என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ரியல்மி வயர்லெஸ் மவுஸ்
ரூ. 799 விலையில் வயர்லெஸ் மவுஸ் அறிமுகம் செய்த ரியல்மி
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் சத்தமின்றி புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது 'வயர்லெஸ் மவுஸ் - சைலண்ட்' என அழைக்கப்படுகிறது. கிளிக் செய்யாத நேரங்களில்பெயருக்கு ஏற்றார்போல் இந்த மவுஸ் சத்தமின்றி செயல்படுகிறது. இதன் வடிவமைப்பு அனைவரின் உள்ளங்கைகளிலும் கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வெறும் 62 கிராம் எடையில் உருவாகி இருக்கும் இந்த வயர்லெஸ் மவுஸ் 800, 1200 அல்லது 1600 டி.பி.ஐ. அடஜஸ்மெண்ட் வசதி கொண்டுள்ளது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்க 2.4 ஜிகாஹெர்ட்ஸ் டாங்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வயர்லெஸ் மவுஸ்-ஐ ஒற்றை ஏ.ஏ. பேட்டரி மூலம் சக்தியூட்டிக் கொள்ளலாம்.

இந்த மவுஸ் அதிகபட்சம் 8 மாதங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். ரியல்மி வயர்லெஸ் மவுஸ் சைலண்ட் பிளாக் மற்றும் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 799 ஆகும். இது ரியல்மி வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Next Story