என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுள் நிறுவனம் தனது முதல் பிக்சல் வாட்ச் மாடலை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யலாம்.


    கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் இதனை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் மற்றொரு ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் என்று அழைக்கப்பட இருக்கிறது.

     கூகுள் பிக்சல் வாட்ச்

    கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் மாடல் பற்றிய தகவல்கள் கூகுள் ஊழியர்களிடம் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. எனினும், இரு மாடல்களும் ஒரே மாதிரி இருக்குமா அல்லது வெவ்வேறாக காட்சியளிக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. பிக்சல் வாட்ச் பெயரை பயன்படுத்த கூகுள் நிறுவனம் ஏற்கனவே டிரேட்மார்க் பெற்று விட்டது. 

    இதனால் கூகுள் வெளியிடும் புது ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் என்றே அழைக்கப்படலாம். கூகுள் பிக்சல் வாட்ச் பிட் மாடலை சுற்றி தடிமனான பெசல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முற்றிலும் முரணாக பிக்சல் வாட்ச் ஸ்டாண்டர்டு மாடல் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும். மேலும் பில்டு-ஐ பொருத்தவரை ஸ்டாண்டர்டு மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபினிஷ், பிட் மாடலில் அலுமினியம் பாடி டிசைன் வழங்கப்படுகிறது.

    ஐகூ நிறுவனம் புதிய Z6 4ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி பற்றிய புது தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஐகூ நிறுவனம் தனது ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஐகூ Z6 4ஜி மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடலுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    மேலும் ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை ஐகூ இந்திய தலைமை செயல் அதிகாரி நிபுன் மௌரியா தெரிவித்ததாக தனியார் செய்தி வலைதளம் குறிப்பிட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் அம்சங்கள் பற்றி ஐகூ தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

     ஐகூ ஸ்மார்ட்போன்

    ஐகூ Z6 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். யு.ஐ. வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5ய1, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    இந்திய சந்தையில் ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் நாய்ஸ் புதிய நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புதிய நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, 1.32 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் டச் ஃபிளாட் TFT LCD டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, கஸ்டமைஸ் செய்யும் வசதியுடன் கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

    அதிகபட்சம் ஒன்பது ஸ்போர்ட்ஸ் மோட்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங், பெண்களின் உடல்நலனை டிராக் செய்யும் அம்சம், வாய்ஸ் அசிஸ்டண்ட் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. 

     நாய்ஸ்ஃபிட் Buzz

    இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது, மியூசிக் அம்சத்தை இயக்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை குரல் வழியே செய்திட முடியும். இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஐந்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய நாய்ஸ்ஃபிட் Buzz மாடல் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய நார்டு N20 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்டு N20 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு வழியாக அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஒன்பிளஸ் நார்டு N20 5ஜி ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு N20 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ 60Hz AMOLED ஸ்கிரீன், 16 MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB இண்டர்னல் மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஒன்பிளஸ் நார்டு N20 5ஜி

    ஒன்பிளஸ் நார்டு N20 5ஜி அம்சங்கள்:

    - 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
    - ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 8nm பிராசஸர்
    - அட்ரினோ 619L GPU
    - 6GB LPDDR4x ரேம்
    - 128GB (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆக்சிஜன் ஓ.எஸ். 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 64MP பிரைமரி கேமரா
    - 2MP மோனோகுரோம் சென்சார்
    - 2MP மேக்ரோ கேமரா
    - 16MP செல்ஃபி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4500mAh பேட்டரி
    - 33W ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய ஒன்பிளஸ் நார்டு N20 5ஜி ஸ்மார்ட்போன் புளூ நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விலை 282 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 515 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனம் தனது கேல்கஸி Z ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் லிமடெட் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை  அறிமுகம் செய்து உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸட் மாத வாக்கில் கேலலக்ஸி Z ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 3 தாம் பிரவுன் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பிஸ்போக் எடிஷனையும் அறிமுதம் செய்தது. 

