என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 12 4ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ரெட்மி நோட் 12 4ஜி மாடல் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
4ஜி வேரியண்ட் என்பதால் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாதம் வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ 4ஜி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் NBTC தளத்தில் இடம்பெற்று இருந்தது.

இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் தான் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது.
சீனா மற்றும் இந்தியாவில் ரெட்மி நோட் 12 4ஜி மாடல் குறைந்த விலை நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம். அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ சூப்பர் AMOLED 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 13MP செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
- ஆப்பிள் நிறுவனம் தனது M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் சிப்செட்கள் அடங்கிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம்.
- புதிய மேம்பட்ட மேக்புக் ப்ரோ மாடல்கள் 14.2 இன்ச் மற்றும் 16.2 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ப்ரோ மாடல்களை புதிய M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் சிப்செட்களை கொண்டு அப்டேட் செய்து இருக்கிறது. புதிய M2 ப்ரோ பிராசஸரில் 10- அல்லது 12 கோர் சிபியு, 200 ஜிபி யுனிஃபைடு மெமரி பேண்ட்வித், அதிகபட்சம் 19 கோர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியூரல் என்ஜின் 40 சதவீதம் அதிவேகமானது ஆகும்.
M2 மேக்ஸ் கொண்ட மேக்புக் ப்ரோ மாடலில் 38 கோர் ஜிபியு, 400 ஜிபி யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் உள்ளது. M2 மேக்ஸ் சிப்செட்டில் அடுத்த தலைமுறை 12-கோர் சிபியு, அதிகபட்சம் எட்டு அதீத செயல்திறன் கொண்ட கோர்கள் உள்ளன. இது M1 மேக்ஸ்-ஐ விட 20 சதவீதம் அதிக செயல்திறன் கொண்டிருக்கிறது.

புது சிப் வைபை 6இ, ப்ளூடூத் 5.3, மேம்பட்ட பேட்டரி லைஃப், HDMI மூலம் 8K எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே சப்போர்ட், அதிகபட்சம் 96 ஜிபி யுனிஃபைடு மெமரி உள்ளது. இந்த லேப்டாப்கள் 14.2 இன்ச் மற்றும் 16.2 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இத்துடன் லிக்விட் ரெட்டினா XDR மினி எல்இடி டிஸ்ப்ளே, ப்ரோமோஷன் தொழில்நுட்பம், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அலுமினியம் பாடி, மேஜிக் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் மேக்புக் ப்ரோ (2023) 14 இன்ச் மற்றும் 16 இன்ச் அம்சங்கள்:
14.2 இன்ச் 3024x1964 பிக்சல் / 16.2 இன்ச் 3456x2234 பிக்சல் லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே
ஆப்பிள் M2 ப்ரோ சிப் - 10-கோர் சிபியு, 19- கோர் ஜிபியு
ஆப்பிள் M2 மேக்ஸ் சிப் - 12-கோர் சிபியு, 38-கோர் ஜிபியு
அதிகபட்சம் 32 ஜிபி யுனிஃபைடு மெமரி (M2 மேக்ஸ் சிப்)
96 ஜிபி (M2 மேக்ஸ் மற்றும் 38 கோர் ஜிபியு)
512 ஜிபி / 1 டிபி எஸ்எஸ்டி
மேக் ஒஎஸ் வெண்டுரா
பேக்லிட் மேஜிக் கீபோர்டு, டச் ஐடி, ஆம்பியண்ட் லைட் சென்சார்
ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
வைபை 6இ, ப்ளூடூத் 5.3
1080 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா
ஸ்டூடியோ தரத்தில் 3-மைக்
3.5mm ஹெட்போன் ஜாக்
ஸ்பேஷியல் ஆடியோ
3x தண்டர்போல்ட் 4 யுஎஸ்பி டைப் சி
டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி 4
எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட், HDMI 2.1
மேக்சேஃப் 3 போர்ட்
14 இன்ச் - 70 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
100 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
- மேக்புக் ப்ரோ 14 இன்ச் M2 ப்ரோ 10-கோர் சிபியு, 16-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900
- மேக்புக் ப்ரோ 14 இன்ச் M2 ப்ரோ 12-கோர் சிபியு, 19-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 900
- மேக்புக் ப்ரோ 14 இன்ச் M2 மேக்ஸ் 12-கோர் சிபியு, 30-கோர் ஜிபியு, 32 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 3 லட்சத்து 09 ஆயிரத்து 900
- மேக்புக் ப்ரோ 16 இன்ச் M2 ப்ரோ 12-கோர் சிபியு, 19-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 900
- மேக்புக் ப்ரோ 16 இன்ச் M2 ப்ரோ 12-கோர் சிபியு, 19-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 900
- மேக்புக் ப்ரோ 16 இன்ச் M2 மேக்ஸ் 12-கோர் சிபியு, 38-கோர் ஜிபியு, 32 ஜிபி யுனிஃபைடு மெமரி, 1 டிபி எஸ்எஸ்டி ரூ. 3 லட்சத்து 49 ஆயிரத்து 900
புதிய மேக்புக் ப்ரோ மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆப்பிள் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவைகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க 27 நாடுகளில் புது மேக் மினி மாடல்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
- கிஸ்மோர் பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் IP67 சான்று, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
கிஸ்மோர் கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து கிஸ்மோர் பிராண்டின் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் 1.85 இன்ச் டிஸ்ப்ளே, 15 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
1.85 இன்ச் வளைந்த, IPS டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, 15 நாட்களுக்கு பேட்டரி லைஃப், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் பிரைட்னஸ், ஏராளமான உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டிராக் செய்யப்படும் விவரங்கள் JYOU ப்ரோ ஹெல்த் சூட் உடன் இண்டகிரேட் செய்யப்படுகின்றன. கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் மாடலில் IP67 தர சான்று, ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் அம்சங்கள்:
1.85 இன்ச் IPS டிஸ்ப்ளே, 240x280 பிக்சல்
450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
ப்ளூடூத் காலிங் 5.0
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்
வாட்ச் ஃபேஸ்கள்
ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஹெல்த் மாணிட்டரிங், SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் மற்றும் மென்ஸ்டுரல் டிராகிங்
இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர்
JYOU ப்ரோ ஆப் சப்போர்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,199 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ A78 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 6.56 இன்ச் HD+ ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் கேமரா மாட்யுலை சுற்றி பாலிஷ் செய்யப்பட்ட ரிங்குகள் உள்ளன. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்படுகிறது.

