search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த போக்கோ C50
    X

    அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த போக்கோ C50

    • போக்கோ நிறுவனத்தின் போக்கோ C50 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ C சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது. இது ரெட்மி A1+ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். போக்கோ C50 மாடலில் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புது போக்கோ C50 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியது. புது ஸ்மார்ட்போனிற்கு அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    போக்கோ C50 விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ C50 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போக்கோ பிராண்டின் புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 299 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    அறிமுக சலுகையாக போக்கோ நிறுவனம் தனது போக்கோ C50 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ. 6 ஆயிரத்து 249 மற்றும் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    போக்கோ C50 அம்சங்கள்:

    6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே

    2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்

    IMG PowerVR GE-class GPU

    2 ஜிபி, 3 ஜிபி LPDDR4X ரேம்

    32 ஜிபி eMMC 5.1 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    டூயல் சிம் ஸ்லாட்

    8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்

    டெப்த் கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    பின்புறம் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    5000 எம்ஏஹெச் பேட்டரி 10 வாட் சார்ஜிங்

    போக்கோ C50 ஸ்மார்ட்போன் கண்ட்ரி கிரீன் மற்றும் ராயல் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×