என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10T மார்வல் எடிஷன் ஸ்மார்ட்போன் ரெட் கேபிள் கிளப்-இல் பிரத்யேகமாக வெளியாக இருக்கிறது.
- புதிய மார்வல் எடிஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் இந்திய வெளியீடு உறுதியாகி விட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப்-இல் டிசம்பர் 17 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரை பிரத்யேகமாக கிடைக்கும். ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனாக இருப்பது மட்டுமின்றி மார்வல் தீம் கொண்ட சாதனங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனிற்காக ஒன்பிளஸ் நிறுவனம் மார்வல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் ஸ்மார்ட்போன் ShopDisney.in வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி புதிய ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் 3 மார்வல் தீம் கொண்ட பிரத்யேக அக்சஸரீக்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் ஒரு Iron Man-தீம் கொண்ட மொபைல் கேஸ், கேப்டன் அமெரிக்கா தீம் கொண்ட பாப்-சாகெட், பிளாக் பாந்தர் தீம் கொண்ட போன் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் விலை ரூ. 55 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கானது ஆகும்.
ஒன்பிளஸ் 10T அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10T மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், HDR10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 12 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS வசதி, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 4800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் 150 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் அம்சம் சரியான நேரத்தில் கணவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பி இருக்கிறது.
- ஐபோன் 14, வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல்களில் கிராஷ் டிடெக்ஷன் கொடுக்கும் மேம்பட்ட சென்சார்கள் உள்ளன.
ஐபோன் 14 மாடலின் கிராஷ் டிடெக்ஷன் அம்சம் நபர் ஒருவருக்கு தனது மனைவி விபத்தில் சிக்கிய தகவல் கொடுத்தது. இதையடுத்து கணவர் சரியான நேரத்தில் விபத்து பகுதிக்கு விரைந்ததால், மனைவி உயிர்பிழைத்தார். இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
கடைவீதிக்கு சென்றிருந்த மனைவி, காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அப்போது, திடீரென கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி விபத்தில் சிக்கியதால் அலறி இருக்கிறார். இதோடு அவரின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நொடிகளில் கணவருக்கு மனைவியின் ஐபோனில் இருந்து நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

நோட்டிஃபிகேஷனில் மனைவி இருக்கும் இடத்தின் சரியான லொகேஷன் இடம்பெற்று இருந்தது. நோட்டிஃபிகேஷனை பார்த்து விபத்து பகுதிக்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். ஆம்புலன்ஸ் வரும் முன் சம்பவ இடத்திற்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். கிராஷ் டிடெக்ஷன் அம்சம் எமர்ஜன்சி SOS மூலம் முதலில் தொடர்பு கொள்ளப்பட வேண்டியவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது.
ஹெல்த் ஆப்-னுள் பயனர்கள் எமர்ஜன்சி காண்டாக்ட்களை சேர்க்க முடியும். ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களில் கிராஷ் டிடெக்ஷன் அம்சத்தை வழங்கும் மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்டறிந்து செயல்படுகிறது.
- ஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அதன் கேமராவுக்கு உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கிறது.
- இந்த நிலையில், ஐபோன்களில் பயன்படுத்தப்படும் கேமரா சென்சார் பற்றிய புது தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஐபோன் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வோர் விவரங்கள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்படும், இதே நிலை அவற்றின் தொழில்நுட்ப விவரங்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில், சோனி நிறுவன ஆலைக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும் இது சந்தையில் மிகவும் அரிதான காரியமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைந்து செயல்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. எனினும், இதுபற்றி இரு நிறுவனங்களும் தொடர்ந்து மௌனம் காத்து வந்தன. இந்த நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சோனி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக டிம் குக் தெரிவித்தார்.

இத்துடன் சோனி நிறுவன தலைமை செயல் அதிகாரி கெனிசிரோ யோஷிடாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிம் குக் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சோனி உற்பத்தி ஆலையில் எடுக்கப்பட்டதாக டிம் குக் குறிப்பிட்டு இருக்கிறார். பேட்டரி, சிப் மற்றும் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகளை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் ஆப்பிள் மர்மமாகவே வைத்திருக்கிறது. எனினும், வினியோக துறையை சார்ந்தவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முன்புறம் மற்றும் பின்புற கிளாஸ் ஷீட்களை கார்னிங் நிறுவனம் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் பெரும்பாலான OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. ஆப்பிள் பயன்படுத்தும் சிப்செட்களை TSMC உற்பத்தி செய்து கொடுக்கிறது. சோனி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே கேமரா ஹார்டுவேர் பற்றிய ஒப்பந்தம் அதன் தோற்றத்தை பொருத்து இதுவரை உறுதுப்படுத்தாமலேயே இருக்கிறது. மேலும் இது பற்றிய உறுதியான தகவல் வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.
