என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியை கொண்டுள்ளது.
    ஜியோமி நிறுவனம் ரெட்மி மேக்ஸ் 100 என்ற 100 இன்ச் ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த டிவி ஸ்கிரீன் 2,540mm அளவை கொண்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள எல்.சி.டி பேனல் 4கே ரெஷலியூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், DCI-P3 கலர் காமுட்டை கொண்டுள்ளது.

    மேலும் இந்த டிவியில் டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-ஹெச்டி ஆடியோ ஆகியவற்றிருக்கான சப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியை கொண்டுள்ளது. 

    இந்த டிவி MIUI மென்பொருளில் இயங்குகிறது. இதில் வைஃபை 6, 2 ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்டுகள், 15W ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ரெட்மி மேக்ஸ் 100 டிவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,39,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் இந்த டிவி வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த டிவி அறிமுகமாகும் தேதி வெளியாகவில்லை.
    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் ஒரு நொடியில் பல்வேறு ஜிபி வேகத்தை பெறும் வகையில் எஸ்.எஸ்.டியின் வேகத்தை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிரெக்ட் ஸ்டோரேஜ் என்ற புதிய கேமிங் தொழில்நுட்பத்தை விண்டோஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோ கேம் விளையாடுபவர்கள் தாமதமின்றி வேகமாக கேமிங்கில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் ஒரு நொடியில் பல்வேறு ஜிபி வேகத்தை பெறும் வகையில் எஸ்.எஸ்.டியின் வேகத்தை அதிகப்படுத்தும். இதன்மூலம் வீடியோ கேம்கள் அதிவேகமாக லோட் ஆகும் என கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் டிரெக்ட் ஸ்டோரேஜ்

    இந்த தொழில்நுட்பம் விண்டோஸ் 11-ல் முழு ஆற்றலுடன் வேலை செய்யும் என்றும், விண்டோஸ் 10-ல் போதுமான அளவு வேகத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் வரும் மார்ச் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த கேமராவால் அதிக தரம் வாயந்த புகைப்படங்களையும், முழு நீல 30fps-ல் 4கே வீடியோவையும் எடுக்க முடியும்.
    பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான FujiFilm புதிய FUJIFILM X-T30 II மிரர்லெஸ் கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

    இந்து எக்ஸ் சீரிஸ் மிரர்லெஸ் டிஜிட்டல் கேமரா வகைகளின் புதிய வரவாகும். இதில் உள்ள மென்பொருளில் மேம்படுத்தபட்ட ஏ.எஃப் ஸ்பீடு, பிரிசிஷன், இமேஜ் தர்ம் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த கேமரா அதிக ரெஷலியூஷன் உடைய 1.6ட்3 மில்லியன் டாட் கொண்ட எல்.சி.டி பேனலை கொண்டுள்ளது.

    மேலும் இதில் 26.1 மேக்பிக்ஸல் X-Trans CMOS 4 சென்சார், எக்ஸ் பிராசஸர் 4 அதிவேக இமேஜ் பிராசஸிங் இன்ஜின் தரப்பட்டுள்ளன. இந்த கேமராவால் அதிக தரம் வாயந்த புகைப்படங்களையும், முழு நீல 30fps-ல் 4கே வீடியோவையும் எடுக்க முடியும்.

    பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் வரும் இந்த கேமரா பாடியின் விலை ரூ.88,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18-55 mm லென்ஸுடன் வெளிவரும் கேமராவின் விலை ரூ.1,24,999 என்றும், 15-45mm லென்ஸுடன் வெளிவரும் கேமராவின் விலை ரூ.99,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த டிவிக்கான முன்பதிவு வரும் மார்ச் 12 முதல் மார்ச் 16 பரை நடைபெறவுள்ளது.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 32 இன்ச் மாடல் டிவியில் ஹெச்.டி ரெடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 43 இன்ச் மாடல் டிவியில் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே 122 சதவீத sRGB கலர் காமுட் கவரேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த டிவிகளில் ஆன்டி ஃப்ளூரே தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கடினமான நீல ஒளியை விலக்குகிறது, மேலும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை இந்த டிவி வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஹெச்.டி.ஆர் 10 சப்போர்ட்டுடன் வருகிறது.

