என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கில் புது மொபைல் போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய நோக்கியா 2780 ப்ளிப் மாடல் பழைய நோக்கியா மொபைல் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபில் போன் கிடையாது. மாறாக நோக்கியாவின் பழைய பானியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் போன் ஆகும்.
புதிய நோக்கியா 2780 ப்ளிப் போனில் 2.7 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.77 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5MP கேமரா, பிக்சட் போக்கஸ் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனில் குவாட் கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட், X5 எல்டிஇ மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 150Mbps டவுன்லோட் வேகத்திற்கான சப்போர்ட் வழங்குகிறது.

நோக்கியா 2780 ப்ளிப் போன் 4ஜி அழைப்புகளுக்கான சப்போர்ட், ரியல் டைம் டெக்ஸ்டிங், வோல்ட்இ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512MB ரேம், கைஒஎஸ் 3.1, எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட் எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட், வைபை, 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை கழற்றி மாற்றும் வசதி உள்ளது.
புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் எப்எம் ரேடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 90 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 457 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போல்டபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- ஹூவாயின் முதல் ப்ளிப் போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூவாய் அறிமுகம் செய்த P50 பாக்கெட் ப்ளிப் போனினை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் பாக்கெட் S மாடலில் 6.9 இன்ச் FHD+ மடிக்கக்கூடிய பிலெக்சிபில் ஸ்கிரீன், 1.04 இன்ச் அளவில் வெளிப்புற AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 778 4ஜி சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 40MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 10.7MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஹூவாய் பாக்கெட் S மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

ஹூவாய் பாக்கெட் S அம்சங்கள்:
6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778 4ஜி பிராசஸர்
அட்ரினோ 642L GPU
8 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹார்மனி ஒஎஸ் 3.0
டூயல் சிம்
40MP ட்ரூ-க்ரோமா கேமரா
13MP அல்ட்ரா வைடு கேமரா
10.7MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4000 எம்ஏஹெச் பேட்டரி
40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹூவாய் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், பாரஸ்ட் சில்வர், மிண்ட் கிரீன், பின்க், ப்ரிசம்ரோஸ் கோல்டு மற்றும் ஐஸ் க்ரிஸ்டல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 5888 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 68 ஆயிரத்து 010 என துவங்குகிறது.
- சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது கேலக்ஸி S23 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் SM-S911B/DS எனும் மாடல் நம்பர், கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன் SM-S916B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மாடல் நம்பர்கள் தவிர இரு ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கேலக்ஸி S23 பிளஸ் மாடலில் 6.6 இன்ச் AMOLED ஸ்கிரீன், பிளாட் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட் அவுட் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அல்லது எக்சைனோஸ் 2300 பிராசஸர் வழங்கப்படலாம். இவற்றில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஒஎஸ் வழங்கப்படலாம்.
பேட்டரியை பொருத்தவரை கேலக்ஸி S23 மாடலில் முந்தைய S22 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட 3700 எம்ஏஹெச் பேட்டரியை விட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். இத்துடன் இரு மாடல்களிலும் 25 வாட் ரேபிட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Photo Courtesy: OnLeaks x Digit.in
- சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
- ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP கேமரா, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 12 சீரிசில்- ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை வல்லுனரான கேக்பர் ஸிபெக் (Kacper Skrzypek) ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியாவில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். சியோமி நிறுவனத்தின் ஹைப்பர்சார்ஜ் சீரிஸ் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

