என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • கூகுள் நிறுவனம் தனது மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
    • டென்சார் சிப்செட் கொண்ட புதிய கூகுள் பிக்சல் டேப்லெட் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மே மாத வாக்கில் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மேட் பை கூகுள் 22 நிகழ்வில் புதிய பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டின் போது பிக்சல் டேப்லெட் மாடல் சார்ஜிங் டாக் உடன் விற்பனை செய்யப்படும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது.

    சார்ஜிங் டாக்-இல் ஸ்பீக்கர் இடம்பெற்று இருக்கிறது. இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. பிக்சல் டேப்லெட்-ஐ டாக் செய்ததும் அது ஹேண்ட்ஸ்-ஃபிரீ அசிஸ்டண்ட் அல்லசு போட்டோ ஃபிரேம் போன்று செயல்படும். மேலும் இது ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கவும் வழி செய்கிறது. இந்த சார்ஜிங் டாக்-இல் உள்ள காந்தம் பிக்சல் டேப்லெட்டை எளிதில் டாக் மற்றும் அன்டாக் செய்ய உதவுகிறது.

    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சார் ஜி2 பிராசஸர் தான் பிக்சல் டேப்லெட் மாடலிலும் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் தலைசிறந்த இமேஜ் பிராசஸிங் மற்றும் மெஷின் லெர்னிங் வசதிகளை வழங்குகிறது. இத்துடன் பிக்சல் போன் அம்சங்களான வீடியோ காலிங், போட்டோ எடிட்டிங், ஹேண்ட்ஸ் ஃபிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை பிக்சல் டேப்லெட் கொண்டிருக்கிறது.

    இந்த டேப்லெட் பிரீமியம் நானோ செராமிக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதில் பெரிய ஸ்கிரீன் வழங்கப்படுவது மட்டும் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் அளவு, ரெசல்யூஷன் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபுக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புதிய ஜியோபுக் லேப்டாப் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப் போவதாக கடந்த பல மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இவற்றை உண்மையாக்கும் வகையில், இந்தியாவில் ஜியோபுக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜியோபுக் மாடல் குறைந்த விலையில் கிடைக்கிறது. அரசு ஆன்லைன் வலைதளமான GeM-இல் ஜியோபுக் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில் GeM வலைதள விவரங்களின் படி புதிய ஜியோபுக் ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே பின்புறம் உள்ள மூடியில் ஜியோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. சற்றே தடிமனான பெசல்களை கொண்டிருக்கும் ஜியோபுக்-இல் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை ஜியோபுக் மாடலில் 2 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் HD வெப் கேமரா சப்போர்ட் உள்ளது. இந்த லேப்டாப்பில் 55.1 வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பயன்படுத்த வழி செய்கிறது.

    இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத் 5 போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன. புதிய ஜியோபுக் மாடலில் ஒற்றை யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், HDMI போர்ட், காம்போ போர்ட், SD கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மல்டி-ஜெஸ்ட்யுர் வசதி கொண்ட டச்பேட், டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜியோபுக் மாடல் ஜியோ ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 19 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த லேப்டாப் அரசு ஊழியர்களுக்காக GeM வலைதளத்தில் கிடைக்கிறது. அனைவருக்கான விற்பனை தீபாவளி வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

    • நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய இயர்பட்ஸ் மாடலுக்கான டீசர்களை நத்திங் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய இயர்பட்ஸ் நத்திங் இயர் (ஸ்டிக்) என அழைக்கப்படுகிறது. சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி நத்திங் இயர் (ஸ்டிக்) இந்தியாவில் அக்டோபர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் நத்திங் இயர் (ஸ்டிக்) தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் வகையில் கஸ்டம் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் (1) மாடலுக்கான க்ளிம்ப் இண்டர்பேஸ் உடன் நத்திங் இயர் (ஸ்டிக்) டிசைன் விவரங்களை நத்திங் ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

    புதிய இயர்பட்ஸ் அம்சங்கள் இன்னமும் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த இயர்பட்ஸ் விவரம் மற்றும் ரெண்டர்கள் கடந்த வாரம் வெளியாகின. அதில் நத்திங் இயர் (ஸ்டிக்) டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் இயர் டிப்கள் இடம்பெறவில்லை. அந்த வகையில் இந்த இயர்பட்ஸ் ANC வசதியை கொண்டிருக்காது என தெரிகிறது.

    இதேபோன்று வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் வழங்கப்படாத பட்சத்தில் நத்திங் இயர் (ஸ்டிக்) விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுக நிகழ்வு அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஏற்கனவே ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிரடி சலுகைகள் வழங்கி முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் சந்தையில் ஜியோ இலவச போன் சேவை மற்றும் குறைந்த விலை 4ஜி சேவைகளை வழங்கி பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து 2017 வாக்கில் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போனை தொடர்ந்து லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜியோவின் லேப்டாப் மாடல் ஜியோபுக் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜியோபுக் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 4ஜி சப்போர்ட் மற்றும் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஜியோபுக் மாடல் குவால்காம் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவி உருவாக்கப்பட்ட ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது.