    புதிய கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் எடிஷன் சிவப்பு நிற பாக்ஸ் மற்றும் பல்வேறு பல்வேறு அக்சஸரீக்களுடன் வழங்கப்படுகிறது. இதில் போக்கிமான் பவுச், பிக்காச்சூ கிளயர் கவர் செட், போக்கிமான் கஸ்டம் பேக், போக்கிமான் கார்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

     சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் லிமிடெட் எடிஷன்

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களை அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் தீமுடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2015 வாக்கில் கேலக்ஸி S6 எட்ஜ் ஐயன் மேன் எடிஷன், 2016 ஆம் ஆண்டு கேலக்ஸி S7 எட்ஜ் இன்-ஜஸ்டிஸ் எடிஷன் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படடன.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    இது பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ரெட்மி 9 சீரிஸ், டெக்னோ ஸ்பார்க் 8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 1127 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

     மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

    புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மாரட்போன் E6533 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பியூரோ ஆஃப் இன்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) வலைதளம் மற்றும் கூகுள் பிளே ஆதரவு கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. 

    முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இது டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, யுனிசாக் T610 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 64GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம் கிடைக்கும். 
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மெல்ல ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த வரிசையில், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த புது அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன் மாடலாக மோட்டோ G50 இருக்கிறது.

    முன்னதாக இம்மாத துவக்கத்தில் மோட்டோ G200 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மோட்டோ G50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. 

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G50 ஸ்மார்ட்போனிபல் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் SIRF32.27-25 எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. இது பிரிட்டனில் விற்பனை செய்யப்பட்டு இருக்கும் XT2137-DS மாடலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

     மோட்டோ G50

    பிரிட்டனை தொடர்ந்து மற்ற நாடுகளில் விற்பனையாகி வரும் மோட்டோ G50 ஸ்மார்ட்போனிற்கும் இதே அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அப்டேட் பக்கத்தில் மோட்டோ G50 மாடலுக்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பீட்டா வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் ஆண்ட்ராடய்டு 12 ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடலின் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஐபோன் 15 மாடலில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் இதவரை தனது சாதனங்கள் எதிலும் வழங்கியது இல்லை. எனினும், ஆப்பிளுக்கு போட்டியாளராக விளங்கி வரும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களிது ஸ்மார்ட்போன் மாடல்களில் ஏற்கனவே இதுபோன்ற அம்சத்தை வழங்கி இருக்கின்றன.

    எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் தென் கொரிய நிறுவனம் ஒன்றை தனது வினியகஸ்தராக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 மாடல்களில் இந்த பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

     ஐபோன் 13

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மற்றும் ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு தேவையான பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ்களை ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கிறது.

    தென் கொரியாவை சேர்ந்த லென்ஸ் உற்பத்தியாளர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,188.9 கோடி முதலீட்டில் புது உற்பத்தி ஆலையை தென் கொரியாவின் குமி பகுதியில் கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். இதே நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களுக்கான OIS ஆக்டுயேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன.

    தற்போது புது ஆலை கட்டமைக்க இருப்பதை அடுத்து ஜாஹ்வா நிறுவனம் பெரும் முதலீடுகளை ஈட்டி இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. புது ஆலையில் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் வாத வாக்கில் துவங்க இருக்கிறது.
    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான போட், புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் ஏர்டோப்ஸ் 500 ANC என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ்-இல் 35 டி.பி. விரையிலான ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் ஆம்பியண்ட் மோட், போட் நிறுவனத்தின் பிரத்யேக பீஸ்ட் (Bionic Engine And Sonic Technology) தொழில்நுட்பம், லோ லேடென்சி ஆடியோ அனுபவம், உடனடி வேக் அன் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன. 

