என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
- சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM-சார்ந்த மேக் மாடல்களில் விண்டோஸ் 11 ஒஎஸ் பயன்படுத்த புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் மைக்ரோசாஃப்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 கொண்டு விண்டோஸ் 11 ப்ரோ மற்றும் எண்டர்பிரைஸ் ஒஎஸ்-களின் ARM வெர்ஷனை M1 மற்றும் M2 சார்ந்த மேக் சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.
பணி சூழல் காரணமாக மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. எனினும், இதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான ARM விண்டோஸ் பில்டுகளிலும் 32-பிட் மென்பொருள்களின் பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுத்தி வருகிறது. இதனால் 32-பிட் ARM செயலிகளை பயன்படுத்த முடியாது.

மேலும் சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும். இத்துடன் ஆண்ட்ராய்டு செயலிகள், லினக்ஸ் சப்-சிஸ்டம் மற்றும் விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என மற்றொரு லேயர் விர்ச்சுவலைசேஷன் தேவைப்படும் எதையும் பயன்படுத்த முடியாது. இறுதியில் DirectX 12 அல்லது OpenGL 3.3 கேட்கும் கேம்கள் எதும் வேலை செய்யாது.
முன்னதாக 2021 வாக்கில் ARM மேக் மாடல்களில் விண்டோஸ் 11 பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இதற்கு பயனர்கள் ஒஎஸ்-இன் இன்சைடர் பிரீவியூவை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. தற்போதைய அறிவிப்பின் மூலம் பயனர்கள் விண்டோஸ் 11-ஐ பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 மூலம் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
புதிய மாற்றங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எவ்வாறு பாதிப்பாக இருக்கும் என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. ஆப்பிள் பூட் கேம்ப் மூலம் இண்டெல் சார்ந்த மேக் மாடல்களில் இருந்ததை போன்ற விண்டோஸ் சப்போர்ட் எதிர்பார்ப்போருக்கு புதிய நடவடிக்கை பயனற்றதாகவே இருக்கும்.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா இந்திய விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 ஆகும்.
- இந்திய சந்தையில் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவை தொடர்ந்து கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விற்பனை மார்ச் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விலை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 990 ஆகும். புதிய கேலக்ஸி புக் 3 அல்ட்ரா வாங்குவோருக்கு வங்கி கேஷ்பேக் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்துடன் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. முன்பதிவு சலுகைகளின் கீழ் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா வாங்குவோர் ரூ. 50 ஆயிரத்து 099 மதிப்புள்ள M8 ஸ்மார்ட் மாணிட்டரை ரூ. 1,999 விலையில் வாங்கிட முடியும்.
கேலக்ஸி புக் 3 அல்ட்ரா மாடலில் அதிநவீன இண்டெல் கோர் i9 பிராசஸர், NVIDIA GeForce RTX 4070 GPU, 3K 2880x1800 பிக்சல் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, அடாப்டிவ் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. 1.79 கிலோ எடை கொண்டிருக்கும் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா, 16.5 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இத்துடன் மெல்லிய, அலுமினியம் ஃபிரேம் உள்ளது.
- வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்களின் தரம் கம்ப்ரெஸ் செய்வதால் குறைந்துவிடுகிறது.
- விரைவில், இந்த நிலை மாறி படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் அனுப்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு விரைவில் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். எதிர்கால அப்டேட்களில் இதுபோன்ற வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தான், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இந்த வசதி வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற சோஷியல்-ஷேரிங் செயலிகளை எதிர்கொள்ளும் வகையில், வாட்ஸ்அப் புதிய வசதியை வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வெர்ஷன்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் ரெசல்யூஷனில் ஷேர் செய்ய முடியும்.

