search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன் -- விலை இவ்வளவு தானா?
    X

    ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன் -- விலை இவ்வளவு தானா?

    • லி-டிவி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லி-டிவி ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD 720x1560 பிக்சல் டிஸ்ப்ளே, ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே அகலமான நாட்ச், ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, ஐபோன் 13-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மாடலில் அதிகபட்சமாக 256 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.5 இன்ச் LCD 720x1560 பிக்சல் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர்

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்

    8MP பிரைமரி கேமரா

    5MP செல்பி கேமரா

    யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி

    ஃபேஸ் அன்லாக் வசதி

    4000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மாடலின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை CNY 499, இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 700 என துவங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை CNY 699, இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் மட்டும் நடைபெறுகிறது.

    Next Story
    ×