என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷனில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது.
    • புது போக்கோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம்.

    போக்கோ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. டிப்ஸ்டரான யோகேஷ் ரார் இந்திய சந்தையில் புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார். ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் போக்கோ X5 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகும் என போக்கோ தலைவர் ஹிமான்ஷூ டாண்டன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர போக்கோ X5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில், தான் போக்கோ X5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஜனவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

    புதிய போக்கோ X5 ப்ரோ அம்சங்கள் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் தான் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் போக்கோ X5 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என யோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ X5 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+ OLED பேனல், 1080x2400 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    • கூகுள் நிறுவனம் பட்ஜெட் பிரிவுக்கான ஸ்மார்ட்போன் மாடல்களை a சீரிஸ் பிராண்டிங்கில் விற்பனை செய்து வருகிறது.
    • கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விவரங்கள் மீண்டும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது ஸ்மார்ட்போன் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. முந்தைய தகவல்களில் பிக்சல் 7a டிசைன் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றிய தகவலும் டுவிட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.

    கடந்த ஆண்டு பிக்சல் 7a மாடல் 2022 கூகுள் I/O நிகழ்வில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் சர்வதேச வெளியீட்டின் போதே இந்திய சந்தையிலும் பிக்சல் 7a மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கூகுள் நிறுவனம் பிக்சல் 7a பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    கூகுள் பிக்சல் 7a எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை புதிய கூகுள் பிக்சல் 7a மாடலில் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், டென்சார் G2 பிராசஸர், குவால்காம் சிப், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 64MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு சென்சார் என டூயல் கேமராக்கள், டூயல் சிம் ஸ்லாட்கள், 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: OnLeaks x Smartprix

    • குவால்காம் நிறுவனம் உலகின் முதல் முறையாக இருவழி குறுந்தகவல் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த குறுந்தகவல் சேவை முழுக்க முழுக்க செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம் "ஸ்னாப்டிராகன் சாடிலைட்" பெயரில் புது சேவையை 2023 CES நிகழ்வில் அறிவித்து இருக்கிறது. உலகில் முதல் முறையாக செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் முதல் இருவழி குறுந்தகவல் சேவை ஆகும். இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலக மக்கள் அனைவரையும் மொபைல் மெசேஜிங் மூலம் இணைக்கும் பணியை மேற்கொள்ளும்.

    முதற்கட்டமாக இந்த சேவை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்டிராகன் 5ஜி மொடெம்-RF சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இந்த சேவை முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் இரிடியம் சாடிலைட் கான்ஸ்டெலேஷன் சார்ந்து இயங்கும்.

    இது உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் மற்றும் இதர சேவை வழங்குவோருக்கு உலகளவில் கவரேஜ் வழங்கும். இரிடியம் வெதர்-ரெசிஸ்டண்ட் L-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் அப்லின்க் மற்றும் டவுன்லின்க் என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடியது ஆகும்.

    குவால்காம் மற்றும் இரிடியம் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டியை அடுத்த தலைமுறை பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கும். கார்மின் அவசரகால தொலைதொடர்புக்கு சப்போர்ட் செய்யும்.

    ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலகம் முழுக்க கவரேஜ் கொண்டிருக்கும். இது இருவழி குறுந்தகவல் அனுப்புவது, எஸ்எம்எஸ் அனுப்புவது போன்றவற்றை மேற்கொள்ள செய்கிறது. NTN சாடிலைட் உள்கட்டமைப்பு மற்றும் கான்ஸ்டலெஷன்கள் கிடைக்கும் போது, ஸ்னாப்டிராகன் சாடிலைட் 5ஜி Non-Terrestrial Network (NTN) சப்போர்ட் வழங்கும். இது அவசரகால இருவழிகளில் குறுந்தகவல் சேவையை ஸ்மார்ட்போன்களில் வழங்கும்.

    இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியாகும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சாடிலைட் மூலம் அவசரகால குறுந்தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். 

