என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஒப்போ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் டிசம்பர் மாத வாக்கில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை.
எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் பர்பில் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4, மோட்டோ ரேசர் 2022 மற்றும் ஹூவாய் P50 பாக்கெட் நியூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைண்ட் N ப்ளிப் மாடலில் 6.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், 3.26 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, 2520x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் 32MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக- ஒப்போ ஃபைண்ட் N-ஐ அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஒப்போ ஃபைண்ட் N2 பெயரில் இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- 11 மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய தலைமுறை பிராசஸரை விட 15 சதவீதம் வேகமான சிபியு மற்றும் 35 சதவீதம் வேகமான ஜிபியு செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய ஆப்பிள் பென்சில் மாடலும் அரிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
வைபை 6E கனெக்டிவிட்டி கொண்ட முதல் சாதனமாக இது அமைந்துள்ளது. 11 இன்ச் ஐபேட் ப்ரோ மாசலில் எல்இடி பேக்லிட் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 12.9 இன்ச் மாடலில் மினி எல்இடி லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபேட் ஒஎஸ் 16, புதிய ஆப்பிள் பென்சில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிஸ்ப்ளே மீது 12 மில்லிமீட்டர் அளவிலேயே பென்சிலை கண்டறிந்து விடும்.

புதிய ஐபேட்களில் 5ஜி மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் தண்டர்போல்ட் மற்றும் யுஎஸ்பி 4, யுஎஸ்பி சி போர்ட், 12MP அல்ட்ரா வைடு ட்ரூடெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை மாடல் விலை ரூ. 81 ஆயிரத்து 999 என துவங்குகிறது. டாப் எண்ட் மாடலான ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் 2டிபி செல்லுலார் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ரெனோ 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் ரெனோ 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது ரெனோ 8 ப்ரோ 5ஜி மாடலின் லிமிடெட் எடிஷன் வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி ஹவுஸ் ஆப் தி டிராகன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கான டீசரில் ஸ்மார்ட்போன் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் வித்தியாசமாக பெட்டியில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் ஸ்மார்ட்போனுடன் மேலும் சில பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். புது லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் ஒப்போ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- ரியல்மி நிறுவனம் வரும் மாதங்களில் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ரியல்மி நிறுவனமும் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர மற்ற மாடல்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி திட்டமிட்டு வருகிறது.
டிஜிட்டல் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் ரியல்மி நிறுவனம் மிட்-ரேன்ஜ் பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இரு ஸ்மார்ட்போன்களின் விலை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் இவற்றில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புது ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனினும், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் கொண் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி நியோ 4 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 1.5K டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- ரேசர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் அளவு கொண்ட புதிய கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய கேமிங் கன்சோல் 5ஜி கனெக்டிவிட்டி, 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
ரேசர் நிறுவனம் ரேசர் எட்ஜ் 5ஜி சாதனத்தை ரேசர்கான் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. குவால்காம் மற்றும் வெரிசன் நிறுவனங்கள் கூட்டணியில் இந்த கேமிங் கன்சோலை ரேசர் உருவாக்கி இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய கேமிங் கன்சோல் ஸ்மார்ட்போன் அளவில் கைகளில் வைத்துக் கொண்டு விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கேமிங் கன்சோலில் AAA கேம்கள், ஆண்ட்ராய்டு கேம்களான ஃபார்ட்நைட், ராக்கெட் லீக் சைடுஸ்வீப் உள்ளிட்டவைகளையும் விளையாடலாம். எபிக் கேம்ஸ் லான்ச்சர் மூலம் இந்த கேம்கள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே கிடைக்கிறது. கிளவுட் ஸ்டிரீமிங் சேவைகளான NVIDIA ஜீபோர்ஸ் நௌ மற்றும் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் உள்ளிட்டவையும் ரேசர் எட்ஜ் 5ஜி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் ரிமோட் பிளே ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பிசி லைப்ரரி அக்சஸ் ஸ்டிரீம் லின்க், மூன்லைட், பார்செக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
ரேசர் எட்ஜ் 5ஜி அம்சங்கள்:
6.8 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
ஸ்னாப்டிராகன் G3x ஜென் 1 பிராசஸர்
8 ஜிபி LPDDR5 ரேம்
128 ஜிபி UFS 3.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
5MP செல்பி கேமரா
5ஜி, வைபை 6E, ப்ளூடூத் 5.2
5000 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ரேசர் எட்ஜ் 5ஜி-யுடன் ரேசர் கிஷி வி2 ப்ரோ கண்ட்ரோல்ர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அமெரிக்காவில் ரேசர் எட்ஜ் 5ஜி விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 856 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ரேசர் எட்ஜ் 5ஜி மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இத்துடன் ரேசர் எட்ஜ் ஃபவுண்டர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ரேசர் ஹாமர்ஹெட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் விலை 499 டாஸர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 091 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்குகிறது.
