என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10T மார்வல் எடிஷன் ஸ்மார்ட்போன் ரெட் கேபிள் கிளப்-இல் பிரத்யேகமாக வெளியாக இருக்கிறது.
- புதிய மார்வல் எடிஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் இந்திய வெளியீடு உறுதியாகி விட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப்-இல் டிசம்பர் 17 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரை பிரத்யேகமாக கிடைக்கும். ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனாக இருப்பது மட்டுமின்றி மார்வல் தீம் கொண்ட சாதனங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ஒன்பிளஸ் 10T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனிற்காக ஒன்பிளஸ் நிறுவனம் மார்வல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் ஸ்மார்ட்போன் ShopDisney.in வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் 3 மார்வல் தீம் கொண்ட பிரத்யேக அக்சஸரீக்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் ஒரு Iron Man-தீம் கொண்ட மொபைல் கேஸ், கேப்டன் அமெரிக்கா தீம் கொண்ட பாப்-சாகெட், பிளாக் பாந்தர் தீம் கொண்ட போன் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10T மார்வல் எடிஷன் விலை ரூ. 55 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கானது ஆகும்.
ஒன்பிளஸ் 10T அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10T மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், HDR10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 12 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS வசதி, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 4800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் 150 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.