ஒப்போ A78 5ஜி அம்சங்கள்:
6.5 இன்ச் 1612x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
மாலி-G57 MC2 GPU
8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13
டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா
2MP போர்டிரெயிட் கேமரா, எல்இடி ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒப்போ A78 5ஜி ஸ்மார்ட்போன் குலோயிங் புளூ மற்றும் குலோயிங் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ரிடெயில் அவுட்லெட், ஒப்போ இ ஸ்டோர் மற்றும் அமேசானில் ஜனவரி 18 ஆம் தேதி துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு அதிகபட்சம் 10 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ஆறு மாதங்களுக்கு தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 சமீபத்தில் அறிமுகமானது.
- இதன் டாப் எண்ட் வெர்ஷன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டன.
கடந்த மாதம் சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் சியோமி 13 மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் சர்வதேச வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் நடைபெற இருக்கிறது. தற்போது சியோமி 13 சீரிசில் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ என இரு மாடல்கள் மட்டுமே உள்ளன. எனினும், மூன்றாவதாக சியோமி 13 அல்ட்ரா மாடல் இருப்பதாக புது தகவல்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன.
இதுதவிர சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் முக்கிய ஃபிளாக்ஷிப் மாடலாக சீனா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்தே சியோமி 13 அல்ட்ரா வெளியீடு சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் இதற்கு முற்றிலும் முரணான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

சீனா புத்தாண்டை தொடர்ந்து ஒப்போ ஃபைண்ட் X6 மற்றும் ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மாடல்கள் வெளியிடப்படும். ஜனவரி 22 ஆம் தேதி சீனா புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது. என்ற போதிலும், சியோமி 13 அல்ட்ரா இந்த காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படாது என டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாத வாக்கில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி 13 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் நிச்சயம் அறிமுகமாகின்றன. இதனை சியோமி அறிவித்துவிட்டது. சீன வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி 13 அல்ட்ரா விற்பனை மார்ச் மாத மத்தியிலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ துவங்கும் என கூறப்படுகிறது.
- லெனோவோ நிறுவனத்தின் புது டேப்லெட் 5ஜி கனெக்டிவிட்டி, குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
- இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
லெனோவோ டேப் P11 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் P11 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை விட புது மாடலில் அதநவீன ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ டேப் P11 5ஜி மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உள்ளிட்ட சாதனங்களுக்கான சப்போர்ட் கொண்டுள்ளது. இது டூயல் டோன் பேக் பேனல், ஒற்றை கேமரா சென்சார் உள்ளது.

