் கணிப்பு அடங்கிய பதிவில், எலான் மஸ்க் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

    தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    • விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது.
    • இதில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி, வங்கி சலுகை மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    விவோ இந்தியா நிறுவனம் தனது விவோ V25 சீரிஸ், விவோ Y75 சீரிஸ் மற்றும் விவோ Y35 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 35 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 39 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது சிறப்பு விற்பனையின் கீழ் விவோ V25 ப்ரோ மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரை கேஷ்பேக் பெறலாம்.

    இதுதவிர ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பயனர்களுக்கும் இதே சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு மாத தவணை மற்றும் டெபிட் கார்டு மாத தவணை உள்ளிட்டவைகளுக்கு கிடைக்கும். விவோ V25 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 27 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 31 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இரு வேரியண்ட்களை வாங்கும் ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் பெற முடியும். இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 990 விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ Y75 4ஜி மற்றும் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. முன்பை போன்றே இந்த மாடல்களுக்கும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதே போன்று விவோ Y35 ஸ்மார்ட்போனை வாங்கும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் விவோ Y35 ஸ்மார்ட்போன் ரூ. 18 ஆயிரத்து 499 விலையில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தளத்தில் ஏராள மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.
    • முதற்கட்டமாக டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் தற்போது முக்கிய முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    எலான் மஸ்க் தனது டுவிட்டர் தளத்தில் பயனர்களிடம், தான் டுவிட்டர் நிறுவன தலைவராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியை கருத்துக்கணிப்பாக பதிவிட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி பயனர் விருப்பத்திற்கு செவி சாய்ப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து கடந்த சில மாதங்களில் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

    ஆயிரக்கணக்கான டுவிட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததில் துவங்கி, டுவிட்டர் புளூ சந்தாவில் ஏராள மாற்றங்கள், நீண்ட காலமாக முடக்கப்பட்டு இருந்த, சர்ச்சைக்குரிய அக்கவுண்ட்களை மீண்டும் டுவிட்டரில் அனுமதித்தது என தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுப்பதில் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். விளம்பரதாரர்கள் தளத்தை விட்டு விலகுவது, வருவாயில் தொடர்ந்து சரிவு நிலை போன்ற காரணங்களால் எலான் மஸ்க் தொடர்ந்து வருவாயை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். எனினும், நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    முன்னதாக மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கண்க்குகளை அந்நிறுவனம் முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதன் பேரில் முடக்கப்பட்ட அக்கவுண்ட்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டது. 

    • சென்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் உள்நாட்டிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் டிவி ஒஎஸ் கொண்டிருப்பதால் குழந்தைகளுக்காக தனி ப்ரோஃபைல் உருவாக்கி கொள்ளலாம்.

    மேட் இன் இந்தியா ஸ்மார்ட்வாட்ச், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நெக்பேண்ட் ஹெட்செட்களை அறிமுகம் செய்து வரும் சென்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்கி இருக்கிறது. முதற்கட்டமாக ஏழு புதிய "மேட் இன் இந்தியா" ஸ்மார்ட் டிவி மாடல்களை செனஅஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அறிமுகம் செய்துள்ளது. இவை நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் உள்ள உற்பத்தி ஆலைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    புதிய ஸ்மார்ட் டிவிக்களில் சென்ஸ் நிறுவனத்தின் லுமிசென்ஸ் மற்றும் ஃபுளோரோசென்ஸ் டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 43 இன்ச் துவங்கி அதிகபட்சம் 65 இன்ச் வரையிலான பேனல் அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் கூகுள் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் தங்களின் குழந்தைகளுக்காக "கிட்ஸ்" ப்ரோஃபைலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

    மற்ற சென்ஸ் சாதனங்களை போன்றே புதிய டிவிக்களும் இந்தியா மற்றும் அமெரிக்காவை சார்ந்த சென்ஸ் நிறுவன ஊழியர்களாலேயே டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிரபல ஒவியர்களான டாவின்சி மற்றும் பிகாசோவை தழுவி பெயரிடப்பட்டுள்ளன.

