என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • ஸ்வாட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்திய 10mm டிரைவர் மற்றும் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் கொண்டிருக்கிறது.
    • சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்போன் அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும்.

    ஸ்வாட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்வாட் நெக்கான் 101 மாடலை தொடர்ந்து புதிய 102 நெக்பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் வியரபில்ஸ் பிரிவுக்காக ஸ்வாட் நிறுவனம் கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் 10mm டிரைவர் கொண்டிருக்கிறது. இது HD ஸ்டீரியோ சவுண்ட், புதுவிதமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் உள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும். டிசைனை பொருத்தவரை புது நெக்பேண்ட் இயர்போன் சிலிகான் மூலம் மிக மென்மையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், இந்த இயர்போன் எவ்வித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி மற்றும் எர்கோனோமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இவை அதிக நேரம் பயன்படுத்தும் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும். வலிமையான டிசைன் கொண்டிருப்பதால், உடற்பயிற்சிகளின் போதும் இந்த நெக்பேண்ட் இயர்போன் எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது.

    புதிய நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போனை 40 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பவர் பட்டனை இரண்டு நொடிகள் அழுத்திப்பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்கலாம். இதன் இயர்பட்களில் காந்த சக்தி கொண்ட மெட்டல் உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் டூயல் பேரிங் வசதி உள்ளது.

    ஸ்வாட் நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 899 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் ஸ்வாட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் ஏற்கனவே FCC மற்றும் கீக்பென்ச் தளங்களில் லீக் ஆகி வருகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC டேட்டாபேஸ் மற்றும் கீக்பென்ச் போன்ற தளங்களில் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது சீனாவின் TENAA டேட்டாபேசில் கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    லிஸ்டிங்கின் படி SM-S9180 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஸ்கிரீன், 1440x3088 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 16.7M நிறங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 233 கிராம்கள் ஆகும். அளவீடுகளை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 163.4mm, 78.1mm மற்றும் 8.9mm என உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1TB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இத்துடன் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2MP சென்சார், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஸ்மார்ட்போனில் கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் NR SA பேண்ட்கள்- பேண்ட் 79, பேண்ட் 78, பேண்ட் 41, பேண்ட் 28, N1, 2110-2155MHz, NR NSA பேண்ட்கள்- பேண்ட் 41, பேண்ட் 78 மற்றும் பேண்ட் 79 வழங்கப்படும் என தெரிகிறது.

    • ஐகூ நிறுவனம் புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் விற்பனை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஐகூ நிறுவனம் தனது ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கான வலைப்பக்கம் திறக்கப்பட்டு Notify Me பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிய ஐகூ 11 5ஜி வெளியீடு பற்றிய விவரங்களை நோட்டிபிகேஷன் வடிவில் அறிந்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனின் அறிமுகம் தவிர வேறு எந்த தகவலும் வலைப்பக்கத்தில் இடம்பெறவில்லை.

    எனினும், கம்யுனிட்டி ஃபோரம் பதிவில் ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் வேரியண்ட்களின் விவரங்கள் இடம்பஎற்று இருக்கிறது. அந்த வகையில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகும் என ஐகூ கம்யுனிட்டி ஃபோரமில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதிகாரப்பூர்வ வெளியீட்டை தொடர்ந்து ஜனவரி 13 ஆம் தேதி ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முதல் விற்பனை நடைபெற இருக்கிறது. இந்திய சந்தையில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், தற்போது ஐகூ 11 ஸ்மார்ட்போனின் டீசர் மட்டுமே தற்போது ஐகூ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு மாடல்களிலும் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இவை இரு ஸ்மார்ட்போன்களின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். ஐகூ 11 ஸ்மார்ட்போனின் பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ்போர்ட் ஃபினிஷ் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பற்றிய இதர தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்.

    ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ஐகூ 11 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும். ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ 11 விலை CNY 3799 இந்திய மதிப்பில் ரூ. 44 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐகூ 11 ப்ரோ விலை CNY 4999, இந்திய மதிப்பில் ரூ. 59 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது.

    புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஒப்போ ஃபைண்ட் N போன்றே காட்சியளிக்கிறது.

    அளவீடுகளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் 158.7 x 139.7 x 5.7mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 8.3mm அளவில் கேமரா பம்ப் உள்ளது. திறக்கப்பட்ட நிலையில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.69 இன்ச் அளவில் உள்ளது. இதன் உள்புற டிஸ்ப்ளேவில் தடிமனான பெசல்கள், பன்ச் ஹோல் ரக கேமரா, 5.79 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 809 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டைலஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: OnLeaks @ HOWTOISOLVE

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக ஜியோபுக் லேப்டாப் மாடல் மிக குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஜியோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் LS1654QB5 எனும் மாடல் நம்பருடன் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஜியோபோன் மாடல்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலும் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது.

    தற்போது கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கும் லிஸ்டிங்கில் ஜியோ போன் 5ஜி மாடலின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 549 புள்ளிகளையும், மல்டி கோரில் 1661 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஜியோ 5ஜி போன் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ பிராசஸர், அட்ரினோ 619 GPU வழங்கப்படுகிறது.

    இதுதவிர firmware ஆக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ போன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், குறைந்தபட்சம் 32 ஜிபி மெமரி, 8MP செல்ஃபி கேமரா, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், வைபை, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பிரகதிஒஎஸ் கஸ்டம் ஸ்கின் வழங்கப்படும் என தெரிகிறது.

    புது ஸ்மார்ட்போன் தவிர, சமீபத்தில் தான் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 222 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. இதில் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் சேர்க்கப்படவில்லை.

    • பிலிப்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய சவுண்ட்பார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய சவுண்ட்பார் பிரீமியம் பிரிவில் ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

    பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார், TAB8947 மற்றும் TAB7807 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சவுண்ட்பார் சினிமாடிக் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள வயர்லெஸ் சப்-வூஃபர் அதிக பேஸ் கொண்டிருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் வயர்லெஸ் சப்-வூஃபர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய பிலிப்ஸ் TAB8947 சவுண்ட்பார் 3.1.2 சேனல்களை கொண்டிருப்பதால் எந்த விதமான அறையிலும் சவுண்ட்-ஐ முழுமையாக அதிக தெளிவாக கொண்டு சேர்க்க முடியும். இது 330 வாட்ஸ் பவர், 360 டிகிரி சரவுண்ட் எஃபெக்ட், டால்பி அட்மோஸ் சப்போர்ட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் TAB7807 3.1 சேனல்கள் மற்றும் இரண்டு 8 இன்ச் சக்திவாய்ந்த சப்-வூஃபர்களை கொண்டுள்ளது.

    இந்த சவுண்ட்பார் 3D சவுண்ட், 620 வாட்ஸ் பவர் அவுட்புட் மற்றும் ஆறு இண்டகிரேடெட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் ஈசிலின்க் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் புதிய சவுண்ட்பார்கள் ஈக்வலைசர் மோட்கள், பேஸ், டிரெபில் மற்றும் வால்யூம் செட்டிங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிலிப்ஸ் TAB8947 மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்து 990 என்றும் TAB7807 மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • விவோ நிறுவனத்தின் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட்களை கொண்டிருக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் Y சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய விவோ Y02 ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 12, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் கிரெ வெர்ஷன் ஸ்மூத் சர்ஃபேஸ் கைரேகைகளை பதிய விடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கீறல்களை தாங்கும் அளவுக்கு உறுதியாக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ஏராளமான டெஸ்டிங் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    விவோ Y02 அம்சங்கள்:

    6.51 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 LCD ஸ்கிரீன்

    ஆக்டா கோர் பிராசஸர்

    3 ஜிபி ரேம்

    32 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 எடிஷன் சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 12

    டூயல் சிம் (நானோ+நானோ+ மைக்ரோ எஸ்டி)

