என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M1 மாடல் எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 30 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- 2020 மேக்புக் ஏர் மாடலுக்கு க்ரோமா வலைதளத்தில் சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடல் க்ரோமா வலைதளத்தில் ரூ. 73 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் மேக்புக் ஏர் விலை தொடர்ந்து ரூ. 99 ஆயிரத்து 900 என்றே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த லேப்டாப் வாங்க நினைப்போரின் தேர்வாக ஆப்பிள் மேக்புக் மாடல்கள் விளங்குகின்றன.
க்ரோமா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 900 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் மேக்புக் ஏர் M1 2020 மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 900 என குறைந்து விடும்.

தற்போது க்ரோமா தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் விலை ஆப்பிள் தளத்தில் இருப்பதை விட ரூ. 16 ஆயிரம் குறைவு ஆகும். அந்த வகையில், கூடுதலாக ரூ. 10 ஆயிரம் சேர்க்கும் பட்சத்தில் மேக்புக் ஏர் 2020 மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அம்சங்கள்:
ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், மேக் ஒஎஸ் வெண்டுரா, 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா, டச் ஐடி சென்சார், 49.9 வாட் ஹவர் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் வைபை, ப்ளூடூத் 5.0, 2x யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், பிளேபேக், 3-மைக் அரே, வைடு ஸ்டீரியோ சவுண்ட் கொண்டுள்ளது.
- டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போன் உலகில் முதல் முறை அம்சம் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. கழற்றி, மாட்டிக் கொள்ளும் வசதி கொண்ட போர்டிரெயிட் லென்ஸ் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ பெற்று இருக்கிறது. இந்த லென்ஸ் 65mm அளவில் 2.5X ஆப்டிக்கல் ஜூம் வசதியை கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை 6.8 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 50MP ISOCELL JN1 சென்சார், 13MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ அம்சங்கள்:
6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
12 ஜிபி LPDDR5 ரேம்
256 ஜிபி UFS 3.1 மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
50MP ISOCELL JN1 சென்சார், 65mm டெலிபோட்டோ கழற்றி, மாட்டும் வசதி கொண்ட லென்ஸ்
13MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி
5160 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி விட்டது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
புது டெக்னோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 12 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு இலவச டெக்னோ பரிசு மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தற்போது ஐபோன் 13 (128 ஜிபி) மாடல் ரூ. 59 ஆயிரத்து 499 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
அமேசான் கிரேட் ரிபப்லிக் டே சேல் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐபோன் 13 (128 ஜிபி) மாடல் ரூ. 59 ஆயிரத்து 499 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஸ்டேட் பேங்க் கார்டு வைத்திருப்போர் பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, கிரெடிட் கார்டு மாத தவணை முறை, பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ கார்டு மற்றும் அமேசான் பே கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதுதவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், அனைத்து சலுகைகளையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 13 மாடலை ரூ. 37 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.
முன்னதாக ஆப்பிள் ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் 2021 வாக்கில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. அளவில் இந்த மாடல் ஐபோன் 12 போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் 12 மாடலில் இருப்பதை போன்றே 12MP வைடு மற்றும் அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 75 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதர வங்கி சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 14 பிளஸ் மாடலை ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் அதன் அசல் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. எனினும், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் பெறலாம்.
- ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஐபோன் 14 மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனை பிளஸ் சந்தா வைத்திருப்போருக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடல் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 பேஸ் மாடல் தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐசிஐசிஐ வங்கி மற்றும் சிட்டி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் ஐபோன் 14 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு தள்ளுபடியில் ஐபோன் 14 மாடலுக்கு 14 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்கள் முறையே ரூ. 76 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 96 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கிராஷ் டிடெக்ஷன் விபத்துக்களை அறிந்து கொண்டு தானாக அவசர உதவி எண்களை அழைத்துவிடும்.
புது ஐபோன் வாங்க நினைப்போர் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் மிட்நைட், பர்ப்பில், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட் மற்றும் புளூ போன்ற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- ஐகூ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
- புதிய ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆல்ஃபா மற்றும் லெஜண்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. முன்னதாக அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டும் பிரத்யேக விற்பனை துவங்கியதை அடுத்து தற்போது அனைவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 5ஜி மாடலில் 6.78 இன்ச் 2K E6 AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், LTPO 4.0 தொழில்நுட்பம், 300Hz டச் சாம்ப்லிங் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP டெலிபோட்டோ / போர்டிரெயிட் சென்சார், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செல்ஃபி எடுக்க 16MP கேமரா சென்சார் உள்ளது.

