என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஐகூ 9
விரைவில் இந்தியா வரும் ஐகூ 9 சீரிஸ்
ஐகூ நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.
ஐகூ நிறுவனம் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா இறுதி போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாக ஐகூ 7 லெஜண்ட் மாடல் அறிவிக்கப்பட்டது.
இதே அறிவிப்பின் போது ஐகூ 9 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்வதை ஐகூ உறுதிப்படுத்தியது. கடந்த ஆண்டு ஐகூ அறிமுகம் செய்த ஐகூ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பிரிவில் பிரபல மாடலாக இருந்தது.

எனினும், ஐகூ 8 சீரிஸ் மாடல்களை ஐகூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை. இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பி.ஜி.எம்.ஐ. சீரிஸ் இறுதி போட்டியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story