என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போன் வைட், லாவெண்டர், கிராபைட் மற்றும் ஆலிவ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. + 128 ஜி.பி. விலை ரூ. 54,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. விலை ரூ. 58,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 பெற்றது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்திலோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

பி.ஐ.எஸ். தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி.2201-01 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே நிலை புதிய மோட்டோ ஸ்மார்ட்போனிற்கும் நடைபெறும் என தெரிகிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.
ஐகூ நிறுவனம் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா இறுதி போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாக ஐகூ 7 லெஜண்ட் மாடல் அறிவிக்கப்பட்டது.
இதே அறிவிப்பின் போது ஐகூ 9 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்வதை ஐகூ உறுதிப்படுத்தியது. கடந்த ஆண்டு ஐகூ அறிமுகம் செய்த ஐகூ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பிரிவில் பிரபல மாடலாக இருந்தது.

எனினும், ஐகூ 8 சீரிஸ் மாடல்களை ஐகூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை. இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பி.ஜி.எம்.ஐ. சீரிஸ் இறுதி போட்டியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் சத்தமின்றி புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது 'வயர்லெஸ் மவுஸ் - சைலண்ட்' என அழைக்கப்படுகிறது. கிளிக் செய்யாத நேரங்களில்பெயருக்கு ஏற்றார்போல் இந்த மவுஸ் சத்தமின்றி செயல்படுகிறது. இதன் வடிவமைப்பு அனைவரின் உள்ளங்கைகளிலும் கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வெறும் 62 கிராம் எடையில் உருவாகி இருக்கும் இந்த வயர்லெஸ் மவுஸ் 800, 1200 அல்லது 1600 டி.பி.ஐ. அடஜஸ்மெண்ட் வசதி கொண்டுள்ளது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்க 2.4 ஜிகாஹெர்ட்ஸ் டாங்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வயர்லெஸ் மவுஸ்-ஐ ஒற்றை ஏ.ஏ. பேட்டரி மூலம் சக்தியூட்டிக் கொள்ளலாம்.

இந்த மவுஸ் அதிகபட்சம் 8 மாதங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். ரியல்மி வயர்லெஸ் மவுஸ் சைலண்ட் பிளாக் மற்றும் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 799 ஆகும். இது ரியல்மி வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி71 5ஜி அம்சங்கள்
- 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
- அட்ரினோ 619எல் ஜி.பி.யு.
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 50 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்.பி. கேமரா
- 2 எம்.பி. கேமரா
- 16 எம்பி. செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 5ஜி, டூயல் 4ஜி வவோல்ட்இ, ப்ளூடூத்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான விளம்பர வீடியோவை 911 எனும் தலைப்பில் வெளியிட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 911 தலைப்பில் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கான புதிய விளம்பர வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. விளம்பர வீடியோ ஆப்பிள் வாட்ச் அதன் பயனர்களின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்டுள்ளதை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வீடியோவில் அமாண்டா, ஜேசன் மற்றும் ஜிம் என மூன்று பேர் ஆப்பிள் வாட்ச் மாடலில் இருந்து 911 அழைத்து உதவி கோர முடிகிறது. முதல் சம்பவத்தில் பெண் பயணித்து கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கும் போது ஆப்பிள் வாட்ச் உதவுகிறது.

மற்றொரு சம்பவத்தில் சூறாவளி காற்றில் சிக்கிய நபர் கடலுக்குள் தூக்கி வீசப்படுகிறார். அடுத்ததாக 21 அடி உயரத்தில் இருந்து விவசாயி கீழே விழுந்து காலை உடைத்து கொள்கிறார். வீடியோ நிறைவடையும் போது மூன்று பேரும் நிமிடங்களில் காப்பாற்றப்படுகின்றனர்.
அதன்படி ஆப்பிள் வாட்ச் வாங்கினால், ஆபத்து காலத்தில் அது உங்களின் உயிரை காப்பாற்றும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றி இருக்கும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான நாய்ஸ் இந்திய சந்தையில் நாய்ஸ் கலர்பிட் கேலிபர் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.69 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இத்துடன் 3 ஆகிச்ஸ் அக்செல்லோமீட்டர், பாலிகார்போனேட் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கிங், ஐ.பி. 68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, முழு சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

