search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஐபோன் 14 விலை இவ்வளவு தானா? ப்ளிப்கார்ட் அதிரடி!
    X

    ஐபோன் 14 விலை இவ்வளவு தானா? ப்ளிப்கார்ட் அதிரடி!

    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 14 மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனை பிளஸ் சந்தா வைத்திருப்போருக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடல் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 பேஸ் மாடல் தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐசிஐசிஐ வங்கி மற்றும் சிட்டி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் ஐபோன் 14 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு தள்ளுபடியில் ஐபோன் 14 மாடலுக்கு 14 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்கள் முறையே ரூ. 76 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 96 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கிராஷ் டிடெக்ஷன் விபத்துக்களை அறிந்து கொண்டு தானாக அவசர உதவி எண்களை அழைத்துவிடும்.

    புது ஐபோன் வாங்க நினைப்போர் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் மிட்நைட், பர்ப்பில், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட் மற்றும் புளூ போன்ற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×