    தற்போது கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 100 டாலர்கள் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிரிவில் ஜியோபோன் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த போன் விற்பனையில் இந்த பிரிவில் இருந்து மட்டும் ஒன்பது சதவீதமாக உள்ளன.

    ஜியோபுக் மாடலில் ஆண்ட்ராய்டு தழுவி உருவாக்கப்பட்ட ஜியோஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மைக்ரோசாப்ட் செயலிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் ARM தொழில்நுட்பத்தில் உருவான குவால்காம் பிராசஸர் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 665 வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லேப்டாப் ஏசர், லெனோவோ மற்றும் லாவா நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் விண்டோஸ் ஒஎஸ் கொண்ட லேப்டாப்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தான் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவிய ஜியோஒஎஸ் கொண்ட ஜியோபுக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பல லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் முற்றிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இம்முறை சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் அறிமுகமாகின்றன.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு சர்வதேச வெளியீட்டின் போதே புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே தகவலை கூகுள் நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் சரியான இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கும் என கூகுள் அறிவித்து இருக்கிஓறது. இதே தகவலை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 7 மாடலில் 6.3 இன்ச் FHD+OLED 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, பிக்சல் 7 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ OLED 120 Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க பிக்சல் 7 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்த பிரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டிருக்கிறது.

    பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 4700 எம்ஏஹெச் மற்றும் 5000 எம்ஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • பிட்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது பிட்னஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மூன்று சாதனங்களும் பயனர் உடல்நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    பிட்பிட் நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய அணியக்கூடிய சாதனங்கள்- இன்ஸ்பயர் 3, வெர்சா 4 மற்றும் சென்ஸ் 2 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று சாதனங்களும் பிட்பிட் நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் உடல்நல அம்சங்களை கூகுள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து வழங்குகின்றன. இவற்றின் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறுகிறது.

    பிட்பிட் இன்ஸ்பயர் 3: இந்த பிட்னஸ் டிராக்கர் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் வைப்ரண்ட் கலர் டிஸ்ப்ளே உள்ளது. அளவில் சிறியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் போதிலும், இந்த சாதனம் ஏராளமான உடல் அசைவுகளை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    பிட்பிட் வெர்சா 4: ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் பிட்பிட் வெர்சா 4 பிட்னஸ் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பயன்படுத்தலாம். மேலும் இதில் 40-க்கும் அதிக பயிற்சி மோட்கள், இண்டகிரேடெட் ஜிபிஎஸ், ஆக்டிவ் ஜோன் நிமிடங்கள், பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் பிட்பிட் சென்ஸ் 2 மாடலில் உள்ள ஏராளமான சென்சார்கள் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிட்பிட் இன்ஸ்பயர் 3 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் வெர்சா 4 விலை ரூ. 20 ஆயிரத்து 499 என்றும் சென்ஸ் 2 விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்று சாதனங்களில் எதை வாங்கினாலும் ஆறு மாதங்களுக்கு பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    • மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புது G சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் மற்றும் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்டிருப்பதால், இது மோட்டோ G71 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் இல்லை. அந்த வகையில் மோட்டோ G72 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்தியாவில் 10-பிட் 120Hz pOLED ஸ்கிரீன் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ G72 கொண்டிருக்கும் என மோட்டோரோலா தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கிரீன் 576Hz டச் சாம்ப்லிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு கேமரா, டெப்த் ஆப்ஷன் மற்றும் மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, டர்போபவர் 30 வாட் சார்ஜிங், 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போன் மெடோரைட் கிரே மற்றும் போலார் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் போது தெரியவரும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

    • ப்ளூடூத் காலிங் மற்றும் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் AMOLED டிஸ்ப்ளே, 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

    நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது நாய்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எவால்வ் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் யுனிபாடி மற்றும் இரண்டு பட்டன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. நாய்ஸ்பிட் எவால்வ் 3 மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

    நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக், கேமரா கண்ட்ரோல், சமூக வலைதள நோட்டிபிகேஷ்கள், வேக் ஜெஸ்ட்யுர், ஸ்மார்ட் DND போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரை பேக்கப் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் விண்டேஜ் பிரவுன், கார்பன் பிளாக், ஸ்பேஸ் புளூ மற்றும் சில்வர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஜியோபோன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் 5ஜி மாடலின் விலையை ரூ. 8 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 12 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையை துவங்கும் முன், நாடு முழுக்க 5ஜி நெட்வொர்க் கிடைப்பதை உறுதிப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது.