    இந்த டிவியில் 4 Cortex A55 cores கொண்ட quad core Realtek RTD2841 பிராசஸர் இடம்பெற்றுள்ளது. 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த டிவியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. 32 இன்ச் மாடல் 20W அவுட்புட் தரும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்களுடனும், 43 இன்ச் மாடல் மொத்தமாக 36W அவுட்புட் தரும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் வழங்கப்படவுள்ளது. 2 டிவிகளும் டால்பி ஆடியோவை சப்போர்ட் செய்யும்.

    இந்த டிவியில் 3 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், எதர்னட் போர்ட், மினி YPbPr வீடியோ அவுட்புட் போர்ட், 3.5 எம்.எம் ஹெட்போன்ஸ் ஜேக் இடம்பெற்றுள்ளன.

    இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது. 

    நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், கூகுள் அசிஸ்டெண்ட், க்ரோம்கேஸ்ட் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் 32 இன்ச் மாடலின் விலை ரூ.11,999-ஆகவும், 43 இன்ச் மாடலின் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது.
    ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் 2 லைட்டிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது
    ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி வாட்ச் 2 லைட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த வாட்ச் 1.55 இன்ச்  TFT டிஸ்பிளே, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 வாட்ச் ஃபேசஸ், 100 ஒர்க்கவுட் மோட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. HIIT, யோகா உள்ளிட்ட 17 ப்ரொபஷனல் மோட்ஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த வாட்ச் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 மீட்டர் வரை நீரில் மூழ்கினாலும் வாட்ச் பாதுகாப்பாக இருக்கும்.

    இந்த வாட்சில் ஜிபிஎஸ் டிராக்கிங் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் சேட்சுரேஷன் அளவை கன்ட்ரோல் செய்யும் ஸ்கேனர், 24 மணி நேரம் இதய துடிப்பை ஆராயும் மானிட்டரிங், தூக்கம் மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

    இதுமட்டுமின்றி மூச்சு பயிற்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியை அளவிடும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த வாட்சிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது. மேலும் இதில் 262mAh பேட்டரி, மேக்னடிக் சார்ஜிங் போர்ட் ஆகியவையும் இதில் தரப்பட்டுள்ளன.

    இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ.4,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த ஐபேட் ஏர் 2022-க்கு வரும் மார்ச் 11-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் 2022 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஐபேட் ஏர், ஐபேட் ஓஎஸ் 15-ல் இயங்குகிறது. இதில் 10.9 இன்ச் எல்.இ.டி லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே, 2360x1640 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுள்ளது. இதன் டிஸ்பிளே 500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், பி3 வைட் கலர் காமுட், ட்ரூ டோன் வைட் பேலன்ஸ் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    ஐபேட் ஏர் 2022-ல் ஆக்டாகோர் எம்1 சிப் பிராசஸரை கொண்டுள்ளது. இது இதற்கு முன் இருந்த ஐபேட் ஏரை விட 60 சதவீதம் அதிகமான சிபியூ பெர்ஃபார்மன்ஸ், 2 மடங்கு அதிக கிராபிக்ஸ் பெர்பார்மன்ஸை தருகிறது. இந்த சிப்பில் ஆப்பிள் நியூரல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை கொண்டு செயல்படுவதற்கு உதவுகிறது.

    ஐபேட் ஏரில் 12 மெகாபிக்ஸல் வைட் பின்புற கேமரா f/1.8 லென்ஸ் தரப்பட்டுள்ளது. இதில் ஃபோகஸ் பிக்ஸல் கொண்ட ஆட்டோ ஃபோகஸ், பனோரமா, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர், போட்டோ ஜியோடேகிங், இமேஜ் ஸ்டேபிளைஷேசன், பர்ஸ்ட் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி 24,25,30,60 fps 4கே ரெக்கார்டிங்கை தருகிறது. இதில் 120fps-ல் 1080p ஸ்லோமோஷன் சப்போர்ட்டும் இருக்கிறது.

    இந்த ஐபேடில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் செல்ஃபி கேமரா, மெஷின் லேர்னிங் பேக்ட் சென்டர் ஸ்டேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்டைம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும்போது கேமராவை அட்ஜெஸ்ட் செய்யும். இந்த முன்பக்க கேமராவில் 122 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஐபேட் ஏர் 2022

    ஐபேட் ஏரில் 28.6Wh லித்தியம் பாலிமர் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வெப் பிரவுசிங் அல்லது வைஃபையில் வீடியோ பிளே பேக்கை வழங்குகிறது. வைஃபை+செல்லுலார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் வெப் பிரவுசிங்கிற்கு 9 மணி நேரம் சார்ஜை வழங்கும். இதில் 20W USB-C பவர் அடாப்டர் தரபப்ட்டுள்ளது.

