என் மலர்
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் செயலியில் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.

இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்களை அசத்தல் சலுகைகளுடன் விற்பனை செய்ய இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. மூன்று மாடல்களிலும் 4கே டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் 2, டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் / ஹெச்.டி.ஆர். 10 என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் குவாட்கோர் மீடியாடெக் எம்.டி.9611 பிராசஸர், மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு. கிராபிக்ஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் பேட்ச்வால் 4, ஹேண்ட்ஸ்-பிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் 43 இன்ச் விலை ரூ. 31,999, 50 இன்ச் மாடல் ரூ. 41,999 மற்றும் 55 இன்ச் மாடல் விலை ரூ. 47,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம், எம்.ஐ. ஸ்டூடியோ, குரோமா போன்ற விற்பனை மையங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எளிய தவணை முறை வசதி, வட்டியில்லா மாத தவணை போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல் விமானத்தில் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் வகையிலான பிரச்சினைகளை கொண்டிருந்தன. இதன் காரணமாக பல்வேறு அசம்பாவிதங்களும் அரங்கேறியதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த வகையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டிள் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்படும் என சாம்சங் தெரிவித்து இருக்கிறது.
புதிய நிறத்தில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் புளூ ஹேஸ் மற்றும் கிரே சியெரா நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் நார்டு 2 புதிய நிறம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 27,999 என்றும், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்லேட் பிளாக் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம் குறித்த தகவல்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் செயலியில் வழங்கப்படாமல் இருந்தது. இன்ஸ்டாகிராமின் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விரைவில் இந்த நிலை மாறி, ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களில் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.

தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஸ்கிரீன்ஷாட் ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ஒருவர் ஒரு ஸ்டோரியை பலமுறை லைக் செய்வது தெளிவாக தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்வைப்-அப் ஜெஸ்ட்யூர்களில் லின்க் கொடுக்கும் அம்சம் நீக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. பலர் இதற்கான நோட்டிபிகேஷன் தங்களுக்கு வந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு வாட்ஸ்அப் செயலியிலும் மேற்கொள்ளலாம்.
மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள mygov corona helpdesk மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம்.
முன்னதாக வாட்ஸ்அப் செயலி மூலம் கொரோனாவைரஸ் சார்ந்த விவரங்களை வழங்க mygov corona helpdesk பெயரில் பாட் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த பாட்-ஐ பயன்படுத்த பயனர்கள் முதலில் 9013151515 எனும் மொபைல் நம்பரை சேமிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?
- ஏற்கனவே செய்யவில்லை எனில், 9013151515 எனும் மொபைல் நம்பரை போனில் சேமிக்க வேண்டும்.
- வாட்ஸ்அப் செயலியில் mygov corona helpdesk என தேட வேண்டும்.
- பின் 'Book Slot' என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
- இனி மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஒ.டி.பி. அனுப்பப்படும். இந்த ஒ.டி.பி.-யை சாட்டில் அனுப்ப வேண்டும்.
- உங்கள் மொபைல் நம்பரில் பலருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால், யாருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என பெயரை தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு தேவையான தேதி, நேரம், இடம் மற்றும் தடுப்பூசி விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- முன்பதிவை சாட் பாட் உறுதிப்படுத்தும்.
ஒப்போ நிறுவனம் தனது எப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை உருவாக்கி வருகிறது.
ஒப்போ நிறுவனம் எப்19 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான ஒப்போ எப்19, எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி ஒப்போ எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விற்பனைக்கு வந்தது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய விவோ வை33எஸ் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல்வியூ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11 கொண்டிருக்கும் விவோ வை33எஸ் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விவோ வை33எஸ் அம்சங்கள்
- 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
- 50 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 17,990 ஆகும்.
சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு வருகிறது. புது ரெட்மி ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், அடாப்டிவ் டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 பிரைம் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவில் முன்னதாக ரெட்மி நோட் 10 மாடல் விலை மாற்றப்பட்டது. அதன்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 என மாறி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 பிரைம் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி21வை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி சி21வை மாடலில் யுனிசாக் டி610 பிராசஸர், 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி லென்ஸ், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ரியல்மி சி21வை ஸ்மார்ட்போன் கிராஸ் பிளாக் மற்றும் கிராஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது.

அறிமுக நிகழ்விலேயே மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்தது. எனினும், இதன் விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.
எதிர்பாராத காரணங்களால் மோட்டோரோலா எட்ஜ் 20 விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை தாமதமாக சரியான காரணம் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக விற்பனை தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எட்ஜ் 20 மாடலின் புதிய விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.






