என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    BIS தளத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி S23 - இந்திய வெளியீடு உறுதி!
    X

    BIS தளத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி S23 - இந்திய வெளியீடு உறுதி!

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில், கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே மூன்று ஸ்மார்ட்போன் விவரங்களும் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இவைதவிர ஏராளமான சான்று மற்றும் பென்ச்மார்க்கிங் வலைதளங்கள், டிசைன் ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் என கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இந்த வரிசையில் புதிய கேலக்ஸி S23 மாடல் இந்திய பிஐஎஸ் சான்றளிக்கும் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதை அடுத்து புதிய கேலக்ஸி S23 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய வெளியீடு தவிர இந்த ஸ்மார்ட்போன்கள் ஏராளமான வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகமாவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சில நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். விற்பனை மார்ச் மாத துவக்கத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: OnLeaks

    Next Story
    ×