இது தவிர சோனி நிறுவனம் செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களை கொண்டு புது சென்சார் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகம் மற்றும் குறைந்த வெளிச்சத்தை அனுமதிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சென்சார் நிச்சயம் எதிர்கால ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ஒன்பிளஸ் நிறுவனம் தனது 9 ஆவது ஆண்டு விழாவை கொண்டாட சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- சிறப்பு விற்பனை மட்டுமின்றி நெவர் செட்டில் எனும் திட்டம் ஒன்பிளஸ் கம்யுனிட்டிக்கு நன்றி செலுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது 9 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஏராள சலுகைகளை வழங்கும் கம்யுனிட்டி சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரிவுகளில் சாதனங்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி பெறலாம்.
சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் "நெவர் செட்டில்" எனும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் ஒன்பிளஸ் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படும், தொடர்ந்து வளர்ந்து வரும் கம்யுனிட்டிக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கான சலுகைகள்:
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடலை ஒன்பிளஸ் வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோல், அமேசான் மற்றும் பார்ட்னர் ஸ்டோர்களில் வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெறலாம்.
ஒன்பிளஸ் வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோல், அமேசான் மற்றும் பார்ட்னர் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் தள்ளுபடி, ஒன்பிளஸ் 10R 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை டிசம்பர் 25, 2022 வரை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், அமேசான் மற்றும் பார்டனர் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் மற்றும் ஐஒஎஸ் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து கூடுதலாக ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை டிசம்பர் 20, 2022 வரை வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்டு:
ஐசிஐசிஐ கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போனினை வாங்கும் போது ரூ. 3 ஆயிரமும், நார்டு CE 2 லைட் 5ஜி மாடலுக்கு ரூ. 1500 வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 18, 2022 வரை வழங்கப்படுகிறது. டிசம்பர் 19 முதல் 25, 2022 வரை ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்துவோர் ஒன்பிளஸ் நார்டு 2T வாங்கும் போது ரூ. 700 தள்ளுபடி பெறலாம். இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கார்டு வைத்திருப்போர் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெற முடியும். இந்த சலுகை டிசம்பர் 25, 2022 வரை வழங்கப்படும்.
இதே போன்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்கள், அக்சஸரீக்கள், ஸ்மார்ட் டிவி மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாணிட்டர்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகிறது.
- ட்விட்டர் புளூ பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை வழங்கி வெரிஃபை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- தற்போதுள்ள புளூ செக்மார்க்குகள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்திய பயனர்களுக்கான ட்விட்டர் புளூ சந்தா விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதுபற்றி ட்விட்டர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சிறு இடைவெளிக்கு பின் ட்விட்டர் புளூ மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ட்விட்டர் புளூ இந்திய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் ரூ. 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த சேவைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவின் விலை அதிகமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

சர்வதேச சந்தையில் ட்விட்டர் புளூ ஐஒஎஸ் விலையை ஒப்பிடும் போது இந்திய விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்தியா தவிர தற்போது ட்விட்டர் புளூ சேவை வெளியிடப்பட்டு இருக்கும் நாடுகளில் ஐஒஎஸ் பயனர்கள் மாத சந்தாவாக 11 டாலர்கள் செலுத்த வேண்டும். ட்விட்டர் வெப் பயனர்கள் மாதம் 7 டாலர்கள் வரை சந்தாவாக செலுத்த வேண்டும் என தெரிகிறது. எனினும், இது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
ட்விட்டர் புளூ சந்தாவில் பயனர்களுக்கு, ட்விட்களை எடிட் செய்யும் வசதி, 1080 பிக்சல் தரத்தில் வீடியோ அப்லோடு செய்யும் வசதி, ரீடர் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ட்விட்டர் வெரிஃபிகேஷன் செக்மார்க்குகள் புது நிறங்களில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி வியாபாரங்கள் மற்றும் கோ-ஆபரேஷன்களுக்கு கோல்டு நிறமும், அரசு, சர்வதேச அக்கவுண்ட்களுக்கு கிரே நிறமும் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தா அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்கப்பட்ட அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- இதே அம்சம் விரைவில் ஐஒஎஸ் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர் குறுந்தகவல்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு "View Once" எனும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த வசதி கொண்டு அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்டதும் அவை அழிந்து விடும். வாட்ஸ்அப்-இன் "View Once" அம்சம் தற்போது குறுந்தகவல்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதால், இதனை மற்றவர்கள் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக குறுந்தகவல்களுக்கான "View Once" அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.25.20 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் பயனர்கள் மெசேஜ்களுக்கு "View Once" வசதியை பயன்படுத்தலாம்.

