என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ஹானர்
  X
  ஹானர்

  அடுத்த மாதம் அறிமுகமாகும் ஹானர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹானர் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


  ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வி பெயரில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

  முன்னதாக ஹானர் பிராண்டின் தாய் நிறுவனமான ஹூவாய் பி50 பாக்கெட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 4ஜி பிராசஸர் கொண்டிருந்தது.    ஹானர் மேஜிக் வி

  இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் மேஜிக் வி ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

  அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் வி மாடலில் டூயல்-ஸ்கிரீன் டிசைன், 8 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, வெளிப்புறத்தில் 6.5 இன்ச் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. அறிமுகமானதும் ஹூவாய் நிறுவனத்தை போன்றே ஒப்போ நிறுவனமும் பைண்ட் என் பெயரில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×