என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது ஸ்மார்ட்போன் தவிர இயர்பட்ஸ் மாடலும் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை ஜனவரி 4 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ஒன்பிளஸ் நிறுவனம் இதே நாளில் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலும் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்கள் சர்வதேச வெளியீட்டுக்கு முன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
வெளியீட்டு தேதி மட்டுமின்றி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் 4000Hz அல்ட்ரா வைடு பேண்ட் நாய்ஸ் ரிடக்ஷன், 48db டீப் ஆக்டிவ் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் உள்ள டீப் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி 99.6 சதவீதம் வரை வெளிப்புற சத்தத்தை தடுக்கும். இதன் ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 10Hz முதல் 40KHz வரை உள்ளது.

டீசரின் படி புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் அர்போர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்கு ஒற்றுப் போகும் வகையில் உள்ளது. இயர்பட்ஸ் பெட்டியில் டைனாடியோ (DYNAUDIO) பிராண்டிங் மற்றும் டிசைன் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
இதுவரை வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm மற்றும் 6mm டூயல் டிரைவர்கள், ANC மோடில் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப், ANC இல்லாத பட்சத்தில் 9 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்கும் என கூறப்பட்டது. இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதன் பேட்டரி லைஃப் ANC மோடில் 22 மணி நேரமும், ANC பயன்படுத்தாத சமயத்தில் 38 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- புது சாம்சங் ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்ட நிலையில், தற்போது இதன் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் டுவட்டர் பதிவில் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இரு சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை லீக்கர் டொஹியுன் கிம் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இவர் கேலக்ஸி S22 FE வெளியாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மற்றொரு டிப்ஸ்டரான RGcloudS சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S22 FE மற்றும் கேலக்ஸி டேப் S8 FE போன்ற சாதனங்களை இரண்டாவது அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.
கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி A74 ஸ்மார்ட்போனிற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். முன்னதாக சாம்சங் நிறுவனம் புதிய A14, A24, A34 மற்றும் A54 என புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய E சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் E13 ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பல்வேறு வலைதளங்களில் லீக் ஆகி இருந்தது.
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா E13 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், மோட்டோரோலா E13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் mysmartprice வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில் புதி மோட்டோரோலா மோட்டோ E13 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் தடிமனான சின் பகுதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கோல்டு நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர மேலும் சில நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.

மோட்டோ E13 பின்புறத்தில் இரண்டு கட்-அவுட்கள் உள்ளன. எனினும், இவற்றின் ஒன்றில் மட்டுமே கேமரா சென்சார் இடம்பெற்று இருக்கிறது. மற்றொன்றில் எல்இடி ஃபிலாஷ்லைட் உள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறம் இடதுபுற ஓரத்தில் கட்-அவுட்-ஐ சுற்றி செவ்வக பம்ப் காணப்படுகிறது. ரெண்டர்களின் படி புது மோட்டோ E13 ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கிறது. இதன் அருகிலேயே ஸ்பீக்கர் கிரில் மற்றும் மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி இந்த ரெண்டர்களில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி புதிய மோட்டோ E13 மாடலில் யுனிசாக் T606 பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.
- புதிய போல்ட் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிம் கொண்ட டயல், இருவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது.
போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் "ரோவர்" பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ரோவர் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்டுள்ளது. இத்துடன் கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃப்ளிப் என இருவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது. கிளாசிக் ஸ்விட்ச் மாடல் பிரவுன் லெதர் பிரைமரி ஸ்டிராப், ஆரஞ்சு நிற இரண்டாவது ஸ்டிராப் கொண்டிருக்கிறது. ஃப்ளிப் வெர்ஷனில் பிளாக் பிரைமரி ஸ்டிராப் நிறமாகவும், ஃபிரீ கிரீன் மற்றும் புளூ ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

