என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
பிடிரான் பேஸ்பட்ஸ் Nyx மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனம் புதிய நெக்பேண்ட் இயர்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் தலைசிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் அழகிய டிசைன் கொண்டுள்ளது.
புதிய டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் மாடல் அல்ட்ரா-ஃபிலெக்சிபில் ஃபிட், பவர்ஃபுல் பேஸ், நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்போனில் ட்ரூடாக் DSP ENC காலிங் மற்றும் ஆப்ட்சென்ஸ் ரெட்யுஸ்டு லேடென்சி கேமிங் என இரண்டு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் ட்ரூடாக் அம்சம் அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கேட்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆப்ட்சென்ஸ் அம்சம் கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் அதிக உண்மைத்தன்மையான சவுண்ட் வழங்குவதோடு, 40 மில்லிசெகண்ட் வரை லோ லேடன்சி கொண்டுள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் மற்றும் 10 மில்லிமீட்டர் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டிராங் பேஸ் கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் பத்து நிமிட சார்ஜிங் செய்தால் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
இதில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் IPX4 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் தோள்களின் மீது கச்சிதமாக பொருந்திக் கொள்வதோடு, இயர்போன்களில் காந்த சக்தி உள்ளது. இதனால் இரு இயர்போன்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதில் உள்ள பில்ட்-இன் மைக் மற்றும் மல்டி-கண்ட்ரோல் பட்டன் மூலம் வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மியூசிக் மற்றும் அழைப்புகளை இயக்கலாம்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் தற்போது ரூ. 599 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 799 ஆகும். இதன் விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
- புதிய ரியலமி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ரியல்மி துணை தலைவர் மாதவ் சேத் புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் இந்திய விலையை சூசகமாக தெரிவிக்கும் டீசரை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படும் என தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது. முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாத் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவின் படி ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்களில் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் விலை CNY 1699, இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை CNY 2299, இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 ப்ரோ மாடலில் LCD ஃபிளாட் டிஸ்ப்ளே, ப்ரோ பிளஸ் மாடலில் வளைந்த எட்ஜ்கள், OLED பேனல், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கிரேடியண்ட் பேக் பேனல் டிசைன், இரு கேமரா சென்சார்கள், 108MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கின்றன.
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் உள்ளது. ரியல்மி 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி ப்ரோ மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ரோ பிளஸ் மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- போக்கோ நிறுவனம் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- போக்கோவின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ நிறுவனம் X5 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இதே ஸ்மார்ட்போன் 3C மற்றும் IMDA வலைதளங்களிலும் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
சீனாவின் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் 22101320C எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி இந்த மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் போக்கோ X5 5ஜி என கூறப்பட்டு வந்தது. அதன்படி இந்த மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. முந்தைய போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடலிலும் இதே அளவு ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் IMDA வலைதளத்திலும் இதே மாடல் நம்பருடன் இடம்பெற்று இருந்தது. எனினும், இதில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடுவது பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடலின் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
சமீபத்திய எஃப்சிசி விவரங்களின் படி போக்கோ X5 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடலில் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 16MP செல்ஃபி கேமரா, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- பிடிரான் நிவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய பிடிரான் இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் கேஸ் மற்றும் எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய "பாஸ்பட்ஸ் Nyx" ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்ட கேஸ் உடன் வழங்கப்படுகிறது. இதுவே இயர்பட்ஸ்-ஐ சார்ஜ் செய்யவும் பயன்படுகிறது. டிசைன் காரணமாக இந்த சார்ஜிங் கேசில் எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ் சார்ஜிங் அளவை காண்பிக்கிறது.
புதிய டூயல் கலர் இயர்பட்ஸ் பயனர் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை பேலன்ஸ்டு பேஸ், மிட்ரேன்ஜ் மற்றும் டிரெபில் வழங்குகிறது. இதன் லோ லேடன்சி 50 மில்லிசெகண்ட் ஆகும். இதனால் திரைப்படங்களை பார்க்கும் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும்.

பிடிரான் பாஸ்பட்ஸ் Nyx ப்ளூடூத் 5.1 மற்றும் டச் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் பேனலில் டச் செய்து அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது, மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்த இயர்பட்ஸ் மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் இடையே சிரமமின்றி மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பாஸ்பட்ஸ் Nyx-ஐ முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 23 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ்-ஐ ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இத்துடன் யுஎஸ்பி டைப் சி கனெக்டர் மற்றும் குயிக் சார்ஜ் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிடிரான் பாஸ்பட்ஸ் Nyx மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 1299 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ரியல்மி நிறுவனம் புது ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்வதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது.