    இந்த ஐபேட் ஏரின் வைஃபை மட்டும் உள்ள 64 ஜிபி வேரியாண்டின் விலை ரூ.54,900-ஆகவும், வைஃபை+ செல்லுலார் வசதியுள்ள 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.68,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபேடின் 256 ஜிபி வேரியண்டின் விலை இன்னும் கூறப்படவில்லை.

    இந்த ஐபேட் மார்ச் 11-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த நிகழ்வில் அனைவராலும் பெரிதும் எதிபார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய போன்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பழைய ஐபோன் எஸ் இ-யை விட மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.30,000-க்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத் தவிர கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடலில் கிரீன் கலர் வெர்ஷன் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அதேபோன்று இன்று ஐபேட் ஏர் 5 வெளியாகவுள்ளதாக கூறப்ப்படுகிறது. இதில் சமீபத்திய ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 13 கிரீன்

    மேக் கணினிகளை பொறுத்தவரை, எம்2, எம்1 ப்ரோ, எம்1 மேக்ஸ் மற்றும் அதிசக்தி கொண்ட எம்1 மேக்ஸ் சிப்களை கொண்ட மேக் சாதனங்கள் வெளியாகவுள்ளன.

    மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி ஆகியவை எம்2 சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐமேக் ப்ரோ, எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் ஆப்ஷனுடனும், புதிய மேக் மினி எம்1 ப்ரோ சிப்புடனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வருடம் வெளியாகவுள்ள மேக்புக் ஏர், கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோவை போலவே டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது பல நிறங்களிலான டிசைன்கள் மற்றும் மினி எல்.இ.டிக்களை கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.
    விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றிருக்கு காப்புரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் நமது சருமத்தை தொடுவதன் மூலம் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

    ‘ஸ்கின் இன்டர்ஃபேஸ்’ என இந்த தொழில்நுட்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தும் பயனர்கள் வாட்சின் திரையை தொடாமல் வாட்ச் பக்கத்தில் உள்ள சருமத்தை தொட்டால் போதும். அதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகளை அட்டெண்ட் செய்ய முடியும், சத்தத்தை அதிகரிக்க முடியும், செட்டிங்ஸை மாற்ற முடியும். 

    ஸ்கின் இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பம்

    அதேபோல காது பக்கத்தில் தொடுவதன் மூலம் இயர்பட்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் ரியல்மி நிறுவனம் தனது இயர்போனில் இந்த தொழில்நுட்பத்தை அளித்துள்ளது.
    ரியல்மி நிறுவனம் புதிய ஒயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பட்ஸ் க்யூ2எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த Q2s இயர்பட்டில் டோல்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த டோல்பி அட்மாஸ் மூலம் ஆடியோவை கேட்கும்போது துல்லிய தரம் வெளிப்படும். இசை கேட்பவர்களால் வெவ்வேறு இசைக்கருவிகளின் துல்லியத்தையும், இசை எந்த திசையில் இருந்து வருகிறது என்பதையும் அறிய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மியூசிக்கில் டோல்பி அட்மோஸ் மியூசிக்கை அறிமுகம் செய்ததில் இருந்து மக்கள் ஆடியோ சாதனங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை எதிர்பார்க்க தொடங்கினர். 

    ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், ரியல்மி நிறுவனம் தனது இயர்பட்ஸிலும் இந்த தொழில்நுட்பத்தை அளித்துள்ளது.

