என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ரியல்மியின் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட், ரியல்மி மினி மற்றும் ரியல்மி பேட் X மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் புது டேப்லெட் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் விரைவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு ஸ்கிரீன்ஷாட்டில் ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் லிஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி ரியல்மி பேட் ஸ்லிம் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, வைபை, 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவைதவிர ரியல்மி பேட் ஸ்லிம் மாடலின் இதர அம்சங்கள் ரியல்மி பேட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல், 8MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 7100 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. ரியல்மி பேட் மாடல் இரண்டு எல்டிஇ மாடல்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ரியல்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து விட்டது. எனினும், ரியல்மி பேட் ஸ்லிம் வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.
- ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்து இருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- ஐபோன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீண்ட காலம் எதிர்பார்க்க ப்பட்டு வருகிறது.
ஐபோன்களை கொண்டு பல்வேறு இதர சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் அம்சத்திற்காக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் பைமாடல் மாக்னடிக் அலைன்மெண்ட் பாகங்களை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி இந்த அம்சம் எதிர்கால ஐபோன்களில் ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும். தற்போது ஐபோன்களின் பின்புறம் ஆப்பிள் வழங்கி வரும் வயர்லெஸ் சார்ஜிங் பெரிய காயில் கொண்டுள்ளது. ஆனால் இது வாட்ச்-ஐ சார்ஜ் செய்யாது.

காப்புரிமை விண்ணப்ப குறிப்பில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்கள் எலெக்ட்ரோமேக்னடிக் இண்டக்ஷன் முறையில் மின்சாதனங்களுக்கு சார்ஜ்-ஐ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு வயர்லெஸ் சார்ஜர் பகுதியில் இதர சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தவிர ஆப்பிள் நிறுவனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய OLED கொண்ட ஐபேட் ப்ரோ 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து அவற்றில் M2 சிப்செட் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Photo Courtesy: Patentlyapple
- டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
- டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஏராளமான மாற்றங்கள், புது வசதிகள் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
டுவிட்டர் நிறுவனத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலக கட்டிடத்திற்கு வாடகை செலுத்த காரணத்தால் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. ஹார்ட்ஃபோர்டு பில்டிங் -- கொலம்பியா ரெய்ட் - 650 கலிஃபோர்னியா எல்எல்சி உரிமையாளர் டுவிட்டர் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். கட்டிடத்தின் 30 ஆவது தளத்தில் டுவிட்டர் நிறுனவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
2017 வாக்கில் டுவிட்டர் நிறுவனத்திற்கான கலிஃபோர்னியா அலுவலகம் லீஸ் முறையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சர்வதேச அலுவலகங்களுக்கான வாடகையை டுவிட்டர் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள தலைமையகமும் அடங்கும். வாடகை பாக்கி வைக்கப்பட்டு இருக்கும் அலுவலகங்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நீண்ட காலம் மூடியே வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் டுவிட்டர் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் எனும் திட்டம் அமலில் இருந்து வந்தது. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டுவந்தார். இதோடு டுவிட்டர் நிறுவனத்தில் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன் மூலம் பயனர் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டது.
அலுவலக வாடகை மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனம் இரண்டு தனி விமானங்களுக்கான வாடகையை ஜெட் சர்வீசஸ் எல்எல்சி குழுமத்திற்கு செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. ஜெட் சர்வீசஸ் எல்எல்சி நிறுவனமும் டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறது. தனி விமானங்களுக்கான வாடகை பாக்கி மட்டும் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 63 லட்சம் என கூறப்படுகிறது.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்குவது பற்றி கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
- தற்போது இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கும் திட்டத்தில் கூகுள் மாற்றங்களை செய்து இருக்கிறது.
இந்திய சந்தையில் 5ஜி கனெக்டிவிட்டி இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது. 5ஜி வெளியீட்டை தொடர்ந்து கூகுள் நிறுவனம், பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் வழங்குவதற்காக இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அறிவித்தது. எனினும், எப்போது இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எவ்வித தகவலையும் வழங்கவில்லை. தற்போது இதற்கான பதிலை கூகுள் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது. "5ஜி சேவையை வழங்கும் விவகாரத்தில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 6a மாடல்களுக்கு 2023 முதல் காலாண்டு வாக்கில் அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளோம்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த முறையும் சரியான வெளியீட்டு விவரத்தை கூகுள் தெரிவிக்கவில்லை. எனினும், 2023 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்காத சில நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் இருக்கிறது. தற்போது சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கிவிட்டன.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது. இதுதவிர சியோமி நிறுவனம் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் ப்ரோ விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் ஐபோன் 15 சீரிஸ் நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் OLED ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு மாடல்கள் 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபேட் மினி மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்யும் என்றும் கூறப்பட்டது.