புது வசதியை வழங்குவதற்காக வாட்ஸ்அப் சாட் பார் அருகில் விசேஷ பட்டனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவவதாக கூறப்படுகிறது. பயனர்கள் "View Once" மெசேஜ் அனுப்பும் முன் இந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் அனுப்ப வேண்டி இருக்கும். மெசேஜை அனுப்புவதற்கான ஐகான் மீது லாக் இடம்பெற்று இருக்கிறது.
வாட்ஸ்அப் தற்போது "View Once" முறையில் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுக்கும் வசதியை வழங்கி வருகிறது. இதே போன்று "View Once" போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர், ஃபார்வேர்டு, காப்பி அல்லது சேவ் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை. இதே போன்ற வசதிகள் மெசேஜ்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: WABetaInfo
- ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் இரண்டு புது மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இரண்டு புது மாணிட்டர்களிலும் டைப் சி போர்ட், யுஎஸ்பி பிடி சப்போர்ட், 18 வாட் அவுட்புட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மற்றும் மாணிட்டர் E 24 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடலில் FHD 75Hz டிஸ்ப்ளே, மாணிட்டர் X 27 மாடலில் 2K 165Hz HDR டிஸ்ப்ளே, 1ms ரெஸ்பான்ஸ் டைம், AMD ஃபிரீசின்க் பிரீமியம், டிஸ்ப்ளே HDR 400 கலர் உள்ளது. இரு மாணிட்டர்களிலும் டைப் சி போர்ட், யுஎஸ்பி பிடி சப்போர்ட், 18 வாட் அவுட்புட் உள்ளது.
இரண்டு புது மாணிட்டர்களிலும் பில்ட்-இன் கேபில் மேனேஜ்மெண்ட் அம்சம் உள்ளது. இதனால் வயர் ஒருங்கிணைப்பது பற்றி பயனர்கள் எவ்வித சிரமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மாடலில் உறுதியான மெட்டல் ஸ்டாண்ட், டெலிகேட் மெட்டல் ஃபினிஷ், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிசைன், சுழற்றக் கூடிய வியூவிங் ஆங்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் உயரத்தை 0 முதல் 130mm வரை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 அம்சங்கள்:
27 இன்ச் 2560x1440 பிக்சல் QHD IPS டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட்
1ms ரெஸ்பான்ஸ் டைம், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 95% DCI-P3 கலர் கமுட்
178 டிகிரி வியூவிங் ஆங்கில், VESA டிஸ்ப்ளேHDR 400, TUV ரெயின்லாந்து சான்று
AMD ஃபிரீசின்க் பிரீமியம்
ஸ்டாண்டர்டு, மூவி, பிக்ச்சர், வெப், கேம் போன்ற பிக்ச்சர் மோட்கள்
ஸ்ப்லிட் ஸ்கிரீன் சப்போர்ட்
உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி
1x யுஎஸ்பி சி (65 வாட் பவர் டெலிவரி), 1X HDMI v2.1, 1x DP v1.4
2x யுஎஸ்பி 3.0 (5வாட் சார்ஜிங் சப்போர்ட்), 1x ஹெட்போன் ஜாக்

ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 அம்சங்கள்
24 இனஅச் 1920x1080 பிக்சல் FHD IPS டிஸ்ப்ளே, 75Hz ரிப்ரெஷ் ரேட்
5ms ரெஸ்பான்ஸ் டைம், 250 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூவிங் ஆங்கில், அடாப்டிவ் சின்க்
TUV ரெயின்லாந்து சான்று
8mm ஸ்லிம் மூன்று பக்கம் பெசல் இல்லா டிசைன்
மெட்டல் ஸ்டாண்ட், ஆங்கில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி
1x யுஎஸ்பி சி (18 வாட் பவர் டெலிவரி), 1x HDMI v1.4, 1x VGA, 1x ஹெட்போன் ஜாக்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர் X27 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி பெறலாம். இத்துடன் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இத்துடன் ஸ்மார்ட் டிவி-க்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் அசத்தலான வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் "The Big Game Fest" பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டத்தின் கீழ் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவிக்களை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தி பிக் கேம் ஃபெஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட பரிசுகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவி மாடல்களான நியோ QLED 8K, நியோ QLED, QLED, தி ஃபிரேம் டிவி, தி ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் உள்ளிட்டவைகளை வாங்கும் போது பரிசுகளை பெறலாம். இதுதவிர சாம்சங் நியோ QLED, QLED டிவி வாங்கும் போது பத்து ஆண்டுகளுக்கு நோ-ஸ்கிரீன் பர்ன்-இன் வாரண்டி வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட டிவி மாடல்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா அல்லது ரூ. 