முன்னதாக இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் சியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இதில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், சியோமி 11i 5ஜி மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் மாடலின் அம்சங்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் மாடலில் 6.67 இன்ச் FHD OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+ வசதி, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், மாலி-G68 GPU வழங்கப்படும் என தெரிகிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார்களும், 16MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- ஐகூ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் வேறு பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஐகூ நிறுவனம் சீன சந்தையில் புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் ஐகூ 11 சீரிசில் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் ஐகூ 10 பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
கடந்த மாதம் வெளியான தகவல்களில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே V2243A மற்றும் V2254A மாடல் நம்பர்களை கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இவற்றின் இந்திய வேரியண்ட் I2209 மற்றும் I2212 மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் I2209 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ 10 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்படும் ஐகூ 11 மாடல் இந்திய சந்தையில் ஐகூ 10 பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. முன்னதாக ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் ஐகூ 9 SE, ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாத வாக்கில் ஐகூ 9T ஸ்மார்ட்போனினை ஐகூ அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐகூ 9T ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படும் ஐகூ 10 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ஐகூ 10 மாடலில் 6.78 இன்ச் AMOLED E6 FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒரிஜின் ஒஎஸ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- வெர்டு நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் 10TB மெமரி கொண்டிருக்கிறது.
- புது வெர்டு ஸ்மார்ட்போன் வெப் 3 சாதனம் ஆகும்.
வெர்டு நிறுவனம் மெட்டாவெர்டு பெயரில் புதிய தலைமுறை ஸ்மார்ட்போனை லண்டனில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வெப்3 சாதனம் ஆகும். இதில் அதிகபட்சம் 18 ஜிபி மெமரி, 10TB வரை ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் சமமான டேட்டா உரிமை சூழலை உருவாக்க நினைப்பதாக வெர்டு தெரிவித்துள்ளது.
மெட்டாவெர்டு மாடலில் 144Hz அல்ட்ரா-ஹை-பிரஷ் AMOLED பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 18 ஜிபி ரேம், 1TB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. வெப்3 மொபைல் போனாக பயன்படுத்தும் போது 10TB வரை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
புதிய வெர்டு ஸ்மார்ட்போனில் IMX787 35mm பிரைமரி கேமரா, ஆப்டிக்கல் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த ஸ்மார்ட்போனை 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இதில் பில்ட்-இன் A5 செக்யுரிட்டி சிப், SE+ TEE தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெட்டாவெர்டு மாடலில் வெப்2.0-இல் இருந்து வெப்3.0-க்கு எளிதில் மாற ஒற்றை பட்டன் வழங்கப்பட்டுள்ளது. வெப்3.0 மோடில் மெட்டாவெர்டு மாடல் காப்புரிமை பெற்ற கேமரா கொண்டிருக்கிறது. இந்த போனில் ஓட்டல் முன்பதிவு, பரிசு பொருள் வாங்குவது மற்றும் ஏராளமான விஐபி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
- மோட்டோராலா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புது மோட்டோ X சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை லெனோவோ நிறுவன அதிகாரி வெளியிட்டு இருக்கிறார்.
மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனினை X சீரிஸ் பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை லெனோவோ நிறுவன அதிகாரி வெளியிட்டு இருக்கிறார். டீசரில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் X30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷாக மோட்டோ X40 அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சீனாவின் 3சி வலைதளத்தில் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.

லெனோவோ மொபைல் வியாபார குழுதமத்திற்கான பொது மேலாளர் சென் ஜின் மோட்டோ X40 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார். டீசருடன் புது ஸ்மார்ட்போனில் பயனர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். இந்த X சீரிஸ் ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதன்படி புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் 3சி வலைதளத்தில் இதே ஸ்மார்ட்போன் தான் XT2301-5 எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டதாக தெரிகிறது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் சியோமி ரெட்மி K60 கேமிங் பெயரில் புது மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் வலைதளத்தில் 23011310C என மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
இத்துடன் புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் முதற்கட்டமாக இந்த மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ரெட்மி K60 கேமிங் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் "சாக்ரடிஸ்" எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக ரெட்மி K60 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சீன சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி K60 கேமிங் அறிமுகம் செய்யப்படுகிறது.
ரெட்மி K50 கேமிங் எடிஷன் மாடலில் 6.67 இன்ச் FHD+1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவாஸ்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 64MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா செட்டப், 20MP செல்பி கேமரா, அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 4700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை CNY 3299 இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் சீரிஸ் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 10 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி போன் மாடல்கள் சமீபத்தில் தான சீன சான்றிதழ்களை பெற்றன. தற்போது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் @OnLeaks மூலம் வெளியாகி இருக்கிறது.

