என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ஒப்போ Foldable ஸ்மார்ட்போன்

- ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.
- இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் கிளாம்ஷெல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட வாட்டர் டிராப் ஹின்ஜ் டிசைன் கொண்டிருக்கிறது. முன்னதாக ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் குளோபல் வேரியண்ட் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் இந்தியாவில் இந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். முந்தைய தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் சர்வதேச சந்தையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.