    8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0

    5MP செல்ஃபி கேமரா, f/2.2

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய விவோ Y02 ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே மற்றும் ஆர்சிட் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ இந்தியா இ ஸ்டோரில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய மாணிட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இது தவிர ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஒன்பிளஸ் ஈடுபட்டு வருகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் டிசம்பர் 12 ஆம் தேதி இரண்டு புது மாணிட்டர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது மாணிட்டர் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது சாதனங்கள் பிரிவை நீட்டிக்க இருக்கிறது. புது மாணிட்டர்கள் X 27 மற்றும் E 24 என அழைக்கப்படுகின்றன. இவற்றில் முறையே 27 இன்ச் மற்றும் 24 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புது மாணிட்டர் மற்றும் அதன் அளவீடுகளை ஏற்கனவே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது இவற்றின் மிக முக்கிய அம்சம் பற்றிய தகவலை ஒன்பிளஸ் வெளியிட்டு இருக்கிறது. இந்த அம்சம் X27 மற்றும் E 24 என இரண்டு மாடல்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்களில் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது அனிமேஷன் காட்சிகளை சிறப்பாக கையாள்வதோடு, தலைசிறந்த வியூவிங் அனுபவத்தை வழங்கும்.

    இந்த மாணிட்டர் 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருப்பதால், கேம்பிளே மிகவும் சீராக இருக்கும். புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்களில் AMD-யின் Freesync பிரீமியம் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது கேம் மற்றும் வீடியோ பார்க்கும் போது அவை ஸ்டடர் அல்லடு ஸ்கிரீன் டியரிங் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

    இரு மாணிட்டர்களில் ஒன்பிளஸ் X 27 மாணிட்டர் பிரமீயம் மாடல் என்றும் E 24 மாடல் மிட்-ரேன்ஜ் சாதனம் என்றும் ஒன்பிளஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இவற்றில் X 27 மாடல் தலைசிறந்த டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன் பணி மற்றும் கேமிங்கிற்கு ஏற்றவாரு இயங்கும். E 24 மாடல் அன்றாட பணிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    ஒன்பிளஸ் X 27 மற்றும் E 24 மாணிட்டர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் புது மாணிட்டர்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய Y1S ப்ரோ 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • லெனோவோ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய லெனோவோ K சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆகி இருக்கிறது.

    லெனோவா நிறுவனம் பட்ஜெட் பிரிவில் இரண்டு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. புதிய லெனோவோ K14 மற்றும் லெனோவோ K14 நோட் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு புது ஸ்மார்ட்போன்களும் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி படங்களும் வெளியாகி உள்ளது.

    அதன்படி லெனோவோ K14 நோட் மாடலில் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2400x1080 பிகர்சல் ஸ்கிரீன், பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, 4 ஜிபி ரேம், MT6769 பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 12 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு மாலி G-52 2EEMC2 GPU கொண்ட மீடியாடெக் ஹீலியோ G70 சிப்செட் தான் MT6769 என குறிப்பிடப்படுகிறது. புதிய லெனோவோ K14 நோட் மாடல் ஆண்ட்ராய்டு 11 கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கொண்டிருக்கிறது.

    லெனோவோ K14 மாடலில் V வடிவ நாட்ச், ஸ்கிரீனை சுற்றி தடிமனான எட்ஜ்கள் உள்ளன. இதன் ஸ்கிரீன் HD+ 1200x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர், 12 நானோமீட்டர் பிராசஸர், மாலி G57 MP1 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் சற்றே பழைய அம்சங்கள் கொண்டிருக்கும் நிலையில், இவற்றின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள், இன்-பில்ட் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மல்டி-ஸ்போர்ட் GPS வாட்ச் ஆகும். இதில் ஏர்கிராஃப்ட் கிரேடு TC4 அலுமினியம் யுனிபாடி, சஃபையர் க்ரிஸ்டல் கிலாஸ் ஸ்கிரீன், 20 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் பேண்ட் GPS டிராக்கிங், ஆறு செயற்கைக்கோள் பொசிஷனிங் சிஸ்டம்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள செப் கோச் ஸ்மார்ட் கோச்சிங் அல்காரிதம் ஒவ்வொருத்தரின் உடல்நிலை, உடற்பயிற்சி அனுபவம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர் தங்களின் ஸ்போர்ட் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். செப் கோச் பயனர் அதிக சோர்வு அடைவது கண்டறிந்து அதற்கு ஏற்ப உடற்பயிற்சியின் தீவிரத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.

     இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 150-க்கும் அதிக பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள், இன்-பில்ட் ஸ்டோரேஜ், மியூசிக் வசதி உள்ளது. இதை ப்ளூடூத் ஹெட்போனுடன் கனெக்ட் செய்து பாடல்களை கேட்கலாம். இதில் பதிவாகும் உடற்பயிற்சி விவரங்களை ஸ்டார்வா, ஆப்பிள் ஹெல்த், கூகுள் ஃபிட், ரிலிவ் மற்றும் அடிடாஸ் ரன்னிங் ஆப் உள்ளிட்டவைகளுடன் சின்க் செய்து கொள்ளலாம். இந்த வாட்ச் 15 மிலிட்டரி தர டெஸ்ட்களில் வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அமேஸ்ஃபிட் ஃபால்கன் அம்சங்கள்:

    1.28 இன்ச் 416x416 பிக்சல் 326 PPI டிஸ்ப்ளே

    ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் 6 செயற்கைக்கோள் பொசிஷனிங்

    பயோடிராக்கர் 3.0 PPG பயோமெட்ரிக் சென்சார்

    ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ், ஸ்லீப், பிரீதிங், மென்ஸ்டுரல் சைக்கிள் மற்றும் ஹெல்த் ரிமைண்டர்கள்

    ஜெப் ஆப் வழியே 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஆண்ட்ராய்டு 7.0 அல்லது ஐஒஎஸ் 12.0 அல்லது அதற்கும் பின் வெளியான ஒஎஸ் சப்போர்ட்

    20ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்

    15 ராணுவ தர சோதனைகளில் வெற்றி பெற்று இருக்கிறது

    500 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி பேக்கப்

    பேட்டரி சேவர் மோடில் 30 நாட்களுக்கு பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் டைட்டானியம் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் சூப்பர்சோனிக் பிளாக் ஸ்டிராப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு இன்று (டிசம்பர் 01) துவங்கி விட்டது. விற்பனை டிசம்பர் 03 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • டிசோ பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய டிசோ ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

    டிசோ பிராண்டு தனது டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது.

    புதிய டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலில் ப்ளூடூத் காலிங், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கிறது. இதில் 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன. இத்துடன் 1.39 இன்ச் 360x360 பிக்சல் டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. தோற்றத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலின் பக்கவாட்டில் இரு பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த வாட்ச் ரிம் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 7H அளவு உறுதியான டெம்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.2 சார்ந்த ப்ளூடூத் காலிங் வசதி பில்ட்-இன் ஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார்,ஸ SpO2 மாணிட்டரிங், மூட், ஸ்டிரெஸ், ஃபாடிக் மாணிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங், ஸ்டெப் மற்றும் கலோரி டிராக்கிங் மற்றும் ஏராளமான உடல் நல அம்சங்கள் உள்ளன.

    டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 9 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழுமையாக சார்ஜ் ஆக இரண்டு மணி நேரம் ஆகும். இத்துடன் கிளாசிக் பிளாக், தண்டர் புளூ மற்றும் சில்வர் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற்று வருகிறது. இந்த வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.

    • ZTE நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சன் 40 அல்ட்ரா மாடலை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ZTE நிறுவனம் ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ZTE கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்த ஒரிஜினல் ஆக்சன் 40 அல்ட்ரா மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் அதிகபட்சம் 18 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைனும் புதிதாக உள்ளது.

    ஸ்பேஸ் எடிஷன் மாடலின் டிசைன் டைம் டிராவலில் லைட் அண்ட் ஷேடோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேக் கவர் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நானோ-கேஸ்டிங் வழிமுறை பின்பற்றப்பட்டு உள்ளது. இதில் மூன்றாம் தலைமுறை அண்டர்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6.8 இன்ச் AMOLED ஃபிலெக்சிபில் வளைந்த ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், டூயல் சேனல் விசி லிக்விட் கூல்டு வேப்பரைசர் உள்ளது.

    ZTE ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் அம்சங்கள்:

    6.8 இன்ச் 2480x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ nxt-gen GPU

    12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    18 ஜிபி ரேம், 1 டிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை ஒஎஸ் 12

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, OIS

    64MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    64MP டெலிபோட்டோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    16MP அண்டர் ஸ்கிரீன் கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E, பளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ZTE ஆக்சன் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 5898 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 67 ஆயிரத்து 220 என துவங்குகிறது. இதன் 18 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் விலை 7698 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 735 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை சீன சந்தையில் டிசம்பர் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    ×