search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    விரைவில் இந்தியா வரும் புது போக்கோ ஸ்மார்ட்போன் - வித்தியாசமாக அம்பலமான வெளியீட்டு தேதி!
    X

    விரைவில் இந்தியா வரும் புது போக்கோ ஸ்மார்ட்போன் - வித்தியாசமாக அம்பலமான வெளியீட்டு தேதி!

    • போக்கோ நிறுவனத்தின் புதிய X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அம்பலமாகி இருக்கிறது.
    • போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்தது.

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான போக்கோ, தனது போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனை பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அடங்கிய விளம்பர படம் பதான் திரைப்படத்தின் இடைவெளி சமயத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போக்கோ X5 ப்ரோ போஸ்டரும் டுவிட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. போக்கோ X5 ப்ரோ வெளியீட்டு தேதி பற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக போக்கோ X5 ப்ரோ டீசரை இந்திய கிரிகெட் அணி வீரரும், போக்கோ விளம்பர தூதருமான ஹர்த்திக் பாண்டியா வெளியிட்டு இருந்தார்.

    டுவிட்டரில் வெளியாகி இருக்கும் விளம்பர போஸ்டரில் ஹர்த்திக் பாண்டியா ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படம், அவரின் அருகில் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    போக்கோ X5 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120Hz ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், HDR10+ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    போக்கோ X5 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அட்ரினோ GPU, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத், GPS, 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×