49 ஆயிரத்து 900 மதிப்புள்ள சாம்சங் அல்ட்ரா ஸ்லிம் சவுண்ட்பார் HW-S801B பெற முடியும். சாம்சங் ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் வாங்குவோருக்கு சாம்சங் சவுண்ட் டவர் T40 இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 75 இன்ச் UHD டிவி வாங்குவோருக்கு ரூ. 18 ஆயிரத்து 400 மதிப்புள்ள கேலக்ஸி A23 ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.
வங்கி சலுகைகள்:
சாம்சங் நிறுவனம் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஆர்பிஎல் உடன் இணைந்து மாதம் ரூ. 1990 எனும் மிக குறைந்த மாத தவணை முறை, அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இவை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஆகும். இவை ஆஃப்லைன் வலைதளங்கள் மற்றும் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது.
- நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளமான அமேசான் ஏராளமான பொருட்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகை கொண்ட விற்பனையை நடத்தி வருகிறது.
- பண்டிகை காலக்கட்டத்தில் அனைத்து பொருட்களுக்கும் அதிரடி சலுகை, விலை குறைப்பு கொண்ட விற்பனைகள் நடத்தப்பட்டன.
அமேசான் இந்தியா வலைதளத்தில் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதமும் இதே போன்ற விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது டிசம்பர் மாதத்திறகான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனையின் அங்கமாக சியோமி, ஐகூ, ரியல்மி, டெக்னஓ, ஒப்போ மற்றும் லாவா நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியுடன் வாங்கிட முடியும். ரெட்மி A1, ஐகூ Z6 லைட், ரெட்மி 11 பிரைம் 5ஜி, டெக்னோ ஸ்பார்க் 9, ஒப்போ F21s ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 11 மற்றும் ரியல்மி நார்சோ 50i போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகள் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.

இன்று (டிசம்பர் 10) துவங்கி இருக்கும் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" சிறப்பு விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் வழங்கப்படும் சிறந்த சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி
ரெட்மி A1 ரூ. 5 ஆயிரத்து 579 முதல்
ரெட்மி 10A ரூ. 7 ஆயிரத்து 469 முதல்
ரெட்மி 11 பிரைம் 5ஜி ரூ. 11 ஆயிரத்து 999 முதல்
ரெட்மி நோட் 11 ரூ. 10 ஆயிரத்து 999 முதல்
ஐகூ
ஐகூ நியோ 6 ரூ. 26 ஆயிரத்து 999, 3 அல்லது 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
ஐகூ Z6 ப்ரோ ரூ. 19 ஆயிரத்து 999 முதல்
ஐகூ Z6 லைட் ரூ. 12 ஆயிரத்து 499 முதல்
டெக்னோ
டெக்னோ பாப் 6 ப்ரோ ரூ. 5 ஆயிரத்து 579 முதல்
டெக்னோ ஸ்பார்க் 9 ரூ. 7 ஆயிரத்து 649 முதல்
டெக்னோ போவா 5ஜி ரூ. 14 ஆயிரத்து 299 முதல்
டெக்னோ கேமான் 19 மாண்ட்ரியன் ரூ. 16 ஆயிரத்து 999 முதல்
ரியல்மி
ரியல்மி நார்சோ 50i ரூ. 5 ஆயிரத்து 499 முதல்
ரியல்மி நார்சோ 50A பிரைம் ரூ. 8 ஆயிரத்து 999 முதல்
ஒப்போ
ஒப்போ F21s ரூ. 24 ஆயிரத்து 499 முதல், 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
ஒப்போ A76 ரூ. 15 ஆயிரத்து 490 முதல்
ஒப்போ A77s ரூ. 16 ஆயிரத்து 999 முதல்
லாவா
லாவா பிளேஸ் NXT ரூ. 8 ஆயிரத்து 369 முதல்
லாவா Z3 ரூ. 6 ஆயிரத்து 299 முதல்
வங்கி சலுகைகள்:
ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மாத தவணை முறைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வாங்கும் போது 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெறலாம். இதே போன்று ஃபெரடல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 1250 வரை தள்ளுபடி பெறலாம்.
- இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் 5ஜி சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் ஐந்து முதல் ஏழு மாதங்களுக்குள் 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க பிஎஸ்என்எல் வைத்திருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் இதே போன்ற அப்கிரேடு செய்யப்பட இருப்பதாக மத்திய டெலிகாம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.
தற்சார்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் டெலிகாம் துறை வளர்ச்சி நிதியை ஆண்டிற்கு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடியாக உயரத்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். கோடக் வங்கி தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து இருந்தார்.

அதில் பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் உறுதியான நிறுவனமாக மாறழும் என தெரிவித்தார். இதோடு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் கிராமபுறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் மொபைல் டவர்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாக களமிறங்காத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
"டெலிகாம் தொழில்நுட்ப ஸ்டாக் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இது 4ஜி தொழில்நுட்ப ஸ்டாக் ஆகும். அடுத்த ஐந்து முதல் ஆறு மாத காலத்திற்குள் இவை 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க உள்ள 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் தொழில்நுட்ப ஸ்டாக் வெளியிடப்படும்," என அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.
5ஜி டெஸ்டிங் செய்வதற்கான உபகரணங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ்-இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை துவங்க முடியும்.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- முன்னதாக மோட்டோ X40 ஸ்மார்ட்போனின் டீசர்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ X40 ஸ்மார்ட்போனினை டிசம்பர் 15 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன், டீசர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. இந்த நிலையில், மோட்டோ X40 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.
கீக்பென்ச் 5 டேட்டாபேஸ்-இல் இடம்பெற்று இருந்த மோட்டோ X40 ஸ்மார்ட்போன் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. லிஸ்டிங்கின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13, 12 ஜிபி ரேம் கொண்டிருகும் என கீக்பென்ச் விவரங்களில் தெரியவந்து இருக்கிறது. சிங்கில் கோரில் இந்த ஸ்மார்ட்பஓன் 1471 புள்ளிகளையும், மல்டி கோரில் 4683 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இவை திவர மோட்டோ X40 பற்றி கீக்பென்ச் தளத்தில் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
எனினும், முந்தைய தகவல்களில் மோட்டோ XT2301-5 மாடலில் 125 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை வெளியான விவரங்களின் படி மோட்டோ X40 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், LPDDR5X ரேம், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
- கடந்த ஆண்டு ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஃபைண்ட் N அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி புதிய ஒப்போ ஃபைண்ட் N2 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஃபைண்ட் N2 மற்றும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஃபைண்ட் N2 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஆண்டு ஃபைண்ட் N2 மாடலுடன் தனது முதல் ஃப்ளிப் போனை ஒப்போ அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோவை ஒப்போ வெளியிட்டு உள்ளது. அதன்படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் டூயல் E6 AMOLED டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஜீரோ கிரீஸ் கொண்ட ஹின்ஜ் வழங்கப்படுகிறது.

இத்துடன் மிக குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம், இண்டகிரேட் மார்டைஸ் மற்றும் டெனான் டிசைன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. ஃபைண்ட் N2 மாடல் மிக குறைந்த எடை கொண்ட ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.
இதன் எடை 233 கிராம் ஆகும். ஸ்மார்ட்போனின் பாகங்களை மறு கட்டமைப்பு செய்து, புதுமையான பொருட்களை கொண்டு இந்த நிலையை எட்டியதாக ஒப்போ தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஹானர் மேஜிக் Vs மாடல் 261 கிராம் எடையுடன் மிகவும் எடை குறைந்த ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.






