என் மலர்
புதிய கேஜெட்டுகள்
இந்த இயர்போனை 10 நிமிட சார்ஜ் செய்தாலே 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும் என கூறியுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் ஏர் 3 TWS இயர்போன்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 mm டைனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த இயர்போனில் TUV-Rhienland சான்றிதழ் வழங்கிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தரப்பட்டுள்ளது. இது 2 மைக்ரோஃபோன்கள் மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் 42dB வரை இரைச்சலை குறைக்கக்கூடியது.
மேலும் ரியல்மி பட்ஸ் ஏர் 3 88ms குறைந்த லேட்டன்ஸியை கேம் மோடுடன் வழங்குகிறது. இது முந்தைய ஜெனரேஷனை விட 35 சதவீதம் குறைந்த லேட்டன்ஸி ஆகும்.
இந்த இயர்போனில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி v5.2 வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 சாதனங்களை இந்த இயர்போனில் இணைக்கமுடியும். இதில் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.
இந்த இயர்போன் IPX5 ரேட்டர்ட் வியர்வை மற்றும் தண்ணீர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட்டுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் டோட்டல் பிளேபேக் வழங்கப்படும். 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும்.
இந்த இயர்போனின் விலை ரூ.3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ.3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிவியில் 4கே UHD ரெஷலியூஷன், கோடிக்கணக்கான நிறங்கள், ஒவ்வொரு பிரேமிலும் துல்லியமான காட்சிகளை வழங்கும் 10 bit கலர் டெஃப்த் அம்சங்கள்.
இதில் வழங்கப்பட்டுள்ள அதிநவீன காமா இன்ஜின் அம்சம், பயனர்களுக்கு ரியல் டைம் இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது. மேலும் இந்த டிவி HDR10, HDR10+ மற்றும் HLG ஃபார்மட்டுகளை வழங்குகிறது.
கேம் விளையாடுபவர்களுக்காக இந்த டிவியில் Auto Low latency mode தரப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச்சை இந்த டிவியுடன் இணைக்கலாம்.
இதில் உள்ள ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் அம்சம், நாம் தூங்கிவிட்டால் தானாக டிவி அணைந்துவிடும்படி செய்கிறது.
இந்த டிவியில் சினிமா ஒலியை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குவதற்காக டால்பி ஆடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 24W அவுட்புட் தரும் 2 ஃபுல்ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த டிவியின் விலை இந்தியாவில் ரூ.29,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த இயர்போன்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போன்களை வரும் ஏப்ரல் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த இயர்போனில் TUV Rheinland சான்றிதழ் வழங்கப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற இரைச்சலை 42 db வரை குறைக்கும். மேலும் இதில் இரண்டு மைக்ரோபோன்கள், 10mm டயனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இயர்போன்களை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் இணைத்துகொள்ளலாம். இந்த இயர்போனில் உள்ள IPX5 வியர்வை மற்றும் நீரினால் இயர்போன் பாதிக்கப்படாமல் காக்கிறது. மேலும் இந்த இயர்போன்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது. மேலும் வெறும் 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளே பேக் டைமும் வழங்கப்படுகிறது.
இந்த இயர்பட்டில் டிராஸ்பரன்ஸி மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரஸ், பாக்டீரியா மற்றும் பிற காற்று மாசுக்களில் இருந்து இந்த ஹெட்போன்கள் நம்மை பாதுகாக்கும் என கூறப்படுகிறது.
டைசன் ஜோன் நிறுவனம் காற்றை சுத்திகரிக்கும் ஹெட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஹெட்போன்களின் இயர்கப்புகளில் 2 மோட்டார்கள் உள்ளன. இது சுத்திகரிக்கப்பட்ட காற்றை மூக்கு மற்றும் வாய்களுக்கு அனுப்புகிறது. இந்த இயர்போன் லோ, மீடியம், ஹை மற்றும் ஆட்டோ என 4 வகையான சுத்திகரிப்பு மோட்களை வழங்குகிறது.
இந்த இயர்போன்களில் உள்ள இன்பில்ட் ஆக்சலெரோமீட்டர்கள் நமக்கு தேவையான நேரத்தில் சுத்திகரிப்பு மோட்களை தானாகவே மாற்ற உதவுகிறது.
இந்த சுத்திகரிப்பு அம்சத்தில் எலக்ட்ரோஸ்டேட்டிக் ஃபில்டரேஷன் தரப்பட்டுள்ளது. இது 0.1 மைக்ரான் அளவிலான தூசுகளை கூட 99 சதவீதம் வடிகட்டிவிடும். தூசு, மகர்ந்த துகள்கள், பாக்டீரியா, வைரஸ் மற்றும் காற்றில் உள்ள நைடரஜன் ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோனை கூட இந்த ஹெட்போன்கள் வடிகட்டும் என கூறப்படுகிறது.
