என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனம்
    X
    ஆப்பிள் நிறுவனம்

    அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்- எல்லோரும் ரெடியா?

    ஆப்பிள் நிறுவனம் பெரிதும் எதிர்பார்த்த பல சாதனங்களை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் முதல் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம், எம்2, எம்1 ப்ரோ, எம்1 மேக்ஸ் மற்றும் அதிசக்தி கொண்ட எம்1 மேக்ஸ் சிப்களை கொண்ட மேக் சாதனங்களை வெளியிடவுள்ளது. 

    மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி ஆகியவை எம்2 சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐமேக் ப்ரோ, எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் ஆப்ஷனுடனும், புதிய மேக் மினி எம்1 ப்ரோ சிப்புடனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வருடம் வெளியாகவுள்ள மேக்புக் ஏர், கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோவை போலவே டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது பல நிறங்களிலான டிசைன்கள் மற்றும் மினி எல்.இ.டிக்களை கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    எம் 1 ப்ரோ, எம்1 மேக்ஸ் சிப்கள்

    இந்த நிகழ்வில் அனைவராலும் பெரிதும் எதிபார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய போன்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பழைய ஐபோன் எஸ் இ-யை விட மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.25,000-க்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.

    Next Story
    ×