பிரபல டிப்ஸ்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புது OLED ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும். புது மாடல்கள் 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இவற்றில் OLED பேனல்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து இருந்தது.
அந்த வகையில் புது ஐபேட் மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு விட்ட நிலையில், 2024 வரை இதற்கான மேம்பட்ட வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்க முடியாது. OLED பேனல்களுக்கு மாறும் முன் ஆப்பிள் வெளியிடும் சிறு அப்டேட் ஆக புது மாடல்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு 14.1 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என ராஸ் யங் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்றும் மாறாக 16 இன்ச் அளவில் புது ஐபேட் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
- சாம்சங் நிறுவன ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
- சிறப்பு விற்பனையில் சாம்சங் டாப் எண்ட் டிவி வாங்குவோருக்கு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய பயனர்களுக்கு "Big TV Days" பெயரில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கேஷ்பேக் சலுகை, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நிச்சயிக்கப்பட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்குவோருக்கு சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி A23 போன்ற ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
டிசம்பர் 24 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை ஜனவரி 31, 2023 வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நாடு முழுக்க செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட ரிடெயில் ஸ்டோர் மற்றும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் சாதனங்களை வாங்குவோருக்கு பொருந்தும்.

சிறப்பு சலுகை விவரங்கள்:
சாம்சங் நிறுவனத்தின் உயர் ரக மற்றும் பிரீமியம் டிவி மாடல்களை வாங்குவோருக்கு கேலக்ஸி Z ஃபோல்டு 4 (12 ஜிபி, 256 ஜிபி) மாடல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 98 இன்ச் நியோ QLED 4K டிவி அல்லது 85 இன்ச், 75 இன்ச் நியோ QLED 8K டிவி வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
இத்துடன் டிவி-க்களுக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. வழக்கமாக ஸ்மார்ட் டிவிக்களுக்கு ஒரு வருட வாரண்டியே வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட நியோ QLED 8K டிவி மாடல்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என சாம்சங் அறிவிக்கவில்லை.
ஸ்மார்ட்போன் வரிசையில், 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ QLED டிவி, 75 இன்ச் தி ஃபிரேம் டிவி, 85 இன்ச் மற்றும் 75 இன்ச் அல்ட்ரா HD 4K QLED டிவி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 40 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் HW S801B சவுண்ட்பார் வழங்கப்படுகிறது.
இத்துடன் 65 இன்ச் நியோ QLED 8K டிவி, 65 இன்ச் மற்றும் 55 இன்ச் நியோ QLED டிவி, 65 இன்ச் UHD 4K QLED டிவி, 85 இன்ச் மற்றும் 75 இன்ச் க்ரிஸ்டல் 4K UHD டிவி வாங்குவோருக்கு ரூ. 18 ஆயிரத்து 499 மதிப்புள்ள கேலக்ஸி A23 (6 ஜிபி, 128 ஜிபி) மாடல் இலவசமாக வழங்கப்படுகிறது.
இவை தவிர எந்த வித டிவி-க்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- வி நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி மொபைல் டேட்டா வழங்கும் இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இரு சலுகைகளிலும் மொபைல் டேட்டா மட்டுமின்றி விளம்பர இடைவெளி இல்லா மியூசிக் சேவையை வழங்குகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கும் வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 4ஜி டேட்டா வவுச்சர் பிரிவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இரு சலுகைகளின் விலை ரூ. 25 மற்றும் ரூ. 55 ஆகும். இரு சலுகைகளும் வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு விட்டன.
எனினும், இரு சலுகைகளில் ஒன்றை பெற பயனர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரூ. 25 விலையில் கிடைக்கும் 4ஜி டேட்டா வவுச்சரில் 24 மணி நேரத்திற்கு 1.1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே காலக்கட்டத்திற்கு 1 ஜிபி டேட்டாவை ரூ. 19 விலையில் வி நிறுவனம் வழங்கி வருகிறது. இதுதவிர ஏழு நாட்களுக்கு விளம்பர இடைவெளி இல்லாத மியூசிக் சேவையும் வழங்கப்படுகிறது.