    இந்த இயர்பட்டில் 10mm டிரைவர்கள், 5.2 ப்ளூடூத்தை கொண்டுள்ளது. ஏஏசி, எஸ்.பிசி கோடக்குகளை இந்த இயர்பட்ஸ் சப்போர்ட் செய்யும். இந்த விலை மதிப்பில் மேற்கூறிய கோடக்குகளை சப்போர்ட் செய்யும் இயர்பட்கள் வேறு கிடையாது. மேலும் இந்த இயர்பட் 88m சூப்பர் லேட்டன்சி மோடுகளை வழங்குகிறது. இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

    இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.2,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த இயர்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த வாட்சின் விலை ரூ.6000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி வாட்ச் 2 லைட்டை வரும் மார்ச் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    1.55 இன்ச் TFT டச் ஸ்கிரீன் கொண்ட இந்த வாட்சில் 360x320 ரெஷலியூஷன் தரப்பட்டுள்ளது. இதன் பிபிஐ டென்சிட்டி 311-ஆக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்சில் பிரிக்க முடியாத Li-Ion 262 mAh பேட்டரி, ஆக்ஸல்ரோமீட்டர், ஹார்ட் ரேட், கைரோ, காம்பெஸ், SpO2 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த வாட்ச் ஏ-ஜிபிஎஸ், GLONASS, GALILEO, BDS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த வாட்சில் 100-க்கும் மேர்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கபட்டுள்ளன. 10 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கப்படும் இந்த வாட்ச், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸையும் க்கொண்டுள்ளது.

    இதன் விலை ரூ.6000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் பெரிதும் எதிர்பார்த்த பல சாதனங்களை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் முதல் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம், எம்2, எம்1 ப்ரோ, எம்1 மேக்ஸ் மற்றும் அதிசக்தி கொண்ட எம்1 மேக்ஸ் சிப்களை கொண்ட மேக் சாதனங்களை வெளியிடவுள்ளது. 

    மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி ஆகியவை எம்2 சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐமேக் ப்ரோ, எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் ஆப்ஷனுடனும், புதிய மேக் மினி எம்1 ப்ரோ சிப்புடனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வருடம் வெளியாகவுள்ள மேக்புக் ஏர், கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோவை போலவே டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது பல நிறங்களிலான டிசைன்கள் மற்றும் மினி எல்.இ.டிக்களை கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    எம் 1 ப்ரோ, எம்1 மேக்ஸ் சிப்கள்

    இந்த நிகழ்வில் அனைவராலும் பெரிதும் எதிபார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய போன்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பழைய ஐபோன் எஸ் இ-யை விட மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.25,000-க்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.

    இந்த கொசு விரட்டியை அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்டவற்றுடன் இணைந்துகொள்ள முடியும்.
    இந்தியாவில் மட்டுமல்ல கொசு பிரச்சனை உலகம் முழுவதுமே இருக்கிறது. இரவில் தூங்கவிடாமல் தொந்தரவும் செய்தும், நோய்களை பரப்பும் இந்த கொசுவை ஒழிப்பதற்கு பல்வேறு கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

    தெர்மாசெல் நிறுவனம் ஸ்மார்ட் கொசு விரட்டி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்திற்கு லிவ் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த கொசு விரட்டியை அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவற்றுடன் இணைந்துகொள்ள முடியும். லிவ்+ என்ற மொபைல் செயலியும் இந்த கொசு ஸ்மார்ட் கொசு விரட்டியை இயக்குவதற்கு உதவுகிறது. 

    கொசுக்களை விரட்டுவதற்கு இதில் தரப்பட்டுள்ள மருந்து ஒரு வாரத்திற்கு 8 மணி நேரம் என பயன்படுத்தினால் 12 வாரங்களுக்கு வரும். இந்த மருந்தில் 5.5 சதவீதம் மெட்டோஃபுளூதெரின் என்ற ரசாயனம் தரப்பட்டுள்ளது. இது சூடாக்கப்பட்டு புகை போன்று வெளியாகும். வாசம் எதுவும் இல்லாத இந்த புகை 20 அடி ரேடியஸுக்கு கொசுக்களை அண்ட விடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லிவ் ஸ்மார்ட் கொசு விரட்டி

    தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த லிவ் கொசு விரட்டியின் விலை இந்திய மதிப்பில் ரூ.52,000 என கூறப்பட்டுள்ளது. இதில் மூன்று விரட்டிகள் தரப்பட்டிருக்கும். 945 சதுர அடிவரை இது கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்கும். 

    ஒரு சாதனத்தில் 5 கொசு மருந்துகளை கனெக்ட் செய்ய முடியும். மருந்து தீர்ந்துவிட்டால் மீண்டும் நிரப்புவதற்கு 6 மருந்துகள் ரூ.9100 இந்திய மதிப்பில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
    ×