search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வாட்ஸ்அப்-இல் மறைந்து போகும் சாட்களை சேமிக்க புது வழி
    X

    வாட்ஸ்அப்-இல் மறைந்து போகும் சாட்களை சேமிக்க புது வழி

    • வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை ஒரு முறை பார்த்ததும் அழிந்து போக செய்யும் வசதி உள்ளது.
    • தற்போது வாட்ஸ்அப்-இல் Kept Messages பெயரில் புது வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.

    L செயலியில் மறைந்து போக செய்யும் குறுந்தகவல்களை பயனர்கள் சேமித்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான வசதியை வழங்கும் புது அம்சம் "Kept Messages" பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் disappearing messages மூலம் வரும் குறுந்தகவல்களை பயனர்கள் தற்காலிகமாக சேமித்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதன்படி disappearing messages வடிவில் வரும் குறுந்தகவல்களை சாதாரனமானவை போன்றே வைத்துக் கொள்ள முடியும்.

    இவ்வாறு சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் மற்ற மெசேஜ்களை விட தனித்து காண்பிக்கப்படுகிறது. disappearing messages மூலம் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் தானாக அழிக்கப்பட்டு விடும். இந்த அம்சம் வாட்ஸ்அப் இணைக்கப்பட்டு இருக்கும் அனைத்து சாதனங்களிலும் குறிப்பிட்ட குறுந்தகவலை அழித்துவிடும். இந்த நிலையில், வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் புது வசதி disappearing messages-களை சேமித்துக் கொள்ள வழி செய்கிறது.

    இவ்வாறு Kept Messages ஆக சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் தானாக அழிக்கப்படாது. இவை மற்ற குறுந்தகவல்களை போன்றே சாட் பாக்ஸ்-இல் தோன்றும். பயனர் விரும்பும்பட்சத்தில் இவற்றை un-keep செய்யக்கோரும் போது தான் அழிக்கப்படும். சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல்களில் தனியே புக்மார்க் ஐகான் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த அம்சம் தற்போது ஆரம்ப கால சோதனை கட்டத்தில் உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் எப்போது பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    Next Story
    ×