வி நிறுவனம் இலவச மியூசிக் சேவையை வழங்க ஹங்காமா மியூசிக் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இதில் பயனர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மியூசிக் சேவையை அனுபவிக்க முடியும். ரூ. 25 வி சலுகையில் 24 மணி நேரத்திற்கு 1.1 ஜிபி டேட்டாவும், ஏழு நாட்களுக்கு இலவச மியூசிக் சேவையும் வழங்கப்படுகிறது. இலவச மியூசிக் வேண்டாம் என்போர் ரூ. 19 சலுகையில் இதே வேலிடிட்டியில் 1 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.
மற்றொரு சலுகையான ரூ. 55 பயனர்களுக்கு ஏழு நாட்களுக்கு 3.3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் ஒரு மாதத்திற்கு விளம்பர இடைவெளி இல்லா மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் 4ஜி டேட்டா வைத்திருப்பது அவசியம் ஆகும். இரு சலுகைகள் தவிர வி நிறுவனம் ரூ. 108 விலை சலுகையில் 90 நாட்களுக்கு மியூசிக் சேவையை வழங்குகிறது. எனினும், இதில் 15 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- 2021 செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அமேசானில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
இதே போன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 22 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டஉ இருக்கிறது. அதன்படி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 13 மாடலை ரூ. 45 ஆயிரத்து 490 விலையில் வாங்கிட முடியும். இவை தவிர வியாபார பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி மூலம் 28 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

முன்னதாக 2021 ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா 2532x1170 பிக்சல் XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 அப்டேட்டை வெளியிட்டது. இதில் ஏராளமான புது அம்சங்கள், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ஃபிரீடம் ஆப், ஆப்பிள் மியூசிக் சிங் மற்றும் 5ஜி போன்ற மிகமுக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சில அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், சில அம்சங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு தற்போது அவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது சாதனங்கள் பற்றிய தகவல் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புது சாதனங்களை அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல ஆப்பிள் நிறுவன வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புது ஐபேட் மினி மாடலை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார்.
அடுத்த ஐபேட் மினி மாடலின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக புது பிராசஸர் அல்லது சிப் இருக்கும் என்றும் கியோ தெரிவித்துள்ளார். புது சிப் மூலம் அடுத்த தலைமுறை ஐபேட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. ஏப்ரல் மாத வாக்கில் கியோ வெளியிட்டு இருந்த தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

பின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் ஐபேட் அல்லது ஐபோனாக இருக்கும் என்றும் இது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் சிறிய டேப்லெட்-க்கு மாற்றாக மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகம் செய்யப்படாது. மாறாக மடிக்கக்கூடிய ஐபேட் மினி விலை உயர்ந்த சாதனமாக அறிமுகமாகும் என மிங் சி கியோ தெரிவித்துள்ளார்.
ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் மினி 6 மாடல் 2023 ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபேட் மினி 6 மாடலில் 8.3 இன்ச் லிக்விட் கூல்டு ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
- வாட்ஸ்அப் செயலிக்கான ஆதரவு விரைவில் சில ஸ்மார்ட்போன்களுக்கு நிறுத்தப்பட இருக்கிறது.
- அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் வாட்ஸ்அப் விஷயத்தில் பாதுகாப்பான பக்கம் உள்ளனர் என்றே எடுத்துக் கொள்ளலாம். எனினும், சற்றே பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கவலை கொள்ள வேண்டிய தருணம் இது. சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் விரைவில் இயங்காமல் போக இருக்கிறது.
முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி சில ஐபோன் மாடல்களுக்கான சப்போர்ட்-ஐ வாட்ஸ்அப் நிறுத்தியது. தற்போது வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்டியல் சற்றே பெரிதாகி இருக்கிறது. புத்தாண்டு தினத்தில் இருந்து 49 ஸ்மார்ட்போன்களுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கிறது.
