என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகி வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏ சீரிசில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி ஏ13 5ஜி பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

ரென்டர்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பாடி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 290 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 10 மாடல் குறைந்த விலையில் பல்வேறு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதேபோன்று புதிய ரெட்மி நோட் மாடலும் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

முந்தைய தகவல்களின்படி ரெட்மி நோட் 11 மாடல் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்பி கேமரா, பின்புற பேனல் கிளாஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூலுக்கு மாற்றாக சதுரங்க வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இந்த மாடலின் கான்செப்ட் ரென்டர்கள் வெளியாகின. அதில் புதிய ஐபோன் முந்தைய எஸ்.இ. மாடலில் இருந்த சேசிஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
இத்துடன் ஐபோன் எஸ்.இ.3 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படலாம். மற்ற அம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

ஐபோன் எஸ்.இ. 3 தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் வெளியீட்டு விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
அமேசான் பிரைம் மாதாந்திர சலுகை சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறது.
அமேசான் தனது பிரைம் சேவையில் மிகவும் பிரபலான ரூ. 129 மாதாந்திர சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக இந்த சலுகை நீக்கப்பட்டது.
இதையடுத்து அமேசான் பிரைம் மூன்று மாதங்கள் மற்றும் வருடாந்திர சலுகைகளை மட்டுமே வழங்கிவந்தது. தற்போது அமேசான் பிரைம் ரூ. 129 மாதாந்திர சலுகை மீண்டும் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதனை பெற அனைத்து மின்னணு பரிவர்த்தனை முறைகளையும் பயன்படுத்த முடியாது.

முன்பை போன்று இல்லாமல், அமேசான் பிரைம் ரூ. 129 சலுகையை கிரெடிட் கார்டு அல்லது தேர்வு செய்யப்பட்ட டெபிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்ய முடியும். ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வங்கிகள் மூலமாகவே ரூ. 129 சலுகையை பெற முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடலுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மாபெரும் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பல்வேறு பொருட்களுக்கும் இந்த விற்பனையில் விலை குறைப்பு, தள்ளுபடி, வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில், ஸ்மார்ட்போன்களுக்கும் அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஐபோன் 12 மினி மாடல் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது ஐபோன் 11 மாடலின் 64ஜிபி விலை ரூ. 39,999 என்றும் 128 ஜிபி ரூ. 44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் ஐபோனிற்கு வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு ரூ. 13,650 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து ஐபோன் 11 64 ஜிபி மாடலை ரூ. 26,349-க்கும் 128 ஜிபி மாடலை ரூ. 31,349-க்கும் வாங்க முடியும்.
ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' எனும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் கொண்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும்.
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ. 249 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், முழு கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை அதிகபட்சம் 150 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொருந்தும் என ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் தொகை இருவழிகளில் வழங்கப்படுகிறது. 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் முதல் தொகையாக ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படும்.
மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் வழங்கப்படும். இந்த சலுகை பற்றிய முழு விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ40 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
இதன் பின்புறம் கைரேகை சென்சார், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி700 ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 48 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதன் விலை 149 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9ஆர்டி ஸ்மார்ட்போன் 50 எம்பி சோனி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை புதிய டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஒன்பிளஸ் 9ஆர்டி மாடல் சீன சந்தையில் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. டீசரை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.

அதன்படி ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் பினிஷ் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9ஆர்டி மாடலில் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
முந்தைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போன சில மணி நேரங்களில் டெலிகிராம் செயலி கோடிக்கணக்கில் புது பயனர்களை பெற்று இருக்கிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் உலகம் முழுக்க சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக பேஸ்புக் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது. பேஸ்புக் சேவைகள் முடங்கிய சில மணி நேரங்களில் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாளராக இருக்கும் டெலிகிராம் புதிய பயனர்கள் எண்ணிக்கையில் திடீர் வளர்ச்சியை பதிவு செய்தது.
வாட்ஸ்அப் இயங்காத காரணத்தால், டெலிகிராம் செயலியை பலர் இன்ஸ்டால் செய்ய துவங்கினர். இதன் காரணமாக சில மணி நேரங்களில் டெலிகிராம் சேவையில் சுமார் 7 கோடி பேர் புதிதாக இணைந்தனர்.

மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக பயனர்கள் இன்ஸ்டால் செய்த போதும், டெலிகிராம் புதிய பயனர்களால் ஏற்பட்ட திடீர் நெரிசலையும் கச்சிதமாக கையாண்டது என டெலிகிராம் நிறுவனர் பவேல் டுரோவ் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் செயலி இன்ஸ்டால் ஆக சற்று நேரம் ஆனது.
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் புதிய நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
விவோ நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் விவோ வி21 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் பிரீமியம் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இது சன்செட் டேசில், ஆர்க்டிக் வைட் மற்றும் டஸ்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 29,990 ஆகும்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 32,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
எனினும், இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கிரே மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் எம்.ஐ. மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு சீரிஸ் போன்றே காட்சியளித்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி மற்றொரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சியோமியின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மிக்ஸ் போல்டு 2-வை விட முற்றிலும் புதிதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அன்டர் டிஸ்ப்ளே கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.