விலை விவரங்கள்:
ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ஆல்ஃபா மற்றும் கிளாஸ் பேக் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, சிலிகான் லெதர் பேக் மற்றும் பிஎம்டபிள்யூ டிசைன் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகைகளை பொருத்தவரை ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளின் போது ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் கூடுதலாக கூப்பன் தள்ளுபடி ரூ. 1000 மற்றும் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாத தவணை முறை மாதம் ரூ. 1,373-இல் இருந்து துவங்குகிறது. எக்சேன்ஜ் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
ஐகூ 11 அம்சங்கள்:
6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
8 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்
256 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
13MP 2x டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
- அமேசான் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கும் Great Republic Day சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- அடுத்த வாரம் துவங்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசான் வலைதளத்தில் Great Republic Day Sale நடைபெற இருக்கிறது. அடுத்த வாரம் அதாவது ஜனவரி 17 ஆம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கத்தை போன்றே சிறப்பு விற்பனை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு ஒரு நாள் முன்பே துவங்கி விடும்.
புதிய சிறப்பு சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், அக்சஸரீக்கள், ஸ்மார்ட்வாட்ச், வீட்டு உபயோக மின்சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் அமேசான் சாதனங்களான கிண்டில், அலெக்சா, ஃபயர் டிவி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுவதாக அமேசான் அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி, லேப்டாப்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம், ஹெட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு முறையே 75 சதவீதம் மற்றும் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
டிவி மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 65 சதவீத தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. டிவி-க்களுக்கு மாதம் ரூ. 900-இல் இருந்து துவங்கும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வீடு மற்றும் அடுப்பறை பொருட்களுக்கு முறையே 70 சதவீதம் மற்றும் 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று ஆடைகள், அமேசான் அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் கிண்டில் உள்ளிட்டவைகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
தள்ளுபடி, சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அமேசான் நிறுவனம் எஸ்பிஐ கார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இதே போன்று பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டன.
- புதிய கேலக்ஸி S23 சீரிசில் - கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.
கடந்த ஆண்டு கேலக்ஸி S22 சீரிஸ் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யும் முடிவை எடுத்து இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படலாம்.
கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் 200 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட், 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. கேலக்ஸி S23 மாடலில் 25 வாட் சார்ஜிங் வசதியும், கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல்களில் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் Qi வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் அம்சங்கள் வழங்கப்படலாம்.
புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பொடானிக் கிரீன், மிஸ்டி லிலக், ஃபேண்டம் பிளாக் மற்றும் காட்டன் ஃபிளவர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வு இந்திய நேரப்படி பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சியின் நேரலை சாம்சங் வலைதலம் மற்றும் யூடியூப் தளங்களில் ஒளிபரப்பாகிறது.
- போக்கோ நிறுவனத்தின் போக்கோ C50 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ C சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது. இது ரெட்மி A1+ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். போக்கோ C50 மாடலில் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புது போக்கோ C50 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியது. புது ஸ்மார்ட்போனிற்கு அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
போக்கோ C50 விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போக்கோ C50 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போக்கோ பிராண்டின் புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 299 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
அறிமுக சலுகையாக போக்கோ நிறுவனம் தனது போக்கோ C50 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ. 6 ஆயிரத்து 249 மற்றும் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

போக்கோ C50 அம்சங்கள்:
6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்
IMG PowerVR GE-class GPU
2 ஜிபி, 3 ஜிபி LPDDR4X ரேம்
32 ஜிபி eMMC 5.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
டூயல் சிம் ஸ்லாட்
8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்
டெப்த் கேமரா
5MP செல்ஃபி கேமரா
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
பின்புறம் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
5000 எம்ஏஹெச் பேட்டரி 10 வாட் சார்ஜிங்
போக்கோ C50 ஸ்மார்ட்போன் கண்ட்ரி கிரீன் மற்றும் ராயல் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை ஒரு முறை பார்த்ததும் அழிந்து போக செய்யும் வசதி உள்ளது.
- தற்போது வாட்ஸ்அப்-இல் Kept Messages பெயரில் புது வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.
L செயலியில் மறைந்து போக செய்யும் குறுந்தகவல்களை பயனர்கள் சேமித்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான வசதியை வழங்கும் புது அம்சம் "Kept Messages" பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் disappearing messages மூலம் வரும் குறுந்தகவல்களை பயனர்கள் தற்காலிகமாக சேமித்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதன்படி disappearing messages வடிவில் வரும் குறுந்தகவல்களை சாதாரனமானவை போன்றே வைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் மற்ற மெசேஜ்களை விட தனித்து காண்பிக்கப்படுகிறது. disappearing messages மூலம் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் தானாக அழிக்கப்பட்டு விடும். இந்த அம்சம் வாட்ஸ்அப் இணைக்கப்பட்டு இருக்கும் அனைத்து சாதனங்களிலும் குறிப்பிட்ட குறுந்தகவலை அழித்துவிடும். இந்த நிலையில், வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் புது வசதி disappearing messages-களை சேமித்துக் கொள்ள வழி செய்கிறது.

இவ்வாறு Kept Messages ஆக சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் தானாக அழிக்கப்படாது. இவை மற்ற குறுந்தகவல்களை போன்றே சாட் பாக்ஸ்-இல் தோன்றும். பயனர் விரும்பும்பட்சத்தில் இவற்றை un-keep செய்யக்கோரும் போது தான் அழிக்கப்படும். சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல்களில் தனியே புக்மார்க் ஐகான் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் தற்போது ஆரம்ப கால சோதனை கட்டத்தில் உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் எப்போது பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Photo Courtesy: WABetaInfo
- ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எஸ் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் எக்ஸ்பாக்ஸ் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டது.
எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் அதன் அறிமுக விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கேமிங் கன்சோல் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் 10 சதவீத தள்ளுபடி பெற்று இருக்கிறது. சமீபத்தில் இதன் விலை ரூ. 55 ஆயிரத்து 990 என உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த கன்சோலின் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. ஜனவரி 8 ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 5 ஆம் தேதி துவங்கிய பிக் பச்சட் தமால் சேல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் அங்கமாக எக்ஸ்பாக்ஸ் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தள்ளுபடி தவிர, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் மற்றும் எஸ் வங்கி என தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் விலையை உயர்த்தியது. இது நான்கு மாதங்களில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது விலை உயர்வு ஆகும். இம்மாத துவக்கத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடலுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
விரைவில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என மாற இருக்கிறது. இது அதன் முந்தைய ரூ. 37 ஆயிரத்து 990 விலையை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல் ப்ளிப்கார்ட் பிக் பச்சட் தமால் சேல் விற்பனையில் ரூ. 32 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது டிஜிட்டல் வெர்ஷன் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி வேரியண்டிற்கான விலை ஆகும்.
இதுதவிர எக்ஸ்பாக்ஸ் அக்சஸரீக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலரின் ரோபோட் வைட் வேரியண்டிற்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை தற்போது ரூ. 5 ஆயிரத்து 199 என மாறி இருக்கிறது. இதன் கார்பன் பிளாக் எடிஷன் விலை ரூ. 5 ஆயிரத்து 390 என்றும் சூப்பர் பிரைட் எலெக்ட்ரிக் வோல்ட்/ஃபுளுரோசெண்ட் கிரீன் வயர்லெஸ் கண்ட்ரோலர் விலை ரூ. 5 ஆயிரத்து 890 என மாறி இருக்கிறது.
- மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார்.
- 5ஜி சேவை துவக்க நிகழ்வில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி எப்போது வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார். தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் நாடு முழுக்க சுமார் 70-க்கும் அதிக நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய டெலிகாம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் "பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் 2024 வாக்கில் துவங்கும்," என தெரிவித்து இருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவங்கி வைத்த மத்திய மந்திரி நாட்டில் பிஎஸ்என்எல் 5ஜி வெளியீடு பற்றிய கருத்துக்களை தெரிவித்தார். பிஎஸ்என்எல் தற்போது பயன்படுத்தி வரும் உள்கட்டமைப்புகளை கொண்டு 4ஜி-யில் இருந்து வேகமாக 5ஜி-க்கு அப்கிரேடு செய்து கொள்ள முடியும். மாநிலம் முழுக்க 4ஜி சேவைகளை வழங்குவதற்காக 100 டெலிகாம் டவர்கள் 100 கிராமங்களில் இன்ஸ்டால் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் ஆகஸ்ட் 2023 வாக்கில் வெளியாகும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருந்தார். 2023 ஜனவரி மாதம் 4ஜி சேவைகள் வழங்கும் பணி துவங்கும். பின் ஆகஸ்ட் 2023 வாக்கில் 5ஜி வெளியீடு படிப்படியாக துவங்கும் என அவர் தெரிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களின் படி முந்தைய திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பாதக தெரியவந்துள்ளது.
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனுடன் நோட் 12 ப்ரோ, நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம்.
- ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 200MP கேமரா, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் தனது புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 50MP சோனி IMX766 கேமரா, OIS வசதியுடன் பிரைமரி கேமரா உள்ளது. நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP 1/1.4 இன்ச் சாம்சங் HMX சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர இரு மாடல்களிலும் OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 7P லென்ஸ், ஹை எண்ட் ALD ஆண்டி-கிளேர் கோடிங் உள்ளது.

புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 4980 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் சர்ஜிங் P1 சிப் உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை 46 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.
ரெட்மி நோட் 12 ப்ரோ / நோட் 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.67 இன்ச் FHD 1080x2400 OLED டிஸ்ப்ளே, 30 / 60 / 90 / 120Hz ரிப்ரெஷ் ரேட்
டால்பி விஷன், HDR10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
6 ஜிபி, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
8 ஜிபி, 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 2.2 மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI13
டூயல் சிம் ஸ்லாட்
நோட் 12 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார்
நோட் 12 ப்ரோ பிளஸ் - 200MP பிரைமரி கேமரா, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
3.5mm ஆடியோ ஜாக்
சூப்பர்-லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 5.2
யுஎஸ்பி டைப் சி
நோட் 12 ப்ரோ - 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சார்ஜிங்
நோட் 12 ப்ரோ பிளஸ் - 4980 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் பர்பில், ஃபிராஸ்டெட் புளூ மற்றும் ஆனிக்ஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் ஆர்க்டிக் வைட், ஐஸ்பெர்க் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ 6 ஜிபி, 128 ஜிபி ரூ. 24 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 128 ஜிபி ரூ. 26 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 27 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 29 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 12 ஜிபி, 256 ஜிபி ரூ. 32 ஆயிரத்து 999
புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ப்ளிப்கார்ட், Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜனவரி 11 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறைக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய சியோமி, Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.