புதிய நாய்ஸ் கலர்பிட் கேலிபர் மாடல் பிளாக், கிரீன், ரெட் மற்றும் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 1999 ஆகும். நாய்ஸ் கலர்பிட் கேலிபர் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ. 3,999 ஆகும். இதன் விற்பனை ஜனவரி 6 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலஸ் பென் வசதி கொண்டிருக்கிறது. சியோமி போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை கோரி அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருவிதங்களில் மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் தோற்றம் சியோமி மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. காப்புரிமை விவரங்களின் படி சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா, எல்.இ.டி. பிளாஷ், வலதுபுறம் வால்யூம் பட்டன், பவர் கீ வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் உள்ளது. இந்த மாடல் மட்டுமின்றி கிளாம்ஷெல் போன்ற தோற்றத்தில் பிளிப் போன் ஒன்றையும் சியோமி உருவாக்கி வருகிறது. இதற்கான காப்புரிமை கோரியும் சியோமி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா வழங்கப்படுகிறது.
இந்த பிளிப் போன் சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து கூட்டமைப்பில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கீழ்புறத்தில் சிம் ஸ்லாட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில், வலதுபுறம் பவர் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டெக்னோ பிராண்டு ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஹை ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ், 8 எம்.பி. செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ மாடல் கோமோடோ ஐலேண்ட், டர்கியூஸ் சியான், வின்சர் வைலட் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. + 64 ஜி.பி. விலை ரூ. 10,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஜனவரி 4 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2022 செப்டம்பர் முதல் ஐபோன்களை சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரேசில் நாட்டு வலைதளம் ஒன்றில் இதுபற்றிய தகவல் வெளியானது. எனினும், இந்த நடவடிக்கை 2023 ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் தான் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டெலிகாம் நிறுவனங்களிடம் இசிம் கொண்ட சாதனங்களை மட்டும் அறிமுகம் செய்ய தயாராக ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2022 இரண்டாவது காலாண்டு முதல் சில ஐபோன் 13 சீரிஸ் மாடல்களிலேயே சிம் கார்டு ஸ்லாட் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் எக்ஸ்.எஸ். சீரிஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.ஆர். சீரிஸ் மாடல்களில் டூயல் சிம் வசதி உள்ளது. எனினும், இவற்றில் ஒரு சிம் கார்டு ஸ்லாட் மற்றொன்று இசிம் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் பட்சத்தில் தற்போது சில நாடுகளில் வழங்கப்பட்டு வரும் டூயல் சிம் வசதி என்ன செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைய தகவல்களின்படி ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் சிம் கார்டு ஸ்லாட் நீக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் வலைதளத்தில் புதிய ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கேரோல் என்ற நபர் தனக்கு அதிகம் பிடித்த ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் செலவிட்டு ஆன்லைனில் வாங்கினார். ஆன்லைன் ஷாப்பிங் முடித்து ஐபோனுக்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவருக்கான கிடைத்தது. மிகுந்த ஆசையுடன் பார்சலை திறந்து பார்த்த டேனியல் அதனுள் டெய்ரி மில்க் சாக்லெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுமட்டுமின்றி சாக்லெட்களுடன் கைகளால் கசக்கப்பட்ட காகிதங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தால் அதிக ஷாக் ஆன டேனியல், மற்ற ஆன்லைன் ஷாப்பர்களை போன்றே தான் ஏமாற்றப்பட்டதையும் டுவிட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டார். இத்துடன் தனக்கு அனுப்பப்பட்ட பார்சல் புகைப்படங்களையும் அவர் இணைத்து இருக்கிறார்.

"எனக்கு வரவேண்டிய ஐபோன் பார்செல் தாமதமாகி கொண்டே இருந்தது. மேலும் இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என ஐபோன் வினியோகம் பற்றிய தகவல்கள் பலமுறை மாற்றப்பட்டன. இதனால் நானே டெலிவரி செய்யும் கிடங்கிற்கு நேரடியாக சென்று ஐபோனை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன். இதுபற்றி டெலிவரி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து, பின் அங்கு சென்று எனது பார்செலை பெற்றுக் கொண்டேன்."
"பார்செலை திறந்து பார்த்ததும் அதில் சாக்லெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனேன். இதுபற்றி டெலிவரி செய்யும் நிறுவனத்திற்கு தகவல் அளித்தேன். எனது புகார் பற்றி விசாரணை செய்வதாக வாடிக்கையாளர் சேவை மைய மேலாளர் தெரிவித்தார்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டேனியல் தெரிவித்தார்.
இதுவரை டேனியலுக்கு ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வினியோகம் செய்யப்படவில்லை. எனினும், டெலிவரி நிறுவனம் தொடர்ந்து டேனியலுடன் தொடர்பில் இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரணை செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறது.
ஹானர் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வி பெயரில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஹானர் பிராண்டின் தாய் நிறுவனமான ஹூவாய் பி50 பாக்கெட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 4ஜி பிராசஸர் கொண்டிருந்தது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் மேஜிக் வி ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் வி மாடலில் டூயல்-ஸ்கிரீன் டிசைன், 8 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, வெளிப்புறத்தில் 6.5 இன்ச் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. அறிமுகமானதும் ஹூவாய் நிறுவனத்தை போன்றே ஒப்போ நிறுவனமும் பைண்ட் என் பெயரில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.






