என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த வாரம் வெளியாகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 7 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் முதற்கட்டமாக 10 சதவீத தொகையை செலுத்தினால் போதும். மீதித்தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கிறது.
    விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாக இருக்கின்றன.


    விவோ எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுபற்றிய அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகும் என விவோ அறிவித்து இருந்தது.

    புதிய விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்களில் ஒரிஜின் ஓ.எஸ். வழங்கப்படும் என விவோ தெரிவித்துள்ளது. டீசர்களின்படி புதிய ஸ்மார்ட்போன்கள் கைனெடிக் வால்பேப்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் கேமரா மாட்யூல் படமும் வெளியாகி இருக்கிறது.

     விவோ டீசர்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் மற்றும் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது.


    இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. சில ஸ்மார்ட்போன்களின் விலை பலமுறை உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசையில், சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை சத்தமின்றி உயர்த்தி இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி 9ஐ, ரெட்மி 9, ரெட்மி 9 பவர், ரெட்மி நோட் 10டி 5ஜி, ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    புதிய விலை விவரம்

    ரெட்மி 9ஐ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி - ரூ. 8,799
    ரெட்மி 9ஐ 4 ஜிபி + 128 ஜிபி மெமரி - ரூ. 9,299
    ரெட்மி 9 4 ஜிபி + 64 ஜிபி மெமரி - ரூ. 9,499
    ரெட்மி 9 4 ஜிபி + 128 ஜிபி மெமரி - ரூ. 9,999
    ரெட்மி 9 பவர் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி - ரூ. 11,999
    ரெட்மி 9 பவர் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி - ரூ. 13,499
    ரெட்மி நோட் 10டி 5ஜி 4 ஜிபி + 64 ஜிபி மெமரி - ரூ. 14,999
    ரெட்மி நோட் 10டி 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மெமரி - ரூ. 16,999
    ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி - ரூ. 14,999
    ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி - ரூ. 16,499

    ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கான புதிய விலை ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் அந்நிறுவனத்தின் வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புது சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. 

    இத்துடன் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

    புது சலுகைகள் 1 மாதம், 2 மாதங்கள், 3 மாதங்கள், வருடாந்திர மற்றும் 2 மாதங்களுக்கு டேட்டா ஆட் ஆன் வடிவிலும் வழங்கப்படுகிறது. டேட்டா ஆட் ஆன் சலுகையில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படாது.

     ரிலையன்ஸ் ஜியோ

    புதிய ஜியோ சலுகைகள்

    ரூ. 499 தினமும் 3 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 28 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 666 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 56 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 888 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 84 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 2599 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 365 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 549 தினமும் 1.5 ஜிபி டேட்டா - 56 நாட்கள் வேலிடிட்டி

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடத்திற்கு பயன்படுத்த பயனர்கள், ஜியோ சலுகையை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். புதிய சலுகைகள் ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் கிடைக்கிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


    இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் ரியல்மி. இந்த நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

    மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரை ரியல்மி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 8எஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

     ரியல்மி டீசர்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 8எஸ் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 2.5டி டெம்பர்டு கிளாஸ் பாதுகாப்பு, குறைந்தபட்சம் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.


    ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    முந்தைய ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களை போன்றே புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலும் ஜியோ நெட்வொர்க் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் மற்ற நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்த முடியாது. 

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்கும் போது, நிறுவனங்கள் அவற்றை குறிப்பிட்ட நெட்வொர்க்கில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்குகின்றன. அந்த வகையில் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஜியோ நெட்வொர்க்கில் மட்டுமே இயக்க முடியும். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கென பிரத்யேக ரீசார்ஜ் சலுகைகள் அறிமுகம் செய்யப்படலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


    கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் வழக்கத்தை விட தாமதமாகவே அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு முந்தைய வழக்கத்திலேயே ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன்களின் வெளியீடு குறித்து ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. 

    முன்னதாக ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

     ஐபோன்

    புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் பூமியின் சுற்றுப்பாதை அருகில் உள்ள செயறக்கைக்கோள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 சீரிஸ் இருக்கும். இதை கொண்டு வாய்ஸ் கால் மற்றும் குறுந்தகவல்களை செல்லுலார் கனெக்டிவிட்டி இன்றி மேற்கொள்ள முடியும். 
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகி இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை சாம்சங் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு உள்ளது.

    புதிய கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி டீசர்

     அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1, 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.
    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இப்படித் தான் காட்சியளிக்கும் என நினைத்து அதன் நகல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வாட்ச் சீரிஸ் 7 போன்ற தோற்றம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

    ட்விட்டரில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்வாட்ச் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் சீரிஸ் 7 மாடலின் நகல் என கூறப்படுகிறது. சந்தையில் வெளியாகும் முன்பே ஆப்பிள் சாதனத்தின் நகல் விற்பனைக்கு வந்துள்ளது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    சீன சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன கேட் ரென்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 தோற்றம் கொண்ட வாட்ச் சீனாவில் 350 முதல் 400 யுவான் விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
    விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் காப்புரிமை தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ நிறுவன சாதனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காப்புரிமை கழற்றக்கூடிய இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டு உள்ளது.

    காப்புரிமை விவரங்களின் படி டிஸ்ப்ளேவில் உள்ள செல்பி கேமராவை ஸ்மார்ட்போனில் இருந்து கழற்ற முடியும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கழற்றக்கூடிய கேமரா மாட்யூல் ஸ்மார்ட்போனின் ஓரத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் ஸ்மார்ட்போனிற்கு புல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகிறது.

     விவோ ஸ்மார்ட்போன் வரைபடம்

    அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளன. காப்புரிமையில் இந்த கேமராவை எவ்வாறு கழற்ற வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.  

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் தனது ரெட்மி நொட் 10 ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை- 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    கடந்த ஒரே மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த முறையும் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 பேஸ் மாடலான 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 13,999 என மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விலை அறிமுகமானது முதல் இதுவரை ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி நோட் 10

    இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இதன் விலை ரூ. 15,499 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 10 பேஸ் வேரியண்ட் புதிய விலை எம்.ஐ. மற்றும் அமேசான் வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது.

    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ரெட்மி 10 பிரைம் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் விலை கடந்த ஆண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் விலை பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை வெளியாகி இருந்த தகவல்களில் 2021 ஐபோன் மாடல்கள் விலை கடந்த ஆண்டை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 13 சீரிஸ் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் சிப்செட் மற்றும் இதர உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஐபோன் 13 சீரிஸ் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

     ஐபோன்

    ஆப்பிள் நிறுவனத்திற்கு சிப்செட் உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் முன்பு நிர்ணயிக்கப்பட்டதை விட 20 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க இருப்பதால், ஐபோன் 13 சீரிஸ் விலையும் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    ×