- சமீபத்தில் தான் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ரியல்மி இந்தியா ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாத வாக்கில் ரியல்மி தனது ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இவை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் வளைந்த டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் இந்திய வெளியீடு டிசம்பர் 8 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை ரியல்மி வெளியிட துவங்கி உள்ளது. இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மற்றும் ரியல்மி 10 ப்ரோ மாடல்களின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் ஒன்றை திறந்துள்ளது. இதில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடல்களின் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சீன சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை CNY 1699, இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 500 என துவங்குகிறது. ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலின் விலை CNY1599 இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இரு விலைகளும் ஸ்மார்ட்போன்களின் பேஸ் வேரியண்ட் ஆகும்.
- விவோ நிறுவனத்தின் புதிய X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படுகிறது.
- மேலும் விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனில் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மாடல்களில் 6.78 இன்ச் 1.5K BOE 120Hz AMOLED ஸ்கிரீன், விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் சாம்சங்கின் 2K+ E6 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் டூயல் வேப்பர் சேம்பர் கூலிங் உள்ளது. புகைப்படங்களை எடுக்க விவோ X90 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
விவோ X90 ப்ரோ மற்றும் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல்களில் 50MP பிரைமரி கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா உள்ளது. விவோ X90 ப்ரோ மாடலில் 12MP சென்சாரும், விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட்
3.05 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் டிமென்சி்ட்டி 9200 பிராசஸர்
இம்மார்டலிஸ் G715 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3.0
டூயல் சிம்
விவோ X90 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்
12MP அல்ட்ரா வைடு கேமரா
50MP போர்டிரெயிட் கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1
விவோ X90 - 4810 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங்
விவோ X90 ப்ரோ - 4870 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

விவோ X90 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.78 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் ஹெச்டி+ E6 AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3.0
டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்
48MP அல்ட்ரா வைடு கேமரா
50MP போர்டிரெயிட் கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1
4700 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ X90 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் ரெட் லெதர் பேக் உள்ளது. இதன் விலை 3699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரத்து 300 என துவங்குகிறது. விவோ X90 ப்ரோ மற்றும் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல்கள் பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை 4999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 57 ஆயிரத்து 160 என துவங்குகிறது.
சீன சந்தையில் விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை நவம்பர் 30 ஆம் தேதி துவங்குகிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 6499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 74 ஆயிரத்து 315 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நவம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய சாம்சங் டேப்லெட் ஸ்டைலஸ் சப்போர்ட் மற்றும் LCD டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
செப்டம்பர் மாத வாக்கில் சாம்சங் நிறுவனத்தின் SM-X506B மாடல் நம்பர் கொண்ட டேப்லெட் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த டேப்லெட் மாடல் FE பிராண்டிங் கொண்டிருக்கும் என டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் S8 FE மாடலில் LCD டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இது அதன் முந்தைய மாடலில் இருந்ததை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி டேப் S8, S8 பிளஸ் மற்றும் S8 அல்ட்ரா மாடல்களில் சாம்சங் நிறுவனம் AMOELD டிஸ்ப்ளே வழங்கி இருக்கிறது. மேலும் டேப் S8 FE மாடலில் ஸ்லைடஸ் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் மீடியாடெக் 900டி பிராசஸர், மாலி G68 MC-4 GPU வழங்கப்படுகிறது. இது டிமென்சிட்டி 900 பிராசஸருக்கு இணையான ஒன்று ஆகும். மேலும் இத்துடன் 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி இந்த டேப்லெட் கேலக்ஸி டேப் S8 FE மாடலின் 5ஜி வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் வைபை வெர்ஷன் மட்டுமே இடம்பெற்று இருக்கும் என்றும் இது SM-X500 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி டேப் S8 FE மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், ஒன் யுஐ 5, 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி டேப் S7 FE மாடலின் பேஸ் வேரியண்டிலும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. FE மாடல் என்பதால் இதன் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், இதுபற்றி இணையத்தில் வெளியாகி இருக்கும் புது தகவலில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் மூன்று வித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி 10 4ஜி மாடல் அமைகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸருடன் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிப்ஸ்டர் சுதான்ஷூ அம்போர் 91மொபைல்ஸ் உடன் இணைந்து வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஐந்து வித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ரியல்மி 10 4ஜி மாடல் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 600 என துவங்குகிறது.