ஆடியோவை பொருத்தவரை லெனோவோ டேப் P11 5ஜி மாடல் குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சவுண்ட் டியுனிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புது டேப் P11 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அட்ரினோ 619 GPU, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய லெனோவோ டேப் P11 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் ஸ்டாம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை லெனோவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் ஏர்பாட்ஸ் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- புது ஏர்பாட்ஸ் மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஏர்பாட்ஸ் அடுத்த ஆண்டு தான் அப்டேட் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் அடுத்த தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல் 2024 இரண்டாவது அரையாண்டு அல்லது 2025 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஏர்பாட்ஸ் மாடல் அப்டேட் செய்யப்படாது என்றே அர்த்தமாகும். மேலும் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் லைட் மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல்களின் வெளியீடு பற்றி மிங் சி கியோ தகவல் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த தகவல்கள் ஏர்கனவே ஜெஃப் பு வெளியிட்ட தகவல்களை போன்றே இருக்கிறது. இருவரும் புது ஏர்பாட்ஸ் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து இருந்தனர்.

குறைந்த விலை ஏர்பாட்ஸ் மாடல் 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 065 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல் மூன்று ஆண்டுகளுக்கு பின் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக டிசம்பர் 2020 வாக்கில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் போட்டி தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஆப்பிள் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இடைவெளியை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என்றே கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஆப்பிள் தனது மிக்சட்-ரியாலிட்டி ஹெட்செட்-ஐ இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- முன்னதாக கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுக தேதி மற்றும் நேரம் பற்றிய அறிவிப்பை சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் மாடல்களின் அறிமுக நிகழ்வு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், புது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1999 ஆகும். எனினும், புது ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விற்பனை தேதி வரை முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

புதிய கேலக்ஸி ஃபிளாக்ஷிப் போனை முன்பதிவு செய்வது எப்படி?
- சாம்சங் இந்தியா வலைதளத்தில் Pre Reserve பட்டனை க்ளிக் செய்ய கேலக்ஸி Pre Reserve VIP பாஸ் பெறவும்.
- ரூ. 1999 கட்டணத்தை ஏதேனும் பிரீபெயிட் பேமண்ட் முறையில் செலுத்தவும்.
- மின்னஞ்சல் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு கேலக்ஸி Pre Reserve VIP பாஸ் அனுப்பப்படும்.
- வெற்றிகரமாக முன்பதிவு செய்தவுடன், வரவேற்பு மின்னஞ்சல் கிடைக்கும். அதில் முன்பதிவு செய்ததற்கான பலன்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.
- சாம்சங் வலைதளம் சென்று அடுத்த கேலக்ஸி சாதனங்களை தற்போதைய பலன்களை கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.
- அடுத்த கேலக்ஸி சாதனத்திற்கு பணம் செலுத்தும் போது முன்பதிவுக்காக செலுத்திய ரூ. 1999 தொகை கழிக்கப்பட்டு விடும்.
- முன்பதிவு காலக்கட்டம் நிறைவுபெறும் வரை கூப்பனை பயன்படுத்தவில்லை எனில், அது தானாக ரத்து செய்யப்படும். முன்பதிவு கட்டணம் செலுத்திய கணக்கிற்கே தொகை திருப்பி அனுப்பப்படும்.
தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது வெறும் முன்பதிவு சலுகைகள் தான். விற்பனைக்கான சலுகைகள் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் போது அறிவிக்கப்படும். வழக்கத்தை போன்றே இந்த முறையும் சாம்சங் லைவ் நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதில் பயனர்களுக்கு அதிக சலுகைகள், அதிவேக வினியோகம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் வெளியாகி உள்ளது.
- புது சியோமி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த சீரிசில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே கன்சோல் தளத்தில் சியி (Ziyi) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி 13 லைட் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அதன் அம்சங்களும் லிஸ்டிங்கில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 13 லைட் மாடலில் FHD+ ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல், செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்படுகிறது. சியோமி 13 லைட் மாடலுக்கான சியி குறியீட்டு பெயர் சியோமி சிவி 2 மாடலை குறிக்கும்.

சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் லைட் எடிஷன் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் தான் வழங்கப்பட்டு இருந்தது. இதுதவிர FHD+ டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம், MIUI13 போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சியோமி 13 லைட் அம்சங்கள், சியோமி சிவி 2 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக புது சியோமி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
- புது கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் டீசர்களை வெளியிட்டு வருகிறது. இரு கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீசர்களில் புது ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், டீசர்களில் புது ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி A14 5ஜி மற்றும் கேலக்ஸி A23 5ஜி பெயர்களில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்கள் ஏற்கனவே அம்பலமாகி விட்டன. சாம்சங் இந்தியா சப்போர்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் ஆசம் கிரீன், ஆசம் பர்கண்டி மற்றும் ஆசம் பிளாக் நிறங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A14 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி எல்சிடி ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
Mali-G57 MC2 GPU
4 ஜிபி, 6 ஜிபி LPDDR4X ரேம்
64 ஜிபி, 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ சென்சார்
13MP செல்ஃபி கேமரா
பக்கவாடடில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர கேலக்ஸி A23 4ஜி மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கேலக்ஸி A23 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி எல்சிடி ஸ்கிரீன்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
64 ஜிபி, 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
5MP அல்ட்ரா வைடு கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ சென்சார்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாடடில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இது பற்றிய தகவல்கள் அடுத்த வாரம் இறுதியாகி விடும்.
- மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் மிகவும் வித்தியாச அம்சங்களை கொண்டிருக்கிறது.
- புது ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக மோட்டோரோலா மற்றொரு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய ரக்கட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. டெஃபி 5ஜி என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனை மோட்டோரோலா மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சாடிலைட் மெசேஜிங் அம்சத்தை வழங்குவதற்காக பிரத்யேக சிஸ்டம் வழங்கப்படுகிறது.
பிரிட்டனை சேர்ந்த புல்லிட் குழுமத்துடன் கூட்டணி அமைத்து இருக்கும் மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ரக்கட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இதுதவிர CAT உடனும் மோட்டோரோலா இணைந்துள்ளது. கடந்த ஆண்டே இருவழி சாடிலைட் மெசேஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் திட்டம் இருப்பதாக மோட்டோரோலா அறிவித்து இருந்தது.

அந்த வகையில், அந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா டெஃபி 5ஜி-யாக இருக்கும் என கூறப்படுகிறது. புல்லிட் நிறுவனம் பிரபல சிப் உற்பத்தியாளர் மற்றும் சாடிலைட் நெட்வொர்க் உள்கட்டமைப்பு நிறுவனங்களுடன் இரு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இது புது ஸ்மார்ட்போனை செல்லுலார், வைபை மற்றும் சாடிலைட் கனெக்டிவிட்டி இடையே சீராக மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கும்.
இந்த அம்சம் புல்லிட் சாடிலைட் கனெக்ட் எனும் பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இது புல்லிட், மீடியாடெக் மற்றும் ஸ்கைலோ என மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் கொண்ட சாதனம் வைபை அல்லது செல்லுலார் நெட்வொர்க் உடன் இணைக்க முடியாத பட்சத்தில் புல்லிட் மெசேஜிங் சிஸ்டம் சாடிலைட் உடன் இணைந்து கொள்ளும்.
குறிப்பாக, மறுபுறம் குறுந்தகவலை பெறுவோருக்கு வழக்கமான எஸ்எம்எஸ் போன்றே செல்லும். இதற்கு புல்லிட் சாடிலைட் மெசஞ்சர் செயலி மூலம் பதில் அனுப்பவும் முடியும். இந்த அம்சம் பற்றிய முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், குருந்தகவல்களுக்கான கட்டணம் சாடிலைட் மெசேஜிங் சந்தாதாரர் திட்டத்தில் இருந்து கழிக்கப்பட்டு விடும் என தெரிகிறது. இதற்கான கட்டணங்கள் மாதம் 4.99 டாலர்களில் இருந்து துவங்கலாம்.
புதிய மோட்டோரோலா டெஃபி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஆண்டு முதல் காலாண்டிற்குள் டெஃபி 5ஜி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 கொண்டிருக்கும் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ரியல்மி 10 அம்சங்கள்:
6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்
ARM Mali-G57 MC2 GPU
4ஜிபி LPDDR4X ரேம், 64ஜிபி UFS 2.2 மெமரி
8ஜிபி LPDDR4X ரேம், 128ஜிபி UFS 2.2 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0
50MP பிரைமரி கேமரா
2MP போர்டிரெயிட் கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி 10 ஸ்மார்ட்போன் கிலாஷ் வைட் மற்றும் ரஷ் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனினும், அறிமுக சலுகையாக 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ரியல்மி வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது.
இதுதவிர புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். எனினும், இந்த சலுகை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.






