என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- அமேஸ்பிட் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக இருக்கிறது.
- அமேஸ்பிட் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிகிறது.
அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பாப் 2 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் புது ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த மாடல் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. டீசர்களின் படி புதிய அமேஸ்பிட் பாப் 2 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, செவ்வக வடிவம், மெட்டல் ரிம் கேஸ், வட்ட வடிவில் ஒற்றை டயல் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
அமேஸ்பிட் பாப் 2 மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ப்ளூடூத் காலிங் வசதி இருக்கும். இதை கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் வாட்ச்-ஐ கனெக்ட் செய்தால் அழைப்புகளை எளிதில் மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். இந்த அம்சம் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த நிலை மெல்ல மாறி பட்ஜெட் வாட்ச் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.
இவைதவிர அமேஸ்பிட் பாப் 2 மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என டீசரில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் முழு திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், அதிகபட்சம் 150-க்கும் வாட்ச் ஃபேஸ்கள், ஆக்சிஜன் மாணிட்டர், 24 மணி நேர இதய துடிப்பு மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
- போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல் ஏராளமான அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.
- புதிய இயர்பட்ஸ் அளவில் சிறியதாகவும், கவர்ச்சிகரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 மாடல் அசத்தல் தோற்றம், ENx, BEAST, IWP, மற்றும் ASAP போன்ற அதிநவீ தொழில்நுட்ப வசதிகள், தலைசிறந்த சவுண்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
பெபில் வடிவம் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 100 அளவில் சிறியதாகவும், தலைசிறந்த டிசைன் மற்றும் கேஸ் கொண்டிருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 சபையர் புளூ, ஒபல் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IWP எனப்படும் (Insta Wake N Pair) அம்சம் கொண்டுள்ளது. இது கேஸ்-ஐ திறந்ததும் பயனர் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும்.

இதில் உள்ள பீஸ்ட் (BEAST) மோட் ப்ளூடூத் மூலம் அல்ட்ரா லோ-லேடென்சி ரியல் ஆடியோவை 50ms வேகத்தில் வழங்குகிறது. ஏர்டோப்ஸ் 100-இல் உள்ள கல்வேனிக் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ அதிவேகமாக சார்ஜ் செய்து விடும். இதன் மூலம் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
போட் ஏர்டோப்ஸ் 100 மாடலில் 10mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ மற்றும் டீப் பேஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குவாட் மைக்ரோபோன்கள் மற்றும் ENX தொழில்நுட்பம் அழைப்பின் போதும் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி இருப்பதால், பாடல்கள், வால்யும் மாற்றுவது மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும்.
இந்த இயர்பட்ஸ்-இல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. வானிலை, செய்திகள் மற்றும் கிரிகெட் ஸ்கோர் உள்ளிட்டவைகளை ஒன் டச் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் அறிந்து கொள்ளலாம். போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ஐகூ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஐகூ நிறுவனம் தனது ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 11 சீரிஸ் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
புதிய ஐகூ 11 ப்ரோ அம்சங்கள் மட்டுமின்றி இதன் இந்திய வெளியீடு பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. வரும் வாரங்களில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் விவோ நிறுவனத்தின் புதிய வி2 சிப், 6.78 இன்ச் E6 AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், பிஎம்டபிள்யூ M மோட்டார்ஸ்போர்ட் சார்ந்த டிசைன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP, 48MP மற்றும் 64MP கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பற்றிய அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- அந்த வகையில் பிக்சல் 7a மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டது. அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7a மாடல் "லின்க்ஸ் (lynx)" எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
புதிய பிக்சல் 7a அதன் முந்தைய மாடல்- பிக்சல் 6a-வை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி பிக்சல் 7a மாடல் அதிக ரிப்ரெஷ் ரேட், புதிய டூயல் பிரைமரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. பிக்சல் 7a மாடலில் சாம்சங் பேனல், FHD மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் கூகுள் டென்சார் சிப், குவால்காம் வைபை ப்ளூடூத் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் பிக்சல் 6a மாடலில் அதிக மேம்பட்ட அம்சங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 6a மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், ரிப்ரெஷ் ரேட் அளவு 60Hz ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய பிக்சல் 7a மாடலில் இதுபோன்ற சமரசம் செய்யப்படாது என்றே தெரிகிறது.
- சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் தான சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
- சீன நாட்டில் புதிய ரெட்மி நோட் 12 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் வென்னிலா ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சீன வெளியீட்டை தொடர்ந்து ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி குளோபல் வேரியண்ட் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது.
தற்போது டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ரெட்மி நோட் 12 சீரிஸ் சர்வதேச வெளியீட்டு தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் சீரியல் ப்ரோடஷன் ஆசியா மற்றும் ஐரோப்பியா பகுதிகளில் துவங்கி நடைபெற்று வருவதாக முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். அதன்படி புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிசில் 6.67 இன்ச் பன்ச் ஹோல் ரக 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 2.2 மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
இத்துடன் ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் முறையே 67 வாட் மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் 50MP கேமரா, OIS, ப்ரோ பிளஸ் மாடலில் 200MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் சிம், 5ஜி, வைபை 6, GNSS, NFC மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
- புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். தற்போது இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதன் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்- ஒன்பிளஸ் 11 உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டின் துவக்க மாதங்களில் ஒன்பிளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், அடுத்த ஆண்டு இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஸ்டெம் வைத்த இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகாம் டிப்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி 45db வரை நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்கும்.
மற்ற டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை போன்றே இதிலும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஆம்பியண்ட் மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மூன்று மைக்ரோபோன்களை கொண்டு காலிங் மற்றும் ANC வசதிகளை வழங்கும் என கூறப்பட்டது. மேலும் இதில் ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- அசுஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
- புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு உலகின் முதல் 17.3 இன்ச் போல்டபில் OLED லேப்டாப் மாடல் ஆகும்.
அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்- ஜென்புக் 17 போல்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக இந்த லேப்டாப்பிற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. இது உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLED லேப்டாப் ஆகும். புதிய போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது.
இதில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் உள்ளது. இதனை மடிக்கும் போது 12.5 இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் இருப்பதால், இந்த சாதனத்தை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என ஏராளமோன மோட்களில் பயன்படுத்த முடியும்.

அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED அம்சங்கள்:
17.3 இன்ச் 2560x1920 பிக்சல் FOLED டிஸ்ப்ளே
இண்டெல் கோர் i7 பிராசஸர்
இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்
16 ஜிபி LPDDR5 ரேம்
1 டிபி (1000 ஜிபி) NVMe PCie 4.0 SSD
விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ
சாஃப்ட் கீபோர்டு, 1.4mm கீ-டிராவல்
5MP பிரைமரி கேமரா, IR அம்சம்
US MIL-STD 810H ராணுவ தரம்
வைபை 6E, ப்ளூடூத் 5.2, 2x தண்டர்போல்ட் 4
1x 3.5mm காம்போ ஆடியோ ஜாக்
75 வாட் ஹவர் பேட்டரி
யுஎஸ்பி டைப் சி, 65 வாட் ஏசி அடாப்டர்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED மாடலின் விலை ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் நடைபெற்று வருகிறது.
- ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
- ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.
ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.
தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.
- எல்ஜி நிறுவனம் உலகின் முதல் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இதனை 12 இன்ச்-இல் இருந்து 14 இன்ச் வரை நீட்டிக்கவோ, சுருக்கவோ முடியும்.
எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபிரீ-ஃபார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டுள்ளது. இதன் காரணமாக டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ அல்லது சுருக்கவோ முடியும். இவ்வாறு செய்யும் போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சந்தையில் 20 சதவீதம் வரை Stretchable திறன் கொண்ட உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இதில் 100ppi ரெசல்யூஷன், ஃபுல் கலர் RGB உள்ளது. அதிக தரம் கொண்டிருப்பதால், வணிக முறைக்கு ஏற்ப பல விதங்களில் பயன்படுத்த முடியும்.

காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் மிகவும் விசேஷமான சிலிகானின் மூலப் பொருளில் இருந்து இந்த Stretchable டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக Stretchable டிஸ்ப்ளேவை 12 இன்ச்-இல் இருந்து 14 இன்ச் வரை நீட்டிக்க முடியும். இந்த டிஸ்ப்ளே மைக்ரோ எல்இடி பயன்படுத்துகிறது.
வழக்கமான லீனியர் வயர்டு சிஸ்டம் போன்று இல்லாமல், இதில் உள்ள வளையும் தன்மை கொண்ட S-ஃபார்ம் ஸ்ப்ரிங் போன்ற வயர்டு சிஸ்டத்தை உருவாக்குகிறது. இது அதன் அசல் வடிவத்தில் இருந்து 10 ஆயிரம் முறை மாற்றக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், திடமாகவும் இருக்கும்.
இந்த டிஸ்ப்ளேவை சருமம், ஆடை, ஆட்டோமொபைல், விமானத் துறை என ஏராளமான துறைகளில் பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். வர்த்தக சாதனங்களில் இந்த டிஸ்ப்ளே எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எல்ஜி டிஸ்ப்ளே இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
- லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- புது லாவா ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
லாவா நிறுவனம் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிவித்த லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், கூடுதலாக 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, மேக்ரோ லென்ஸ், 8MP செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் 5ஜி அம்சங்கள்:
6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12
ஹைப்ரிட் டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா
டெப்த் கேமரா
மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்
8MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
- முன்னதாக ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிசில் ஐந்து வெவ்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் சில மாடல்கள் இந்திய சந்தையில் ரிபிராண்டு செய்யப்பட இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் ரெட்மி நோட் 12 5ஜி மாடல் போக்கோ பிராண்டிங்கில் இந்தியா வரும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரெட்மி நோட் 12 வென்னிலா மாடல் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 22111317PI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் மாடல் நம்பரில் வேறுபாடு ஏற்படலாம் என்ற போதிலும், இது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5 ஜி மாடல் தான் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் 6.67 இன்ச் சாம்சங் OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 48MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 8MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி மாடல் புளூ, வைட் மற்றும் பிளாக் என மூன்று விதமான நிறங்கள் மற்றும் நான்கு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை RMB1199 இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 640 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளேஸ்டேஷன் விஆர்2 வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மேலும் பிளேஸ்டேஷன் விஆர்2 முன்பதிவு பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் விஆர்2 மாடல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய பிளேஸ்டேஷன் விஆர்2 மாடலுக்கான முன்பதிவு இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது.
பிளேஸ்டேஷன் விஆர்2 விலை 550 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 347 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வெர்ஷனை விட 150 டாலர்கள் அதிகம் ஆகும். மேலும் மெட்டா குவெஸ்ட் 2 மாடலை விடவும் பிளேஸ்டேஷன் விஆர்2 விலை 150 டாலர்கள் அதிகம் ஆகும்.

புதிய சோனி பிளேஸ்டேஷன் விஆர்2 மாடலின் பேஸ் பேக்கேஜில் விஆர் ஹெட்செட், இரண்டு விஆர்2 சென்ஸ் கண்ட்ரோலர்கள் மற்றும் ஸ்டீரியோ ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது. கண்ட்ரோலர்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனின் விலை 50 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளேஸ்டேஷன் விஆர்2 உடன் ஹாரிசன் கால் ஆப் தி மவுண்டெயின் எடிஷன் கிடைக்கிறது. இதில் கேமிற்கான வவுச்சர் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய விஆர்2 ஹெட்செட் மெல்லிய டிசைன், குறைந்த எடை மற்றும் புது அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் லென்ஸ் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டயல் மற்றும் பில்ட்-இன் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட் அணியும் போது அதிக சவுகரியமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்செட் சிங்கில் கார்டு செட்டப் கொண்டிருக்கிறது.