ரியல்மி 10 4ஜி அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 4ஜி மாடல் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் 6nm மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜிபி ரேம், ARM G57 MC2 GPU கிராஃபிக்ஸ், விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
- ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் 2020 வாக்கில் சியோமி நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர் சந்தையில் களமிறங்கியது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் சியோமி நிறுவனம் ஃபிட்னஸ் டிராக்கர் சந்தையில் களமிறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் Mi ஸ்மார்ட் பேண்ட் C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.08 இன்ச் TFT LCD கலர் பேனல், டச் இன்புட், 24 மணி நேர இதய துடிப்பு மாணிட்டரிங், 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது சியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த ஃபிட்னஸ் டிராக்கர் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தி நிலையை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 மற்றும் அதற்கான சார்ஜிங் டாக் உற்பத்தி துவங்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

புதிய ஃபிட்னஸ் டிராக்கர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், விரைவில் இதன் அம்சங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். புதிய ஃபிட்னஸ் பேண்ட் மாடலில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட்-ஐ விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் அம்சங்கள்:
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலில் 1.08 இன்ச் 16-பிட் கலர் TFT LCD பேனல், 128x200 பிக்சல் ரெசல்யூஷன், டச் இன்புட், 200 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் இதய துடிப்பு விவரங்களை ரியல்-டைமில் டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. மேலும் இதய துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதி கொண்டுள்ளது. இதில் 5 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
இத்துடன் 50-க்கும் அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள், யுஎஸ்பி சார்ஜிங், 130 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விலை 22 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,793 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- போக்கோ நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய குறைந்த விலை போக்கோ ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா, மல்டிமீடியா திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் தனது அடுத்த குறைந்த விலை ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் போக்கோ C50 எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த மாடல் நவம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
"புதிய போக்கோ C50 மாடல் தலைசிறந்த கேமரா, சிறப்பான மல்டிமீடியா அனுபவம், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் மெல்லிய டிசைன் கொண்டிருக்கும்," என போக்கோ தெரிவித்து இருக்கிறது. இது போக்கோ நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக போக்கோ நிறுவனம் C31 மற்றும் C3 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

"முன்னணி நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டுகளில் ஒன்றாக இருக்கும் போக்கோ, தனது விசிறிகள் மற்றும் நுகர்வோருக்கு அதிக தரமான சாதனங்களை வினியோகம் செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளது. தற்போது C சீரிஸ் ஸ்மார்ட்போனினை மலிவு விலையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது," என போக்கோ தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ C40 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய போக்கோ C50 இருக்கிறது. புதிய போக்கோ C50 மாடலில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும், இதில் போக்கோ C40 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
போக்கோ C40 அம்சங்கள்:
போக்கோ C40 மாடலில் 6.71 இன்ச் HD+ ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் JLQ JR510 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் போக்கோ C50 மாடலில் குவால்காம் அல்லது மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இத்துடன் போக்கோ C40 மாடலில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
வியட்நாமில் போக்கோ C40 விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 687 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- புதிய பட்ஸ் ப்ரோ 2 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் இயர்பட்ஸ் மாடல்களாக பட்ஸ் ப்ரோ சீரிஸ் இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ஸ் ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ரெண்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டு உள்ளது. இதில் புதிய ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரெண்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ட்வீக் செய்யப்பட்ட டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒவல் வடிவம் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆப்பிள் ஏர்பாட்ஸ் மாடலை நினைவூட்டும் வகையில் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் மேட் ஃபினிஷ், கீழ்புறம் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இந்த இயர்பட்ஸ் ஆலிவ் கிரீன் நிறம் கொண்டிருக்கிறது. இயர்பட்ஸ் கேசில் டைனாடியோ (Dynaudio) என்கிரேவிங் செய்யப்பட்டு உள்ளது. டைனாடியோ 1977 ஆண்டு துவங்கப்பட் டச்சு லவுட் ஸ்பீக்கர் பிராண்டு ஆகும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் டிரைவர்களை டைனாடியோ உருவாக்கி இருக்கிறதா அல்லது டியூனிங் போன்ற அம்சங்களை மட்டும் செய்திருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm டூயல் டிரைவர்கள், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த வசதி மூலம் சத்தத்தை 45 டெசிபெல்கள் வரை குறைக்க முடியும். மேம்பட்ட சவுண்ட் பிக்-அப் வழங்க இயர்பட்களில் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படலாம். இத்துடன் LHDC 4.0 கோடெக் மற்றும் ஸ்பேஷியல் சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்கப்படலாம்.
புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ANC ஆன் செய்யப்பட்ட நிலையில், முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. ANC ஆஃப் செய்தால் அதிகபட்சம் ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 32 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: 91Mobiles
- லி-டிவி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லி-டிவி ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD 720x1560 பிக்சல் டிஸ்ப்ளே, ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே அகலமான நாட்ச், ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, ஐபோன் 13-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மாடலில் அதிகபட்சமாக 256 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.5 இன்ச் LCD 720x1560 பிக்சல் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்
8MP பிரைமரி கேமரா
5MP செல்பி கேமரா
யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி
ஃபேஸ் அன்லாக் வசதி
4000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மாடலின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை CNY 499, இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 700 என துவங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை CNY 699, இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் மட்டும் நடைபெறுகிறது.