இவ்வாறு செய்வதால், புகைப்படங்களை அச்சடிக்க அனுப்பும் போதும் அதன் தரம் குறையாமல் இருக்கும். எனினும், அப்லோடு நேரத்தை குறைக்கவும், அதிக ஸ்பேஸ் எடுக்கப்படுவதை தவிர்க்கவும், தற்போது இருக்கும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது. செயலியின் புதிய அப்டேட்களில் இந்த வசதி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.2.11 அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் ஏராளமான புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளை இந்த ஆண்டு வழங்க திட்டமிட்டு வருகிறது. டெலிகிராம், டிஸ்கார்டு மற்றும் சிக்னல் போன்ற போட்டி நிறுவன செயலிகளை எதிர்கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போனிற்கான டீசரை ஒப்போ சமீபத்தில் வெளியிட்டது.
ஒப்போ நிறுவனம் விரைவில் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது லண்டனில் நடைபெறும் நிகழ்வில் ஒப்போ தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதனிடையே புதிய ஸ்மார்ட்போனிற்கான Product Ambassador-களை தேடி வருகிறது.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சோதனைக்காக இலவசமாக வழங்கப்படும். மேலும் அதனை அவர்களே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். இதுகுறித்த தகவலை ஒப்போ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் Product Ambassador-கள் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 10, ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை சமர்பிக்க முடியும். இதில் தேர்வு செய்யப்படும் Product Ambassador-களுக்கு ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் அனுப்பப்படும். பின் டெஸ்டிங் நிறைவு பெற்றதும், ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் யூனிட்டை அப்படியே வைத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், ஃபைண்ட் N2 ஃப்ளிப் வெளியீடு விரைவில் நடைபெறுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.
- விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய விவோ V27 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் புதிய V27 சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட துவங்கி இருக்கிறது. புதிய டீசரில், #TheSpotlightPhone எனும் ஹாஷ்டேக் உடன் V27 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிசைன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், வளைந்த ஸ்கிரீன், ரிங் எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 6.78 இன்ச் FHD+ 120Hz 60 டிகிரி வளைந்த AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
விவோ V27 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், மாலி G610MC4 GPU, 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய விவோ V27 சீரிஸ் ப்ளிப்கார்ட் தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் வாரங்களில் விவோ V27 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வெளியாகும்.
- டிபி விஷன் நிறுவனத்தின் புதிய பிலிப்ஸ் இயர்போன் தானாக ஆஃப் ஆகும் சென்சார்களை கொண்டுள்ளது.
- இந்த இயர்போன் பயன்படுத்துபவர்கள் உறங்கிவிட்டால், இதில் உள்ள ஆடியோ மெல்ல குறைந்து, ஆஃப் ஆகி விடும்.
டிபி விஷன் நிறுவனம் பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிலிப்ஸ் N7808 மாடலில் உள்ள சென்சார்கள் பயனர்களின் உறங்கும் விதத்தை டிராக் செய்து பயனர் உறங்கினால், தானாக ஆஃப் ஆகிவிடும் வசதி கொண்டுள்ளது. இது பிலிப்ஸ் பிராண்டிங்கில் வெளியாகி இருக்கும் முதல் ஸ்லீப் இயர்போன் ஆகும்.
புதிய ஸ்லீப் இயர்போன் டிபி விஷன் மற்றும் ஸ்லீப் ஆய்வாளர் கோகூன் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிலிப்ஸ் N7808 இயர்போனை பயன்படுத்துவோர் அப்படியே உறங்கும் பட்சத்தில் ஆடியோ சத்தம் மெல்ல குறைந்து, தானாக ஆஃப் ஆகி விடும். எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. மாறாக இது ஸ்மார்ட் வைட் நாய்ஸ் வெளிப்படுத்துகிறது.

இந்த இயர்போன் பயனர்களை தூங்க செய்வதோடு, அவர்கள் உறங்கியதும் தானாக ஆஃப் ஆகும் வசதி கொண்டிருக்கிறது. உறக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு பதில் சொல்லும் வகையில் புதிய N7808 இயர்போன் அமைந்துள்ளது. இந்த ஹெட்போன்கள் தரமான நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இந்த இயர்போன் ஏற்படுத்தும் வைட் நாய்ஸ் உறக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வெளிப்புற சத்தத்தை குறைக்கச் செய்கிறது.
பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன் ஆடியோ அவுட்புட் பயனர் உறங்கியதும் தானாக அட்ஜஸட் ஆகிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் உள்ள மெல்லிய ஹவுசிங் இரவில் எவ்வித இடையூறும் இன்றி சவுகரியமாக அணிந்து கொள்ள உதவுகிறது. இதன் டிசைன் மற்றும் சிறிய ஆர்மேச்சர் டிரைவர்கள் இயர்போனை 6mm அளவில் இருக்க செய்துள்ளது.
சிறப்பான உறக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயர்போன் கோகூன் ஆப் மூலம் இணைந்து வேலை செய்யுகிறது. இந்த இயர்போனில் அக்செலோமீட்டர்கள் மற்றும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மாணிட்டர் உள்ளது. டிபி விஷன் நிறுவனத்தின் பிலிப்ஸ் N7808 இயர்போன் முழு சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
அறிமுக சலுகையாக புதிய பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன்களின் விலை 1,181 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 312 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் இந்த ஸ்லீப் இயர்போன் விலை 1681 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 492 என மாறிவிடும்.
- லாவா நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்தது.
- புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
லாவா நிறுவனம் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் - லாவா பிளேஸ் 5ஜி மாடலை ரூ. 9 ஆயிரத்து 999 எனும் அறிமுக விலையில் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் லாவா நிறுவனம் இன்று தனது லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
அதிக ரேம் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், லாவா பிளேஸ் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் 5ஜி மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
லாவா பிளேஸ் 5ஜி அம்சங்கள்:
6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி / 6 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி UFS மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
டெப்த் சென்சார், மேக்ரோ கேமரா
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய லாவா பிளேஸ் 5ஜி 6ஜிபி ரேம் கொண்ட மாடல் கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 11 ஆயிரத்து 499 ஆகும். இந்த விலை பிப்ரவரி 15 ஆம் தேதி அமேசான் தளத்தில் நடைபெறும் முதல் விற்பனையின் போது மட்டுமே பொருந்தும். அதன் பின் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என மாறிவிடும்.
- ரியல்மி நிறுவனம் தனது புதிய GT 3 ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது.
- புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்திய சந்தையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. எனினும், ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டு தேதி டீசரில் இடம்பெறவில்லை.
புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்த ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதேபோன்ற ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ரியல்மி GT நியோ 5 மாடலிலும் வழங்கப்படுகிறது. ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
தற்போது ரியல்மி வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டீசரில் சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. எனினும், இந்த சாதனம் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி GT 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ரியல்மி நிறுவனம் சார்பில் புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் 240 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 150 வாட் மற்றும் 240 வாட் என இருவித சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரியல்மி GT 3 தவிர ரியல்மி நிறுவனம் கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் நாளை அறிமுகமாகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் கிளவுட் 11 நிகழ்வில் தனது புதிய விலை உயர்ந்த 4K டிவியை அறிமுகம் செய்தது.
- புதிய ஒன்பிளஸ் 4K டிவி 120Hz ரிப்ரெஷ் ரேட், 70 வாட் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் Q சீரிஸ் டிவி மூலம் அந்நிறுவனம் தனது Q சீரிஸ் மாடலை மூன்று ஆண்டுகள் கழித்து அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 65 இன்ச் QLED 4K பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவாண்டம் டாட் லேயர் தொழில்நுட்பம் உள்ளது.
மேலும் இதில் உள்ள காமா என்ஜின் டிஸ்ப்ளே தரத்தை ஆப்டிமைஸ் செய்கிறது. புதிய Q2 ப்ரோ மாடலில் 70 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் 2.1 சேனல் சப்போர்ட் உள்ளது. டைனாடியோ டியூன் செய்த ஹாரிசான் சவுண்ட்பாரினுள் மொத்தம் ஏழு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஒட்டுமொத்த ஸ்பீக்கர் அவுட்புட்-இல் 30 வாட் சப்-வூஃபர் இடம்பெற்று இருக்கிறது.

இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 சார்ந்த ஆக்சிஜன்பிளே 2.0 ஒஎஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 மற்றும் NFC கேஸ்ட் அம்சங்கள் உள்ளன. இதை கொண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச், ஒன்பிளஸ் பேட் உள்ளிட்டவைகளை எளிதில் ஒன்பிளஸ் டிவியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ அம்சங்கள்:
65 இன்ச் 4K 3840x2160 பிக்சல் QLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
டால்பி விஷன், HDR10+, HLG
பிக்சர் என்ஹான்சர்: காமா என்ஜின் அல்ட்ரா
70 வாட் 2.1 சேனல் சவுண்ட் அவுட்புட் (40 வாட் சவுண்ட்+30வாட் சப்வூஃபர்)
டால்பி அட்மோஸ்
3 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
NFC கேஸ்ட், மல்டிகேஸ்ட் 2.0, க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், DLNA, மிராகேஸ்ட்
ஆக்சிஜன் பிளே 2.0 சார்ந்த கூகுள் டிவி
கூகுள் அசிஸ்டண்ட் பில்ட்-இன்
ஆக்சிஜன்பிளே, பிரைம்வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், கூகுள் பிளே ஸ்டோர்
ப்ளூடூத் 5.0, 1x RF போர்ட், 1x RJ45 ஈத்தர்நெட் போர்ட்
3x HDMI 2.1 (HDMI 1 eARC), வைபை, 2x USB2.0
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ஒன்பிளஸ் வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு மார்ச் 6 ஆம் தேதியும், விற்பனை மார்ச் 10 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
- புதிய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் 11 மாடலில் 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க ஹேசில்பிலாட் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP போர்டிரெயிட் டெலி கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கு, நான்கு தலைமுறை ஆக்சிஜன் ஒஎஸ் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.

ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:
6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன்
கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
8 ஜிபி LPDDR5X ரேம், 128 ஜிபி UFS 4.0 மெமரி
16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
48MP அல்ட்ரா வைடு கேமரா
32MP டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்றும், 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் 11 முன்பதிவு இன்று (பிப்ரவரி 7) துவங்குகிறது. விற்பனை பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது.
- டெக்னோ நிறுவனத்தின் ஃபேண்டம் விஷன் V ஸ்லைடிங் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டுள்ளது.
- புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகிறது.
டெக்னோ நிறுவனம் சமீபத்தில் தனது ஃபேண்டம் விஷன் V ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தி இருந்தது. இது ஸ்லைடிங் ஸ்கிரீன் கொண்ட கான்செப்ட் மாடல் ஆகும். புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்வதாக டெக்னோ அறிவித்து இருக்கிறது.
பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெக்னோவின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இடதில் இருந்து வலதுபுறமாக மடிக்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது என டெக்னோ தெரிவித்து இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் அனுபவத்தை வழங்குவதில் புது தரத்தை கட்டமைக்கும் என டெக்னோ தெரிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டிமெனசிட்டி 9000 சிப் கொண்ட ஃபேண்டம் X2 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனை டெக்னோ அறிமுகம் செய்தது. மீடியாடெக் உடனான கூட்டணி 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா வரை நீடிக்கும் என டெக்னோ அறிவித்து இருக்கிறது.
இந்த நிகழ்வில் பிராண்டுகள் இடையே நெருங்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
- போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
- புதிய போக்கோ ஸ்மார்ட்போன் Early Access விற்பனை இன்று மாலை 6 மணிக்கு துவங்கியது.
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த போக்கோ X4 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இது ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் என்றும் கூறப்படுகிறது.
புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI14 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ X5 ப்ரோ அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
அட்ரினோ 642L GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI14
டூயல் சிம் ஸ்லாட்
108MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் போக்கோ எல்லோ, ஹாரிசான் புளூ மற்றும் ஆஸ்ட்ரல் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஒபன் சேல் பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதுதவிர ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.