    • ஆப்பிள் ஐபோன் தோற்றம் கொண்ட புது ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஹூபென் டி7510 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லிடிவி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் தோற்றம் பார்க்க ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. புது சாதனம் பற்றிய முழு விவரங்களை லிடிவி இதுவரை அறிவிக்கவில்லை.

    புதிய லிடிவி S1 ப்ரோ மாடலில் ஹூபென் டி7510 பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸருக்கு நிகரான செயல்திறன் வழங்கும் சீன சிப்செட் ஆகும். இது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான பிராசஸராக இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    டிசைனை பொருத்தவரை லிடிவி S1 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் போன்று காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே கச்சிதமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மாத்திரை வடிவ கட்-அவுட் உள்ளது. இது ஐபோனில் உள்ள டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தை வழங்கும் என தெரிகிறது.

    லிடிவி S1 ப்ரோ மாடலின் விலை ஆயிரம் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 016 அல்லது 145 டாலர்களுக்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் லைட் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • இயர்பட்ஸ் தவிர ஆப்பிள் நிறுவனம் மைக்ரோ எல்இடி கொண்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    விலை உயர்ந்த சாதனம் என்ற போதிலும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விட்டது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷன் மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே, சற்றே பெரிய ஸ்கிரீன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தொழில்நுட்ப வல்லுனரான ஜெஃப் பு புது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் லைட் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளார்,

    2023 ஆப்பிள் வாட்ச் மாடல்களின் அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இதுதவிர 2024 ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் மைக்ரோ எல்இடி ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய தொழில்நுட்பத்தை பெறும் முதல் ஆப்பிள் சாதனமாக 2024 ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா இருக்கும். இந்த மாடலில் அதிகபட்சம் 2.1 இன்ச் வரையிலான ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    பிரைட்னஸ் மற்றும் கலர் அக்யுரசி உள்ளிட்டவைகளில் புதிய மைக்ரோ எல்இடி ஸ்கிரீன்கள் OLED-ஐ விட சிறப்பாக இருக்கும். எனினும், இந்த தொழில்நுட்பத்திற்கான செலவு மிகவும் அதிகம் ஆகும். 2024 ஆண்டில் புது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் துவங்கி பெரும்பாலான எதிர்கால சாதனங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆப்பிள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புது ஏர்பாட்ஸ்-ஐ பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் சீரிசில் "லைட்" வெர்ஷனை ஆப்பிள் ஏர்பாட்ஸ் லைட் எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஏர்பாட்ஸ் லைட் மாடல் தற்போதைய ஏர்பாட்ஸ் சீரிசை விட குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் லைட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது தற்போதைய ஏர்பாட்ஸ் 2 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    • போக்கோ நிறுவனத்தின் போக்கோ C50 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ C50 ஸ்மார்ட்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய C50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது போக்கோ C50 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz டச் சாம்ப்லிங் ரேட், மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், பின்புறம் லெதர் டெக்ஸ்ச்சர் பேக் பேனல், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 3.5mm ஆடியோ ஜாக், 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, இரண்டாவது கேமரா சென்சார், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ C50 அம்சங்கள்:

    6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே

    2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்

    IMG PowerVR GE-class GPU

    2 ஜிபி, 3 ஜிபி LPDDR4X ரேம்

    32 ஜிபி eMMC 5.1 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    டூயல் சிம் ஸ்லாட்

    8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்

    டெப்த் கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    பின்புறம் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ C50 ஸ்மார்ட்போன் கண்ட்ரி கிரீன் மற்றும் ராயல் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், அறிமுக சலுகையாக போக்கோ C50 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 250 கூப்பன் வழங்கப்படுகிறது. அதன்படி போக்கோ C50 ஸ்மார்ட்போனினை ரூ. 6 ஆயிரத்து 249 வாங்கிட முடியும். புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்தியாவில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ரியல்மி அறிவித்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனில் ஹை-ரெஸ் ஆடியோ, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

    புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனிற்கான லேண்டின் பேஜ் இடம்பெற்று இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 10 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0

    50MP பிரைமரி கேமரா

    2MP பிளாக் அண்ட் வைட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலும் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சீரிஸ் - ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 11R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புதிய ஒன்பிளஸ் 11R அம்சங்களும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் சாதனம் என்றும் இது CPH2487 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மற்றொரு ஸ்கிரீன்ஷாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    ஒன்பிளஸ் 11R மாடலின் அண்டர்கிலாக் வெர்ஷன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ், ஹானர் 80 ப்ரோ, ஹானர் 80 GT மற்றும் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் போன்ற ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 11R மாடலில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 2727x1240 பிக்சல் ரெசல்யூஷன், பின்புறம் 50MP சோனி IMX766 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா,OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி மெமரி, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

    • சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக CAD சார்ந்த ரெண்டர்கள் வெளியாகி இருந்தது. ரெண்டர்களின் படி புது ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல், AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 158.3x76.7mm அளழில் உருவாகி இருக்கிறது. இது கேலக்ஸி A53 மாடலை விட சற்றே அகலமாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6.4 இன்ச் OLED HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இதில் 50MP பிரைமரி கேமரா இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.

    இது மட்டுமின்றி கேலக்ஸி A74 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ப்படாது என்றும் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் அடுத்த கேலக்ஸி A சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதற்கு மாற்றாக கேலக்ஸி S22 FE ஸ்மார்ட்போன் கேலக்ஸி A74 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: Android Headlines

    • ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
    • புதிய ஐகூ ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது.

    ஐகூ நிறுவனம் தனது நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் 4013mm² VC கூலிங் மற்றும் மல்டிலேயர் கிராஃபைட் ஹீட் டிசிபேஷன் சிஸ்டம் சாதனம் அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி, 12 ஜிபி, 16 ஜிபி ரேம். 256 ஜிபி மெமரி

    16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிலாஷ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆரஞ்சு, புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை 2 ஆயிரத்து 799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 310 என துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை 3 ஆயிரத்து 599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரத்து 850 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீன சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புது லேப்டாப் மாடலில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது.
    • இதனை லேப்டாப் மட்டுமின்றி இதனை டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது புது லேப்டாப் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த லேப்டாப் தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதிய சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் உள்ள 360 டிகிரி ஹின்ஜ் இதனை லேப்டாப் அல்லது டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் குவால்காம் நிறுவன பாகங்கள் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கிராஃபிக்ஸ், பிராசஸர், வைபை கனெக்‌ஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை குவால்காம் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

    இந்த லேப்டாப்பில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 33.7செமீ டச் ஸ்கிரீன், 11.5mm தடிமனாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 1.04 கிலோ ஆகும். சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் ஸ்னாப்டிராகன் 8cx ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட 57 சதவீதம் வரை அதிக செயல்திறன் மற்றும் 85 சதவீதம் சிறப்பான மல்டி-டாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது.

    கூடுதலாக குவால்காம் அட்ரினோ GPU வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு குவால்காம் நிறுவனத்தின் ஃபாஸ்ட்கனெக்ட் 6900 சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிவேக மற்றும் சீரான வைபை 6E கனெக்‌ஷன் வழங்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை இந்த சாதனத்தை முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் சாம்சங் நிறுவனத்தின் S பென் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் கிராஃபைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1.89 மில்லியன் வொன் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 585 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தென் கொரிய சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • சியோமி நிறுவனம் ரெட்மி K60 சீரிஸ் அறிமுக நிகழ்வில் முற்றிலும் புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    சீனாவில் நடைபெற்ற ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீடு எடிஷன் மாடலில் 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 OLED ஸ்கிரீன், 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்

    அட்ரினோ 642L GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    5 ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளூ மற்றும் ஷிம்மர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 210 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 710 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீன சந்தையில் இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ×