என் மலர்
புதிய கேஜெட்டுகள்
தற்போது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனம், நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+ மற்றும் நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோ ஆகிய ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் 24 மணி நேரம் பேட்டரி லைஃபை கொண்டுள்ளன.
மேலும் இவற்றில் வழங்கப்பட்டுள்ள 10 எம்.எம் டிரைவர்கள் கூடுதல் பேஸை வழங்குகின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சமாக சுற்றுப்புற சத்தத்தை தடை செய்யும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+ விலை இந்திய மதிப்பில் ரூ.3000-ஆகவும், நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோவின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,400-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் இந்த இயர்பட்ஸ்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த இயர்பட்ஸ்களில் 5.2 வெர்ஷன் ப்ளூடூத், ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணக்க பயன்படும் கூகுளின் ஃபாஸ்ட் பேர் டெக்னாலஜி, 1.5 மணி நேரத்தில் முழுதாக சார்ஜ் ஆகும் 300mAh பேட்டரி ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
தற்போது உலக அளவில் அறிமுகமாகியுள்ள இந்த இயர்பட்ஸ்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் 5-வது தலைமுறை புதிய ஐபேட் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ எம்2, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, மேக் மினி மற்றும் ஐபோன் எஸ்.இ 3 ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்.இ 3-ல் ஐபோன் 13 சீரிஸில் இடம்பெற்றுள்ள 5nm A15 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோனில் 4.7 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே, 12 மெகா பிக்ஸல் கேமரா சென்சார் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.45,000 இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதன்மூலம் இந்த புதிய ஐபோன், ஓன்பிளஸ் 9 ஆர்.டி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்.இ ஆகிய ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடும் போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவை மார்ச் 7-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.11,399 மதிப்புள்ள ஸ்லிம் பென் 2 ஸ்டைலெஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்கிறது.
டெஸ்க்டாப் கணினியின் ஆற்றல், லேப்டாப்பை போன்று எங்கும் எடுத்து செல்லக்கூடிய தன்மை மற்றும் பல்வேறு பணிகளை செய்யும் கிரியேட்டிவ் ஸ்டூடியோ செட்டப் இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது.
120Hz screen refresh rate கொண்ட 14.4 இன்ச் பிக்ஸெல்சென்ஸ் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 2,400×1,600 பிக்ஸல் ரெஷலியூஷன், 10 பாயிண்ட் மல்டி டச் சப்போர்ட் ஆகிய அம்சங்கள் இதன் திரையில் அமைக்கப்பட்டுள்ளன. டிஸ்ப்ளேவை பல்வேறு திசைகளுக்கும் நகர்த்தும் வகையில் இதன் திரை அமைக்கப்பட்டுள்ளது.
குவாட்கோர் 11-த் ஜென் இண்டல் கோர் பிராசஸர்ஸில் இயங்கும் இந்த கருவியில் 32 ஜிபி LPDDR4x ரேம், 2 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் Intel Core i5 SoC பிராசஸர் கொண்ட மாடலில் இண்டெல் எக்ஸ்இ இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. Intel Core i7 SoC பிராசஸர் மாடலில் Nvidia GeForce RTX 3050 Ti dedicated GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆடியோவை பொறுத்தவரை குவாட் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள், டூயல் ஃபார்பீல்டு ஸ்டூடியோ மைக்குகள், டால்பி அட்மோஸ் ஆகியவற்றை இந்த கருவி கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை Intel Core i5 பிராசஸர் கொண்ட மாடல்கள் 19 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளன. 65W சர்பேஸ் பவர் சப்ளை அடாப்டர்கள் அதற்கு வழங்கப்படுகிறது. Intel Core i7 SoC பிராசஸர் கொண்ட மாடல்கள் 18 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளன. அவற்றிருக்கு 102W சர்பேஸ் பவர் சப்ளை அடாப்டர் வழங்கப்படுகிறது.
கணெக்டிவிட்டிக்காக 2 யூஎஸ்பி டைப் சி போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், சர்பேஸ் கனெக்ட் போர்ட், வைஃபை 6, 5.1 ப்ளூடூத் ஆகிய அம்சங்களும் இதில் தரப்பட்டுள்ளன.
இதன் 11th-gen Intel core i5 SoC பிராசஸர், 16 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,65,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 11th-gen Intel core i7 SoC பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,15,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ வரும் மார்ச் 8-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நிலையில், மார்ச் 7-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.11,399 மதிப்புள்ள ஸ்லிம் பென் 2 ஸ்டைலெஸ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவியை குறிப்பிட்ட வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டில் வாங்குபவர்களுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் பல்வேறு டிஜிட்டல் கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது.
அந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
43 இன்ச் கொண்ட இந்த டிவியில் 3840 x 2160 பிக்ஸல்களுடன் 4கே டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி பேனல் ஹெச்.டி.ஆர், டோல்பி விஷன், விவிட் பிக்சர் இன்ஜின், ரியாலிட்டி ப்ளோ ஆகியவற்றை கொண்டுள்ளது. quad-core 64-bit A55 CPU, Mali G52 MP2 GPU ஆகியற்றி துணை கொண்டு இந்த டிவி இயங்குகிறது.
இந்த டிவியில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டுளது. ஆடியோவை பொறுத்தவரை 30W ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் விர்ட்சுவல் எக்ஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்.டி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் கூகுள் அசிஸ்டென்ஸ், உட்புறம் அமைந்துள்ள க்ரோம்கேஸ்ட், எம்.ஐ. ஹோம் செயலி, ஸ்மார்ட் ரெக்கமண்டேஷன்ஸ், பல்வேறு மொழிகள், யூசர் சென்டர், ஐ.எம்.டி.பி, குயிக் வேக், பேட்ச்வால் 4 ஒருங்கிணைப்பு, குயிக் மியூட், பெற்றோருக்கு உதவும் கிட்ஸ் மோட், ஆட்டோ லேடன்ஸி மோட், குயிக் செட்டிங்ஸ் ஆகிய பல அம்சங்கள் இந்த டிவியில் தரப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், eARC போர்ட், ஆப்டிக்கள் போர்ட், ஹெட்போன் ஜாக், எதெர்நெட் போர்ட் கணெக்டிவிட்டி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஏ.வி இன்புட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த டிவியின் விலை ரூ. 28,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், எம்ஐ.காம் ஆகிய தளங்களில் இந்த டிவியை வாங்கலாம். கோடாக் மகிந்திரா பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி நிறுவனம் ரியல்மி ப்ரோ 5ஜி, ரியல்மி ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த போன்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த போன்களில் MediaTek Dimensity 920 SoC பிராசஸர், Arm Mali-G68 ஜிபியூ வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி 9 ப்ரோ+ போனில் 50 மெகாபிக்சல் Sony IMX766 பிரைமரி சென்சார் ஓ.ஐ.எஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களால் நகரும் பொருட்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும்.
மேலும் இந்த இரு போன்களும் சன்ரைஸ் ப்ளூ மற்றும் பெயரிடப்படாத கிரீன் ஆகிய வண்ணங்களில் வர இருப்பதாக கூறப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ+ போன் இதய துடிப்பை அளவிடும் சென்சாருடன் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலையை பொறுத்தவரை ரியல்மி 9 ப்ரோவின் விலை ரூ.18,999-ல் இருந்தும், ரியல்மி 9 ப்ரோ+ விலை ரூ.24,999-ல் இருந்தும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஜியோமி நிறுவனம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறு குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதன் மூலம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில், 6.43" அங்குல முழு அளவு எச்டி+ AMOLED திரையுடன், 90Hz ரெப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 180Hz ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங், 409 ppi திரை அடர்த்தி, 2400*1080 பிக்சல்களை கொண்டுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள 1000nits பீக் பிரைட்னஸ் மூலம் வீடியோக்களை துல்லியமாக காணமுடியும். இந்த விலை மதிப்பில் சிறந்த டிஸ்ப்ளே தரும் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும்.
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டாகோர் சிப்செட் உதவியுடன் இயங்குகிறது. இதன்மூலம் அதிவேகமான செயல்பாடு, பல செயலிகளை பயன்படுத்தும்போது குறைந்த மின்செலவு ஆகியவற்றை உறுதி செய்கிறது.
இதில் கிராபிக்ஸ் எஞ்சினாக அட்ரினோ 610 செயல்படுகிறது. மேலும் இதில் 4ஜிபி, 6ஜிபி LPDDR4X ரேம் 3 வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. 64ஜிபி, 128ஜிபி என ஸ்டோரேஜ் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. UFS2.2 மெமெரியுடன் 1TB வரை எஸ்டி கார்டு பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

கேமராவை பொறுத்தவரை இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. f/1.8 அப்பெர்ச்சரில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை இதில் உள்ளன. மேலும் செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 13 மெகாபிக்சல் கேமரா அமோலெட் டிஸ்ப்ளேயின் பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தபோனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் சி 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜர் தரப்பட்டுள்ளது.