இந்த ஹெட்போன்களை டைசன் ஜோன் செயலியுடன் இணைத்து சுத்திகரிப்பை நாம் கண்காணிக்கலாம். செட்டிங்குகளையும் மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இந்த ஹெட்போனில் உள்ள நியோடைமியம் டிரைவர்கள் நியூட்ரலான சவுண்ட் சிக்னேச்சர்களை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட்களும் ஆடியோவை ஆம்பிளிஃபை செய்ய உதவுகிறது.
பிலிப்பைன்ஸில் அறிமுகமாகவுள்ள இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் மலிவு விலை, கைக்கு அடக்கமான ரியல்மி பேட் மினி டேப்லெட்டை பிலிப்பென்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த பேடில் 8.7 இன்ச் டிஸ்பிளே 84.59 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேட்ஷியோவுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த டேப்லெட் Unisoc T616 Soc பிராசஸரில் இயங்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் சன்லைட் மோட், Mali G57 GPU, 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்பக்க ஷூட்டர் கேமரா ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் 7.6mm அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டில் 6400 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இந்த டேப்லெட் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.12,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா 2-வது அலையின்போது பலரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஜி.ஆர்.எஸ் இந்தியா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்மார்ட்போனை கொண்டு இயங்கும் ஆக்சிஜன் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த ஆக்சிஜன் கருவிக்கு ஆக்சிஜன் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. எளிதாக எடுத்து செல்லக்கூடிய இந்த கருவியை மருத்துவ அவசரநிலையின்போது பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் இந்த ஆக்சிஜன் கருவியை எடுத்து செல்வது எளிமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
கொரோனா 2-வது அலையின்போது பலரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழந்தனர். ஆக்சிஜனை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதும் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆக்சிஜன் கருவி உருவாக்கப்ப்பட்டுள்ளது.
இந்த கருவி ஆக்சிஜனை நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்பேக் போல இருக்கும். இதனை மொபைல் செயலியுடன் இணைத்து கண்காணிக்க முடியும். முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இந்த ஆக்சிஜன் கருவியை எளிதாக பயன்படுத்தலாம்.
இந்த கருவி காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இயர்போனில் இடம்பெறவுள்ள மேக்னெட்டிக் அம்சம், பயனர்கள் எளிதாக பாடல்களை ஒலிக்கவும், நிறுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த இயர்போன்கள் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் வருகிறது. இந்த இயர்போன்களில் வி5.0 ப்ளூடூத் கனெக்டிவிட்டி தரப்பட்டுள்ளது.
மேலும் நெக்பேண்ட் ஸ்டைலில் வரும் இந்த இயர்போனில் 3 பட்டன்கள் தரப்பட்டிருக்கும். இதன் மூலம் வால்யூம் அளவு, மியூசிக் பிளே பேக் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
இதில் இன் இயர் ஆங்குலர் சிலிக்கான் டிப்ஸ் வழங்கப்பட்டிருக்கும். மேலும் இதில் உள்ள மேக்னெட்டிக் அம்சம், பயனர்கள் எளிதாக பாடல்களை ஒலிக்கவும், நிறுத்தவும் உதவும்.
இந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இடம்பெறுமா என இன்னும் உறுதியாக தெரியவில்லை. சோனி LDAC ஹை-ரெஸ் ஆடியோவை இந்த இயர்போன் சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது.
இந்த ஒன்பிளஸ் புல்லட் ஒயர்லெஸ் Z2-ன் விலை இந்தியாவில் ரூ.1,999-ஆக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த இயர்பட்கள் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ என்கோ ஏர் 2 இயர்பட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்டில் 13.4mm கம்போசிட் டைடனிஸ்ட் டைப்கிராம் டிரைவர்கள் தரப்பட்டுள்ளன.
ட்ரன்ஸ்லூசன்ட் ரவுண்ட் டிசைனில் வந்துள்ள இந்த இயர்பட்கள் 24 மணி நேரம் பேட்டரி பேட்டரி லைஃபை வழங்குகிறது.
மேலும் ஒவ்வொரு இயர்பட்டும் முழுமையாக சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் என ஒப்போ தெரிவித்துள்ளது.
வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த இயர்பட்கள் கிடைக்கின்றன.
ஒப்போ என்கோ ஏர் 2 TWS இயர்பட்களின் விலை ரூ.2,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்கள் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளேஸ்டேஷன் 5 ஸ்டாண்டர்ட் எடிஷனின் விலை ரூ.49,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 5-ன் டிஜிட்டல் எடிஷனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது.
சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் அனைவரும் விரும்பும் கேமிங் கன்சோலாக இருக்கிறது. சோனியின் பிளே ஸ்டேஷன் 5 கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.
அதன்பின் சோனி பிளேஸ்டேஷன் 5 ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே இருந்தது. உலகம் முழுவதும் நிலவும் செமி கண்டெக்டர் சிப் பற்றாக்குறை பிளே ஸ்டேஷன் தயாரிப்புக்கு பெரும் தடையாக இருப்பது அதன் காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது மீண்டும் பிளே ஸ்டேஷன் 5 விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. நாளை பிளே ஸ்டேஷன் 5-ஐ புக் செய்பவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி டெலிவரி செய்யப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பிளே ஸ்டேஷன் 5-ஐ ஃபிளிக்பார்ட், கேம்ஸ் தி ஷாப், கேம் லூட், விஜய் சேல்ஸ், க்ரோமா ஆகிய இடங்களில் வாங்கலாம்.
பிளே ஸ்டேஷன் 5 ஸ்டாண்டர்ட் எடிஷனின் விலை ரூ.49,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 5-ன் டிஜிட்டல் எடிஷனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது.
பிளே ஸ்டேஷன் 5 முன்பதிவு செய்பவர்களுக்கு பிஎஸ் 5 கன்சோல் மற்றும் டூயல் சென்ஸ் கண்ட்ரோலர் வழங்கப்படும்.
இந்த சீரிஸில் மேஜிக்புக் எக்ஸ்14 மற்றும் எக்ஸ் 15 என்ற இரண்டு லேப்டாப்கள் இடம்பெற்றுள்ளன.
ஹானர் நிறுவனம் புதிய மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் லேப்டாப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் மேஜிக்புக் எக்ஸ்14 மற்றும் எக்ஸ் 15 என்ற இரண்டு லேப்டாப்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த லேப்டாப்களில் இன்டல் 10-வது ஜெனரேஷன் பிராசஸர்கள் Core i5-10210U மற்றும் Core i3-1010U ஆப்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்கள் குறைந்த விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள்:-
- 14-இன்ச் / 15-இன்ச் 1920 x 1080 பிக்ஸல்கள் 16:9 டிஸ்பிளே, TÜV Rheinland Certified
- 2.1 GHz (4.1GHz வரை) Core i3-10110U dual-core / 1.6GHz (up to 4.2GHz) Core i5-10210U quad-core பிராசஸர் இன்டல் UHD கிராப்பிக்ஸுடன் இடம்பெற்றுள்ளது
- 8ஜிபி / 16ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம், 256ஜிபி / 512ஜிபி எஸ்.எஸ்.டி
- விண்டோஸ் 10 ஹோம்
- 3.5mm ஆடியோ ஜாக், ஃபிங்கர் பிரிண்ட் பவர் பட்டன்
- பாப்-அப் வெப் கேம்
- மேஜிக் லிங்க் 2.0
- வைஃபை 802.11 ac (டூயல்-பேன்ட்), ப்ளூடூத் 5.0, USB டைப்-சி x 1 (சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர் சப்போர்ட்டுடன்), HDMI x 1, USB3.0 (Type A) x 1, USB2.0 (Type A) x 1
- X 14 டைமென்சன்கள்: 409 x 283 x 72mm; எடை: About 1.38kg
- X 15 டைமென்சன்கள்: 475 x 283 x 72mm; எடை: About 1.56kg
- மேஜிக் புக் X 14– 56Wh பேட்டரி 13.2h லோக்கல் வீடியோ பிளேபேக் வரை
- மேஜிக்புக் 15 – 42Wh பேட்டரி 7h லோக்கல் பிளேபேக் வரை
இந்த டிவியில் 8ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் டிவி Y1S ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிவி 43 இன்ச் அளவில், 4கே ரெஷலியூஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியில் 8ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்றும், இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 10 ஓ.எஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டெண்ட், அமேசான் அலெக்சா, டால்பி ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும், இதில் 24W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிவி இந்திய மத்திப்பில் ரூ.65,000-ஆக இருக்கும் என கருதப்படுகிறது.
ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் வங்கி கார்டுகளை கொண்டு ஐபோன் எஸ்.இ மற்றும் ஐபேட் ஏர் சாதனங்களை வாங்கும்போது ரூ.4000 வரை தள்ளுபடியும் உண்டு.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ (2022) மற்றும் ஐபேட் ஏர் (2022) சாதனங்களை இந்த மாதம் 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்று இந்த இரு சாதனங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
ஐபோன் எஸ்.இ 2022-ஐ பொறுத்தவரை, இந்த ஐபோனில் iOS 15 வழங்கப்பட்டுள்ளது. 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே 750x1334 ரெஷலியூஷன், 3262ppi பிக்ஸல் டென்சிட்டி, 625 nits வரை பிரைட்னஸ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த போன் இதுவரை உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே கடினமான கண்ணாடியை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏ15 பயோனிக் சிப்பை கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்ஸல் கேமரா சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டீப் ஃயூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4, போட்டோகிராபிக் ஸ்டைல்ஸ் ஆகியவை உள்ளன. இந்த போன் 60fps வரை 4கே வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. இந்த கேமரா சப்பையர் கிரிஸ்டல் லென்ஸ் கவர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
முன்பக்கத்தில் 7 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி கேமரா நேர்ச்சுரல், ஸ்டூடியோ, ஸ்டேஜ், ஸ்டேஜ் மோனோ, ஹைகீ போனோ உள்ளிட்ட 6 போர்ட்ரைட் லைட்டிங் எஃபெக்ட்ஸ்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கேமராவிலும் டீப் ஃபூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4 தரப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முன்பக்க கேமராவிக் 1080p ரெக்கார்டிங்கை வழங்கியுள்ளது. இத்துடன் டைம்லேப்ஸ் வீடியோ, நைட்மோட் டைம்லேப்ஸும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் எஸ்இ 2022 பயோமெட்ரிக் ஆந்தண்டிகேஷனுக்கான ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட டச் ஐடியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள இன்பில்ட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேர வீடியோ பிளேபேக் நேரத்தையும், 50 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்குகிறது.
இந்த போனுக்கு Qi ஸ்டாண்டர்ட் பேஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 20W வயர்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சார்ஜர் போனுடன் வராது.
இந்த போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.43,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.48.900-ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனை ஐசிஐசிஐ, கோடக், எஸ்.பி.ஐ கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.

ஐபேட் ஏர், ஐபேட் ஓஎஸ் 15-ல் இயங்குகிறது. இதில் 10.9 இன்ச் எல்.இ.டி லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே, 2360x1640 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுள்ளது. இதன் டிஸ்பிளே 500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், பி3 வைட் கலர் காமுட், ட்ரூ டோன் வைட் பேலன்ஸ் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஐபேட் ஏர் 2022-ல் ஆக்டாகோர் எம்1 சிப் பிராசஸரை கொண்டுள்ளது. இது இதற்கு முன் இருந்த ஐபேட் ஏரை விட 60 சதவீதம் அதிகமான சிபியூ பெர்ஃபார்மன்ஸ், 2 மடங்கு அதிக கிராபிக்ஸ் பெர்பார்மன்ஸை தருகிறது. இந்த சிப்பில் ஆப்பிள் நியூரல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை கொண்டு செயல்படுவதற்கு உதவுகிறது.
ஐபேட் ஏரில் 12 மெகாபிக்ஸல் வைட் பின்புற கேமரா f/1.8 லென்ஸ் தரப்பட்டுள்ளது. இதில் ஃபோகஸ் பிக்ஸல் கொண்ட ஆட்டோ ஃபோகஸ், பனோரமா, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர், போட்டோ ஜியோடேகிங், இமேஜ் ஸ்டேபிளைஷேசன், பர்ஸ்ட் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி 24,25,30,60 fps 4கே ரெக்கார்டிங்கை தருகிறது. இதில் 120fps-ல் 1080p ஸ்லோமோஷன் சப்போர்ட்டும் இருக்கிறது.
இந்த ஐபேடில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் செல்ஃபி கேமரா, மெஷின் லேர்னிங் பேக்ட் சென்டர் ஸ்டேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்டைம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும்போது கேமராவை அட்ஜெஸ்ட் செய்யும். இந்த முன்பக்க கேமராவில் 122 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.
ஐபேட் ஏரில் 28.6Wh லித்தியம் பாலிமர் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வெப் பிரவுசிங் அல்லது வைஃபையில் வீடியோ பிளே பேக்கை வழங்குகிறது. வைஃபை+செல்லுலார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் வெப் பிரவுசிங்கிற்கு 9 மணி நேரம் சார்ஜை வழங்கும். இதில் 20W USB-C பவர் அடாப்டர் தரபப்ட்டுள்ளது.
இந்த ஐபேட் ஏரின் வைஃபை மட்டும் உள்ள 64 ஜிபி வேரியாண்டின் விலை ரூ.54,900-ஆகவும், வைஃபை+ செல்லுலார் வசதியுள்ள 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.68,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபேடின் 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.82,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐபேட்டை ஐசிஐசிஐ, கோடக், எஸ்.பி.ஐ கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.4000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.






