என் மலர்
புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S23 சீரிஸ் டம்மி
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் அம்சங்கள், ரெண்டர்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் டம்மிக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவற்றின் மூலம் புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. டம்மிக்கள் மூலம் ஏற்கனவே இணையத்தில் வெளியான ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்கள் உண்மையாக இருக்கும் என்றே தெரிகிறது.
தற்போது லீக் ஆகி இருக்கும் டம்மிக்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் காட்சியளிக்கின்றன. மேலும் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா ஐலேண்ட் மாற்றப்பட்டு, ஒவ்வொரு லென்ஸ்-ம் தனித்தனியாக காட்சியளிக்கின்றன. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் வளைந்த ஒரங்கள் இன்றி பாக்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.
முந்தைய ரெண்டர்களின் படி புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கீழ்புறத்தில் சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரிவித்து இருந்தன. எனினும், புதிய டம்மிக்களில் புது ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டிலேயே சிம் கார்டு டிரே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
Photo Courtesy: /Leaks