    2024 வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி எம்எம்வேவ் பிளஸ் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக 2022 ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

    முந்தைய தகவல்களில் ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் IPS LCD 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். 

    • அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட் ஹோம் கேஜெட்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 1,999 விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட் ஹோம் கேஜெட்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    டிபி லின்க் AC750 வைபை ரேன்ஜ் எக்ஸ்டெண்டர்:

    இந்த வைபை பூஸ்டர் கொண்ட வயர்லெஸ் சிக்னல்களின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த சாதனத்தில் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஈத்தர்நெட் போர்ட் வயர்லெஸ் அடாப்டராக மாறி, கனெக்டெட் வயர்டு சாதனங்களில் பயன்படுத்த வழி செய்கிறது. அமேசானில் இதன் விலை ரூ. 1599 ஆகும்.

    கேஜெட் அப்லையன்சஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்:

    பார்க்க செடி போன்றே காட்சியளிக்கும் இந்த கேஜெட் ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்று செயல்படும். இத்துடன் 7 மின்விளக்குகள் இதில் உள்ளன. இந்த ஸ்பீக்கரின் வெளிப்புறம் வாட்டர் ப்ரூப் வசதி கொண்டுள்ளது. அமேசான் தளத்தில் இதன் விலை ரூ. 939 ஆகும்.

    ரிமோட் ஐஆர் பிளாஸ்டர்:

    யுனிவர்சல் ரிமோட் ஐஆர் பிளாஸ்டர் கொண்ட டிவி, ஏசி, ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர் மற்றும் பல்வேறு சாதனங்களை இயக்க முடியும். இதன் விலை அமேசான் தளத்தில் ரூ. 1.099 ஆகும்.

    ஹாடியன் ஆட்டோமேடிக் வாட்டர் டிஸ்பென்சர்:

    1200எம்ஏஹெச் ரிசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி கொண்டிருக்கும் இந்த வாட்டர் டிஸ்பென்சர் கொண்டு அதிக கொள்ளளவு கொண்ட வாட்டர் கேன்களில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 1079 ஆகும்.

    ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் கேம்:

    மேம்பட்ட மோஷன் டிடெக்‌ஷன், அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியுடன் இந்த செக்யுரிட்டி கேமரா உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் தளத்தில் இதன் விலை ரூ. 1399 ஆகும்.

    குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை விவரங்கள் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனைக்கானவை ஆகும். இந்த விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவியில் பெசல் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் முற்றிலும் புதிய, ரி-டிசைன் செய்யப்பட்ட சாம்சங் டிவி பிளஸ் சேவை உள்ளது.

    இதன் மூலம் 55 நேபலை சர்வதேச மற்றும் உள்ளூர் சேனல்களை பார்க்கும் வசதி மற்றும் டைசன் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹை டைனமிக் ரேன்ஜ் மற்றும் பர்கலர் தொழில்நுட்பங்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் அல்ட்ரா கிளீன் வியூ தொழில்நுட்பம் உள்ளது. இது காட்சியின் ஆழத்தை மேம்படுத்தி படங்களை அதிக தரத்தில் காண்பிக்கிறது.

    மேலும் இதில் உள்ள டால்பி டிஜிட்டல் பிளஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் எபெக்ட் வழங்குகிறது. இத்துடன் பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் மற்றும் ஏராளமான மென்பொருள் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் 32 இன்ச் HD எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள்

    32 இன்ச் HD 1366x768 பிக்சல் எல்இடி ஸ்கிரீன், 50Hz ரிப்ரெஷ் ரேட்

    2x HDMI, 1x USB

    20 வாட் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட்

    டைசன் ஒஎஸ் மற்றும் சாம்சங் டிவி பிளஸ்

    நெட்ப்ளிக்ஸ், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு ஆப்ஸ் சப்போர்ட்

    பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் 32 இன்ச் HD டிவி விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக இந்த டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

    • சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
    • இந்த வலைதள விவரங்களின் மூலம் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் ப்ரியர்கள் ரெட்மி நோட் 12 சீரிசுக்கு ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சியோமி இன்னமும் ரெட்மி நோட் 11 சீரிசை உருவாக்கி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவரங்கள் கூகுள் பிளே டெவலப்பர் கன்சோல் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

    விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களும் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே மட்டுமின்றி ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 மாடல் விவரங்கள் IMEI மற்றும் FCC போன்ற வலைதளங்களிலும் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2209116AG எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

    புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் அட்ரினோ 616 GPU வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் HFD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் நான்கு கேமரா சென்சார்கள், முன்புறம் பன்ச் ஹோல் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. 2023 ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. வரும் நாட்களில் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    ×