- நத்திங் நிறுவனம் ஒவர் தி இயர் ரக ஹெட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மேலும் இந்த ஹெட்போனின் கான்செப்ட் ரெண்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நத்திங் நிறுவனத்தின் அடுத்த புதிய சாதனம் ஹெட்போன்களாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆடியோ சாதனத்தின் கான்செப்ட் ரெண்டர் படங்களை நத்திங் நிறுவனர் கால் பெய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ரெண்டர்களை யான்கோ டிசைன் எனும் ஆன்லைன் இதழ் உருவாக்கி இருக்கிறது.
கால் பெய் இவற்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு, இதனை உருவாக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு ட்விட்டரில் பலரும் இதை அறிமுகம் செய்யுங்கள் என பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஹெட்போன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் நிறுவன ஹெட்போன் நத்திங் ஹெட் (1) என அழைக்கப்படலாம்.

ரெண்டர்களில் உள்ள நத்திங் ஹெட் (1) பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது போன் (1) மற்றும் இயர் (1) போன்றே இந்த ரெண்டர்களில் உள்ள ஹெட்போனும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் க்ளிம்ப் இண்டர்பேஸ் போன்று இயர்கப்களை சுற்றி எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன.
ஹெட்போனுடன் சார்ஜிங் ஸ்டாண்ட் ரெண்டரையும் யான்கோ டிசைன் வெளியிட்டு இருக்கிறது. இதில் வயர்லெஸ் காயில்கள் உள்ளன. இத்துடன் ஸ்டாண்டின் பின்புறம் சார்ஜிங் சர்பேஸ் உள்ளது. இந்த இடத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
- ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
- புது ஸ்மார்ட்போன் ரியல்மி 10 சீரிசின் கீழ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி 10 சீரிஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது பிஐஎஸ் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
பிஐஎஸ் வலைதள விவரங்களின் படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் RMX3686 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் முன்னதாக என்பிடிசி, இஇசி மற்றும் டிகேடிஎன் என பல்வேறு வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தொடர்ச்சியாக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் OIS, அதிக ரெசல்யூஷன் என தலைசிறந்த கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என்றும் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய 9 ப்ரோ பிளஸ் மாடலிலும் இதே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், மாலி G68 MC4 GPU, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ரியல்மி 10 சீரிசை சேர்ந்த மற்றொரு ஸ்மார்ட்போன் RMX3630 எனும் மாடல் நம்பருடன் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதே ஸ்மார்ட்போன் கீக்பென்ச் டேட்டாபேஸ், பிஐஎஸ், இந்தோனேசியா டெலிகாம், என்பிடிசி போன்ற வலைதளங்களிலும் வெளியாகி இருந்தது.
- இன்பினிக்ஸ் நிறுவனம் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியுடன் முற்றிலும் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய இன்பினிக்ஸ் லேப்டாப் அலுமினியம் அலாய் பினிஷ் மற்றும் 1.24 கிலோ எடை கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இன்புக் X2 பிளஸ் லேப்டாப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்புக் X2 பிளஸ் லேப்டாப் 15.6 இன்ச் FHD ஸ்கிரீன், 11th Gen i3 (8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி | 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி), i5 (8 ஜிபி + 512 ஜிபி) மற்றும் டாப் எண்ட் i7 (16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) என மூன்று வித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த லேப்டாப் அலுமினியம் அலாய் பினிஷ், 1.24 கிலோ எடை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 14,8 மில்லிமீட்டர் அளவு தடிமனாக உள்ளது. இதில் 1080 பிக்சல் FHD கேமரா, இரண்டு எல்இடி லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பேக்லிட் கீபோர்டு, 2 ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ, 10 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்கும் 50Wh பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 65 வாட் டைப் சி பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் இன்புக் X2 பிளஸ் அம்சங்கள்:
15.6 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே, 300 நிட்ஸ் பிரைட்னஸ்
3 ஜிகாஹெர்ட்ஸ் 11th Gen இண்டெல் கோர் i3 பிராசஸர், இண்டெல் UHD கிராபிக்ஸ்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் 11th Gen இணஅடெல் கோர் i5-1155G7
2.9 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-1195G7 பிராசஸர், ஐரிஸ் Xe கிராபிக்ஸ்
8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்
256 ஜிபி, 512 ஜிபி NVMe PCIe 3.0 SSD
விண்டோஸ் 11 ஹோம்
1080 பிக்சல் வெப்கேமரா, டூயல் எல்இடி ஃபில் லைட்கள்
வைபை 6, 1x USB -C, 2x USB 3.0, 1x HDMI 1.4, 1x எஸ்டி கார்டு ஸ்லாட்
3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோபோன் ஜாக்
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இரண்டு டிஜிட்டல் மைக்ரோபோன்கள், டிடிஎஸ் ஆடியோ
50Wh பேட்டரி
65 வாட் PD 3.0 டைப் சி பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்பினிக்ஸ் இன்புக் X2 பிளஸ் லேப்டாப் கிரே மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 32 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 18 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
- ஐகூ நிறுவனத்தின் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
- புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஐகூ நிறுவனம் தனது அடுத்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஐகூ நியோ சீரிசில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஐகூ நியோ 7 என அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். புதிய ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனிலும் மூன்று லென்ஸ் அடங்கிய கேமரா பாகம் உள்ளது.