அந்த வகையில், 2022 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பட்டியலிடப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த புது ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்:
ஐபோன் 5
ஐபோன் 5சி
அர்கோஸ் 53 பிலாட்டினம்
கிராண்ட் எஸ் பிலெக்ஸ் இசட்டிஇ
கிராண்ட் எக்ஸ் குவாட் வி987 இசட்டிஇ
ஹெச்டிசி டிசையர் 500
ஹூவாய் அசெண்ட் டி
ஹூவாய் அசெண்ட் டி1
ஹூவாய் அசெண்ட் டி2
ஹூவாய் அசெண்ட் ஜி740
ஹூவாய் அசெண்ட் மேட்
ஹூவாய் அசெண்ட் பி1
குவாட் எக்ஸ்எல்
லெனோவோ ஏ820
எல்ஜி எனாக்ட்
எல்ஜி லூசிட் 2
எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3 கியூ
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் எல்4 டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் எல்5
எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் எல்5 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ ஹெச்டி
மெமோ இசட்டிஇ வி956
சாம்சங் கேலக்ஸி ஏஸ்2
சாம்சங் கேலக்ஸி கோர்
சாம்சங் கேலக்ஸி எஸ்2
சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி
சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் II
சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட்
சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 2
சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்
சோனி எக்ஸ்பீரியா மிரோ
சோனி எக்ஸ்பீரியா நியோ L
விகோ கின்க் ஃபைவ்
விகோ டார்க்நைட் இசட்டி
"தொழில்நுட்ப துறையின் வளர்ந்து வரும் புது அம்சங்களை வழங்கும் நோக்கில், நாங்கள் தொடர்ச்சியாக பழைய ஒஎஸ்-களுக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்தி வருகிறோம். இதன் மூலம் புது ஒஎஸ்-களுக்கு ஆதரவளித்து வருகிறோம். நாங்கள் பழைய ஒஎஸ்-க்கான ஆதரவை நிறுத்தும் பட்சத்தில், அதற்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த சாதனத்தை மாற்றக் கோரும் நினைவூட்டல்களை வழங்குவோம்," என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.
- சியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ரெட்மி 11 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு ரெட்மி தனது ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனினை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. தற்போதைய விலை குறைப்பு ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். குறைக்கப்பட்ட விலை சியோமி இந்தியா மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.
ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரெட்மி நோட் 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 ஆகும். தற்போது இரண்டு வேரியண்ட்களின் விலைகளிலும் ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 12 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பின் படி ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 15 ஆயிரத்திற்கும் கீழ் மாறி இருக்கிறது.
ரெட்மி 11 பிரைம் 5ஜி அம்சங்கள்:
6.58 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
8MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அதன் உறுதித்தன்மை மற்றும் தரத்துக்காக உலகம் முழுக்க பிரபலமாக உள்ளன.
- ஐபோன்களின் தரத்தை நிரூபிக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் அதனை பயன்படுத்துவோர் மூலம் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
சீனாவை சேர்ந்த நிங்டே என்ற பெண் தனது ஐபோன் 12 ப்ரோ மாடல் கட்டிடம் ஒன்றின் 26-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டது. எனினும், கீழே விழுந்த ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நிங்டே தெரிவித்து இருக்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்பின் 26-ஆவது மாடியில் இருக்கும் போது, பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் 12 ப்ரோ மாடல் தவறி கீழே விழுந்து இருக்கிறது. இந்த சம்பவம் டிசம்பர் 18 ஆம் தேதி அரங்கேறி இருக்கிறது. 26-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தும் ஐபோனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
முன்னதாக ஐபோன்கள் பலமுறை கடல், ஆறு என பல இடங்களில் நீண்ட காலம் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு மீட்கப்பட்ட நிலையிலும், ஐபோனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ளது. சமீபத்திய சம்பவம் ஒன்றில், பயனரின் ஐபோன் சில ஆண்டுகளுக்கு முன் கடலில் விழுந்துள்ளது. தற்போது கரை ஒதுங்கியதில் கண்டெடுக்கப்பட்ட ஐபோன் சீராக இயங்கி அனைவரைுக்கும் ஷாக் கொடுத்தது.
இந்த சம்பவத்தில் 26-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஐபோன் 12 ப்ரோ அடுக்குமாடி குடியிருப்பின் 2 ஆவது தளத்தில் இருந்த ஃபோம் பிளாட்ஃபார்மில் விழுந்துள்ளது. பின் குடியிருப்பின் ஊழியர் உதவியோடு ஐபோனை அந்த பெண் மீட்டுள்ளார். 2 ஆவது தளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஐபோனின் ஸ்கிரீன் எவ்வித சேதமும் அடையவில்லை என கூறப்படுகிறது.
ஐபோன் 12 ப்ரோ மாடலில் சூப்பர் செராமிக் பேனல், மேட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் பேனல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஐபோன் 26 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அதனை காப்பாற்றும் என்று கூறிவிட முடியாது. இந்த சம்பவத்தில் கீழே விழுந்த ஐபோன் வேறு ஏதேனும் பொருளில் தடுக்கப்பட்டோ அல்லது உரசிய நிலையிலோ 2 ஆவது தளத்தில் விழுந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.