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொருத்தவரை 6.54 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிரசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
பாலிகார்போனேட் பேக் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மார்ட்போன் 2MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: OnLeaks @91Mobiles
- ஆப்பிள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மேக் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய மேக் ப்ரோ மாடலின் வெளியீடு மற்றும் அதன் அம்சங்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக் ப்ரோ மாடலில் 48 CPU கோர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார். இது M2 மேக்ஸ் பிராசஸரை விட சக்திவாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மேக் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
புதயி தலைமுறை பிராசஸர்கள் M2 அல்ட்ரா அல்லது M2 எக்ஸ்டிரீம் என அழைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிராசஸர் 24 மற்றும் 48 CPU கோர்கள் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 76 மற்றும் 152 GPU கோர்கள், 256 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. பேஸ் மாடலான M2 8 மற்றும் 10 GPU கோர்களை கொண்டிருக்கிறது. இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் M2 மேக்ஸ் மாடலில் 12 மற்றும் 38 GPU கோர்கள் வழங்கப்படுகிறது.

மேக் ப்ரோ அறிவிக்கப்படும் முன் 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, மேக் மினி மாடல்கள் அப்டேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக லேப்டாப் மாடல்கள் புதிய M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் பிராசஸர்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேக் மினி மாடலில் M2 சிலிகான் பிராசஸரே வழங்கப்படும். இதே பிராசஸர் 2022 மேக்புக் ஏர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் ஆப்பிள் புதிய தலைமுறை ஐபேட் ப்ரோ மாடலை M2 சிப்செட் உடன் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய ஆப்பிள் பென்சில், அதிவேக வயர்லெஸ் கனெக்டிவிட்டி, உலகின் அதிநவீன மொபைல் டிஸ்ப்ளே, ப்ரோ கேமரா, பேஸ் ஐடி, தண்டர்போல்ட், நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
- 2023 ஆண்டிற்கான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஐகூ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- மற்ற நிறுவனங்களை போன்றே ஐகூ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனில் அதிவநீன குவால்காம் பிளாக்ஷிப் பிராசஸரை வழங்க இருக்கிறது.
ஐகூ நிறுவனம் அடுத்த ஆண்டிற்கான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் பிராசஸர் தான் புதிய ஐகூ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஐகூ பிளாக்ஷிப் மாடல் ஐகூ 11 ப்ரோ பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஐகூ 11 ப்ரோ அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டிப்ஸ்டரான யோகேஷ் ரார் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை வெளியிட்டு இருக்கிறார். அதன் படி ஐகூ 11 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், AMOLED LTPO பேனல், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட அதிக செயல்திறன் மற்றும் பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஐகூ 11 ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 14.6MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ஐகூ நிறுவனத்தின் ஐகூ 11 ப்ரோ மாடல் சாம்சங் கேலக்ஸி S23, சியோமி 13 ப்ரோ, விவோ X90 ப்ரோ மற்றும் அசுஸ் ரோக் போன் 7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். பிளாக்ஷிப் பிரிவில் அசத்தல் அம்சங்களுடன் களமிறங்கினாலும், ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் விலை போன்ற விஷயங்களே அதன் விற்பனையை தீர்மானிக்கும்.
- ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஐகூ நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- ஐகூ நியோ சீரிஸ் ஐகூ நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் விலையில் கிடைக்கும் கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும்.
ஐகூ நிறுவனம் சீன சந்தையில் முற்றிலும் புதிய நியோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ஐகூ நியோ 7 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED ஸ்கிரீன், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐகூ நியோ 7 மாடலில் 6.78 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஐகூ நியோ 7 அம்சங்கள்:
6.78 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
மாலி G710 MC10 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை CNY2699 இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரத்து 962 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை CNY3299 இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 830 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 31 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.






