என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது.
ஜியோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்களுக்கான கேம் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த கேம்கள் ஜியோ கேம்ஸ் பிளாட்ஃபார்மின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகையில், கேமிங்கிற்காக இது தான் முதல்முறை நாங்கள் வேறு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். மேலும் இந்திய டிவி துறைக்கும் இது புதிய தொடக்கமாக இருக்கும் என கூறியுள்ளது.
ஏற்கனவே ஜியோ கேம்கள் ஸ்மார்ட்போன்கள், செட்டப் பாக்ஸ்கள் ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்டிவியிலும் இடம்பெறவுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி யு1, ஒன்பிளஸ் டிவி Q, ஒன்பிளஸ் டிவி Y12 ஆகியவற்றில் இந்த கேம்கள் இடம்பெறும். மேலும் பழைய மாடல் டிவிக்களுக்கு புதிய அப்டேட்டில் இந்த கேம்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத டிவிக்களுக்கான மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது. தற்போது ஸ்மார்ட் டிவிக்கான தேவை மற்றும் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அந்த நிறுவனம் ஆன்லைன் கேமிங்கை டிவிகளுக்கும் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
எல்.ஜியின் இந்த ப்ரொஜக்டர்களில் ஸ்டீரியோ, சரவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
எல்.ஜி நிறுவனம் HU715Q Ultra Short Throw laser projector மற்றும் HU710P laser-LED hybrid என்ற 2 புதிய சினிபீம் 4கே ப்ரொஜக்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரொஜக்டர்களில் பகல் நேரத்திலும் துல்லியமான வீடியோக்களை நம்மால் காண முடியும்.
இந்த சினிமா ப்ரொஜக்டர்களில் 2,000,000:1 கான்ட்ரஸ்ட் ரேட்ஷியோ வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக வெளிச்சமான அல்லது வெளிச்சம் இல்லாத காட்சிகள் கூட துல்லியமாக தெரியும்.
இதில் HU710P ப்ரொஜக்டர் 2000 லூமென்ஸ் பிரைட்னஸை வழங்கும். மேலும் அறையின் பின்பக்கம் ப்9.5 அடி முதல் 15 அடி தூரத்தில் வைத்துகொள்ளும் வகையில் இந்த ப்ரொஜக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரொஜக்டர் 40 இன்ச் முதல் 300 இஞ்ச் வரையிலான ரேஞ்சில் அதிக ஃபிளக்சிபிளிட்டியுடன் காட்சிகளை வழங்குகிறது.
அதேபோன்று HU715Q ப்ரொஜக்டர், 80 இன்ச் முதல் 120 இன்ச் வகையிலான காட்சியையே உருவாக்கவல்லது ஆனால் 8.5 இன்ச் தூரத்திலேயே இந்த ப்ரொஜக்டரை வைத்துகொள்ள முடியும். மேலும் இது 2,500 லூமென் பிரைட்னசை வழங்குகிறது.

இந்த ப்ரொஜக்டரில் 40W ஸ்டீரியோ செட்டப், 10W ப்ளூட்டூத்துடன் கூடிய சரவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 4கே ப்ரொஜக்டர்களிலும் 3 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், ஏர்பிளே 2, ஹோம்கிட், ஸ்க்ரீன் ஷேரிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
HU710P ப்ரொஜக்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,88,236-ஆகவும், HU715Q-ன் விலை இந்திய மதிப்பில் ரூ.2,25,899-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்மார்ட் டிவி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் விற்பனை மூலம் இந்திய சந்தையில் நுழைந்த ரியல்மி நிறுவனம் தற்போது டிவிக்கள், இயர்பட்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிவி ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட்டுடன் வரும் என கூறப்படுகிறது.
இதுதவிர வாய்ஸ் கண்ட்ரோல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆகிய அம்சங்கள் இருக்கும். கூகுள் குரோம்கேஸ்ட், கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவையும் இந்த டிவியில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஏசியை வாங்குபவர்களுக்கு 12.5 சதவீதம், ரூ.7,500 வரை கேஷ்பேக்குகள் வழங்கப்படும்.
சாம்சங் நிறுவனம் புதிய விண்ட் ஃப்ரீ ஏசிக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏசி நேரடியான அடந்த காற்றை 0.15 m/s வேகத்தில் 23,000 சிறுதுளைகள் வழியாக அகற்றும் தன்மை கொண்டுள்ளது.