போல்ட் ரோவர் மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2, ஸ்லீப், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக் செய்வது என ஏராளமான உடல்நல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர ரேட்டிங், முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது. இதுதவிர மியூசிக் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ஸ் மற்றும் போன் ஃபைண்டர் போன்ற அம்சங்களும் உள்ளன.
போல்ட் ரோவர் அம்சங்கள்:
1.3 இன்ச் 360x360 பிக்சல் HD AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
ப்ளூடூத் 5.2
ப்ளூடூத் காலிங் மற்றும் இன்பிலிட் ஸ்பீக்கர், மைக்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
SpO2 மாணிட்டர், இதய துடிப்பு சென்சார்
150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
கஸ்டம் வாட்ச் ஃபேஸ் ஆப்ஷன்
IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், ஃபைண்ட் போன், மியூசிக் பிளேபேக்
பத்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃப்ளிப் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை போல்ட் ஆடியோ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
- இதன் ப்ரோ மாடலில் ஃபிளாக்ஷிப் தர பிராசஸர், 120Hz AMOLED ஸ்கிரீன், குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்படலாம்.
சியோமி நிறுவனம் 2021 வாக்கில் டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. முதற்கட்டமாக சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை சியோமி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. தற்போது இரு மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை சியோமி உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோ பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு புது டேப்லெட் மாடல்களும் பிபா மற்றும் லிக்வின் எனும் குறியீட்டு பெயர்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. இவை சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோ பெயர்களில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆன சியோமி பேட் 6 குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே சிப்செட் ஒப்போ, விவோ மற்றும் லெனோவோ நிறுவன டேப்லெட் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

லீக் ஆன அம்சங்கள்:
சியோமி பேட் 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய சியோமி பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வழங்கப்படுகிறது. இத்துடன் சியோமி பேட் 6 டேப்லெட் M82 மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், இது சீனா, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
டாப் எண்ட் மாடலான சியோமி பேட் 6 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 120Hz AMOLED டிஸ்ப்ளே, 1880x2880 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. இது முந்தைய பேட் 5 ப்ரோ மாடலில் இருந்த IPS LCD டிஸ்ப்ளேவில் இருந்து மிகப்பெரும் அப்டேட் ஆகும். மேலும் புதிய சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் குவாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த டேப்லெட் M81 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் பிரத்யேகமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என xiaomiui தெரிவித்து இருக்கிறது. தற்போது சியோமி பேட் 5 மாடல் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சியோமி நிறுவனம் மற்றொரு ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- இதே தேதியில் இரண்டு ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மற்றும் நோட் 12 ப்ரோ மாடல்களை தொடர்ந்து ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரை சியோமி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இது பட்ஜெட் ரக நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.
டீசரின் படி புதிய ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சப்போர்ட், AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் பிராசஸர், 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 48MP பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் இதுவரை வெளியானதில் மிகவும் மெல்லிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 12 5ஜி மாடல் இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது. டீசரில் புது ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் இரட்டை கேமரா சென்சார்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. மேலும் இதன் இந்திய வெர்ஷனில் ஃபிலாஷ் வைக்கப்பட்டு இருந்த பகுதியும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 12 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல், GOLED 60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
4 ஜிபி /6 ஜிபி / 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் Mi வலைதளங்கள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டேப் டு வேக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் பாடி, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் கலர்ஃபிட் ப்ரோ 4 சீரிசில் நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த மூன்றாவது மாடல் ஆகும். புது வேரியண்டில் சிறு மாற்றங்கள், புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரூ. 4 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் 3 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மற்றும் சில மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், 368x448 பிக்சல் ரெசல்யுஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பால்ம் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை ஆஃப் செய்ய முடியும். இதற்கு கைகளை ஸ்கிரீன் மீது வைத்தாலே போதுமானது. இத்துடன் டேப்-டு-வேக் அம்சம் மூலம் ஸ்கிரீன் மீது ஒரே க்ளிக் செய்தால் ஸ்கிரீனை ஆன் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ளதை போன்ற டிஜிட்டல் கிரவுன் இடம்பெற்று இருக்கிறது.
அலுமினியம் அலாய் பில்டு கொண்டிருக்கும் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கர், மென்ஸ்டுரல் சைக்கில் மாணிட்டர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வானிலை, பங்கு சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் அதிக அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பின்க், புளூ, வைன் மற்றும் டியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை டிசம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை இதே நிகழ்வில் அறிமுகம் செய்வதாக சியோமி அறிவித்து இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சர்ஜிங் P1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். இந்த ஸ்மார்ட்போனுடன் 120 வாட் GaN சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிசில் நோட் 12 ப்ரோ பிளஸ் மற்றும் நோட் 12 ப்ரோ மாடல்களின் வெளியீடு மட்டும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இரு மாடல்களுடன் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் அம்சங்கள், ரெண்டர்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் டம்மிக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவற்றின் மூலம் புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. டம்மிக்கள் மூலம் ஏற்கனவே இணையத்தில் வெளியான ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்கள் உண்மையாக இருக்கும் என்றே தெரிகிறது.
தற்போது லீக் ஆகி இருக்கும் டம்மிக்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் காட்சியளிக்கின்றன. மேலும் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா ஐலேண்ட் மாற்றப்பட்டு, ஒவ்வொரு லென்ஸ்-ம் தனித்தனியாக காட்சியளிக்கின்றன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் வளைந்த ஒரங்கள் இன்றி பாக்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.