இதன் ஆரஞ்சு நிற வேரியண்டின் பின்புறம் லெதர் போன்ற பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என மொத்தம் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஐகூ நியோ 7 மாடலில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என ஐகூ உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என்றும் இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ஐகூ நியோ 6 மாடல் சீன சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. இதன் இந்திய வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருந்தது.
அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் FHD+ 120Hz E5 AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படலாம்.
- போக்கோ நிறுவனம் முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இது போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இது சீனாவில் விற்பனையாகி வரும் ரெட்மி K40s ஸ்மார்ட்போனின் ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தற்போது போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ F5 5ஜி ரெட்மி K60 5ஜி ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 23013RK75C எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

இதன் இந்திய வேரியண்ட் 23013PC5I மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. குளோபல் வேரியண்ட் 23013PC75G மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி K60 பெயரில் முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் போக்கோ F5 5ஜி பெயரில் சர்வதேச சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுதவிர போக்கோ F5 ஸ்மார்ட்போனிற்கு மாண்ட்ரியன் எனும் குறியீட்டு பெயர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். இத்துடன் ரெட்மி K60 மாடலில் உள்ள அம்சங்களே வழங்கப்படும் என தெரிகிறது.
- சியோமி நிறுவனம் ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ரெட்மி K சீரிஸ் ரெட்மி பிராண்டின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும்.
சியோமி நிறுவனம் ரெட்மி K50 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50 சீரிஸ் தற்போது அப்டேட் செய்யப்பட உள்ளது. புதிய ரெட்மி K60 சீரிஸ் ரெட்மி பிராண்டின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த வரிசையில், மற்றொரு புது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள் இடம்பெற்று உள்ளது. புதிய ரெட்மி K60 சீரிஸ் இருவித சார்ஜிங் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 67 வாட் வயர்டு, 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங், மற்றும் 120 வாட் வயர்டு, 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட உள்ளது.

இருவித சார்ஜிங் வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை சியோமி ஏற்கனவே வெளியிட்டு உள்ளது. மேலும் இரு வேரியண்ட்களில் 120 வாட் சார்ஜிங் கொண்ட மாடலுடன் ஒப்பிடும் போது 67 வாட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்கள் வழங்கப்படலாம்.
இதன் டாப் எண்ட் மாடலில் 2K டிஸ்ப்ளே பேனல், 50MP பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ சீரிசில் அறிமுகம் செய்த டைனமிக் ஐலேண்ட் அம்சம் புதிய ரெட்மி K60 சீரிஸ் மாடல்களில் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக விவரம் வெளியாகி இருக்கிறது.
- சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
கூகுள் பிக்சல் போல்டு அறிமுக விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த நிலையில், தற்போது பிக்சல் போல்டு அறிமுக விவரம் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் நிறுவனம் அக்டோபரில் நடத்தும் பிக்சல் 7 சீரிஸ் அறிமுக நிகழ்விலேயே பிக்சல் போல்டு மாடலையும் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டு இருந்தது. எனினும், இந்த தகவல்களை பொய்யாக்கும் வகையில் கூகுள் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்யவில்லை.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒற்றி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் தலைமை செயல் அதிகாரி ராஸ் யங், கூகுள் நிறுவனத்தின் முதல் பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டிஸ்ப்ளே பாகங்களின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முந்தைய தகவல்களில் கூகுள் நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானது.