    சென்ஸ் டாவின்சி 55 இன்ச், 65 இன்ச் 4K QLED கூகுள் டிவி அம்சங்கள்:

    55 / 65 இன்ச் 3840x2160 பிக்சல் QLED டிஸ்ப்ளே

    HDR10, டால்பி விஷன், பெசல் லெஸ் டிசைன்

    குவாட்கோர் பிராசஸர்

    மாலி G52 GPU

    2 ஜிபி ரேம்

    16 ஜிபி மெமரி

    கூகுள் டிவி

    டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2

    3x HDMI, 2x USB, 1x ஈத்தர்நெட், 1x ஆப்டிக்கல் போர்ட்

    நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் ஹாட்கி கொண்ட ரிமோட்

    20 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ்

     

    சென்ஸ் பிகாசோ 50 இன்ச், 55 இன்ச் 4K UHD ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள்:

    50 / 55 இன்ச் 3840x2160 பிக்சல் LED டிஸ்ப்ளே

    HDR10, புளுரோசென்ஸ் பேனல்

    குவாட்கோர் A53 பிராசஸர்

    2 ஜிபி ரேம்

    16 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு டிவி

    டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2

    3x HDMI, 2x USB, 1x ஈத்தர்நெட், 1x ஆப்டிக்கல் போர்ட்

    நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் ஹாட்கி கொண்ட ரிமோட்

    20 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ, டிடிஎஸ்

    சென்ஸ் 32 இன்ச் HD மற்றும் 43 இன்ச் FHD 4K ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள்:

    32 இன்ச் 1366x768 பிக்சல் LED டிஸ்ப்ளே

    43 இன்ச் FHD 1920x1080 பிக்சல் / UHD 3840x2160 பிக்சல் பெசல் லெஸ் டிசைன்

    குவாட்கோர் A53 பிராசஸர்

    ஆண்ட்ராய்டு டிவி

    டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2

    3x HDMI, 2x USB, 1x ஈத்தர்நெட், 1x ஆப்டிக்கல் போர்ட்

    நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் ஹாட்கி கொண்ட ரிமோட்

    20 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ, டிடிஎஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சென்ஸ் பிகாசோ 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவி மாடல்களின் விலை அறிமுக சலுகையாக முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்ஸ் டாவின்சி சீரிஸ் 55 இன்ச் மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்ஸ் 32 இன்ச் HD, 43 இன்ச் FHD மற்றும் 43 இன்ச் 4K டிவி மாடல்களின் விலை முறையே ரூ. 9 ஆயிரத்து 999, ரூ. 16 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை அறிமுக சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை பீட்டா டெஸ்டிங் செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃப்ரின் கீழ் இன்வைட் செய்யப்படும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிடும் பீட்டா டெஸ்டிங்கை ரிலையன்ஸ் ஜியோ துவங்கியது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் ஐஒஎஸ் 16.2 ஒஎஸ்-ஐ வெளியிட்டது. இந்த அப்டேட் ஐபோன் 12 சீரிஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. இதில் ஐபோன் SE 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது 5ஜி சப்போர்ட் கொண்ட ஐபோன் வைத்திருப்பவர்கள் ஜியோ வெல்கம் ஆஃபரில் இணைந்து கொண்டு இலவமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.

    இதற்கு பயனர்கள் முதலில் ஐபோனில் ஐஒஎஸ் 16.2 இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் ஐபோன் செட்டிங்ஸ்-இல் 5ஜி-யை தேர்வு செய்தால் 5ஜி நெட்வொர்க்-ஐ பயன்படுத்த முடியும்.

    ஐபோனின் செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களில் 5ஜி ஆட்டோ மற்றும் 5ஜி Standalone ON ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் செட்டிங்ஸ் -- பேட்டரி -- லோ பவர் மோட்-ஐ ஆஃப் செய்ய வேண்டும்.

    தற்போது குஜராத், பூனே, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்மை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ ஏற்கனவே அறிவித்து விட்டது.

    ×