என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  கூகுள் பிக்சல் 7 சீரிஸ் இந்திய முன்பதிவு விவரம்
  X

  கூகுள் பிக்சல் 7 சீரிஸ் இந்திய முன்பதிவு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் முற்றிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இம்முறை சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் அறிமுகமாகின்றன.

  கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு சர்வதேச வெளியீட்டின் போதே புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே தகவலை கூகுள் நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் சரியான இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

  இந்த நிலையில், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கும் என கூகுள் அறிவித்து இருக்கிஓறது. இதே தகவலை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 7 மாடலில் 6.3 இன்ச் FHD+OLED 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, பிக்சல் 7 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ OLED 120 Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படுகிறது.

  புகைப்படங்களை எடுக்க பிக்சல் 7 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்த பிரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டிருக்கிறது.

  பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 4700 எம்ஏஹெச் மற்றும் 5000 எம்ஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×