     போட் ஏர்டோப்ஸ் 500 ANC

    போட் ஏர்டோப்ஸ் 500 ANC சிறப்பம்சங்கள்:

    - ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம்
    - ஆம்பியண்ட் மோட்
    - 8mm டிரைவர்கள்
    - ENx என்விரான்மெண்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
    - இன்-இயர் டிடெக்‌ஷன்
    - லோ லேடன்சி பிளேபேக் வழங்கும் பீஸ்ட் மோட் 
    - IWP டெக் (எளிதில் இயர்பட்களை பவர் ஆன் செய்ய உதவும்)
    - IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட்
    - டச் கண்ட்ரோல்
    - 150mAh பேட்டரி, ASAP சார்ஜிங்
    - ஐந்து நிமிட சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கும்

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 500 ANC மாடல் எலைட் புளூ, டிரான்குயில் வைட் மற்றும் ரிச் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. விற்பனை அமேசான் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் உள்ள தானியங்கி சுத்தம் செய்யும் அம்சம் ஏசியை அணைத்தவுடன் 30 நொடிகள் இயங்கி ஏசியை தானாகவே சுத்தம் செய்யும்.
    ரியல்மி நிறுவனம் புதிய டெக்லைஃப் கன்வெர்ட்டிபிள் ஏசியை அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த ஏசியில் இன்வெர்டர் கம்ப்ரஸர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதின் கம்ப்ரெசரை வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துகொள்ளும். இதன்மூலம் சரியான அளவில் குளிர்ச்சியை வழ்க்ஷங்கும்.

    ஒரு அறையில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல குளிர்ச்சியை மாற்றும் அம்சம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஏசியில் ட்ரை, எக்கோ மற்றும் 3 ஸ்லீப் மோட்கள் இடம்பெற்றுள்ளன. இது 55 டிகிரி வெப்பத்திலும் குளிர்ச்சியை தரவல்லது.

    இதில் உள்ள தானியங்கி சுத்தம் செய்யும் அம்சம் ஏசியை அணைத்தவுடன் 30 நொடிகள் இயங்கி ஏசியை தானாகவே சுத்தம் செய்யும். மேலும் ஏசியில் உருவாகும் நீரை ஆவியாக்கி ஏசியின் உள்ளே ஈரப்பதம், தூசு ஆகியவை தங்காமல் பாதுகாக்கும். இதில் ஃப்ளூ ஃபின் தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் நீர்த்துளி, உப்பு, ஆசிட்டில் இருந்து காயிலை பாதுகாக்கிறது.

    மின்சாரத்தை சேமிக்கும் அம்சமும் இந்த ஏசியில் இடம்பெற்றுள்ளது.

    இந்த ஏசியின் 1 டன் மாடல் விலை ரூ.27,790-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.5 டன் மாடல் விலை ரூ.30,999-ஆகவும், 5 ஸ்டார் 1.5 டன் மாடல் விலை ரூ.33,490-ஆகவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது. இந்த ஏசியை ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்.
    இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.
    மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality), மிகைப்படுத்தப்பட்ட மெய்மை (Augumented Reality) ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் ஆப்பிளின் மிக்ஸுடு ரியாலிட்டி ஹெட்செட் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அறிமுகம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் அளவிலான இந்த ஹெட்செட்களை ஆப்பிள் வெளியிடுவதற்கு ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சிப் ஆப்பிள் நிறுவனத்தினாலேயே தயாரிக்கப்படவுள்ளது.

    இதில் 10 சென்சார்கள் இடம்பெறும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பில் ரு.1.52 லட்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த இயர்போனின் விலை ரூ.3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ.3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.
    ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் ஏர் 3 TWS இயர்போன்ஸ் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதில் 10 mm டைனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இந்த இயர்போனில் TUV-Rhienland சான்றிதழ் வழங்கிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தரப்பட்டுள்ளது. இது 2 மைக்ரோஃபோன்கள் மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் 42dB வரை இரைச்சலை குறைக்கக்கூடியது.

    மேலும் ரியல்மி பட்ஸ் ஏர் 3 88ms குறைந்த லேட்டன்ஸியை கேம் மோடுடன் வழங்குகிறது. இது முந்தைய ஜெனரேஷனை விட 35 சதவீதம் குறைந்த லேட்டன்ஸி ஆகும்.

    இந்த இயர்போனில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி v5.2 வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 சாதனங்களை இந்த இயர்போனில் இணைக்கமுடியும். இதில் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.

    இந்த இயர்போன் IPX5 ரேட்டர்ட் வியர்வை மற்றும் தண்ணீர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட்டுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் டோட்டல் பிளேபேக் வழங்கப்படும். 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும்.

    இந்த இயர்போனின் விலை ரூ.3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ.3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.

    ×