முந்தைய ரெண்டர்களின் படி புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கீழ்புறத்தில் சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரிவித்து இருந்தன. எனினும், புதிய டம்மிக்களில் புது ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டிலேயே சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
Photo Courtesy: /Leaks
- ஐகூ நிறுவனம் தனது புது ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் சீனா மற்றும் சில சந்தைகளில் அறிமுகம் செய்தது.
- தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது
பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஐகூ 11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை ஐகூ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனா மற்றும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேலும் இது உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் என ஐகூ தெரிவித்து இருக்கிறது.
பென்ச்மார்க்கிங் தளமான AnTuTu-வில் ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இது உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் என ஐகூ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் ஐகூ 11 தான் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய வி2 சிப் உள்ளது. இது சூப்பர் நைட் வீடியோ மற்றும் மேம்பட்ட கேம் ஃபிரேம் இண்டர்பொலேஷன் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

ஐகூ 11 அம்சங்கள்:
6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
16 ஜிபி LPDDR5X ரேம்
256 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
13MP 2x டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
இந்திய சந்தையில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த மாதம் அறிமுக நிகழ்வை ஒட்டி அறிவிக்கப்படும்.
- சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில், கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே மூன்று ஸ்மார்ட்போன் விவரங்களும் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இவைதவிர ஏராளமான சான்று மற்றும் பென்ச்மார்க்கிங் வலைதளங்கள், டிசைன் ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் என கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இந்த வரிசையில் புதிய கேலக்ஸி S23 மாடல் இந்திய பிஐஎஸ் சான்றளிக்கும் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதை அடுத்து புதிய கேலக்ஸி S23 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய வெளியீடு தவிர இந்த ஸ்மார்ட்போன்கள் ஏராளமான வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகமாவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சில நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். விற்பனை மார்ச் மாத துவக்கத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: OnLeaks
- சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- சாம்சங்-இன் இரு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பிராசஸர், ரேம், ஒஎஸ் போன்ற விவரங்கள் அம்பலமாகி இருந்தது. தற்போது இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அந்த வகையில், புதிய சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். பிஐஎஸ் தளத்தில் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் SM-M146B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

இத்துடன் கேலக்ஸி F14 5ஜி மாடலும் பிஐஎஸ் தளத்தில் SM-E146B/DS எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டு இருந்தது. எனினும், இந்த வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. கீக்பென்ச் லிஸ்டிங்கின் படி கேலக்ஸி M14 5ஜி மாடல் எக்சைனோஸ் s5e8535 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது எக்சைனோஸ் 1330 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது.
கீக்பென்ச் லிஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் பெற்று இருக்கும் புள்ளிகளை வைத்து பார்க்கும் போது, இது பட்ஜெட் ரக மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. கேலக்ஸி M14 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன் யுஐ 5.0 ஸ்கின் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி F13 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 850 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.






