என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

டிமென்சிட்டி 1080 பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ்!
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனுடன் நோட் 12 ப்ரோ, நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம்.
- ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 200MP கேமரா, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் தனது புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 50MP சோனி IMX766 கேமரா, OIS வசதியுடன் பிரைமரி கேமரா உள்ளது. நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP 1/1.4 இன்ச் சாம்சங் HMX சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர இரு மாடல்களிலும் OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 7P லென்ஸ், ஹை எண்ட் ALD ஆண்டி-கிளேர் கோடிங் உள்ளது.
புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 4980 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் சர்ஜிங் P1 சிப் உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை 46 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.
ரெட்மி நோட் 12 ப்ரோ / நோட் 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.67 இன்ச் FHD 1080x2400 OLED டிஸ்ப்ளே, 30 / 60 / 90 / 120Hz ரிப்ரெஷ் ரேட்
டால்பி விஷன், HDR10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
6 ஜிபி, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
8 ஜிபி, 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 2.2 மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI13
டூயல் சிம் ஸ்லாட்
நோட் 12 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார்
நோட் 12 ப்ரோ பிளஸ் - 200MP பிரைமரி கேமரா, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
3.5mm ஆடியோ ஜாக்
சூப்பர்-லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 5.2
யுஎஸ்பி டைப் சி
நோட் 12 ப்ரோ - 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சார்ஜிங்
நோட் 12 ப்ரோ பிளஸ் - 4980 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் பர்பில், ஃபிராஸ்டெட் புளூ மற்றும் ஆனிக்ஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் ஆர்க்டிக் வைட், ஐஸ்பெர்க் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ 6 ஜிபி, 128 ஜிபி ரூ. 24 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 128 ஜிபி ரூ. 26 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 27 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 29 ஆயிரத்து 999
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 12 ஜிபி, 256 ஜிபி ரூ. 32 ஆயிரத்து 999
புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ப்ளிப்கார்ட், Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜனவரி 11 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறைக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய சியோமி, Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.