இரட்டை 4ஜி சிம், ஜிபிஎஸ், வைஃபை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.1 ஆகிய அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளன.
இந்த போன் ஸ்டார்டஸ்ட் வைட், ஹொரிசான் ப்ளூ, ஸ்பேஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.13,499ஆகவும், 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரியின் விலை ரூ.14,499 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் குறைகள் என்று பார்த்தால், 5ஜி சேவை வழங்கப்படாதது தான். இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அனைவரும் 5ஜி சேவை தரும் ஸ்மார்ட்போன்களையே எதிர்பார்க்கின்றனர். மேல்கூறிய அம்சங்களில் 5ஜி அம்சம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் உருவாகி வருகிறது. இவற்றில் 50 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இத்துடன் புது ரெட்மி ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெடட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இதுகுறித்து சியோமியு.ஐ. வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை சியோமி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 14 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி மாடல்களில் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இரு மாடல்களும் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி மாடல்களின் மேம்பட்ட வேரியண்ட்கள் ஆகும்.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 7 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுபற்றிய அறிவிப்பு ஒப்போ இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய ரெனோ 7 சீரிசில் ரெனோ 7 5ஜி, ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 எஸ்.இ. 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.
வெளியீட்டு தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் விலை, வேரியண்ட் மற்றும் விற்பனை பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஒப்போ ரெனோ 7 5ஜி, ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 எஸ்.இ. 5ஜி மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

அதன்படி இவற்றின் விலை முறையே ரூ. 28 ஆயிரத்தில் துவங்கி ரூ. 31 ஆயிரமும், ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 41 ஆயிரத்தில் துவங்கி ரூ. 43 ஆயிரமும், ரெனோ 7 எஸ்.இ. 5ஜி விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ரெனோ 7 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 மேக்ஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இதே பிராசஸரே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மாடலை பிரீமியம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சோனி நிறுவனம் டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4 ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இயர்பட் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 மற்றும் நாய்ஸ் ஐசோலேஷன் இயர்பட் டிப் மற்றும் ஸ்டேபில் ஃபிட் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலை விட 10 சதவீதம் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயர்பட் ஹை-ரெசல்யூஷன் ஆடியோ வயர்லெஸ் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள 6 எம்.எம். டிரைவர்கள் டைனமிக் சவுண்ட் வெளிப்படுத்துகிறது. மேலும் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 ஆடியோ தரத்தை மேம்படுத்தி, டிஸ்டார்ஷனை குறைத்து, எல்.டி.ஏ.சி. கோடெக் பிராசஸிங்-ஐ செயல்படுத்துகிறது.

இதன் மைக்ரோபோன்கள் மிக துல்லியமாக ஆடியோ பிக்கப் செய்கின்றன. இவற்றை கொண்டு ஹேண்ட்ஸ்-ஃபிரீ அழைப்புகளிலும் தெளிவாக பேச முடியும். இதில் உள்ள நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் மறுமுனையில் பேசுபவர் கூறுவதை எவ்வித இரைச்சலும் இன்றி கேட்க வழி செய்கிறது. இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
நாய்ஸ் கேன்சலிங் பயன்படுத்தாத போது இந்த பேட்டரி 13 மணி நேர பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்த்தால் இந்த இயர்பட் பேட்டரி 39 மணி நேரம் பயன்படுத்தலாம். மேலும் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
புதிய சோனி டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஜனவரி 16 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய ரியல்மி 9ஐ இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் வியட்நாம் மற்றும் தாய்லாந்து சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9ஐ மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் புளு குவாட்ஸ் மற்றும் பிளாக் குவாட்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
விவோ நிறுவனம் விவோ வை33டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
8 எம்.எம். அளவில் மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் விவோ வை33டி பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விவோ வை33டி அம்சங்கள்
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜி.பி.யு.
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11
- 50 எம்.பி. பிரைமரி கேமரா
- 2 எம்.பி. டெப்த் கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா
- 16 எம்.பி. செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வை33டி ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய எஸ்22 சீரிஸ் பற்றி சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
அதன்படி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 9 ஆம் தேதியும், விற்பனை பிப்ரவரி 24 தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு சாம்சங் - கேலக்ஸி எஸ்22, எஸ்22 பிளஸ் மற்றும் எஸ்22 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் / எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 மாடலில் 6.06 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்22 பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களில் முறையே 6.55 இன்ச் மற்றும் 6.81 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்22 அல்ட்ரா மாடலில் எஸ் பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்பட இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் மாடல்களில் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.






