என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.
- இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் கிளாம்ஷெல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட வாட்டர் டிராப் ஹின்ஜ் டிசைன் கொண்டிருக்கிறது. முன்னதாக ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் குளோபல் வேரியண்ட் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் இந்தியாவில் இந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். முந்தைய தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் சர்வதேச சந்தையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.
- ரியல்மி நிறுவனத்தின் புது கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
- புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
ரியல்மி 10 ப்ரோ 5ஜி கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ரியல்மி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக பெயர் குறிப்பிடாமல், இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை ரியல்மி வெளியிட்டு வந்தது. அந்த வகையில், இந்த மாடல் ரியல்மி 10 ப்ரோ 5ஜி என தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிமுக போஸ்டரில் ஸ்மார்ட்போனின் முழு டிசைன் எப்படி இருக்கும் என அம்பலமாகி விட்டது. மேலும் இதற்கான மைக்ரோசைட்டில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. ரூ. 200-க்கு தள்ளுபடி கூப்பன், 3வாட் ப்ளூடூத் ஸ்பீக்கர், எலெக்ட்ரிக் டூத்-பிரஷ், வாட்ச் 2, ரியல்மி கோகோ கோலா சின்னம் மற்றும் டீலக்ஸ் பாக்ஸ் செட் உள்ளிட்டவை வழங்குகிறது.
ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிசைன் அதன் ஒரிஜினல் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனை தனித்துவம் மிக்கதாக மாற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் டூயல் டோன் டிசைன் கொண்டுள்ளது.

இதன் ஒருபுறம் பிளாக் நிறமும், மற்றொரு புறம் ரியல்மி லோகோ, மற்ற பாதியில் கோகோ கோலா பிராண்டிங் ரெட் அக்செண்ட் உடன் இடம்பெற்று இருக்கிறது. டூயல் கேமரா சென்சார்களை சுற்றி ரெட் அக்செண்ட் ரிங்குகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் டிசைன் மற்றும் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது.
ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள்:
6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619 GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
2MP போர்டிரெயிட் கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
3.5mm போர்ட்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23, S23 பிளஸ் மாடல்களுடன் டாப் எண்ட் ஃபிளாக்ஷிப் மாடலான கேலக்ஸி S23 அல்ட்ராவையும் அறிமுகம் செய்தது.
- புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் ஆர்மர் அலுமினியம் ஃபிரேம், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் குவாட் HD+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
இத்துடன் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் அளவில் பெரிய வேப்பர் சேம்பர் கூலிங், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பை ஸ்மார்ட்போனின் இருபுறமும் கொண்ட முதன்மை மாடலாக கேலக்ஸி S23 அல்ட்ரா இருக்கிறது. இவைதவிர இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1 உள்ளது.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா அம்சங்கள்:
6.8 இன்ச் 3088x1440 பிக்சல் குவாட் HD+ இன்ஃபினிட்டி-0ஒ- எட்ஜ் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
1 முதல் 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ்
கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர்
அட்ரினோ 740 GPU
8 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி (UFS 4.0) மெமரி
12 ஜிபி LPDDR5X ரேம், 512 ஜிபி / 1 டிபி (UFS 4.0) மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1
200MP பிரைமரி கேமரா, f/1.7, OIS
12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
10MP பெரிஸ்கோப் லென்ஸ், f/4.9, எல்இடி ஃபிளாஷ்
12MP செல்ஃபி கேமரா, f/2.2
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E, ப்ளூடூத் 5.3
5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
Qi வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 1,199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 98 ஆயிரத்து 350 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் விலை 1619.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 770 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஃபேண்டம் பிளாக், கிரீன், கிரீம் மற்றும் லாவண்டர் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் போன்றே அல்ட்ரா மாடலும் கிராஃபைட், ஸ்கை புளூ, லைம் மற்றும் ரெட் போன்ற நிறங்களில் சில நாடுகளில் மட்டும் கிடைக்கும்.
- போக்கோ நிறுவனத்தின் புது X சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்திய வெளியீட்டின் போதே புது போக்கோ X5 ப்ரோ சர்வதேச சந்தையிலும் அறிமுகமாகிறது.
போக்கோ நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் - போக்கோ X5 ப்ரோ இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறும் போஸ்டரை போக்கோ வெளியிட்டு உள்ளது. மேலும் இந்திய வெளியீட்டின் போதே, போக்கோ X5 ப்ரோ சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.