இந்த ஏசி பி.எம் 1.0 ஃபில்டர்களில் கிடைக்கும் என்றும், இதில் உள்ள ஃப்ரிஸ் வாஷ் அம்சத்தின் மூலம் ஹீட் எக்ஸேஞ்சரில் உள்ள தூசு மற்றும் பாக்டீரியாவை எளிதாக அகற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விண்ட் ஃப்ரீ ஏசிக்களை வைஃபை மூலம் சாம்சங்கின் ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் இணைந்துகொள்ளலாம். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா, கூகுள் ஹோம் மற்றும் பிக்ஸ்பியின் உதவியுடன் ஏசியை ஆன்/ஆஃப் செய்யவோ, செட்டிங்ஸை மாற்றவோ இயலும்.
அறையில் 20 நிமிடங்களுக்கு எந்த அசைவும் இல்லை என்றால், மோஷன் சென்சார் மூலம் இந்த ஏசி விண்ட் ஃப்ரீ மோடுக்குள் சென்று விடும். இதன்மூலம் ஆற்றல் சேமிக்கப்படும். அதேபோல பயனர்கள் நடப்பதற்கு ஏற்ப ஏசி காற்று அவர்கள் மீது வீசுவது போலவும் இதில் மாற்றம் செய்யமுடியும்.
தற்போது 28 மாடல்களில் வெளியாகியுள்ள இந்த விண்ட் ஃப்ரீ ஏசிக்கள் ரூ.50,9900 விலை மதிப்பில் தொடங்கி ரூ.99,990 வரை இருக்கிறது. மேலும் இந்த ஏசியை வாங்குபவர்களுக்கு 12.5 சதவீதம், ரூ.7,500 வரை கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
இ.எம்.ஐ வசதி, பிசிபி கண்ட்ரோலர், ஃபேன் மோட்டார், காப்பர் கண்டன்ஸர், எவப்போரேட்டர் காயில் உள்ளிட்டவைக்கு 5 வருட வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஒப்போ பேட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட்டிற்கு ‘ஒப்போ பேட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்போ பேட் 11 இன்ச் அளவில் 2560x1600 பிக்சல் ரெஷலியூஷனுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ளது. இந்த பேட் HDR 10 மற்றும் 10 பிட் கலர் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.
இந்த ஒப்போ பேட் பிக்பக்கம் ஃப்ராஸ்டெட் பேக்குடனும், மெட்டல் சேசிஸுடனும் வந்துள்ளது. கலர் ஓ.எஸ்ஸை அடிப்படையாக கொண்டு ஆண்ட்ராய்டு 11-ல் இந்த டேப் இயங்கும். இந்த டேப் மேக்னட் மூலம் சார்ஜாகும் ஓப்போ பென்சிலையும் சப்போர்ட் செய்யும்.
மேலும் இதில் Snapdragon 870 chipset தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்ஸல் பின்புற கேமரா, 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 8,360mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த போன் கருப்பு மர்றும் பர்ப்பில் நிறங்களில் கிடைக்கிறது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜின் விலை இந்திய மதிப்பில் ரூ.27,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை இந்திய மதிப்பில் ரூ.38,800-ஆகவும், 6ஜிபி ரேம்+256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.32,300-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஒப்போ பேட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.
ரெட், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த வாட்ச் விற்பனைக்கு வருகிறது.
ரெட், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த வாட்ச் விற்பனைக்கு வருகிறது.
போட் நிறுவனம் புதிய “போட் வாட்ச் பிளேஸ்” என்ற ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் ஸ்லிம் மெட்டல் டிசைனில் 2.5D கார்வ்ட் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் சூப்பர் ஸ்லீக் 11mm வாட்ச் பாடியும், பக்கவாட்டில் 2 பட்டன்களும் தரப்பட்டுள்ளன.
இந்த வாட்சின் டிஸ்பிளே 1.75 இன்ச், 320 x 385 ரெஷலியூஷன் கொண்டுள்ளது. இதில் 500 nits பிரைட்னஸை பெறலாம். இந்த வாட்ச் Apollo 3 Blue Plus SoC-ல் இயங்குகிறது.
இந்த வாட்சில் 10 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு குயிக் சார்ஜ் செய்தால் 1 நாள் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த வாட்சில் இதய துடிப்பை அளவிடும் அம்சம், SpO2 கண்காணித்தல், அவுட்டோர் ரன், இன்டோர் ரன், சைக்கிளிங், ஹைக்கிங் உள்ளிட்ட 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள், குயிக் ரிப்ளே, ஹைட்ரேஷன் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாட்ச் 3ATM தூசு, நீர் மற்றும் ஸ்பிளாஷ் பாதுகாப்புடன் வருகிறது.
ரெட், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் நிறங்களில் வரும் இந்த வாட்சின் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் நாளை முதல் அமேசான் தளம் மற்றும் போட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்த டி-சர்ட்டுகள் ரூ.699 விலையில் எம்.ஐ இணையதளத்தில் கிடைக்கின்றன.
ஜியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி-சர்ட்டுகளுக்கு ஜியோமி ஃபெர்பாமன்ஸ் டி சர்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆன்டி- மைக்ரோபியல் துணியால் செய்யப்பட்டுள்ள இந்த டி-சர்ட் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அண்டவிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி- சர்ட் புற ஊதா கதிர்களை தடுக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
இந்த ஆன்டி- மைக்ரோபியல் டி-சர்ட்டை ஒருமுறைக்கு மேல் கழுவினாலும் இதன் ஆற்றல் குறையாது. டி-சர்ட்டின் உள்ளேயும் வெளியேயும் 2 டிகிரி வெப்பநிலை வேறுபாடு இருக்கும். இதனால் இந்த டி-சர்ட்டை அணிந்து வெளியில் விளையாடுவது பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் இந்த டி-ஷர்ட்டுகள் மக்களை பாதுகாக்க உதவும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டி-சர்ட்டுகள் 4 அளவுகளில் வருகின்றன. இதன் உண்மை விலை ரூ.1,499 என்றும், சலுகை விலையில் ரூ.699-க்கு கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி-சர்ட்டுகளை மக்கள் எம்.ஐ இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.
இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மூலம் நாம் கேம் உலகை நிஜ உலகு போல துல்லியமாக உணர முடியும்.
சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் 5-க்கான வி.ஆர் 2 சாதனத்தின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. இதில் வி.ஆர் 2 ஹெட்செட் மற்றும் வி.ஆர்.2 கேமிங் கண்ட்ரோலர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறியதாவது:
பிளே ஸ்டேஷன் வி.ஆர்-ன் ஹெட்செட் அதிக எடை இல்லாமல் சரியான கனத்தை கொண்டிருந்தது. அதில் வழங்கப்பட்டுள்ள ஹெட்பேன்ட் நாம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இருந்தது. அதனால் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. அதே வகையில் வி.ஆர் 2-ன் ஹெட்செட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்கோப் டிஸ்பிளேவை நம் முகத்தில் இருந்து விரும்பிய தூரத்தில் வைத்துகொள்ள உதவும். அதேபோன்று இதில் தரப்பட்டுள்ள ஸ்டீரியோ ஹெட்போன்களும் சிறந்த அனுபவத்தை தரும். ஹெட்செட்டின் லென்ஸ்களில் காற்றோட்டம் இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சாதனம் OLED டிஸ்பிளே, 4 கே ஹெச்.டி.ஆர் ரெஷலியூஷன் கொண்டு, 110 டிகிரி ஃபீல்ட் ஆப் வியூவில் வரும். பயனர்கள் 120Hz ஃப்ரேம் ரேட்டில், ஒவ்வொரு கண்ணுக்கும் 2000×2040 டிஸ்பிளே ரெஷலியூஷனை பெறுவர்.
இதன் ஹெட் செட் பயனர்களின் கண்களை ட்ராக் செய்யும் டெக்னாலஜியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேம் உலகு மற்றும் கதாபாத்திரங்களை நிஜ உலகை போன்றே துல்லியமாக உணர முடியும்.
இவ்வாறு சோனி தெரிவித்துள்ளது.
இந்த பிளே ஸ்டேஷன் வி.ஆர் 2-ன் விலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த டேப்லெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8+ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா ஆகிய டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 One UI 4-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும். இதில் WQXGA (2,560x1,600 pixels) LTPS TFT டிஸ்பிளே, 276ppi பிக்ஸல் டென்சிட்டி, 120Hz ரெப்ரெஷ் ரேட் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 4nm octa-core SoC, Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸரை கொண்டுள்ளது.
மேலும் இந்த டேப்லெட்டின் பின்புறத்தில் 13 எம்.பி ஆட்டோ போகஸ் கேமரா, 6 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. இதில் 11,200 mAh பேட்டரி, 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி தரப்பட்டுள்ளன. இந்த டேப் கிராபைட் கலர் வேரியண்டில் மட்டும் வருகிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த டேப்பின் வைஃபை மாடல் ரூ.58,999-ஆகவும், 5ஜி வேரியண்டின் விலை ரூ.70,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ டேப்லெட்டில் 12.4-inch WQXGA+ (2,800x1,752 pixels) Super AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது 266ppi பிக்ஸல் டென்சிட்டி 120Hz ரெப்ரெஷ் ரேட் வரை வழங்குகிறது. இதில் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டிலும் 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன.
இதில் 10,090mAh பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 சப்போர்ட் (45W வரை), டிஸ்பிளேக்கு கீழ் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவை தரப்பட்டுள்ளன.
இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இதன் வைஃபை மாடல் ரூ.74,999-ஆகவும், 5ஜி மாடல் ரூ.87,999-ஆகவும் இருக்கிறது.
எஸ்8 சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்லெட்டில் 14.6-inch WQXGA+ (2,960x1,848 pixels) Super AMOLED டிஸ்பிளே, 240ppi பிக்ஸல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்டிலும் 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்திலும், முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஏ.கே.ஜியால் டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. டோல்மி அட்மோஸ் சப்போர்ட் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப் 3 மைக்ரோபோன்களை கொண்டுள்ளது. 11,200mAh பேட்டரிம், சூப்பர் பாஸ்ட் சார்ஜ் 2.0 சப்போர்ட் கொண்டுள்ள இந்த டேப்பின் வைஃபை மாடலின் விலை ரூ.1,08,999-ஆகவும், 5ஜி வேரியண்டின் விலை ரூ.1,22,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டுகளின் முன்பதிவு வரும் நாளை முதல் மார்ச் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவற்றை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.22,999 மதிப்புள்ள கீபோர்ட் கவர் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.10000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் முன்பதிவு செய்பவர்கள் ரூ.8000 கேஷ்பேக் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து புதிய டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் சாதனத்தை வரும் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட்டிற்கு ‘ஒப்போ பேட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒப்போ பேட் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என கூறப்படுகிறது.
மேலும் வெளியான தகவலின்படி இந்த ஒப்போ பேடில் கலர் ஓஎஸ் 12 நிறுவப்பட்டிருக்கும். டாக், டெஸ்க்டாப் விட்ஜெட்ஸ், ஷார்ட்கட்ஸ் போன்றவையும் இந்த ஓஎஸ்ஸில் இடம்பெற்றிருக்கும்.
இந்த டேப் 11 இன்ச் அளவில் 2560x1600 பிக்சல் ரெஷலியூஷனுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வெளியாகவுள்ளது. இதன் டைமென்ஷன் 252x165x6.5mm-ஆக இருக்கும். மேலும் இந்த ஒப்போ பேடில் Snapdragon 870 chipset, 6 ஜிபி ரேம், 8360 mAh பேட்டரி, 33W வேகமான சார்ஜிங் ஆகிய வசதியும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இதன் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த இயர்போன் ஒரு சார்ஜிற்கு 18 மணி நேரம் பேட்டரி லைஃபை வழங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் பார்னர் பிராண்டான டிஜோ புதிய ப்ளூடூத் இயர்போன்களை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
நெக்பேண்ட் ஸ்டலில் வெளியாகும் இந்த இயர்போனுக்கு டிஜோ ஒயர்லெஸ் பவர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இயர்போனில் 11.2m ஆடியோ டிரைவர், பேஸ் பூஸ்ட் பிளஸ் அலாகரித்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரண்டு இயர்பட்களில் காந்தம் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் இயர்பட்களை இணைத்தால் ஹெட்போன்ஸ் ஆஃப் ஆகிவிடும். இரண்டு இயர்பட்களையும் பிரித்தால் ஆன் ஆகிவிடும்.

இந்த இயர்போன் 5.2 ப்ளூடூத் கொண்டுள்ளது. மேலும் இதில் தரப்பட்டுள்ள கேம் மோடில் 88ms லேடன்ஸி வரை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மேலும் இதில் உள்ள நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் மூலம் நாம் போன் பேசும்போதும் மிகத் தெளிவான சத்தத்தை கேட்க முடியும்.
இந்த இயர்போனை ரியல்மி லிங்க் செயலியுடன் இணைத்துகொள்ள முடியும். இந்த இயர்போன் முழுதாக சார்ஜ் ஏறுவதற்கு 2 மணி நேரம் ஆகும். 10 நிமிட சார்ஜில் 2 மணி நேரம் பிளேபேக் நேரத்தை வழங்கும்.
மேலும் இந்த இயர்போன் ஒரு சார்ஜிற்கு 18 மணி நேரம் பேட்டரி லைஃபை வழங்குகிறது.
இதன் விலை ரூ.2,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் இந்த லேப்டாப்பிற்கு ஹார்ட்வேர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த லேப்டாப்பிற்கு ஜியோ புக் எனவும் பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த லேப்டாப் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பிற்கு ஹார்டுவேர் அனுமதி பெறுவதற்காக ஜியோ விண்ணப்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் தகவலின் படி, இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11-ஐ அப்கிரேட் செய்ய முடியும். இதில் ஏ.ஆர்.எம் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.

எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த லேப்டாப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் ஜியோவின் பெயரில் தான் இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும்.
இவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த லேப்டாப் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






