search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்தியாவில் ஐபோன்களுக்கு 5ஜி அப்டேட் வெளியீடு
    X

    இந்தியாவில் ஐபோன்களுக்கு 5ஜி அப்டேட் வெளியீடு

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.

    ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.

    Next Story
    ×