புது ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்த போக்கோ நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்த்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. விளம்பர படத்திலும் ஹர்த்திக் பாண்டியா புது ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் போக்கோ டிசைன் பாரம்பரியத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் பிரைட் எல்லோ மற்றும் பிளாக் நிற டாப் கொண்டிருக்கிறது. இதன் கேமரா பம்ப் பகுதி செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. அதில் மூன்று கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 10-பிட் OLED FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சாதனங்கள் வெளியீடு பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
- ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல வல்லுனரான மிங்-சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த 9 முதல் 12 மாதங்களுக்கு ஆப்பிள் புது ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்யாது என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஐபேட் மாடல் சிறு அப்டேட் செய்யப்பட்டு உற்பத்தி பணிகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். புது மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய விவரங்களை மிங்-சி கியூ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
சீனாவை சேர்ந்த ஆன்ஜி டெக்னாலஜி நிறுவனம் கிக்ஸ்டாண்ட் பாகங்களை உற்பத் தி செய்து கொடுக்கும் என தெரிகிறது. மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், கடைசியாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எல்ஜி டிஸ்ப்ளே உடன் இணைந்து மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
கடந்த ஆண்டு டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ரோஸ் யங் ஆப்பிள் நிறுவனம் 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கியோ தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 வாக்கில் ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முரணாக ரோஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சாதனம் 2025-க்கு பின் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த இதர தகவல்களில் புது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே 20.25 இன்ச் அளவில் இருக்கும் என்றும் மடிக்கப்பட்ட நிலையில், இது 15.3 இன்ச் அளவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் பேனலில் எல்ஜி டிஸ்ப்ளே மிக-மெல்லிய கவர் கிலாஸ் பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
- ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.
- புது ஸ்மார்ட்வாட்ச்களில் SpO2 மாணிட்டர், ஹார்ட் ரேட் டிராக்கர் என ஏராளமான சென்சார்கள் உள்ளன.
ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் பெயர்களில் புது ஸ்மார்ட்வாட்ச்கள் அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் ஃபயர்-போல்ட் டாக் அல்ட்ரா மாடல் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.
மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் மேம்பட்ட ஹெல்த் சூட் வசதிகளான- SpO2, ஹார்ட் ரேட், ஸ்லீப் மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று மாடல்களில் விலை உயர்ந்த ஃபயர்-போல்ட் சாட்டன் 1.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபயர்-போல்ட் சாட்டன் அம்சங்கள்:
1.78 இன்ச் 368x448 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
ப்ளூடூத் காலிங்- கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, பின்க், கிரே, சில்வர் மற்றும் கோல்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது

ஃபயர்-போல்ட் டாக் 3 அம்சங்கள்:
1.28 இன்ச் 240x240 பிக்சல் LCD ஸ்கிரீன்
ப்ளூடூத் காலிங்- கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, பின்க், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது
ஃபயர்-போல்ட் நிஞ்சா-ஃபிட் அம்சங்கள்:
1.69 இன்ச் LCD ஸ்கிரீன்
123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, சில்வர், பின்க், ரெட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர்-போல்ட் சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரத்து 999, ரூ. 2 ஆயிரத்து 199 மற்றும் ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்று மாடல்களில் ஃபயர்-போல்ட் சாட்டன் மற்றம் டாக் 3 மாடல்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஃபயர்-போல்ட் நிஞ்சா-ஃபிட் விற்பனை நாளை (ஜனவரி 29) துவங்குகிறது. மூன்று மாடல்களும் நாடு முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றன.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது சாதனங்கள் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, இயர்பட்ஸ் என ஏராளமன சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி 65Q2 ப்ரோ, ஒன்பிளஸ் கீபோர்டு வரிசையில், ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் டீசர் படத்தை ஒனபிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி புது ஸ்மார்ட்போனின் பின்புறம் வளைந்திருப்பதும், கிளாஸி ஃபிரேம் கொண்டிருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இவைதவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 11R மாடலில் 6.7 இன்ச் FHD+ 1080x2412 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP மேக்ரோ லென்ஸ் என மூன்று பிரைமரி சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் டிமென்சிட்டி 8100-மேக்ஸ் பிராசஸருக்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படலாம். புது ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- கோகோ கோலா ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புது கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்த காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
கோகோ கோலா ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புது ஸ்மார்ட்போனின் அதிக தரமுள்ள ரெண்டர்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெளிவாக தெரியவந்துள்ளது.
இதோடு கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு புது ஸ்மார்ட்போனிற்கான கோகோ கோலா நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கோகோ கோலா கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனினும், டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில் உள்ள கோகோ கோலா ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ரியல்மி 10 4ஜி போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ், வலது புறத்தில் வால்யும் ராக்கர், வளைந்த எட்ஜ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனை சுற்றி சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இவை தவிர கோகோ கோலா ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.
ரியல்மி 10 4ஜி அம்சங்கள்:
கோகோ கோலா ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்ற பட்சத்தில் அதன் அம்சங்கள் பெரும்பாலும் ரியல்மி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ரியல்மி 10 4ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட் அவுட், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், LPDDR4X ரேம், 128 ஜிபி UFS2.2 ஸ்டோரேஜ், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8 ஜிபி டைனமிக் ரேம் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP B&W போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும். கனெக்டிவிட்டிக்கு 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் உள்ளது.
- டெக்னோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் IPX2 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.
டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மாடலில் 6.56 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, 120Hz ச் சாம்ப்லிங் ரேட், மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2023 அம்சங்கள்:
6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 480 நிட்ஸ் பிரைட்னஸ்
2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஹைஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
13MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
AI லென்ஸ்
5MP செல்ஃபி கேமரா
டூயல் மைக்ரோ ஸ்லிட் ஃபிலாஷ் லைட்
பின்புறம் கைரேகை சென்சார்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2023 எண்ட்லெஸ் பிளாக், உயுனி புளூ மற்றும் நெபுளா பர்பில் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- இன்ஸ்டாகிராம் தளத்தில் வழங்கப்படும் புது அம்சம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்கிறது.
- இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா என தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் "Quiet Mode" பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் தளத்தில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க உதவுகிறது. செயல்படுத்தும் பட்சத்தில், Quiet Mode அம்சம் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்து, டைரக்ட் மெசேஜ்களுக்கு தானாக பதில் அளிக்கிறது.
புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என உலகின் சில நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் இளைஞர்கள் கோரிக்கையை அடுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த Quiet Mode மோட் பயனர்கள் கஸ்டமைஸ் செய்ய முடியும். ஷெட்யுல் செய்ததும், இந்த அம்சம் நோட்டிஃபிகேஷன்களை விரைவாக காண்பிக்கிறது. அனைவரும் Quiet Mode அம்சத்தை பயன்படுத்தலாம், எனினும், இளைஞர்கள் இதனை பயன்படுத்த பரிந்துரை வழங்குவோம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.
இதுதவிர இன்ஸ்டாகிராம் செயலியில் பேரண்டல் சூப்பர்விஷன் டூல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை பயனர்கள் தளத்தில் பார்க்கும் தரவுகளை அதிகளவில் கண்ட்ரோல் செய்ய உதவும். பரிந்துரைகளில் துவங்கி, பயனர்கள் இனி தங்களுக்கு விருப்பமில்லாத தரவுகளை மறைத்து வைக்க செய்யலாம். இந்த வசதி explore feed மட்டுமின்றி ரீல்ஸ், சர்ச் உள்ளிட்டவைகளிலும் இயங்குகிறது.
பரிந்துரைக்கப்படும் பதிவுகளின் கமெண்ட்ஸ் மற்றும் டைரக்ட் மெசேஜ்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை மறைக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வசதியை பிரைவசி செட்டிங்ஸ்-இல் உள்ள Hidden Words பகுதியில் இயக்க முடியும்.
- கார்மின் நிறுவனத்தின் புதிய இன்ஸ்டிண்ட் ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புது கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது சீரிசில் - இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மற்றும் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசம், கிராஸ்ஒவர் சோலார் மாடல் சூரிய சக்தி கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
புதிய கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடலில் கார்மின் நிறுவனத்தின் அனைத்து உடல்நல அம்சங்கள், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்லீப் ஸ்கோர், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளது. இதன் சோலார் வேரியண்ட் 70 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் அம்சங்கள்:
புது ஸ்மார்ட்வாட்ச்களில் சூப்பர்-லூமி நோவா-கோட் செய்யப்பட்ட அனலாக் மற்றும் டஃப் டிசைன் உள்ளது. இத்துடன் அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே, 10ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் லென்ஸ், தெர்மல் மற்றும் ஷாக் ரெசிஸ்டண்ட், MIL-STD-810 தரம் கொண்டுள்ளது. இதன் சோலார் எடிஷன் 70 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்டிருக்கிறது.
கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் - ஸ்மார்ட்வாட்ச் மோடில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. ஜிபிஎஸ் மோடில் 110 மணி நேரத்திற்கும் அதிக பேட்டரி லைஃப் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லீப் ஸ்கோர், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடல் பிளாக் நிறத்திலும், இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் கிராஃபைட் சோலார் கிராபைட் நிறத்திலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 55 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை கார்மின் பிராண்ட் ஸ்டோர், ஹெலியோஸ் வாட்ச் ஸ்டோர், ஜஸ்ட் இன் டைம், ஸ்போர்ட்ஸ் ஸ்டோர், அமேசான், டாடா க்ளிக், டாடா லக்சரி, சினர்ஜைசர், ப்ளிப்கார்ட் மற்றும் நைகா வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- டெக்னோ நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் ஸ்லைடிங் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.
- கான்செப்ட் போன் என்பதால் உண்மையில் இது எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டெக்னோ ஃபேண்டம் விஷன் வி கான்செப்ட் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இது வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கிறது. ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் இருப்பதே இதன் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் இது கான்செப்ட் மாடல் என்பதால், எப்போது வர்த்தக ரீதியாக அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
புது கான்செப்ட் போன் குறித்து வெளியாகி இருக்கும் வீடியோவில் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜ் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், குவாட் எல்இடி ஃபிலாஷ் உள்ளது. இதன் கேமரா செட்டப் கீழ் சிறிய டிஸ்ப்ளே உள்ளது. இது நோட்டிஃபிகேஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ரிமைண்டர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

இந்த சாதனம் ஏரோஸ்பேஸ் கிரேடு டைட்டானியம் அலாய் கேசிங், டியுரபில் ஹின்ஜ் மற்றும் காப்புரிமை பெற்ற டிசைன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனம் சாதாரன ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இதன் உள்புற டிஸ்ப்ளே 10.1 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. புது கான்செப்ட் மாடல் பற்றி டெக்னோ சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு அடுத்த மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்களின் புது சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். எனினும், டெக்னோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: GSMArena






